Sunday, March 24, 2019


மளிகை கடை நடத்தும் பரீக்கர் சகோதரர்

Added : மார் 24, 2019 04:26



பனாஜி: மறைந்த கோவா முதல்வர் மனோகர் பரீக்கரின் சகோதரர், கோவாவில் மளிகை கடை நடத்தி வரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கோவா முதல்வராக இருந்த மனோகர் பரீக்கர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். கோவாவின் 'மிஸ்டர் கிளீன்' என, அழைக்கப்பட்ட பரீக்கரின் எளிமையை பார்த்து, எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் அவரை விரும்பினர். பரீக்கருக்கு, அவ்துத் மற்றும் சுரேஷ் பரீக்கர் என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.

இந்நிலையில், மனோகர் பரீக்கரின் இளைய சகோதரர் சுரேஷ் பரீக்கர்(61) கோவாவின் வடக்கு கோவா பகுதியில்மபுசா மார்க்கெட் பகுதியில் கோபால்கிருஷ்ணா பரீக்கர் என்ற பெயரில் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையை பரீக்கரின் தந்தை துவக்கியதாகவும், தற்போது சுரேஷ் பரீக்கர் அதனை நடத்தி வருவதாக அப்பகுதியினர் கூறியுள்ளனர். மனோகர் பரீக்கர்,கோவா முதல்வர்,மத்திய பாதுகாப்பு அமைச்சர் என பல பதவிகள் வகித்திருந்தாலும், அவரது உறவினர்கள் அதனை பயன்படுத்தாமல், எளிமையாக வாழ்ந்து வருகின்றனர். சுரேஷ் பரீக்கர் மளிகை கடை நடத்தி வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மாநில செய்திகள்

சென்னையில் குடிநீர் பிரச்சினை: லாரி தண்ணீரை நம்பியே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்



கோடை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னையில் குடிநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது
.
பதிவு: மார்ச் 24, 2019 05:30 AM
சென்னை,

கோடை தொடங்குவதற்கு முன்பாகவே சென்னையில் குடிநீர் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் லாரி தண்ணீரை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.

குடிநீர் தேவை

சென்னை மாநகருக்கு பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை போதுமான அளவு பெய்யாததால் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

அத்துடன் ஆந்திர-தமிழ்நாடு அரசுகள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படியும் கிருஷ்ணா நதி நீரும் போதிய அளவு ஆந்திர மாநிலத்தில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் தற்போதைய நிலவரப்படி பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டு விடும் நிலையை நோக்கி செல்கின்றன.

புழல் மற்றும் சோழவரம் ஏரிகளில் கிடைக்கும் தண்ணீர் மூலம் ஓரளவு நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. இவற்றுடன் கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், வீராணம் ஏரி மற்றும் போரூர் அடுத்துள்ள கல்குவாரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 2 மாதங்களுக்கு சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் என்பது கேள்விக்குறியாகும் நிலையில் தான் இருந்து வருகிறது.

கூடுதலாக தண்ணீர் தொட்டிகள்

தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால் வீடுகள் மற்றும் தெருக்குழாய்களுக்கு குறைந்த அளவு தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதுடன், பொதுவான இடங்களில் உள்ள குடிநீர் தொட்டிகளுக்கும் லாரிகளில் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு, நிரப்பப்பட்டு வருகிறது. போதிய தண்ணீர் கிடைக்காததால் மாநகரில் குடங்களுடன் பொதுமக்கள் சுற்றித்திரிவதை காணமுடிகிறது.

இதில் ஒரு சில இடங்களில் தண்ணீர் முறையாக கொண்டு சென்று நிரப்புவதில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகளால் பொதுமக்கள் தண்ணீருக்கு அல்லல்படும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநகரப் பகுதிகளில் கூடுதலாக தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

லாரி தண்ணீர் தேவையா?

சென்னை மாநகர் முழுவதும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகள், தெருக்குழாய்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளுக்கு தினமும் 450 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் 10 ஆயிரத்து 649 குடிநீர் தொட்டிகள் (சின்டெக்ஸ் பிளாஸ்டிக் தொட்டிகள்) தீவிரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த தொட்டிகளுக்கு லாரிகளில் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்பட்டு வருகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தற்போது கூடுதலான இடங்களில் புதிய தண்ணீர் தொட்டிகள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சராசரியாக இந்த தண்ணீர் தொட்டிகள் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவையாகும். லாரி தண்ணீர் தேவைப்படுபவர்கள் சென்னை மெட்ரோ வாட்டர் இணையதளத்தில் முன்பதிவு செய்தால் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுக்குமாடி வீடுகள்

வெப்பத்தின் தாக்கம் தற்போது அதிகமாக இருப்பதால் குடிநீரின் தேவையும் அதிகரித்து உள்ளது. ஆனால் போதுமான தண்ணீர் ஏரிகளில் இல்லாததால் வினியோகம் குறைந்து உள்ளது.

குறிப்பாக மாநகரில் உள்ள அடையாறு, திருவான்மியூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு முறையாக தண்ணீர் வராததால், லாரிகள் மூலம் விலைக்கு தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் மாத பட்ஜெட்டில் லாரி தண்ணீருக்காக தனியாக பணம் ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது.

அதிலும் குறிப்பாக சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஒரு சில பகுதிகளில் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து துர்நாற்றத்துடன் தண்ணீர் வருகிறது. தொற்று நோய்கள் பரவிவிடும் என்பதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Saturday, March 23, 2019

Medical Negligence Compensation- SC Enhances Compensation in view of Poor Background of Victim

Shilpi Sharan March 8, 2019
 
March 08, 2019

The Supreme Court in the present case enhanced compensation on account of medical negligence meted out to the Appellant has observed that a poor background of the victim may guide the adjudicatory process towards reasonably higher amount of compensation.

Case name: Shoda Devi v. DDU/Ripon Hospital Shimla & ors.

In the instant case, the appellant has assailed National Commission’s order and sought enhancement of compensation on the ground that the appellant’s disablement and loss suffered by her due to the negligence of the respondents, which led to the amputation of her right arm.

The National Commission for the medical negligence meted out to the appellant awarded a compensation of Rs. 2,00,000/-.

Bench’s Verdict

The Supreme Court in view of the facts and circumstances of the case and precedents on the subject enhanced the compensation and made the following observations in the case:

The Supreme Court noted that the requirement in such cases of disablement due to medical negligence is of awarding just and reasonable compensation to the victim, while keeping in view the pecuniary damages as also the non- pecuniary damages like pain and suffering and loss of amenities of life.


The Apex Court while condemning the award of compensation by the National Commission was of the view that even after appreciating the troubles and trauma as also disablement and disadvantage suffered by the appellant, had been too restrictive in award of compensation.


That the general damages towards pain and suffering as also loss of amenities of life deserve to be considered uniformly for the human beings and the award of compensation cannot go restrictive when the victim is coming from a poor and rural background; rather, in a given case like that of the appellant, such a background of the victim may guide the adjudicatory process towards reasonably higher amount of compensation (of course, after having regard to all the attending circumstances).


That granting of reasonability higher amount of compensation in the present case appears necessary to serve dual purposes: one, to provide some succour and support to the appellant against the hardship and disadvantage due to amputation of right arm; and second, to send the message to the professionals that their responsiveness and diligence has to be equi-balanced for all their consumers and all the human beings deserve to be treated with equal respect and sensitivity.

In view of the aforesaid observations, the Supreme Court allowed further an amount of Rs. 10,00,000/- towards compensation, over and above the amount awarded by the State Commission and the National Commission.

The entire case can be accessed here.

Lack Of Parental Care One Of The Reasons For Child's Addiction To Online Video Games : Kerala HC

Lack Of Parental Care One Of The Reasons For Child's Addiction To Online Video Games : Kerala HC: Lack of parental care is perhaps one of the reasons for child getting addicted to online games, observed the High Court of Kerala yesterday.The Court was dealing with a petition by a child seeking...
திருப்பதிக்கு அருகே ஒரு டூர் ஸ்பாட்... கேமராவை `தலகோனா’ பக்கம் திருப்புங்கள்!


ரஞ்சித் ரூஸோ



க. பாலாஜி


பா.காளிமுத்து 



கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயில் வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டது. இரண்டு நாள் மட்டுமே விடுமுறை கிடைப்பவர்களுக்கு டூர் செல்ல மிகவும் குறைவான இடங்கள்தான் உள்ளன. ஏற்கெனவே ஒக்கேனக்கல், ஏற்காடு, ஏலகிரி, தடா, நாகாலபுரம் ஆகிய இடங்களைச் சுற்றியிருந்தால், அடுத்து உங்கள் கேமராவை தலகோனா பக்கம் திருப்புங்கள்.



தமிழகத்துக்கு மேற்குத்தொடர்ச்சி மலை என்றால், ஆந்திராவுக்கு கிழக்குத்தொடர்ச்சி மலை. கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சேஷாச்சல காட்டில் இருப்பதுதான் தலகோனா அருவி. அண்ணாநகரில் இருந்து காலையில் இட்லிகளை விழுங்கிவிட்டு காரை விரட்டினால், 30 நிமிடத்தில் செங்குன்றம் தாண்டி IOC பெட்ரோல் பங்க் தொட்டிருப்பீர்கள். இடதுபுறம் திரும்பி பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, பிச்சாட்டூர், நாகலாபுரம் வழியாக மதியம் சித்தூர் சேர்ந்துவிடலாம்.

தலகோனா போவதற்கு முன்பு கயிலாசகோனாவைப் பார்த்துவிட வேண்டும்.
சித்தூர் - திருப்பதி ரூட்டில் செல்லும்போது சூரியகாந்தி தோட்டம் வரும். அங்கு பூக்களோடு சில போட்டோ, பிறகு ஒரு வெல்கம் ஸ்டேட்டஸ்... 10 நிமிடத்தில் கயிலாசகோனாவின் வாசல் வந்திருக்கும். பார்க்கிங் வசதி உண்டு. பைக்கில் செல்பவர்கள் குரங்குகளிடம் பொருள்களைப் பறிகொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.



தலகோனா போகும் வழியில் இருக்கும் அருவி கயிலாசகோனா. அழகான இந்தப் பெயரை `கோனே ஃபால்ஸ்' என்று மாற்றிய மகராசரைத்தான் ஆந்திரா அண்ணையாக்கள் தேடுகிறார்கள். `வெயிலில் ஆந்திர அருவிகள் வறண்டுபோயிருக்குமே!’ என்று லாஜிக்கலாக யோசிக்கலாம். ஆனால், உங்களை லாஜிக்கில் ஓட்டையைப் போட்டு பறக்கவிடுகிறது இயற்கை. இந்தியாவில், முரட்டு வறட்சியிலும் தண்ணீர் வற்றாத அருவிகளில் கயிலாசகோனாவும் ஒன்று. தண்ணீர் வற்றாது... ஆனால், தண்ணீர் மிகக் குறைவாகும் சமயங்கள் உண்டு. ஆர்ப்பரிக்கும் அருவி விரும்பிகள் `நீலு பாகுந்தி’ என்றால் மட்டும் கோனேவில் கால் வையுங்கள். கயிலாசகோனாவில் ஆன்மிக விரும்பிகளுக்கு சிவன் கோயிலும், அட்வெஞ்சர் விரும்பிகளுக்கு ட்ரெக்கிங் ஸ்பாட்டும் உண்டு. ஆபத்தில்லாத அம்சமான ட்ரெக்கிங்.

கயிலாசகோனாவில் குளியல் ஆட்டம் போட்டுவிட்டுக் கிளம்பினால், அடுத்த ஸ்டாப் திருப்பதி. தலகோனாவில் 5 மணிக்குமேல் அனுமதியில்லை. அதனால், திருப்பதி சென்று ரூம் எடுத்துத் தங்கிவிட்டு, அடுத்த நாள் காலையில் கிளம்புவதுதான் சிறப்பு. இரண்டு நபர்களுக்கு 400 முதல் 1,500 ரூபாய் வரை விலையுள்ள தங்கும் விடுதிகள் உள்ளன. ஓயோ போன்ற ஆப் பயன்படுத்தி முன்பதிவுசெய்தால், குறைவான விலையில் காலை உணவுடன் சுத்தமான ரூம் பிடித்திடலாம். திருப்பதி கோயிலின் பின்பக்கமாக இறங்கினால் அருவிகளும் குளங்களும் உள்ளன. பாபவினாசம் ஏரியும் உள்ளது. ஏழு குண்டலவாடாவுக்கு கோவிந்தா போட்ட கையோடு, இந்த ஏரியில் ஒரு குளியல் போடலாம். முதலைகளிடம் மட்டும் உஷார்.



திருப்பதியிலிருந்து சென்னை அனந்தாபுரி நெடுஞ்சாலையைப் பிடித்து, பக்காரபேட்டை - தலகோனா சாலையில் 60 கி.மீ தொலைவு சென்றால், அருவியை அடையாளம். வழியில் காட்டுப் பாதையைக் கடந்து ஊருக்குள் சென்று மீண்டும் காட்டுக்குள் வருவீர்கள். அடர்ந்த காடு கிடையாது. புல்வெளிகள்தான். இந்தக் காட்டில் புலியும் சிங்கமும் வாழ்வதாக அங்கு இருக்கும் வன அதிகாரி சொல்கிறார். இரவில் கரடிகளும் காட்டெருமைகளும் லன்ச் சாப்பிட நாம் பயணிக்கும் சாலையை அவ்வப்போது கடக்குமாம். கீரிகளிடம் மட்டும் கேர்புல். எந்த நேரத்திலும் வரும்.



செக்போஸ்ட்டில் எல்லா வாகனங்களையும் சோதித்துப்பார்ப்பார்கள். அவரவர் பொருள்களுக்கு அவரவர்தான் பொறுப்பு. மது பாட்டில்களுக்கு, கட்டாயம் அனுமதி கிடையாது. தலகோனாவில் ஆந்திரா அரசின் ரிசார்ட் உள்ளது. ஏ.சி கிடையாது. இரண்டு நபர்களுக்கு ஒரு குடில். 5,000 ரூபாய் ரூமில் 10 பேர் தங்கலாம். உணவு அங்கேயே சமைத்துத் தருகிறார்கள். தலகோனாவுக்கு பார்க்கிங், என்ட்ரி டிக்கெட் என எதுவும் கிடையாது. மிகவும் கரடுமுரடான சாலை. காரில் செல்பவர்கள் தரைதட்டாமல் பார்த்து ஓட்ட வேண்டும்.



சாலை முடியும் இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல வேண்டும். 240 மீட்டர் தூரமும் 40 அடி உயரமும் நடக்க வேண்டும். பெரிய பெரிய அகலமான படிக்கட்டுகள் உண்டு. அருவி மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். கீழ்ப் பகுதியில் நீர்த்தொட்டி அமைத்திருப்பார்கள். சின்ன குழந்தைகள் ஸ்விம்மிங் செய்ய அருமையான இடம். மேலே சென்றால் சின்ன அருவி இருக்கிறது. அங்கிருந்து மேலே பார்த்தால் பெரிய அருவி தெரியும். மேலே செல்பவர்கள்தான் 50 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டும் அருவியின் உற்சாகத்தையும் சித்தர் குகையையும் பார்க்க முடியும். தலகோனா தண்ணீர், பல மூலிகைகளைத் தொட்டுவருகிறதாம்.



நீர் மெல்லிதாக வந்தாலும் செம போர்ஸ். சில்லென்ற தண்ணீரில் நின்றால் அருவியே நமக்கு மசாஜ் செய்து களைப்பைப் போக்கிவிடும். அருவிநீர் நகர்ந்துகொண்டே இருக்கும். கொஞ்ச நேரம் நம் தலையில் விழும், கொஞ்ச நேரம் அருகில் இருப்பவர் தலையில் விழும். எல்லோருக்கும் வாய்ப்பளிக்கிறது தலகோனா அருவி. இங்கேயும் ட்ரெக்கிங் உண்டு. ஆந்திராவில் `நோ என்ட்ரி’ எனப் போட்டிருந்தால் அந்த இடம் அழகாக இருக்கும் என அர்த்தம். அழகு இருக்கும் அளவுக்கு ஆபத்தும் இருக்கும். லோக்கல் கைடு யாராவது இருந்தால் அழைத்துக்கொண்டு 270 அடி உயரத்துக்கு டிரெக்கிங் சென்று மலையின் இன்னொரு முகத்தைப் பார்க்கலாம்.



தலகோனா மலையில் ஜங்கில் சஃபாரி உண்டு. 8 பேர் போகக்கூடிய பெரிய வேன் ஒன்றில் நம்மைக் காட்டுக்குள் கூட்டிப்போவர்கள். அதிர்ஷ்டம் இருந்தால் சிங்கம், புலியைப் பார்க்கலாம். கருஞ்சிறுத்தை கேஷுவலாக வாக்கிங் போகுமாம். சாதா சிறுத்தையும் உண்டு. மான், ஹைனா, காட்டெருமை போன்றோரும் இங்கு வசிக்கிறார்கள்.

``புலியைப் பார்த்தீர்களா?’’ என வன அதிகாரியிடம் கேட்டோம். ``போனவாரம்கூட ஒருத்தரை அடிச்சித் தூக்கிட்டுப் போயிடுச்சு’’ என்று திகில் கிளப்பினார். காட்டில் யானை மட்டும் ``மன்ச்சு லேது’’ என்றார். இந்த சஃபாரிக்கு 4,000 ரூபாய். காலை 6 முதல் 9 வரை. மாலை 3.30 முதல் 5.30 மணி வரை காட்டில் சுற்றிவரலாம்.



செம்மரங்களும் சந்தனமரங்களும் நிறைந்த காடு இது. தேவாங்கு இங்கே அதிகம். வெள்ளைக் கழுகு, பச்சை நிற புறா, மஞ்சள் தொண்டைச் சின்னான் (Yellow-throated Bulbul), ஸ்கிமிட்டார் பாப்லர் போன்ற அறிய வகை பறவைகளை இங்கு பார்க்கலாம். பறவைகள் புகைப்படக்காரர்களுக்கு ஏற்ற இடம்.

வீக் எண்ட் வந்ததும் அனிருத் பாட்டைப் போட்டுக்கிட்டு ஆந்திராவுக்கு டூர் சென்றால் நீங்களும் சென்னையின் வாண்டர்லஸ்ட்டே!
தாகத்தில் தவிக்கப்போகிறதா தமிழகம்?! அபாய கட்டத்தில் நிலத்தடி நீர்


ஆர்.குமரேசன்  vikatan   22.03.2019


குளம் என்ற அமைப்புதான் சமுதாயத்தின் உயிர்; மழை தரக்கூடிய அமைப்பு. குளம் உயிர் என்றால் உயிருக்கு ஆதாரமான ரத்தம் கொண்டுபோகக்கூடிய நரம்புகளாக இருப்பவை கால்வாய்கள்.



இன்று, உலக தண்ணீர் தினம். இந்த ஒரு நாளில் மட்டும் தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி பேசிவிட்டு, வழக்கமான பணிகளைத் தொடங்கி விடுவோம். எப்போதும்போல தண்ணீரைச் செலவழிக்க தயங்க மாட்டோம். ஆனால், தண்ணீரை சேமிக்க என்ன செய்கிறோம்? இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். காரணம், தண்ணீர்ப் பஞ்சத்தை இன்னும் சில ஆண்டுகளில் அல்லது மாதங்களில் அனுபவிக்க இருக்கிறோம். தமிழகத்தில் 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை சமீபத்தில் நடத்திய ஆய்வு பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நிலத்தடி நீர் அபாய கட்டத்தில் உள்ளது என்பதைத்தான் அந்த ஆய்வு சொல்கிறது. 358 பகுதிகள் மிகவும் அபாயகரமான பகுதிகளாகவும், 105 அபாயகரமான பகுதிகளாகவும், 212 அபாயகரமான பகுதிகளாகவும், 35 பகுதிகளில் நீர் பயன்படுத்த முடியாத அளவுக்கு உப்புத் தன்மை வாய்ந்திருப்பதாகவும் சொல்கிறது ஆய்வு.



இது, மேம்போக்கான ஓர் ஆய்வு முடிவு. உண்மையில், இன்னும் மோசமாக இருக்கிறது நிலத்தடி நீர் மட்டம் என்கிறார்கள் நீரியல் வல்லுநர்கள். இந்த ஆய்வில் உள்ள பகுதிகளின் பெயர்களைப் பார்த்தால், அவை எல்லாம் தமிழகத்தின் மத்தியப் பகுதி மாவட்டங்கள். காவிரியின் இரண்டு பக்கமும் உள்ள கால்வாய்களை ஒட்டியிருக்கக் கூடிய நகரங்கள். ஆறுகளை ஒட்டிய பகுதிகள். இந்தப் பகுதிகள் இவ்வளவு வறட்சியாக மாறியது ஒரு நாளில் நடந்த நிகழ்வு அல்ல. இதற்கு என்ன காரணம்?

தமிழகத்தில் கால்வாய்கள் என்ற ஒன்றே இல்லாமல்போனதுதான் அடிப்படைக் காரணம். தமிழகத்தில் மழை பெய்யாமல் இல்லை. பெய்துகொண்டுதான் இருக்கிறது. சில ஆண்டுகளில் சராசரி அளவைவிட அதிகமாகவே பெய்தது. பெய்யும் மழை நீரை குளங்களில் முறையாகச் சேர்த்துவைக்கக்கூடிய பாதைகளும் நம்மிடம் இல்லை. நமது மாநிலமே சரிவான மாநிலம். மழைநீரை முறையாகக் கொண்டு சென்று நீராதாரங்களில் தேக்கிவைக்கும் பணியை நம் முன்னோர்கள் சரியாகச் செய்தார்கள். அதை நாம் செய்யத் தவறிவிட்டோம். அதைச் செய்திருந்தால், நிலத்தடி நீர் இத்தனை பாதாளத்திற்குப் போயிருக்காது. நிலத்தடி நீரை ஒரு பக்கம் தொடர்ந்து மாசுபடுத்தும் வேலையையும் செய்துகொண்டே இருக்கிறோம். நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறைக் கழிவு மற்றும் கெடுதலான செயல்பாடுகளையே செய்துகொண்டிருக்கிறோம்.

எந்த நிலத்தில், எந்தப் பகுதியில் எந்தப் பயிரை விளையவைக்க வேண்டுமோ... அதை விளைய வைக்காமல், நமது தேவைக்கேற்ற பயிரை சாகுபடி செய்கிறோம். மேட்டு நிலத்தில் நெல் விளைவிப்பது, தண்ணீர் இல்லாத பகுதிகளில் தண்ணீரைச் செயற்கையாக ஏற்படுத்தி வாழை, கரும்பு, மஞ்சள் பயிரிடுவது, இப்படி மானாவாரி பகுதிகளில் நீர் தேவையுள்ள பயிர்களை அதிகம் பயிரிடுகிறோம். இதனால் நிலத்தடி நீர் அதிக அளவில் உறிஞ்சப்படுகிறது. பூமியில் அளவுக்கதிகமான தண்ணீரை மட்டும் உறிஞ்சுவதில்லை. கூடவே உப்பையும் உறிஞ்சுகிறோம். இதனால் உப்பாக அல்லது அடர்த்தியாக மாறிய தண்ணீரை நீர்த்துப்போக வைக்கக்கூடிய செயல் திட்டங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. இத்தனை வறட்சியில் இருக்கிறது தமிழகம். நாளைக்கு உழவுமழை பெய்கிறது என வைத்துக்கொள்வோம், அதை என்ன செய்யப்போகிறோம் என்ற திட்டம் நம்மிடம் இல்லை. தினசரி ஒவ்வொரு தனிமனிதனும் ரசாயனப் பயன்பாட்டை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறான். ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் பள்ளத்தில் இருக்கக்கூடிய குளம், கழிவுநீர் தேங்கும் குட்டையாக மாறிக் கிடக்கிறது. அந்தக் கழிவுநீர் குளத்தை முறைப்படுத்தும் செயல்திட்டம் நம்மிடம் இல்லை. இதேபோல, கழிவுநீர் குளங்கள் தொடர்ந்து இருக்கும்போது நிலம் உப்பாக மாறும்.



பயிர்களுக்குத் தூவும் யூரியா போன்ற ரசாயனங்களும் மழைத் தண்ணீரில் அடித்து வரப்பட்டு கடைசியில் நீராதாரங்களில்தான் சேர்கின்றன. மூன்றாவது, பூமியின் அடி ஆழத்தில் இருந்து தண்ணீரை உறிஞ்சும்போதும் தேவையில்லாத உப்பை எடுத்துக்கொண்டு வந்து மேலே போடுகிறோம். இப்படிப் பல செயல்பாடுகளினால் தண்ணீரின் அடர்த்தி அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இது ஒரு அபாயகரமான சூழ்நிலை. நீராதாரங்கள் மிக மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன.
இதே நிலை நீடித்தால், வரக்கூடிய ஆண்டுகளில் மிகப்பெரிய சிக்கல்களை நாம் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்கு மாற்று செயல் திட்டங்களை இன்றிலிருந்து தொடங்கினாலும், இந்த நிலை மாற ஐந்து ஆண்டுகள் ஆகும். அவ்வளவு தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆனால், அதற்கான செயல் திட்டத்தைப் பற்றி இன்னும் நாம் சிந்திக்கவே இல்லை.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளிலும் நிலத்தடி நீரின் நிலை குறைந்துவிட்டது. வேதிப் பொருள்களின் பயன்பாடு அதிகமாக இருக்கும் நிலையில், தண்ணீரை முறைப்படுத்தி, வாய்க்கால் வழியாக ஓடவிட்டு நீராதாரங்களில் சேமிக்க வேண்டும். ஆனால், வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், நீர் குளங்களுக்குப் போகாமல் பக்கத்தில் உள்ள நிலங்களில் தேங்கி ஆவியாகிவிடுகிறது. குளங்களில் நீர் சேராததால்தான் நிலத்தடி நீர் அபாயகரமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது. குளம் என்ற அமைப்புதான் சமுதாயத்தின் உயிர். மழை தரக்கூடிய அமைப்பு. குளம் உயிர் என்றால் உயிருக்கு ஆதாரமான ரத்தத்தைக் கொண்டுபோகக்கூடிய நரம்புகளாக இருப்பவை கால்வாய்கள். அவற்றைச் சிதைத்தும், ஆக்கிரமித்தும் வைத்திருக்கிறோம். நான்குவழிச் சாலைகள் அமைக்கும்போது, பெரிய கால்வாய்களுக்கு மட்டும் பாலம் போடுகிறார்கள். ஆனால், சிறு ஓடைகள் 90 சதவிகிதம் மூடப்பட்டுவிட்டன. வாகனங்கள் செல்வதற்கான பாதையை அமைக்கிறார்கள். ஆனால் தண்ணீர் செல்வதற்கான பாதையை அழிக்கிறார்கள். இதனால், கால்வாய்களின் முகமே அழிந்துகொண்டிருக்கின்றன. சாலை அமைப்பவர்களுக்குக் கால்வாய் பற்றிய முக்கியத்துவமே தெரிவதில்லை. தங்கள் பணி சாலை அமைப்பது என நினைத்து அதை மட்டும் செய்துவிட்டுப் போய்விடுகிறார்கள்.



தற்போது, ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலைப் பணி நடந்துகொண்டிருக்கிறது. அதிலும் ஏகப்பட்ட சிற்றோடைகள் அழிக்கப்பட்டுவருகின்றன. நீர்ப்பிடிப்புப் பகுதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குத் தண்ணீர் போகக்கூடிய அமைப்பை உருவாக்க வேண்டும். குளங்கள், ஏரிகள் தண்ணீர் இல்லாமல் சும்மா இருக்கின்றன என ஆக்கிரமிப்புசெய்துவருகிறோம். இவை, வெறும் குளங்கள், ஏரிகள் அல்ல. மனித குலத்திற்குத் தேவையான தண்ணீரைச் சேமிக்கும் கலன்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நமது நீண்டகால தவறுகளின் விளைவுகளால்தான் நிலத்தடி நீர் மிக அபாயத்தில் இருக்கிறது. இனிவரும் காலங்களில், ஒரு சொட்டு ரத்தத்துக்கு இணையாகத் தண்ணீர் மாறப்போகிறது. இனிமேலாவது தாமதிக்காமல் நீர் சேமிக்கும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இல்லையென்றால், மிகப்பெரிய தண்ணீர்ப் பிரச்னையைச் சந்திக்க நேரிடும்.
Postgraduate medical students to get higher stipend

Postgraduate medical seat aspirants have a reason to rejoice. 


Published: 20th March 2019 06:46 AM |

By Rashmi Belur

Express News Service

BENGALURU: Postgraduate medical seat aspirants have a reason to rejoice. The government has decided to hike the stipend paid to PG medical students from the 2019-20 academic year onwards. As per information from a Department of Medical Education official, the stipend will be increased by Rs 5,000 to `10,000 per month. “The fee we have increased recently is per year, and the stipend hikes will be monthly. So students need not be upset over the fee hike,” said the official.

Currently, PG students get a stipend of `30,000 in the first year, `35,000 in the second year and Rs 40,000 in the third year. This will be increased by between `5,000 to `10,000, say officials. As the model code of conduct is on, the department cannot announce the hike in stipend. This stipend is for all PG medical seat students under the government quota or those seeking a seat at a government medical college.

The government had announced a fee hike for PG medical courses by 15 per cent for the next academic year. With this hike, the fee, under the government quota for clinical seats, costs `5,81,900, para-clinical seats at Rs 1,45,475, and pre-clinical seats at Rs 72,737. This fee hike was opposed by students and various student organisations.


PG aspirants have welcomed the development. Dr Pramod N, state convenor of White Spark, a forum for medical and dental students in Karnataka, said, “This is a good move, we welcome it. But linking this hike in stipend with the fee hike is not acceptable. The stipend students are getting is for the service they do at government hospitals, and most hospitals are run by PG students.”

NEWS TODAY 23.12.2025