Monday, March 4, 2019

உலக மகளிர் தினம்: கற்பனைகளும் உண்மைகளும்

Published : 03 Mar 2019 08:34 IST

இரா. ஜவஹர்



உண்மை ஒரு முறை சுற்றி வருவதற்கு முன்னால், வதந்தி நூறு முறை சுற்றி வந்துவிடும் என்ற சொல்வழக்கு உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலக மகளிர் தின வரலாற்றுக்கும் இதுதான் நேர்ந்துள்ளது.

உலக மகளிர் தினம் உருவாக உண்மையான காரணம் என்ன?

இந்த நாள் ஆண்டுதோறும் ஏன் மார்ச் 8-ல் கொண்டாடப்படுகிறது?

மார்ச் 8-தான் மகளிர் தினத்துக்கான தேதி என்று முடிவுசெய்தது எந்த அமைப்பு?

இவை பற்றி மிகப் பெரும்பாலான பத்திரிகைகள், இணைய தளங்கள், மற்ற ஊடகங்கள், ஏன் ஐ.நா. சபையின் அதிகாரபூர்வமான சில இணைய தளங்களில்கூடத் தவறான தகவல்களே உள்ளன. இவற்றில் முக்கியமான சில தவறான தகவல்களையும் உண்மையான வரலாற்றுத் தகவல்களையும் பார்ப்போம்.

தவறான தகவல்கள்

1. தமிழ் விக்கிபீடியா இணையதளக் கட்டுரையில், “பிரான்ஸ், பிரஷ்யாவில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயி பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848, மார்ச் 8-ம் நாளாகும்.

அந்த மார்ச் 8-ம் நாள்தான் அனைத்துலகப் பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது” எனக் கூறப்பட்டுள்ளது. இது தவறான தகவல். உண்மையில் நடந்தது என்ன? இன்றைய ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகளின் பகுதிகளைக்கொண்ட பிரஷ்ய நாட்டின் மன்னர் பிரெடெரிக் வில்லியம்ஸ், பெண்களுக்கு வாக்குரிமை உள்ளிட்ட பல வாக்குறுதிகளை 1848, மார்ச் 19 அன்று அளித்தார். ஆனால், எந்த வாக்குறுதியையும் அவர் நிறைவேற்றவில்லை என்பது வேறு விஷயம். எனவே, மார்ச் 8-க்கு இது காரணமில்லை.

2. “அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆடை மற்றும் துணித் தொழிற்சாலைகளின் பெண் தொழிலாளர்கள் 1857 மார்ச் 8 அன்று வேலை நிறுத்தம் செய்து போராடினார்கள். அதை நினைவுகூரும் வகையில்தான் உலக மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது” என்று ஐ.நா. சபையின் ஓர் இணைய தளத்திலும் ஏராளமான கட்டுரைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இது உள்நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட கட்டுக்கதை என்பதை பிரான்ஸ் நாட்டின் பெண் ஆய்வாளர்கள் இருவர் விரிவாக ஆய்வுசெய்து ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளார்கள்.

3. “நியூயார்க் நகரில் ஆடை ஆலைகளின் பெண் தொழி லாளர்கள் மோசமான வேலை நிலைமைகளை எதிர்த்து 1908 பிப்ரவரி 28 அன்று வேலை நிறுத்தம் செய்தார்கள். இதைக் கவுரவிக்கும் வகையில் இந்த நாளைத் தேசிய மகளிர் தினத்துக்கான நாளாக அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சி நிச்சயித்தது” என்ற தகவல் ஐ.நா. சபையின் இணையதளத்தில் உள்ளது.

இப்போதுள்ள ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்தில், 1908 மார்ச் 8 அன்று நியூயார்க் நகரத் தெருக்களில் ஊர்வலம் நடந்ததாகவும் மகளிர் தினத்தின் வரலாறு அதிலிருந்து தொடங்கியது என்றும் உள்ளது.

ஆனால், நியூயார்க் நகரில் 1908 பிப்ரவரி 28 அன்று வேலை நிறுத்தமோ மார்ச் 8 அன்று ஊர்வலமோ நடைபெறவில்லை. 1908 போராட்டம் தொடர்பான எந்தக் கட்டுரையிலும் இதற்கான ஆதாரம் ஏதும் அளிக்கப்படவில்லை.

4. உலக மகளிர் தினத்துக்கான நாள் மார்ச் 8 என்று எப்போது, எவ்வாறு நிச்சயிக்கப்பட்டது?

1977-ல் ஐ.நா. சபை மகளிர் தினத்தைக் கொண் டாட மார்ச் 8 என்ற தேதியை முடிவு செய்ததாக ஆங்கில விக்கிபீடியா கட்டுரை உள்ளிட்ட பல கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஐ.நா. சபையின் தீர்மானத்தில் ‘ஏதேனும் ஒரு நாளில்’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.


கிளாரா ஜெட்கின்

உண்மையான வரலாற்றுத் தகவல்கள்

1. உலக மகளிர் தினம் உருவாக உண்மை யான காரணம் என்ன?

டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்ஹேகனில் ‘உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு’ 1910-ல் நடந்தது. இந்த மாநாட்டில்தான் வரலாற்றுப் புகழ்மிக்க ‘மகளிர் தின’த் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலக மகளிர் தினத்தின் தாய் என்று சொல்லத்தக்க கம்யூனிஸ்ட் தலைவி கிளாரா ஜெட்கின் (CLARA ZETKIN) மாநாட்டுக்குத் தலைமை வகித்து, இந்தத் தீர்மானத்தை எழுத்துபூர்வமாக முன்மொழிந்தார்.

“அனைத்துத் தேசிய இனங்களையும் சார்ந்த சோஷலிஸ்ட் பெண்கள் ஒரு தனிச் சிறப்புள்ள தினமாக மகளிர் தினத்தைக் (Women's Day) கடைப்பிடிக்க வேண்டும். சமூகப் பிரச்சினைகள் பற்றிய சோஷலிசக் கண்ணோட்டத்துடன், பெண்கள் பிரச்சினை அனைத்துடனும் வாக்குரிமைக் கோரிக்கையை இணைத்து விவாதிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (மகளிர் தினத்துக்கான தேதி ஏதும் இதில் குறிப்பிடப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.) எனவே, 1910-ல்

நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம்தான் உலக மகளிர் தினம் உருவாக உண்மையான காரணம்.

2. உலக மகளிர் தினம் ஆண்டு தோறும் ஏன் மார்ச் 8-ம் தேதியில் கொண்டாடப்படுகிறது?

உலகின் முதல் சோஷலிசப் புரட்சி ரஷ்யாவில் 1917 நவம்பர் 7-ல் லெனின் தலைமையில் நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அதற்கு முன்னோடிப் புரட்சியாக மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்களின் புரட்சி தொடங்கியது. இதில் ஆண் தொழிலாளர்களும் கலந்துகொண்டார்கள். இந்தப் புரட்சிதான் ஜார் மன்னரின் ஆட்சியைத் தூக்கி எறிந்தது.

1917 மார்ச் 8 அன்று பெண் தொழிலாளர்கள் தொடங்கிய இந்தப் புரட்சியே, உலக மகளிர் தினம் மார்ச் 8 அன்று கொண்டாடப்பட உண்மையான காரணம்.

3. மார்ச் 8-ம் தேதிதான் மகளிர் தினத்துக் கான தேதி என்று முடிவுசெய்தது ஏன், எந்த அமைப்பு?

உலக மகளிர் தினம் 1911-ம் ஆண்டு முதல் பல நாடுகளில் பல தேதிகளில் கொண்டாடப் பட்டுவந்தது. இந்தச் சூழ்நிலையில் ‘கம்யூனிஸ்ட் பெண்கள் அகில’த்தின் மாநாடு 1921-ல் மாஸ்கோ நகரில் நடந்தது. ரஷ்யாவில் 1917, மார்ச் 8-ல் பெண் தொழிலாளர்கள் நடத்திய புரட்சியை நினைவுகூரும் வகையில், இனிமேல் அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் மார்ச் 8-ம் தேதியில் கொண்டாட வேண்டும் என்று இந்த மாநாடுதான் முடிவுசெய்தது. அதன் பிறகுதான் மார்ச் 8-ல் உலக மகளிர் தினம் என்பது நடைமுறைக்கு வந்தது.

எனவே, 1921-ல் நடந்த ‘கம்யூனிஸ்ட் பெண்கள் அகில’த்தின் மாநாட்டுத் தீர்மானமே, உலக மகளிர் தினத்துக்கு மார்ச் 8-ம் தேதி நிச்சயிக்கப்படவும் நிரந்தரமாக்கப்படவும் உண்மையான காரணம்.

ஆகவே, உலக மகளிர் தினம் என்பது பெண்களின் புரட்சிகரப் பாரம்பரியத்தை நினைவுகூரும் நாள். அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்து நடத்தி, அனைத்து ஆதிக்கங்களுக்கும் முடிவுகட்டச் சூளுரைக்கும் நாள் இது!

- கட்டுரையாளர், மார்க்சிய ஆய்வாளர், பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: jawaharpdb@gmail.com

(முழுமையான விவரங்களுக்கு: ‘மகளிர் தினம்: உண்மை வரலாறு’, ஆசிரியர்: இரா. ஜவஹர் வெளியீடு: பாரதி புத்தகாலயம் தொலைபேசி: 044-24332924)
டிரெண்டாகும் அபிநந்தன் 'கன்ஸ்லிங்கர் மீசை': பெருமை சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்; சலூன்களில் தள்ளுபடி

Published : 03 Mar 2019 17:16 IST

ஏ.என்.ஐ.  பெங்களூரு



விமானப்படை வீரர் அபிநந்தன் : கோப்புப்படம்

பாகிஸ்தானில் ராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில், இளைஞர்கள் பலர் அபிநந்தன் வைத்திருக்கும் மீசை போல் தங்கள் மீசையையும் வடிவமைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி திரும்பியது.

அப்போது, மிக் ரக விமானத்தை இயக்கிய விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தானின் எப்-16 வகை விமானத்தை சுட்டு வீழ்த்திய பின் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது.

இதனால், பாராசூட் மூலம் உயிர் தப்பிய அபிநந்தன் பாகிஸ்தான் பகுதிக்குள் விழுந்தார். அவரை ராணுவத்தினர் கைது செய்தனர். இரு நாட்களுக்குப் பின் சர்வதேச அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு வாகா எல்லையில் அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.

அபிநந்தனின் வீரத்தையும், துணிச்சலையும் நாட்டு மக்கள் அனைவரும் புகழந்தும், வரவேற்றும் வருகின்றனர். உண்மையான ஹீரோவாக மக்கள் மத்தியில் ஜொலித்து வருகிறார் அபிநந்தன். அபிநந்தனுக்குப் புகழாரம் சூட்டும் வகையில் இளைஞர்கள் பலர் அபிநந்தன் வைத்திருக்கும் மீசையைப் போல் தங்கள் மீசையையும் வடிவமைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



பெங்களூரு சலூனில் அபிநந்தன் மீசைக்கு ஆரவமாக இருக்கும் இளைஞர்கள் : படம் ஏஎன்ஐ

கடந்த இரு நாட்களாக ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அபிநந்தன் வைத்திருக்கும் மீசை குறித்த விவாதம் தீவிரமாக இருந்து வருகிறது. தாடி வைத்திருக்கும் ஏராளமான இளைஞர்கள் சலூன் கடை நோக்கி படையெடுத்து தங்கள் தாடியை மழித்து அபிநந்தன் மீசை வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பெங்களூரில் சலூன் கடை வைத்திருக்கும் ஏராளமான சலூன் கடைகளில் அபிநந்தனைப் போல் மீசை வைத்துக் கொள்ளும் இளைஞர்களுக்கு 50 சதவீதம் கட்டணத்தில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இதனால், இளைஞர்கள் மத்தியில் இந்த மீசை டிரெண்டாகி வருகிறது.

இது தொடர்பாக பெங்களூரைச் சேர்ந்த சாந்த் முகமது(வயது 32) கூறுகையில், "அபிநந்தன் துணிச்சல் மிக்க வீரர். அவரின் மீசை எதிரிகளுக்கு அச்சத்தையும், வீரத்தையும் பறைசாற்றுகிறது. சல்மான்கான், அமீர்கான் என்னுடைய ஸ்டைல் குருவாக இருந்தாலும், அபிநந்தன்தான் என்னுடைய குரு. அதனால் அவரைப் போல் மீசை வைத்தேன். செகந்திராபாத்தில் உள்ள என்னுடைய உறவினர் அபிநந்தன் போல் மீசை வைத்து இன்று காலையில் வாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்பினார். அதைப் பார்த்து நானும் வைத்துக்கொண்டேன்" எனத் தெரிவித்தார்.



பெங்களூரில் சலூன் கடை வைத்திருக்கும் சமீர் கான் கூறுகையில், " இன்று காலையில் இருந்து 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் என்னிடம் அபிநந்தன் போன்று மீசை வைக்க வேண்டும் என்று விரும்பி அதைப் போன்று மீசை வைத்துச் சென்றுள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.

தற்போது மெல்லப் பரவி வரும் அபிநந்தன் மீசை ஸ்டைல், அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் அபிநந்தனின் கன்ஸ்லிங்கர் மீசை டிரெண்டாகப் போகிறது.
ஒடிசாவில் 108 மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் காணவில்லை: துணை ஆட்சியர் நேரில் ஆய்வு

Published : 03 Mar 2019 20:06 IST

மால்காங்கிரி (ஒடிசா)


ஒடிசாவில் மெட்ரிகுலேஷன் தேர்வெழுதிய 108 மாணவர்களின் விடைத்தாள்கள் திடீரென காணாமல் போனதை அடுத்து துணை ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகள் தேர்வு மையத்திற்கு விரைந்துள்ளனர்.

ஒடிசாவில் மால்காங்கிரி மாவட்டத்தின் தேர்வு மையம் ஒன்றில் மாணவர்களின் விடைத்தாள்கள் காணாமல் போன சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.

இச்சம்பவம் பாட்டியா எஸ்எஸ்டி உயர்நிலைப் பள்ளி அதிகாரிகள் பாட்டியா காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இப்பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது.

இதுகுறித்து மால்காங்கிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெக்மோகன் மீனா தெரிவித்ததாவது:

''மால்காங்கிரி மாவட்டத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி யொன்றில் இன்று காலை மெட்ரிகுலேஷன் பொதுத் தேர்வில் கணித பாடப்பிரிவில மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்த பிறகு கிட்டத்தட்ட 108 மாணவர்கள் எழுதிய தேர்வு விடைத்தாள்கள் பள்ளி வளாகத்திலிருந்து காணாமல் போயுள்ளன.

விடைத்தாள்கள் திடீரென காணாமல் போயுள்ளதால் தேர்வாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விடைத்தாள்கள் காணாமல் போன சூழ்நிலையில் இது குறித்து ஒரு முழுமையான விசாரணை நடத்துவதற்காக காவல் உதவி கண்காணிப்பாளர் யு.சி. நாயக் தலைமையிலான குழு ஒன்று பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளி அதிகாரிகள் மாவட்ட ஆட்சியருக்கும் மாநில மெட்ரிகுலேஷன் தேர்வு நடத்தும் மாநில பள்ளிக் கல்வித்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சினை குறித்து நேரில் ஆய்வு செய்வதற்காக மாவட்ட துணை ஆட்சியர் ராமேஸ்வர் பிரதான் உள்ளிட்ட உயரதிகாரிகள் தற்போது பள்ளிக்குச் சென்றுள்ளனர்''.

இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

காலகண்டி மாவட்டத்தில் கணித கேள்வித்தாள்களின் போட்டோ நகல்கள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் மூன்று ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு ஒரு நாள் கடந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

முன்னதாக, ஒடியா, இந்தி மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்காக கேள்வித்தாள்களும் சமூக வலைதளத்தில் வைரலாகியதால் தேர்வுக்கூட பொறுப்பில் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் மாநில பள்ளிக் கல்வித்துறை ஒடிசாவில் கடும் பாதுகாப்போடு தேர்வுகளை நடத்தி வருகிறது.
50-வது ஆண்டை கொண்டாடிய ராஜதானி எக்ஸ்பிரஸ்

Updated : மார் 04, 2019 04:05 | Added : மார் 04, 2019 03:54

கோல்கட்டா: முதல் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் துவங்கிய பயணத்தின் 50-வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



நாட்டின் மிக பெரிய பொது துறைகளில் ஒன்றான ரயில்வே துறை பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் கால மாற்றத்திற்கேற்ற வகையில் சதாப்தி எக்ஸ்பிரஸ் , துரந்தோ எக்ஸ்பிரஸ் என துவங்கி தற்போது தேஜாஸ் எக்ஸ்பிரஸ் வரை பல்வேறு விரைவு ரயில்களையும் இயக்கி வருகிறது. அவற்றில் முதன் முறையாக இயக்கப்பட்டவவை ராஜதானி எக்ஸ்பிரஸ்.

ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் தனது முதல் பயணத்தை மார்ச் மாதம் 3 -ம் தேதி 1969-ம் ஆண்டில் மே.வங்க மாநிலம் ஹவுாவில் இருந்து இருந்து புதுடில்லிக்கு துவங்கியது. தற்போது 50 -வது ஆண்டை எட்டி உள்ளது. இதன் பொன் விழா மே.வங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விழாவின் ஒரு பகுதியாக ரயில் சிவப்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் விழாவில் முன்னாள் ரயில்வே ஊழியர்கள் மூன்று பேர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர். பொன் விழா ஆண்டை முன்னிட்டு சிறப்பு தபால் தலையும் வெளியிடப்பட்டது.ஹவுரா ரயில் நிலைய ஊழியர்கள் பொன்விழாவை குறிக்கும் செய்தி அடங்கிய பேட்ஜ் அணிந்திருந்தனர்.


பொன்விழா தினத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு மாநிலத்தின் பாரம்பரிய மீன் உணவு மற்றும் சைவ கட்லெட் , ஐஸ்கிரீம் போன்றவை வழங்கப்பட்டதாக ஐ.ஆர்.சி.டி.சி (கிழக்கு)ஜெனரல் மேனேஜர் டேபாசிஸ் சந்திரா கூறினார்.

ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் சிறப்புகள்

*நாட்டின் முதலாவது ஏசி ரயில்

*பயணத்தின் இடையே பயணிகளுக்கு கட்டணத்துடன் உணவு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

*முதலாவது ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தான் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.



அமெரிக்க பல்கலையில் இந்தியருக்கு பதவி

Added : மார் 04, 2019 00:41



ஹூஸ்டன் : அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலை துணைத் தலைவராக, அமெரிக்க வாழ் இந்தியரான, மேதா நர்வேகர், 59, நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள, பிரசித்தி பெற்ற பென்சில்வேனியா பல்கலையின் துணைத் தலைவராக பதவி வகிக்கும், லெஸ்லி கருஹ்லி, ஜூன், 30ல் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய துணைத் தலைவராக, பல்கலையில், முன்னாள் மாணவர்கள் தொடர்புத்துறை அதிகாரியாக பணியாற்றி வரும், அமெரிக்க வாழ் இந்தியரான, மேதா நர்வேகர் நியமிக்கப்பட்டுள்ளார். நர்வேகர், 32 ஆண்டுகளாக, பென்சில்வேனியா பல்கலையில் பணியாற்றி வருகிறார்.
Madras HC can’t interfere with routine administration of state: Judge

DECCAN CHRONICLE. | J STALIN

PublishedMar 3, 2019, 2:28 am IST

The petitioner, a cook, said there was a surprise inspection conducted by a team from DVAC and the police recovered Rs 2,000.

Madras High Court

Chennai: The Madras High Court has said that it cannot interfere with the routine administration of the state or its organisations. "In the event of such routine interference in administration, more specifically in transfer cases, the very discipline and functioning of the administration would be paralysed", the court observed

Justice S.M. Subramaniam made the observation while dismissing a petition filed by one G. Sankaralingam, challenging an order of the District Adi Dravidar and Tribal Welfare Officer, Villupuram, transferring him from the Adi Dravidar Welfare Boys Hostel at Thumboor to Tindivanam.

The petitioner, a cook, said there was a surprise inspection conducted by a team from DVAC and the police recovered Rs 2,000. He was able to establish that the amount was withdrawn from his bank account and no action was taken in this regard. Subsequently, he was transferred citing this reason, he said.

Justice Subramaniam said the court was of the opinion that transfers could be issued on various grounds. Mr Sankaralingam's transfer order stated that he was transferred on administrative grounds and in the interest of administration. This apart, the petitioner was transferred from Thumboor to Tindivanam, which was not far away and located within the same district.

Transfers were imminent in respect of public servants, whenever a wide complaint against the employee was made known to the competent authorities. In certain circumstances, there may not be evidence to prosecute the employee or to initiate departmental disciplinary proceedings, the judge said.

The competent authorities may be of the opinion that continuance of a public servant in a particular place would cause inconvenience as well as a difficult situation for public administration.

In those circumstances, transfers alone were the remedies. Therefore, it was not necessary that there must be a transfer only after conducting an enquiry or initiation of disciplinary proceedings, Justice Subramaniam said.

The judge said administrative transfers were the prerogative of the department concerned and the competent authorities were the best ones to assess the situation and take action. Those competent authorities should act in the public interest and only in the event of any illegality or some personal motive could the employee approach the court for appropriate remedy.

Justice Subramaniam said that in the absence of any such legal ground, routine administrative transfers can never be interfered with by the constitutional courts.

"The place or post can never be claimed as a matter of choice by the public servants. All public servants are dutybound to perform their duties diligently and with utmost care and devotion. This being the basic principles to be followed and erosion in this regard can never be tolerated either by the officials or by the courts", he said.

The judge said the judicial review of administrative transfers must be exercised with restraint and only in exceptional circumstances can such orders can be interfered with by the High Court.

This being the scope of judicial review of administrative transfers, the court was of the opinion that the petitioner had not established strong acceptable grounds for the purpose of interference in the order of transfer, Justice Subramaniam said and dismissed the petition.
Soon, government order on incentive marks for service doctors in PG admissions

The committee was constituted on the directives of the Madras HC order dated May 17, 2018, to identify remote, difficult and rural areas for awarding incentive marks to government service-doctors.

Published: 04th March 2019 03:33 AM

By Express News Service

CHENNAI: The State health department is likely to issue a government order soon on providing incentive marks for service doctors in PG medial admission, after a seven-member committee chaired by a retired judge of Madras High Court A Selvam completed its assessment report.

The committee was constituted on the directives of the Madras High Court order dated May 17, 2018, to identify remote, difficult and rural areas for awarding incentive marks to government service-doctors for admission to PG courses for 2019-2020. A Edwin Joe, Director of Medical Education, told Express that one of the members of the committee had said," The committee completed its geographical areas assessment report and classified the areas into four categories, namely hilly, difficult areas in plains, rural and remote areas. The committee is now in the process of giving definition for these areas. Once, its submits it with those definitions, the G.O. will be issued. This will take another couple of weeks," he said.

He said the committee has marked 119 areas in hilly category, 660 in difficult areas in plains, 23 in remote areas, and 1021 in rural areas. These areas come under the Directorate of Public Health institutions, that is Primary Health Centres. Similarly, there are 20 areas in hilly regions, 85 in difficult areas in plain and three areas in remote and 119 areas in rural on the Directorate of Medical and Rural Health Services side.

Meanwhile, another official said, "Ten incentive marks will be provided per year to service-doctors who worked in hilly areas, nine marks will be provided to doctors who worked in difficult areas in plains, eight marks to doctors who worked in remote areas and five marks will be provided to doctor who worked in rural areas," the official added. The committee also had asked the collectors to submit the list of remote, difficult and rural areas in their districts.


In April, the Madras High Court quashed Government Orders (GOs) of the State health department dated March 9, as amended in the subsequent GO dated March 23 last and clause 16 of the prospectus for admission to PG degree/diploma courses in the State of Tamil Nadu for 2018-2019 session.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...