Sunday, September 22, 2019

Govt okays ₹4,300cr for EWS quota in 158 edu institutions
₹2,680Cr Sanctioned For Infrastructure, ₹917Cr For Scholarships


Manash.Gohain@timesgroup.com

New Delhi:22.09.2019

The Centre has sanctioned an additional amount of ₹4,315.15 crore for implementation of the 10% quota for the economically weak among the general category across 158 centrally funded higher education institutions (HEIs).

In addition to the 1.18 lakh seats that had been added in these institutions in 2019, which include the Indian Institutes of Technology (IITs), Indian Institutesof Management (IIMs), National Institutes of Technology (NITs) and Indira Gandhi National Open University (IGNOU), there will be another 95,783 seats to be added in the 2020-21admission cycle.

The money has been releasedtotheinstitutionsfor the two-phased EWS quote implementation which includes scholarships, salaries of teachers and infrastructure creation. A senior HRD official said, “The institutions have nearly completed the implementation of the first phase of the EWS quota implementation. The universities sent their proposals to the ministry. After studying the proposals, the governmentsanctionedthe additional fund to facilitate the implementation of the reservation.”

Of the total money sanctioned, a major portion will be used for creation of infrastructure.The governmenthassanctioned ₹2,680.18 crore for the purpose, followed by ₹917.14 crore for scholarships.

For full report, www.toi.in

Saturday, September 21, 2019

இரண்டு பாதுஷாக்களும் இன்னிசை தான்சேனும் 01: ஓர் இசைச் சாரதியின் கதை! 

'

புதிய பறவை' பாடல் காட்சி...

தமிழ்த் திரையுலகம் எப்போதுமே மூன்றெழுத்துக்களை மையமாக வைத்து இயங்குவது எழுதப்படாத விதி. சிவாஜி - எம்.ஜி.ஆர், கமல் - ரஜினி, அஜித் - விஜய் என மூன்றெழுத்தே மூச்சாகிப்போன படவுலகம் தமிழ் சினிமா. அதில் ஒரு பெரும் பொற்காலத்தின் திரை இசை சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியாகக் கோலோச்சிய இன்னொரு மூன்றெழுத்து எம்.எஸ்.வி.

இசை மகாமேதை தான்சேன், ஒரு பாதுஷாவுக்கு நிழலாகவும் உயிராகவும் இந்துஸ்தானி இசைக்கு அடையாளமாகவும் வாழ்ந்து மறைந்தார்.


இயல்பாகவே உலக இசை வடிவங்களை மெய் மறக்கச் செய்யும் மெல்லிசையாக வழங்கிய இன்னொரு திரையுலக தான்சேன் என மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனை வருணிக்கலாம். திரை நடிப்பின் இலக்கணம் வகுத்த ஒரு பாதுஷாவுக்கும் திரை வழியே மக்களுக்கான அரசியலைக் கட்ட முயன்ற மற்றொரு பாதுஷாவுக்கும் அவர்களை சாமானிய மக்கள் மத்தியில் விரைந்து பிரபலப்படுத்திய திரையிசையின் நாடித் துடிப்பாக வாழ்ந்த கதையைப் பார்க்கப் போகிறோம்.

‘மெல்லிசை மன்னர்களா’க விஸ்வநாதன் - ராமமூர்த்தி இணை, காலத்தை வென்ற பல பாடல்களைக் கொடுத்தது. ஒரு கட்டத்தில் இவர்கள் பிரிந்தபின், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் தனிப் பயணம் உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் சந்திக்காத சவால்கள் நிறைந்த வரலாறு. தமிழ்த் திரையில் விஸ்வரூபம் எடுத்து நின்ற இரு பெரும் துருவ நட்சத்திரங்களுக்கு அவர்களின் பின்னணியில் நீலவானமாக விஸ்வ ‘நாதம்’ நிறைந்து நின்றார். அந்தப் பின்னணியின் வீரியம் புரிய வேண்டும் என்பதற்காக முதலில் எம்.எஸ்.வியிடம் இருந்து சற்றே விலகிச் சென்று பின்னர் அவருடன் சேர்ந்துகொள்வோம்.

இரு லகான்கள்

திரையுலகைக் கரைத்துக் குடித்திருந்தாலும் தனிப்பட்ட முறையில் திரையுலகில் நடிப்பைத் தவிர வேறு எதைப் பற்றியுமே சிந்திக்காதவர் சிவாஜி. மிகவும் டைட்டான குளோசப் காட்சிகளில் நடிகர் திலகத்தின் புருவம்கூடத் துடிக்கும், நடிக்கும். ஆனால், எம்.ஜி.ஆரோ திரைப்படத் தயாரிப்பின் அத்தனை பிரிவுகளிலும் வலிய நுழைந்து பிரகாசித்து வெற்றிக்கொடி நாட்டிய மிகச் சிறந்த டெக்னீசியன்கூட.

இருவருக்குமே கலையுலக சாதனைகளோடு அரசியல் வெற்றிக்கனியின் மீதும் ஆசை இருந்தது. நடிப்புக்கு என்று தனி இலக்கணம் எழுதிய நடிகர் திலகத்தின் ஒவ்வொரு படமும் அவரைத் தமிழக மக்களின் அண்ணனாக, தம்பியாக, தந்தையாக, காதலனாக, மகனாக குடும்ப உறவு சொல்லிக் கொண்டாட வைத்தது.

ஆனால், எம்.ஜி.ஆருக்கோ இதைத் தாண்டி அவரது வசனங்களும் பாடல்களும் அரசியல் களத்தின் அதிர்வேட்டுகளாகவே கொண்டாடப்பட்டன. குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அவர் பிரிந்த பிறகு ஒரு தனி இயக்கம் தொடங்கி, அதை வெற்றிகரமாக அரசியல் வானில் பறக்கவிட வேண்டிய நிர்ப்பந்தம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது.


தனது அரசியல் வெற்றிக்கு ஆணிவேராகத் தன் திரைப்படங்களை சாமர்த்தியமாக நகர்த்திச் சென்றார் அவர். இப்படிப்பட்ட போர்க்களத்தில் மிக வித்தியாசமான வகையில் எதிரெதிர் முகாம்களின் இரண்டு வெற்றிக் குதிரைகளின் லகான்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற இசைச் சாரதியின் கைகளில் இருந்தன.

சில ‘பளிச்’ உதாரணங்கள்

விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை பிரிந்த பிறகு மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் மட்டுமே தமிழ்த் திரையுலகை முழுமையாக ஆட்சி செய்தார். ஆனால், அந்த ஆட்சி இந்த இரு பெரும் நட்சத்திரங்களின் எதிர்பார்ப்புகளை மிகப் பெரிய அளவில் ஈடுசெய்ய வேண்டியதாகவும் அதே நேரத்தில் கே.பாலசந்தர், ஸ்ரீதர் போன்ற ஜாம்பவான் இயக்குநர்களின் சவால்கள் நிறைந்த கதைச் சூழல்களுக்குப் பதிலளிக்க வேண்டியதாகவும் இருந்தது.

சில உதாரணங்களைச் சொல்வதானால் ‘ஆஹா மெல்ல நட மெல்ல நட’ என்று சிவாஜிக்குப் பாட்டுப் போட்டால் எம்.ஜி.ஆருக்கு ‘மெல்லப் போ மெல்லப் போ’ எனப் பாடல் தரவேண்டியிருந்தது. அதே போல் சிவாஜிக்கு ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்தால்’ எம்.ஜி.ஆருக்கு ‘லவ் பேர்ட்ஸ்’ முத்தம் கொடுக்க வேண்டியிருந்தது.


எம்.ஜி.ஆர். ‘செல்லக்கிளியே மெல்லப்பேசு’ என்று குழந்தையைத் தாலாட்டினால் சிவாஜி ‘செல்லக் கிளிகளாம் பள்ளியிலே’ என்று குழந்தைகளைத் தாலாட்டினார். இன்னும் இது போல பல பாடல்கள் உதாரணம் உள்ளன.

சிவாஜியின் படங்களுக்கு அவரது உருக்கமான நடிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் நுணுக்கமான மெட்டுக்களைக் கொடுத்த மெல்லிசை மன்னர் அதில் பல பாடல்களை ஹரிகாம்போதி, கரஹரப்ரியா, ஆபேரி, ஹிந்தோளம், சாருகேசி, மத்யமாவதி, சக்கரவாகம், ஹம்சானந்தி, பிருந்தாவன சாரங்கா, கல்யாணி எனப் பல்வேறு கர்னாடக இசை ராகங்கள் அடிப்படையிலும், அதே நேரம் மேற்கத்திய இசைச்சாரம் பொங்கும் பாடல்களோடு கிராமிய மணம் கமழும் பாடல்களையும் அமைத்தார்.

எம்.ஜி.ஆரின் படங்களுக்கு ஜாஸ், ஸ்பானிஷ், பாரசீக இசை, பாங்கரா எனப் பல்வேறு உலக இசை வடிவங்களிலும் தேஷ், சுத்த சாரங், த்விஜாவந்தி, மாண்ட், பெஹாக், திலங் காபி, பாகேஸ்வரி எனப் பல்வேறு இந்துஸ்தானி ராகங்கள் கலந்து பிரமிப்பூட்டும் மெல்லிசை மெட்டுக்களையும் படைத்தார். அனைத்துப் படங்களிலும் டைட்டில், பின்னணி இசைக்குப் புது அடையாளம் கொடுத்தார். அந்த மகத்தான சரித்திரத்தின் சில அதிசயமான பக்கங்களை வரும் வாரங்களில் தனித் தனியாகப் புரட்டிப் பார்ப்போம்.

பாடல்களே படம்
1932-ம் ஆண்டு ஜே.ஜே.மதன் இயக்கத்தில் வெளியான ‘இந்திர சபா’ என்ற திரைப்படம் சுமார் 70 பாடல்களை கொண்டுள்ளது. இந்த படம் ஆகா ஹாசன் அமானத் என்ற உருதுக் கவிஞர் எழுதிய நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது.

(நாதம் ஒலிக்கும்)
- டெஸ்லா கணேஷ், தொடர்புக்கு: teslaganesh@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

  • செப் 28 (ச) மகாளய அமாவாசை
  • செப் 29 (ஞா) நவராத்திரி ஆரம்பம்
  • அக்., 02 (பு) காந்தி ஜெயந்தி
  • அக்., 02 (பு) தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., 111வது பிறந்தநாள்
  • அக்., 07 (தி) சரஸ்வதி பூஜை
  • அக்., 08 (செ) விஜயதசமி
உங்களுக்குத் தெரியுமா..? தமிழ்நாட்டு மருத்துவக் கல்வி தோற்றமும் வளர்ச்சியும்!
By DIN | Published on : 20th September 2019 03:32 PM |




தமிழர்களுக்கென்று சிறப்பான நாகரீகம் உண்டு என்பதை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுப்பதற்கில்லை. தமிழ் நாகரீகம் எந்த அளவு பரவியிருந்தது என்பதற்கும், அதன் சிறப்புக்கும் சங்ககால இலக்கியங்களே சாட்சி. நாகரீகம் வளர்ந்த சமுதாயத்தில் உடல் நலனை பாதுகாக்க பல்வேறு அம்சங்கள் இருப்பதைப் போலவே, மருத்துவ முறையும் இயற்கையாகவே இருக்க வேண்டும். எனினும், இருக்கும் ஆதாரங்கள் வைத்து பார்த்தால் தமிழகத்தில் சிறந்த மருத்துவ முறை இருந்ததை தெரிந்துகொள்ள முடியும். மனிதகுலத்தின் வரலாறு எவ்வளவு பழமையானதோ அதே அளவுக்கு மருத்துவத்தின் வரலாறும் பழமையானதாகும். தமிழ் இலக்கியத்தின் புனித நூலான திருக்குறளில் மருத்துவம் பற்றிய மனித சிந்தனைகள் பெருமளவில் இடம் பெற்றிருக்கின்றன.

காலப்போக்கில் தமிழக மருத்துவத்திற்கு சித்த மருத்துவம் எனப் பெயர் வந்தது. இந்த மருத்துவத்தை சித்தர்கள் செய்ததால் அதற்கு அவ்வாறு பெயர் வந்தது. சமண மதத்தவர்கள் தமிழகம் வந்தபிறகு தமிழக மக்களின் வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவக் கல்வியை குறிப்பாக சித்த மருத்துவக் கல்வியை பரப்புவதில் ஆர்வமாக இருந்ததால், தமிழகத்தில் மருத்துவம் பரவியது.

இந்தியா முழுவதும் சித்தர்கள் பரவியிருந்தாலும் அவர்களின் மருத்துவ நூல்கள் தமிழ் மொழியில் மட்டும்தான் எழுதப்பட்டிருந்தன. எனவே, சித்த மருத்துவம் தமிழ் மருத்துவம் என்றும் அழைக்கப்பட்டது.

தமிழகத்தில் மருத்துவக்கல்வி வரலாறு: கிபி 900 - 1200 ஆண்டு சோழர்கால கல்வெட்டுகளில் இருந்து தென்னிந்தியாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் குறித்த தகவல்களை அறிய முடியும். அவற்றில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் நகரில் அமைந்திருக்கும் 1067 ஆண் ஆண்டின் வீர ராஜேந்திர சோழனின் கல்வெட்டு குறிப்பிடத்தக்கவை. இந்த கல்வெட்டுகளில் மருத்துவக் கல்லூரி, விடுதிகள்ஸ மருத்துவமனை போன்றவற்றை பற்றி விவரங்கள் பெற முடிகிறது.

அந்தக்காலத்தில் திருமுக்கூடல் நகரில், வைத்திய சாலை(அதுல சாலை) என்ற பெயரில் ஏராளமான மருத்துவமனைகள் இருந்துள்ளன. இவை ஒவ்வொன்றிலும் 15 படுக்கைகள், ஒரு அறுவை மருத்துவர், இரு செவிலியர்கள், ஒரு முடி திருந்துபவர் மற்றும் இரு பணியாளர்கள் இருந்துள்ளனர். மருத்துவர்களுக்கு வைத்திய விரித்த அல்லது வைத்யகம் என்ற பெயரில் ஊதியம் வழங்கப்படும். அதுமட்டுமின்றி தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் சவர்னன் என்ற பெயரில் பரம்பரை மருத்துவர் ஒருவரும் இருந்துள்ளார். நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறிய கிளினிக் இருக்கும் அந்த கிளினிக்கில் இருக்கும் மருத்துவவரை வைத்தியன் என்றும், அறுவைசிகிச்சை மருத்துவரை கள்ளி யாக்கிரயாய் செய்வான் என்று அழைப்பது வழக்கம்.

தமிழகத்தில் அலோபதி என்ற புதிய மருத்துவமுறை ஐரோப்பியர்களால் குறிப்பாக ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தொடக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் நோயுற்ற போர்வீரர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்காகத்தான் மேலைநாட்டு மருத்துவமனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இவை வளர்ச்சியடைந்து அரசு மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவம் அளிக்கும் விரிவான மருத்துவ முறையாக மாற்றம் பெற்றது.

சென்னை: சென்னையில் முதல் மருத்துவமனை 1664 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ கோகன் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து தொடங்கப்பட்டது. அப்போது அந்த மருத்துவமனைக் கட்டிடத்திற்கு மாத வாடகையாக அப்போதைய நாணயமான 2 பகோடாக்கள் தரப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல் மருத்துவமனை தொடங்கப்பட்ட நகரம் என்ற பெருமையை சென்னை பெற்றது. அதன்பின்னர் இங்கிலாந்து போர் வீரர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்காக 1679 ஆம் ஆண்டு சென்னையில் ராணுவ மருத்துவமனை தொடங்கப்பட்டது. 1745 ஆம் ஆண்டு சென்னையில் கடற்படை மருத்துவமனை தொடங்கப்பட்டு 1790 ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்து வந்தது. அதுவரை அங்கு சிகிச்சை பெற்று வந்த கடற்படை வீரர்கள், அதன்பிறகு காரிசான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து 1808 ஆம் ஆண்டு புதிய கடற்படை மருத்துவமனை கட்டப்பட்டது. இது 1831 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்து வந்தது. அதன்பின்னர் துப்பாக்கி ஊர்தி மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

1816 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி சென்னையில் வெளியடப்பட்ட பொது அறிவிப்பின் மூலம், சென்னையில் 983 பகோடா செலவில் தொழு நோயாளிகளுக்கான தனி மருத்துவமனை அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த மருத்துவமனை சென்னை அரசு தொழுநோய் மருத்துவமனை என பெயமாற்றம் செய்யப்பட்டது. 1921 ஆம் ஆண்டு வெலிங்டன் பிரபு ஆட்சிக் காலத்தில் அந்த மருத்துவமனை மூடப்பட்டது. அதற்குபதிலாக செங்கல்பட்டில் வெலிங்டன் தொழுநோய் மருத்துவமனை என்ற பெயரில் புதிய மருத்துவமனை கிற்ஸ்துவ அறக்கட்டளை மூலமாக தொடங்கப்பட்டது. 1819 ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் இந்தியாவின் மிகப்பழமையான கண்மருத்துவமனை தொடங்கப்பட்டது.

தோற்றமும் வளர்ச்சியும்: தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலம் 1835 ஆம் ஆண்டுதான். அந்த ஆண்டில் இருந்துதான் கிழக்கிந்திய நிறுவனத்தின் சென்னை மாகாண அரசு மருத்துவக்கல்வியை முறைப்படி அங்கீகராம் அளித்து ஊக்குவிக்கத் தொடங்கியது.

இந்தியாவின் தலைச்சிறந்த மருத்துவக்கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் சென்னை மருத்துவக்கல்லூரி 1835 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி சென்னை மருத்துவப்பள்ளி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இதனை அப்போதைய அரசின் ஆணைப்படி, ஆளுநர் பிரடெரிக் ஆதம் திறந்துவைத்தார். இந்த மருத்துவப் பள்ளியின் முதல் வகுப்பு 1835 ஆண் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி தொடங்கியது. 1838 ஆம் ஆண்டு தனியார் மாணவர்களும் இந்த மருத்துவப் பள்ளியில் சேர அனுமதி அளிக்கப்பட்டது. இந்த பள்ளியில் அனைவருக்கும் இலவச மருத்துவம் அளிக்கப்பட்டது. அதன்பின் ஆண்டுகள் செல்லச் செல்ல ஏராளமான மாணவர்கள் இந்த பள்ளியில் சேர்ந்து படிக்கத்தொடங்கினர். இதனால் சென்னை மருத்துவப்பள்ளியின் புகழ் வேகமாக பரவியதால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனமாக மாறியது. மும்பை மற்றும் கொல்கத்தா மருத்துவ பள்ளிகளுக்கு இணையானதாக கருதப்பட்டது. 1850 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சென்னை மருத்துவ மருத்துவப் பள்ளி தரம் உயர்த்தப்பட்டு சென்னை மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்டது.

1851 ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநராக இருந்த சர் ஹென்றிபோர்ட் சென்னை பல்கலைக்கழத்தின் மூலம் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி வழங்கப்பட வேண்டும் வலியுறுத்தினார். இதனிடையே அதாவது 1854 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியை மருத்துவம் மற்றும் அறுவை மருத்துவத்திற்கான காலணி பள்ளிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என லண்டனில் உள்ள ராயல் காலேஜ் சர்ஜனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை 1855 ஆம் ஆண்டு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

1863ல் 1857 ஆம் ஆண்டின் 27வது சட்டத்தின்படி சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்திற்கு மருத்துவப்பட்டங்கள் மற்றும் பட்டயங்ககளை வழங்கும் தனி உரிமை தரப்பட்டது. அதன்படி, மருத்துவக் கல்வியில் பட்டம் பெற விரும்புபவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை நடத்தும் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறுவது அவசியம் என்று சென்னை அரசு அறிவித்தது.

சென்னைப் பல்கலைக்கழகம் 1857 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தாலும், 1863 ஆம் ஆண்டில்தான் அதற்கு தேர்வு நடத்தி பட்டம் வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.

தேர்வு நடத்தி பட்டம் வங்கும் அதிகாரம் சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் ஏற்படுத்தப்பட்டது. இது மருத்துவக்கல்லூரி வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் சென்னை மருத்துவக்கல்லூரி வேகமாக வளர்ந்து, அனைத்து திசைகளிலும் திறன் பெற்று முழுமையும் தற்சார்ப்பும் பெற்றது.

1857 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட பொதுஆணையின்படி சென்னை மருத்துவக்கல்லூரியில் மற்றொரு புதிய வரலாறு படைக்கப்பட்டது. அந்த ஆணையின்படி பால்ஃபர் நகரில் உள்ள தலைமை அறுவை மருத்துவரின் பரிந்துரையை ஏற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் பெண்களை சேர்ப்பது பற்றி வேறு எந்த மருத்துவக் கல்லூரி நினைத்துக் கூட பார்க்காத நிலையில் சென்னைக் கல்லூரி இதை சாதித்து. அந்த நேரத்தில் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தில் கூட மருத்துவக் கல்லூரிகளில் கூட பெண்கள் சேர்க்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரியாப் போச்சு! நம்ம சென்னை ஏர்போர்ட்டில் மேற்கூரை ஒழுகுகிறதாம்!!

By ENS | Published on : 20th September 2019 04:06 PM




சென்னை: புதன்கிழமை பெய்த கன மழையின் போது சென்னை விமான நிலையத்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் ஒழுகிய சம்பவம் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

சென்னையில் கடந்த புதன்கிழமை இரவு கன மழை பெய்தது. சுமார் 10 ஆண்டுகள் பழமையான சென்னை விமான நிலையக் கட்டடத்தின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகியது. உடனடியாக அதிகாரிகள் அதனை சரி செய்யுமாறு உத்தரவிட்டனர். நீர் ஒழுகிய இடங்களில் எல்லாம் பிளாஸ்டிக் டப்பாக்களை வைத்து மழை நீர் வெளியே சிந்தாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.

இது குறித்து விமான நிலையத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார் கூறுகையில், விமான நிலையத்தின் மேற்கூரை ஒழுகுவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்குள் அதனை சரி செய்து விடுவோம். இது மிகச் சிறிய விஷயம். உடனடியாக சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம், திமுக எம்.பி. கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. முதலில் மேற்கூரையே பிளந்து கொண்டுவிழும், தற்போது இது ஒழுக வேறுச் செய்கிறது என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் ஆள் மாறாட்டம் டாக்டர் குடும்பம் ஓட்டம்; உதவிய அதிகாரிகள் யார்?

Updated : செப் 21, 2019 00:20 | Added : செப் 20, 2019 22:47

சென்னை,: மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில், ஆள்மாறாட்டம் செய்வதற்கு, உதவிய அதிகாரிகள் யார் யார் என்ற, கேள்வி எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட, டாக்டர் குடும்பம் தலைமறைவாகி உள்ளதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்தவர், வெங்கடேஷன்; சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார்.இவரது மகன், உதித் சூர்யா, இரண்டு ஆண்டுகளாக, நீட் தேர்வு எழுதியும், தேர்ச்சியடைய வில்லை.

சந்தேகம்

இந்தாண்டு, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தேர்வு எழுதி, 385 மதிப்பெண்கள் பெற்று, கவுன்சிலிங்கில், தேனி அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றார். மருத்துவ கல்வி இயக்ககம் மற்றும் தேனி மருத்துவ கல்லுாரி முதல்வருக்கு, இம்மாதம், 11 மற்றும் 13ல், புகார் ஒன்று வந்தது. அதில், உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்து, கல்லுாரியில் சேர்ந்ததாக கூறப்பட்டிருந்தது.

விசாரணையை துவங்கிய, பேராசிரியர் குழுவினர், ஆள்மாறாட்டம் செய்ததை, புகைப்பட ஆதாரங்கள் வாயிலாக கண்டுபிடித்தனர். இதையடுத்து, மாணவரிடமும், பெற்றோரிடமும், மருத்துவ கல்லுாரி நிர்வாகம் விசாரித்துள்ளது. அப்போது, படிப்பை கைவிடுவதாக, மாணவர் கடிதம் அளித்துள்ளார்.இது குறித்த செய்திகள் வெளியே கசிந்ததும், ஒரு வாரத்திற்கு பின், போலீசில் கல்லுாரி முதல்வர், ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்.

இதனால், இந்த மோசடிக்கு, கல்லுாரி நிர்வாகம் உதவியுள்ளதா என்ற, கேள்வி எழுந்துள்ளது. அதேபோல, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், அசல் சான்றிதழ் தான் சரிபார்க்கப் படும்; உதித் சூர்யா விவகாரத்தில், யாருடைய சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது என்ற, கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவினரும் உதவினரா என்ற, சந்தேகம் உள்ளது.

இதற்கிடையில், ஆள்மாறாட்ட விவகாரத்தில் சிக்கிய, மாணவனின் குடும்பத்தினர், தலைமறைவாகி உள்ளனர்.தனிப்படை போலீசார், நேற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், டாக்டர் வெங்கடேஷன் குறித்து விசாரித்தனர். டாக்டர் குடும்பம் பிடிபட்டால் மட்டுமே, இந்த விவகாரத்தில், உண்மை வெளிச்சத்துக்கு வர வாய்ப்புள்ளது.

விசாரணை


இந்த சம்பவம் குறித்து, தேனி மருத்துவ கல்லுாரி முதல்வர், மருத்துவ கல்வி இயக்குனர், நாராயணபாபுவிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதையடுத்து, முறைகேடு தொடர்பாக, விரிவான ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி, முதலாம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், நேற்று துவங்கின. சென்னை மருத்துவ கல்லுாரி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரிகளில், மாணவர்களை உடன் வைத்து, அவர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

இந்நிலையில்,சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்,மருத்துவ சுற்றுலா கண்காட்சியை துவக்கி வைத்த பின், சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறியதாவது:நீட் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக, மருத்துவ கல்வி இயக்ககத்தின் வாயிலாக, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. காவல் துறை விசாரணையும் நடக்கிறது. நீட் தேர்வை, தமிழக அரசு நடத்தவில்லை; மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வு. இதற்கு, தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

'மனித தன்மை வேண்டும்'

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர், சுதா சேஷய்யன் அளித்த பேட்டி:தேனி மருத்துவ கல்லுாரியில் நடந்துள்ள சம்பவம் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்களின் விபரங்களை சரிபார்க்க, பல்கலை.,யின் இணைப்பு கல்லுாரிகளை அறிவுறுத்தி உள்ளோம். விபரங்கள் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்தால், 24 மணி நேரத்திற்குள் பல்கலைக்கு தெரிவிக்க வேண்டும்.

பல்கலைக்கும், மாணவர் சேர்க்கைக்கும் நேரடி தொடர்பு இல்லை. ஆனால், இதுபோன்ற முறைகேடுகள் நடக்கும் போது, எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்வு குழுவினருடன் ஆலோசித்து வருகிறோம்.மருத்துவ துறையில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில், முறைகேட்டில் ஈடுபட வேண்டாம்; எந்த துறையும் தரக்குறைவானது அல்ல. வயதில் சிறியவர்கள் முறைகேட்டில் ஈடுபட, பெரியவர்கள் உறுதுணையாக இருக்க கூடாது. அனைவரும், மனித தன்மையுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு 1.85 லட்சம் பேருக்கு அனுமதி

Added : செப் 20, 2019 23:21

சென்னை, :முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு 154 தேர்வு மையங்களில் நடக்கும் என்றும் 1.85 லட்சம் பேர் எழுத உள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை -1க்கான தேர்வு வரும் 27 28 29ம் தேதிகளில் நடக்கிறது. தமிழகம் முழுவதும் 154 தேர்வு மையங்களில் காலை மாலை இரு வேளைகளிலும் நடத்தப்படும் தேர்வில் 1.85 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை 1.03 லட்சம் பேர் இதுவரை பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் டி.ஆர்.பி.யின் மாதிரி பயிற்சி தேர்வுக்கு இணையதளம் வழியே முயற்சித்துள்ளனர்.இந்த தேர்வில் கணினி வழியில் 150 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்வியும் வரிசையாகவோ முன்னும் பின்னுமாகவோ தேர்வு செய்யப்படும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.தேர்வர்கள் இந்த பயிற்சி தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மேற்கொண்டு தேர்வு குறித்த நடைமுறைகளை தெரிந்து கொள்ள அறிவுறுத்தப் படுகிறது. இந்த பயிற்சி தேர்வின் வினாக்கள் முழுவதுமாக தேர்வர்களின் பயிற்சிக்காகவே தயாரிக்கப்பட்டவை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

NEWS TODAY 08.07.2026