Friday, March 22, 2019

Reservation counter comes up at Thirunindravur station

MARCH 15, 2019 15:29 IST


MORE-IN


This is one of four counters opened by Southern Railway and it signifies a victory for residents

After a decade of struggle, residents manage to get a separate reservation counter at Thirunindravur railway station. A week ago, Southern Railway opened four ticket counters on the premises of the station. Of the four, three counters are meant for suburban ticket booking and the other one for reservation.

On an average, more than 10,000 commuters, mainly college students, traders and farmers, board trains from the station, which was electrified in 1979. With a few MTC services in the locality, farmers rely on local trains to transport their produce including vegetables, greens and fruits to markets in Avadi, Villivakkam and Koyambedu wholesale market. Of the three platforms, platform 2 and 3 are meant for suburban trains and the first platform is for long-distance trains and goods trains.

“Opening up of a reservation counter in Thirunindravur station was our long-pending demand. The new reservation counter will, for sure, make our job easy. Earlier, we had to travel all the way to Tiruvallur (20km away) or Avadi (10km away) to book tickets for long-distance trains,” says T. Sadagoppan, a resident of Pattabiram, near Thirunindravur.

According to railway officials, commuters can book tickets at the reservation counter between 8 a.m. and 2 p.m. However, tatkal booking facility is available only at 10 a.m for air-conditioned coaches and at 11 a.m. for non-air-conditioned coaches.
HC frowns upon government servants resisting transfers

CHENNAI , MARCH 20, 2019 01:28 IST

Asks them to exhibit devotion to duty like IAF pilots who carried out Balakot strikes

Frowning upon government servants who resisted transfer, the Madras High Court chose to contrast it with the commitment and bravery of the Indian Air Force personnel, who carried out air strikes on a training camp of terror outfit Jaish-e-Mohammad at Balakot in Pakistan on February 26 pursuant to the killing of 40 CRPF personnel in Pulwama.

“The court would like to remind the bravery shown by our Air Force pilots in targeting the enemy terrorist camps inside the territory of Pakistan,” Justice S.M. Subramaniam said and impressed upon the need for all other public servants, irrespective of their nature of work, to follow suit and exhibit similar kind of devotion towards their respective duties. “Undoubtedly every family in this country has got problems in one way or the other. They have to solve those problems and lead a happy and peaceful life. Such personal grievances cannot be a ground to revoke an order of transfer. This court would like to know whether there is any family in the country which has no problems or issues at all,” the judge said. Slamming those who challenge administrative transfers citing personal difficulties, Justice Subramaniam said: “If reasons like welfare of children and aged parents are to be raised, then the employee should not opt for public service. Public service is a noble one... Place or post can never be claimed as a matter of choice.”

Thursday, March 21, 2019

Government finally takes over Pariyaram medical college

TNN | Mar 20, 2019, 04.18 AM IST


KANNUR: The government has finally issued the order bringing the Pariyaram Medical College and other related institutions under the state government. This would bring admissions to all the institutions under the ambit of government rules.

A circular issued by principal secretary Rajan Namdev Khobragade on Monday says that as per the state governor’s order, all institutions under the Kerala State Co-operative Hospital Complex (KCHC) and Centre for Advanced Medical Services Ltd, including assets and liabilities, would now on be with the state government.

Institutions like the Pariyaram Medical College and Hospital, Dental College and Hospital, Nursing College, Pharmacy College, Nursing School and Sahakarana Hrudayalaya will come under the department of medical education, said the order. The English medium public school on the campus will be under the department of public education, said a separate order.

The order also said the routine management of these institutions would be vested with the district collector till the handing over process is completed.

The Pariyaram medical college will now on be known as Kannur Government Medical College. Government fees and more merit seats would be ensured for the students.
Pariyaram college to be under govt control

DECCAN CHRONICLE.

PublishedFeb 28, 2019, 2:13 am IST

The college which was under a takeover process was being administered by a board of control for Pariyaram medical college
.


Governor P. Sathasivam

Thiruvananthapuram: The Cabinet meeting on Wednesday decided to recommend to governor P. Sathasivam that an ordinance be promulgated for taking over the Pariyaram Cooperative Medical College, Kannur.

The college which was under a takeover process was being administered by a board of control for Pariyaram medical college.

Health minister K.K. Shylaja said in a statement here on Wednesday that Kerala State Cooperative Hospital and Centre for Advanced Medical Services and allied institutions will now become government institutions. This meant that eight institutions namely Pariyaram Med-ical college, Dental college, Academy of Phar-maceutical Sciences, Col-lege of Nursing, School of Nursing, Sahakarana Hrudayalaya, Medical college public school and Institute of Para Medical Sciences will be taken over by the government.

With this the students can study in all seats in the college by paying government fee. Earlier, 50 per cent seats were in management quota at a higher fee. Moreover, people can now get free treatment from the college when it comes under the government.

There was no government medical college in North Malabar. This was one of the demands of the people of the region, said Ms Shylaja.

Pariyaram medical college like other medical colleges in the state will be converted into a centre of excellence.

All sections of people keeping aside their political affiliation should cooperate in the endeavour to convert the medical college into a world class institution, said Ms Shylaja.

The previous LDF regime in 1997 had taken over the medical college.

However, the subsequent UDF government returned the administration to the society.

The government had earlier shouldered the burden of repaying the loan taken by the society for the medical college and hospital.

The medical college has 1,938 employees and 2,500 students.

The hospitals has 1,000 beds and 18 operation theatres. The UDF government in 2011-16 also decided to take over the institution, but it could not implement the decision.
வேண்டும் என்றால் மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம்: உயர் நீதிமன்றம்

By DIN | Published on : 20th March 2019 04:56 PM

சென்னை: பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், மாறன் சகோதரர்களை சிறையில் அடைத்து விசாரிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் மீதான வழக்கில் சிபிஐ நீதிமன்றம் குற்றச்சாட்டுப் பதிவு செய்தது.


இந்த குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி மாறன் சகோதரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டைப் பதிவு செய்திருக்கும் சிபிஐ, தயாநிதி மாறன், கலாநிதி மாறனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், தேவைப்பட்டால் தயாநிதி மாறன், கலாநிதி மாறனை சிறையில் அடைத்துக் கூட விசாரிக்கலாம் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்றும், 4 மாதத்துக்குள் இந்த வழக்கை விசாரித்து முடிக்கவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் டிவிக்கு பி.எஸ்.என்.எல். அதிவேக தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மற்றும் பி.எஸ்.என்.எல். பொது மேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளரான கெளதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது.

இதனை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவு செய்து மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கின் விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை குற்றச்சாட்டுப்பதிவுக்காக சிபிஐ நீதிமன்றம் ஜனவரி 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கின் குற்றச்சாட்டுப்பதிவுக்காக ஆஜராவதிலிருந்து விலக்களிக்கக் கோரி மாறன் சகோதரர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றச்சாட்டுப்பதிவுக்காக விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.

குற்றச்சாட்டுப் பதிவு: இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஆர்.வசந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மற்றும் பி.எஸ்.என்.எல். பொது மேலாளராகப் பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந் நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளரான கெளதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேரும் ஆஜராகினர். அப்போது இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 7 பேருக்கும் தனித்தனியாக குற்றச்சாட்டுக்களை வாசித்துக்காட்டி நீதிபதி அவற்றை பதிவு செய்தார்.

மறுப்பு: அப்போது தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த தயாநிதிமாறன், இந்த வழக்கில் சிபிஐ என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டு புனையப்பட்டவை. தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தினேன் என்பதை நிரூபிக்கும் வகையில் சிபிஐ போதுமான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. ஊகத்தின் அடிப்படையில் சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை எனக்கூறி தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தார். அதே போல, கலாநிதிமாறன், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஆவணங்களில் ஒரு இடத்தில் கூட என் பெயர் இடம்பெறவில்லை. அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கில் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது எனக் கூறி குற்றச்சாட்டுக்களை மறுத்தார். இதே போன்று மற்றவர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தனர்.

இந்த நிலையில், மாறன் சகோதரர்கள், தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வேண்டும் என்றால் அவர்களைக் கைது செய்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வனங்களைத் தேடி...
By ரா. துரைபாபு | Published on : 21st March 2019 01:30 AM

வனங்களும், வனங்களில் உள்ள மரங்களும் மனிதன் மட்டுமல்லாது அவற்றைச் சார்ந்துள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஆதரவு அளித்து அவற்றின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றன. வனங்களைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 21-ஆம் தேதியன்று உலக வன விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வனங்களும் அவை தொடர்பான கல்வியும் என்னும் கருத்தியலில் உலக வன விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஓர் ஆரோக்கியமான நாட்டுக்கு அதன் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனங்களைக் கொண்ட பசுமைப் பரப்பாக இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கின்றனர் அறிவியல் அறிஞர்கள். கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 2017-ஆம் ஆண்டுக்கான வனங்களின் பரப்பு பற்றிய வன ஆராய்ச்சி மைய அறிக்கையின்படி, இந்தியாவில் வனங்கள் மற்றும் மரங்கள் நிறைந்த பசுமைப் பரப்பு 24.39 சதவீதம் உள்ளது. இதில் 21.54 சதவீதம் விலங்குகள், பறவைகள் வாழும் வனப்பரப்பாக உள்ளதென்றும், மீதமுள்ள 2.85 சதவீத பரப்பளவு வனங்களுக்கு வெளியே உள்ள மரத்தோட்டங்களாகவும் மற்றும் ஏனைய தாவரங்கள் நிறைந்த பசுமைப் பரப்பாக உள்ளதென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும் இந்த அறிக்கையில், இந்தியாவில் 2015, 2017-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் வனம் மற்றும் மரங்கள் நிறைந்த பசுமைப் பரப்பு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் ஏறக்குறைய 1சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நாம் பிறக்கும்போது ஆட்டுவிக்கும் தொட்டிலில் இருந்து பிறந்த பின் சுவாசிக்கும் காற்று, இறக்கும்போது எரிக்கப் பயன்படும் விறகு, புதைக்கப் பயன்படும் சவப்பெட்டி வரை அனைத்தையும் வாரி வழங்கும் வள்ளல்கள் வனங்களும், வனங்களில் உள்ள மரங்களும்தான். பத்து புத்திரர்களைப் பெற்று அவர்கள் செய்யும் தாய், தந்தை கடன்களைவிட ஐந்து மரங்களை நட்டு அவை வழங்கும் பயன்கள் மேலானவை என்கிறது மர சாஸ்திர நூலான விருக்ஷ ஆயுர்வேதம். பத்து கிணறுகள் ஒரு குளத்துக்குச் சமம்; பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம்; பத்து ஏரிகள் ஒரு புத்திரனுக்குச் சமம்; பத்து புத்திரர்கள் ஒரு மரத்துக்குச் சமம் என்று ஆய்ந்து அறிந்து மரத்தின் பெருமையை நம் முன்னோர் கூறியுள்ளனர்.

வனங்கள் ஒரே நாளில் உருவானதில்லை. பல ஆயிரம் ஆண்டுகளாகப் பல்வேறு உயிரினங்களின் கடுமையான உழைப்பினால் உருவான ஒரு சிறப்பு நிறைந்த அமைப்பு. ஒரு வனம் அழியும்போது வெறும் மரங்கள் மட்டும் அழியாமல் அங்கிருக்கும் தாவரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் என அனைத்துமே ஒட்டுமொத்தமாக அழிந்துவிடுகின்றன. வனங்கள் அழிவதால் சுற்றுச்சூழல் அழிந்து பருவநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
முன்னொரு காலத்தில் ஒவ்வொருவரும் அவர்களுடைய வீடுகளைச் சுற்றி பசுமைத் தாவரங்களை நட்டு வளர்த்து வந்தனர். ஆனால், இன்றோ பலரும் அழகுக்காகவும் கவர்ச்சிக்காகவும் தம்முடைய வீட்டைச் சுற்றி பல்வேறு வண்ணங்களில் அலங்கரிக்கிறார்களே அன்றி பசுமைத் தாவரங்களையும் மரங்களையும் வளர்க்காமல் வீட்டைச் சுற்றி பெருஞ்சுவர்களையும் மின்வேலிகளையும் அமைத்து வருகிறார்கள். வனங்களாய் மரங்கள் நிறைந்து இருந்த பல்வேறு நிலப்பரப்புகள் இன்று கூறுபோடப்பட்டு, மாற்றப்பட்டு எழுப்பப்பட்டிருக்கும் விண்ணை முட்டும் கட்டடங்கள் ஒவ்வொன்றிலும் பல மரங்களின் அழுகுரல்களும், பல்வேறு பறவைகள், விலங்குகளின் இறுதி ஊர்வலங்களும் அமைதியாகக் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டன.

முக்கனிகள் தரும் மரங்களையும், மூன்று தலைமுறை நம்முடன் சேர்ந்து பயணம் செய்து வரும் வனங்களையும் இழந்து, வணிக நோக்கத்தில் மட்டுமே இன்று மரங்களை வளர்க்கிறோம். ஒரு தலைமுறையில் வளர்க்கப்பட்டு பல தலைமுறைகளைக் கடந்தும் பலன் தந்து கொண்டிருக்கும் இந்த வனங்களை அழித்து, மரங்களைக் கொய்து நம்மை நாமே எதிரிகள் ஆக்கிக்கொண்டு தடுமாறிக் கொண்டிருக்கிறோம்; நம் நாட்டை பாலைவனமாக்கி வருகிறோம்.

இந்த நிலை மாறவும், வீடும் நாடும் வளம் பெறவும் அனைவரின் உடலும், உள்ளமும் தூய்மை பெற வேண்டும். அருமையான வழி இதோ: வனம் வளர வாழ்வு உயரும்; காடு வளர நாடும் வளரும்; மரம் வளர்க்க வளர்க்க மானுடமும் வளரும்; எனவே, நம் நாட்டுச் சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு மரங்களைத் தேர்வு செய்து காடு, வீடு, வீதி, ஊர், சேரி, தரிசு நிலம், புறம்போக்கு நிலம், நெடுஞ்சாலை ஓரம், குளக்கரை, ஏரிக்கரை, வயல் வரப்புகள், வாய்க்கால் என காணக் கிடைக்கும் இடங்களிலெல்லாம் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு மரம்; ஒவ்வொரு புத்தாண்டின் தொடக்கத்திலும் ஒரு மரம்; ஒவ்வொருவரின் பிறந்தநாளன்றும் ஒரு மரம்; வீட்டின் பெரியோர் மறைந்த நாளன்று அவர் நினைவாக ஒரு மரம் நடுங்கள். ஊர்த் திருவிழாக்கள், அரசுப்பொது நிகழ்ச்சிகளிகளில் பங்கேற்கும் அனைவரும் ஒரு மரம் என நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் மரம் நட்டு பூமியை மலர வைத்தால் வனங்கள் வாழ இந்த வையகமும் வாழும்.

ஆப்பிரிக்கக் கண்டம் பாலைவனமாகாமல் பசுமை பாதுகாப்பு இயக்கம் அமைத்துப் பாதுகாத்த வங்காரி மாத்தாய், வனங்களைப் பாதுகாக்க சிப்கோ இயக்கம் நடத்தி வெற்றி கண்ட சுந்தர்லால் பகுகுணா, தனி மனிதனாய் அஸ்ஸாமில் முலாய் என்னும் வனப் பகுதியை உருவாக்கிய ஜாதவ் பேயங், நாட்டு மரங்கள் வளர்த்து சுற்றுச்சூழலைப் பேணிக் காத்து நாட்டைத் திரும்பிப் பார்க்க வைத்த அஸ்ஸாம் மாநிலத்தில் வனப் பாதுகாவலராகப் பணிபுரியும் சிவகுமார்...இன்னும் பலர் நம்மில் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆகவே, இன்றிலிருந்து இவர்களை எல்லாம் முன்மாதிரிகளாக எடுத்துக்கொண்டு நம்முடைய வாழ்நாளில் குறைந்தது ஒரு மரமாவது நட்டு, பராமரித்து இந்தியாவை மீண்டும் பசுமையின் தாயகமாக மாற்ற உழைப்போம்.
தாய்மையின் சுமைகள்!

By என். முருகன்

நம் நாட்டில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கவில்லை. இதில் பலதரப்பட்ட அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. வளர்ந்துவிட்ட மேலை நாடுகளில் பெண்கள், முழுமையான அளவில் ஆண்களுக்குச் சரிசமமான வேலைவாய்ப்புகளைப் பெற்று வாழ்வதால் இந்தத் துன்புறுத்தல்கள் சற்று குறைவு. அவ்வளவுதான்.

சென்ற ஆண்டு, புருஷோத்தமன் என்ற நபர் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்தில் செய்த குற்றச் செயல்கள் கவனிக்கத் தகுந்தவை. இவர், கனரக வாகனங்களை வைத்துப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வியாபாரத்தை நடத்தி வந்தார். அந்த வியாபாரம் நஷ்டமடைந்ததால், வேறு ஏதேனும் லாபகரமான தொழிலை ஆரம்பித்து நடத்தி, லாபம் ஈட்ட வேண்டிய கட்டாயம் அவருக்கு உருவாகியுள்ளது. பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்யும் தொழில் லாபகரமானதாக இருக்கும் என்ற குயுக்தியான எண்ண ஓட்டத்தில், 8 ஆண்டுகளில் 8 பெண்களை ஏமாற்றி மணமுடித்து, அந்த 8 ஆண்டுகளில் ரூ.4 கோடியே 50 லட்சத்தைச் சுருட்டியுள்ளார் இவர்.
45 வயது நிரம்பிய கல்லூரி ஆசிரியையான இந்திரா எனும் பெண்மணி 57 வயது நிரம்பிய புருஷோத்தமனைத் திருமணம் செய்து கொண்டார். இவர் புருஷோத்தமனின் நடிப்பான அன்பிலும் அழகிலும் மிகுந்த திருப்தியுடன் இருந்ததால், அவரது யோசனைப்படி, சென்னையிலிருந்த அவரது தனி வீட்டை ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு விற்றுவிட்டு, கணவனுடன் அவர் சொன்ன மற்றொரு நகருக்குக் குடிபெயர்ந்தார். முழுப் பணத்தையும் பெற்றுக் கொண்ட புருஷோத்தமனின் திருட்டுத்தனத்தை பின்னர் புரிந்து கொண்ட இந்திரா போலீஸில் புகார் செய்தார்.

இந்தப் புகாரை போலீஸார் விசாரித்தபோது, புருஷோத்தமன் இந்திராவைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால், மூன்று பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்திருந்ததையும், இந்திராவை மணமுடித்தபின் நான்கு பெண்களை ஏமாற்றி மணமுடித்துக் கொண்டதையும் கண்டுபிடித்தனர். இதில், மூன்று மனைவியர் பல லட்ச ரூபாய்களை இழந்ததைத் தெரிவித்தனர். 

இவ்வளவு திறமையுடன், பல பெண்களை ஏமாற்றித் திருமணம் முடித்து மோசடி செய்ய, புருஷோத்தமனுக்கு உதவியது ஒரு திருமண புரோக்கரேஜ் மையம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களையும் இந்த வழக்கில் போலீசார் சேர்த்துள்ளனர். கணவரிடம் சட்ட ரீதியான விவாகரத்து பெற்ற நடுத்தர வயது பணக்கார மற்றும் வசதி படைத்த விதவைப் பெண்கள் இந்த மையத்தில் பதிவு செய்து, மறுமணத்திற்காக முயற்சிக்கும்போது, அவர்கள் பற்றிய முழு விவரங்களையும், புருஷோத்தமனிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு வழங்கியுள்ளனர் இந்த மையத்தின் இரண்டு ஊழியர்கள்.
மேலே நாம் கண்டது கிரிமினலான இந்திய ஆணிடம், பெண்கள் ஏமாந்தது பற்றி. ஆனால், பெண்கள் சிறப்பாக வாழும் மேலை நாடுகளில்கூட ஆண்களுக்குச் சரிசமமான வாழ்க்கையும் அமைதியும் கிடைக்காமல்தான் பெண்கள் வாழ்கிறார்கள் என்னும் தகவலை வெளிப்படுத்தியுள்ளார் பெட்டி ஃப்ரீடன் எனும் எழுத்தாளர். பெண்களில் மகிழ்ச்சியான அன்னையாகவும், குடும்பத் தலைவியாகவும் வாழ்க்கை நடத்துவோர்கூட எவ்வளவு பாதிக்கப்பட்டவர்களாக வாழ்கிறார்கள் என்பது கவனிக்கத் தகுந்தது. அமெரிக்காவின் இரண்டு ஆய்வாளர்கள் இது பற்றி ஓர் ஆராய்ச்சியை நடத்தித் தங்கள் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதில் குடும்பத்தில் பெண்கள் தொழிலாளர்கள் எனவும், அது மிகவும் கடினமான தொழில் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியில், பண வசதி படைத்த உயர் குடும்பங்களில் திருமணமாகி, நல்ல வாழ்க்கையை நடத்தும் 393 பெண்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாம். அவர்களில் பெருவாரியான தாய்மார்கள், தங்கள் வாழ்க்கையை ஒரு கப்பலின் தலைவனாகப் பணி செய்து 24 மணி நேரமும் ஓய்வில்லாமல் உழைக்கும் நிலைமையுடன் ஒப்பிட்டுள்ளனர். தங்கள் குடும்பத்தின் எல்லாப் பணிகளுக்கும் தலைமையேற்று, குழந்தைகளின் உணவு, உடைகள் அணிதல், கல்வி ஆகிய எல்லா தேவைகளுக்கும் பணி செய்து, தங்கள் வீட்டின் எல்லா நடவடிக்கைகளும் சரியாக நடக்க பொறுப்பேற்பதன் கடினத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

இது ஒரு ஸ்லோ கில்லர்-மெதுவாகக் கொல்லும் நிலைமை என்பது பலரின் வாதம். தன்னை முழுமையாக ஈடுபடுத்தி குடும்பப் பணிகளைச் செய்வதால், தனக்குப் பிடித்த எந்த நடவடிக்கையையும் செய்து கொள்ளாத நிலைமையில் வாழ்வதாக நினைத்துக் கொள்கின்றனர் இந்தத் தரமான தாய்மார்கள். அவர்களது கணவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்பதும், தங்கள் மனைவியர் பொறுப்பானவர்கள் எனவும் குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்கிறார்கள் எனத் திடமாக எண்ணுவதும் இந்த மனைவியருக்கும் குடும்பத்தின் எல்லோருக்கும் புரிந்த ஒரு விஷயம். ஆனால், இந்த மனைவியர் எவ்வளவு கடினமான வாழ்க்கையை வாழவேண்டியுள்ளது என்பது இவர்களில் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.
குழந்தைகளின் படிப்பை கவனித்து, தேவைப்படும் போது அவர்களின் படிப்பிற்கு உதவி செய்தல், அதாவது வீட்டுப்பாடங்களை அவர்கள் கற்கிறார்களா என மேற்பார்வை செய்தல் வேண்டும். இந்தத் தாய்மார்கள் ஒரு வேலையில் இருந்தால், அந்த வேலைக்குச் செல்லும்போது பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைத் தங்கள் காரில் கொண்டு போய் இறக்கிவிடவும், பள்ளி முடிந்தபின் பிள்ளைகளைப் பள்ளிகளில் இருந்து வீட்டிற்கு ஏற்றி வருவதும் முக்கியம். குடும்பத்தில் யாருக்கு எந்த உணவு நல்லது என்பதும், உடல்நலமில்லாத பிள்ளைகளுக்கும் கணவருக்கும் தேவையான வேளையில் மருந்துகளை அளிப்பதும் அவசியமான பணி.

ஆக, தாய்மார்களே எல்லாம் என்பது திண்ணம். இது வளர்ந்துவிட்ட மேலை நாடு ஒன்றில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் உணர்த்தப்பட்டது எனினும், இந்தியா போன்ற வளர்ந்து வரும் ஒரு நாட்டில் நடந்தேறும் நடைமுறையும்கூட. நம் நாட்டில், நிலைமை மேலும் கடினம் எனலாம்.
கொல்கத்தா நகரின் ஓர் இளம் தாய் கூறுவது கவனிக்கத்தக்கது. நான் ஓர் அலுவலகத்தில் வேலை செய்கிறேன். அந்தப் பணியுடன் சேர்த்து எனது குடும்பத்தின் எல்லா வேலைகளையும் செய்வது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. குழந்தைகளை மட்டுமின்றி, என் மாமியார், மாமனார் ஆகியோரையும் கவனிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். தூக்கமில்லாமல் தினமும் தவிப்பது பற்றியும் அவர் கூறியுள்ளார்.
என் கணவர் தூங்கியபின்தான் நான் உறங்க முடியும். ஆனால், அவர் நீண்ட நேரம் முகநூலில் மூழ்கி, பின் தாமதமாகத்தான் உறங்கச் செல்வார். அதிகாலையில் நான் எழுந்துவிட வேண்டும். காரணம், குழந்தையைக் கவனித்து உணவுகளைத் தயாரித்து எல்லோருக்கும் பரிமாற வேண்டும் என்கிறார். இவற்றை எல்லாம் முடித்தபின் தனது அலுவலகப் பணிக்குச் செல்ல வேண்டும் என்கிறார்.

இது நமது இந்திய கலாசாரத்துடன் ஒட்டிப் பிறந்த ஒரு வாழ்க்கை நடைமுறை. இந்த இளம் தாய் தன் மாமியாரை கவனிக்கும் பணியைச் செய்ததுபோல்தான், இவருடைய மாமியார் அவருக்குக் கல்யாணமான புதிதில் அவருடைய மாமியாரை முழு அக்கறையுடன் கவனித்திருப்பார் என்பது நமது ஒப்புக்கொள்ளப்பட்ட கலாசாரம்.

ஆனால், நிறைய வளர்ச்சியடைந்த பின்னரும், நம் நாட்டில் பெண்கள் துயரப்படும் வகையில் பல இடங்களில் நடத்தப்படுவதும், அதைத் தடுக்க வேண்டிய அரசு நிர்வாகம் சரியான முறையில் அதைச் செய்யாததும் மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆட்டோவில் செல்வது முதல் தனியார் மற்றும் பொதுத்துறை பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிக்கும்போது சிறு வயது பெண்கள் முதல் முதிய பெண்கள் வரை ஆண்களால் கொச்சைப்படுத்தப்படுவதும் கண்டிக்கத்தக்கது. நின்று கொண்டு பயணம் செய்யும் பெண்களைத் தொட்டுக் கொண்டும், உரசிக் கொண்டும் பயணிப்பது முதல், கெட்ட விஷயங்களைப் பல இளைஞர்கள் ஓசைபட பெண்களுக்கு நடுவில் உரையாடுவதும் நடைமுறை வக்கிரங்கள்.
கல்லூரிகளில், பெண்களுக்குத் தனியாக விடுதிகள் அமைக்கப்படாமல், நிறைய இடங்களில் பெண்கள் தனியார் விடுதிகளில் சேர்ந்து கல்வி கற்க வேண்டியது கட்டாயம். அந்தப் பெண்கள் விடுதிகளில் பணம் அதிகம் செலுத்தினாலும், தேவையான வசதிகள் செய்யப்படாமல் தனியார் அமைப்புகள் லாபம் ஈட்டுவது சாதாரண நடைமுறை. 

 தில்லியில் பல்கலைக்கழகப் பெண்கள் விடுதியில், இரவு 8 மணிக்குள் மாணவிகள் வந்துவிட வேண்டும் என்ற விதி. ஆனால், ஆண்கள் விடுதியில் இந்தக் கட்டுப்பாடு கிடையாது. இரவில் எல்லா இடங்களிலும் ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு, சர்வ சாதாரணமாகப் பெண்கள் நடமாடும் இடமாக தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா முதலிய நகரங்கள் உருவான பின்னரும் இதுபோன்ற ஓரின விதிகள் தேவைதானா என்ற கேள்வி எழுகிறது.
இன்றைய நிலைமையிலும் பெண்கள் ஆண்களுக்குச் சரிசமமாக இருக்க முடியாது என்பதற்கு நமது மனநிலையே காரணம். இதனால், பாதிக்கப்படுவது பெண்களே. முன்னேறிய பலரும் நினைவில் கொள்ளவேண்டிய அடிப்படை உண்மை, நமது முன்னேற்றத்துக்குக் காரணம் தாய்மார்கள் என்பதே. பெண்களை நம்மில் சிலர் துன்புறுத்துவதுபோல், பெண்களால் ஆண்கள் துன்புறுத்தப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியைக் கேட்டு பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும்.
நம்முடைய தாய்மார்களும், சகோதரிகளும் தான் தரமான குடும்பங்கள் உருவாகக் காரணம் என்பதை நினைவில் கொண்டு பல நடவடிக்கைகளை எடுத்தால், நாடு இன்னமும் வேகமாக வளர்ந்து முன்னேறும் என்பது நிச்சயம்.

கட்டுரையாளர்:
ஐ.ஏ.எஸ். அதிகாரி (ஓய்வு)

NEWS TODAY 23.12.2025