Monday, May 4, 2020

Anna Salai to be free of police barricades from today

All lockdown restrictions will be enforced, say police

04/05/2020, SPECIAL CORRESPONDENT,CHENNAI


Free from traffic: A stretch of the deserted Anna Salai on Sunday. M. VEDHANM_VEDHAN

The arterial Anna Salai will be opened for vehicular traffic as part of the State's relaxation of lockdown restrictions in the city.

A major stretch of Anna Salai was closed for traffic since April 23. The decision to seal key junctions on Anna Salai by placing barricades, including at Little Mount Junction, Nandanam signal, Anna Flyover and Spencer Plaza was taken after the number of vehicles entering the road increased manifold despite the lockdown in place.

Vehicles to be checked

A senior police officer said, “We will open Anna Salai for traffic. All barricades on the road will be removed. However, policemen will continue to intercept vehicles and check whether the movement of vehicle is for genuine reason. If there is any violation, we will book case against the violator.”

Those commuting by cars should note that only two persons, other than the driver, are permitted to travel in the vehicle. Only one person is allowed to ride a two-wheeler.

Police officers clarified that all other restrictions in the containment zone would continue and there would be no relaxation.
Central health teams to monitor 20 districts with heavy case load
Nationwide virus tally crosses 40,000; 83 new deaths take toll to 1,306

04/05/2020, SPECIAL CORRESPONDENT,NEW DELHI


The total number of confirmed COVID-19 cases in India crossed 40,000 on Sunday, making it one among 16 countries that have crossed that figure. With 83 more deaths since Saturday, a single-day high, the death toll nationwide has gone up to 1,306.

India currently has 28,070 active cases and 10,886 patients have recovered, according to the latest numbers available on the Health Ministry website. Maharashtra, Gujarat and Delhi led with the maximum number of cases.

The Centre has announced the formation of Central Public Health teams to investigate 20 districts in 10 States which have registered the maximum cases. These districts and cities include Mumbai, Pune and Thane in Maharashtra; Ahmedabad, Surat, and Vadodara in Gujarat; Indore and Bhopal in Madhya Pradesh; Chennai in Tamil Nadu; Hyderabad in Telangana; Kolkata in West Bengal; Kurnool, Guntur, and Krishna in Andhra Pradesh and South East and Central Delhi .

These teams, comprising experts from the National Centre for Disease Control (NCDC), AIIMS, JIPMER and the All India Institute of Hygiene and Public Health among others, will submit reports to the State health authorities with recommendations.

In terms of total cases, three other countries are comparable to India — the Netherlands, Peru and Belgium, with confirmed infections from 40,000-49,900.

Saturday, May 2, 2020

`எப்படி இறந்தார் சென்னைப் பயிற்சி டாக்டர் பிரதீபா?' - அதிர்ச்சி கொடுத்த பிரேதப் பரிசோதனை ஆய்வு

பயிற்சி டாக்டர் பிரதீபா

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவியும் பயிற்சி டாக்டரும் பிரதீபாவின் உடல், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தவர் பிரதீபா (22). இவர், வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, சி.எம்.சி காலனியைச் சேர்ந்தவர். இவரின் அப்பா ரமேஷ், பிளாஸ்டிக் கம்பெனி நடத்திவருகிறார். இந்தநிலையில் நேற்று கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணி முடிந்து விடுதி திரும்பிய பிரதீபா, சடலமாக விடுதி அறையிலிருந்து மீட்கப்பட்டார்.

அப்பாவுடன் பிரதீபா

அவரின் மரணம் குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். கொரோனாவால் பயிற்சி டாக்டர் பிரதீபா மரணமடைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் பிரதீபாவுக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரிந்தது. இதையடுத்து பிரதீபாவின் உடல், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

பூட்டிய அறைக்குள் சடலமாக மீட்கப்பட்ட பிரதீபா எப்படி இறந்தார் என்ற கேள்விக்கு பிரேதப் பரிசோதனையில் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் பிரதீபா தங்கியிருந்த அறை மற்றும் அவரின் செல்போன்களை போலீஸார் ஆய்வு செய்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இந்தச் சமயத்தில் பிரேத பரிசோதனை முடிந்து பிரதீபாவின் சடலம் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் வேலூருக்கு பிரதீபாவின் குடும்பத்தினர் கொண்டு சென்றனர்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் கேட்டதற்கு, பொதுவாக பிரேத பரிசோதனை செய்யும்போதே இறப்புக்கான காரணம் தெரிந்துவிடும். ஆனால், பிரதீபாவின் பிரேதப் பரிசோதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. அவரின் சடலத்திலும் எந்தவித காயங்களும் இல்லை. இருப்பினும் அவரின் உடல் பாகங்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து வரும் முடிவுக்குப்பிறகே பிரதீபாவின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்"என்றனர்.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``பயிற்சி டாக்டர் பிரதீபா, பூட்டிய அறைக்குள் இறந்துகிடந்தார். அதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை நடத்தினோம். ஆனால் அதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அடுத்து பிரதீபாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினோம். அப்போது அவர்கள், பிரதீபாவுக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எந்தவித பிரச்னையும் இல்லை என்றே தெரிவித்தனர்.


பிரதீபா தொடர்பான பதிவு

மேலும், பிரதீபா தூங்கச் செல்வதற்கு முன்புகூட செல்போனில் பேசியுள்ளார். அப்போது வேலை தொடர்பாக சில தகவல்களை மட்டுமே கூறியுள்ளார். மற்றப்படி வழக்கம் போல அவர் பேசியுள்ளார். இதனால்தான் பிரதீபாவின் மரணத்துக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.

பிரதீபாவின் தோழிகளிடமும் விசாரித்தபோதும் அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் மரணத்துக்கான காரணத்தை கண்டறியமுடியவில்லை. அதனால் பிரேதப் பரிசோதனையின் அறிக்கைக்காகக் காத்திருக்கிறோம். இதுவரை அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது மட்டும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``பிரதீபாவின் குடும்பத்தினர் சோகத்தில் இருந்ததால் அவர்களிடம் முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை. பிரதீபாவின் இறுதி அஞ்சலி முடிந்த பிறகு குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். தற்போது பிரதீபாவின் மரணத்துக்கு என்ன காரணம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஏனெனில் தோழிகளிடம், குட் நைட் என்று கூறிவிட்டு தனியறையில் தூங்கச் சென்ற பிரதீபா, காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையம்

அவரின் மரணத்தில் காவல்துறையினருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தாலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் காரணம் தெரிந்துவிடும். பிரதீபாவின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் கூறிய தகவலின்படி அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் முழுமையான பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இறப்புக்கான காரணம் தெரிந்துவிடும்" என்றார்.
களமாடிய அதிகாரிகள்... காணாமல்போன கொரோனா!



நீலகிரி

நம்பிக்கையூட்டும் நீலகிரி, ஈரோடு, கரூர்

சென்னையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறும் நிலையில், கொரோனாவைத் துரத்தியடித்து பெரும்நம்பிக்கை அளித்திருக்கிறார்கள் நீலகிரி, ஈரோடு, கரூர் மாவட்ட அதிகாரிகள்.

மத்திய அரசால் முதன்முதலில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டம் ஈரோடு. தாய்லாந்து நாட்டினருடன் ஏற்பட்ட தொடர்பால் பாதிக்கப்பட்ட 70 நபர்களில் ஒருவர் மட்டும் உயிரிழக்க, மீதம் இருந்த 69 பேரும் பூரண குணமாகி வீடு திரும்பியிருக்கின்றனர். ஏப்ரல் 16-ம் தேதியிலிருந்து புதிதாக ஒரு கொரோனா பாசிட்டிவ் கேஸ்கூட ரிப்போர்ட் ஆகவில்லை.


சவுண்டம்மாள் - கதிரவன் - இன்னசென்ட் திவ்யா

கலெக்டர், சுகாதாரத் துறை இணை இயக்குநர், எஸ்.பி, மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறை என இரவுபகல் பாராமல் களத்தில் நின்ற பலருக்கும் இந்த பாசிட்டிவ் எனர்ஜி உண்டானதில் பெரும் பங்கிருக்கிறது.

சிறப்பான சிகிச்சை, கவனிப்பால் 69 பேரையும் தொற்றிலிருந்து மீட்கப் போராடினார் ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சவுண்டம்மாள். மூன்று ஏக்கரில் நெரிசலாக இருந்த மார்க்கெட்டை, 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றினார் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன். மாவட்டத்தில் இருந்த 13 செக்போஸ்ட்டுகளை 135 ஆக அதிகப்படுத்தி, ஊரடங்கை மிகக் கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுத்தார் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன். சிகிச்சைக்கு மருத்துவமனைக்கே வர மாட்டேன் என்று சொன்ன பலரிடம் பேசி வரவழைத்து, சிகிச்சை முடியும் வரை அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, குணமானதும் பழக்கூடையுடன் அனுப்பி நெகிழ வைத்திருக்கிறார் கலெக்டர் கதிரவன்.

உவகைகொள்ளும் உதகை!

சர்வதேச சுற்றுலா நகரம், கேரளா, கர்நாடக மாநில எல்லைகளை உள்ளடக்கிய மாவட்டம் என நீலகிரிக்கு கொரோனா தொற்று வருவதற்கான வழிகள் நிறைய இருந்தன. அப்படியெல்லாம் உள்ளே வராத கொரோனா, டெல்லி சென்று திரும்பிய எட்டு நபர்களில் நால்வர் மூலமாக என்ட்ரி ஆனது. அடுத்த சில நாள்களில் மேலும் ஐந்து பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட ஒன்பது பேரும் ஆண்கள்.

இந்த ஒன்பது நபர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த 30 பேரை தனிமையில் கண்காணித்து வந்தனர். இத்துடன் வெளிநாடு சென்று திரும்பிய 1,471 நபர்களின் வீடுகளுக்கு சீல் வைத்து கண்காணித்துவந்தனர். ஏப்ரல் 27-ம் தேதி மாலை கடைசி நபரும் நலமாகி வீடு திரும்ப, கொரோனா தொற்றிலிருந்து மீண்ட தமிழகத்தின் முதல் மாவட்டமாக நீலகிரி பெயர்பெற்றது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நம்மிடம், ‘‘இந்த மகிழ்ச்சியைத் தக்கவைக்க தொடர்ந்து மக்கள் ஒத்துழைத்து விழிப்புடன் இருக்க வேண்டுகிறோம்’’ என்றார்.

கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கடைசி கொரோனா தொற்று பாதித்த நோயாளியும் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதால், கரூர் ஜீரோ கொரோனா மாவட்டமாக மாறியிருக்கிறது.

அனைத்து அதிகாரிகளுக்கும், ஒத்துழைப்பு நல்கிக்கொண்டிருக்கும் பொதுமக்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்!
ஓய்வு ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு நிறுத்தம் பல கோடி ரூபாய் மிச்சப்படுத்த ஆலோசனை

Added : மே 01, 2020 22:56

சென்னை : பள்ளி, கல்லுாரிகள் செயல்படாத நிலையில், ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்குவது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக, பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. அடுத்த கல்வி ஆண்டில் தான், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளன. அதுவரை, ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களில் ஒரு பிரிவினருக்கு பணிகள் இல்லை.அதாவது, 10ம் வகுப்பு பாடம் எடுக்கும் பட்டதாரி மற்றும் மேல்நிலை வகுப்பு நடத்தும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும், விடைத்தாள் திருத்தும் பணிகள் உள்ளன. மற்ற ஆசிரியர்களுக்கும், பேராசிரியர்களுக்கும், புதிய கல்வி ஆண்டு வரை பணிகள் இல்லை.

இந்நிலையில், மார்ச்சில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, இந்த கல்வி ஆண்டு முடியும் காலமான, மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என, கல்வி அலுவலகங்களுக்கு கடிதங்கள் வந்துள்ளன.ஒவ்வொரு ஆண்டும், பள்ளி, கல்லுாரிகள் செயல்படும் போது, ஓய்வு காலத்தை கடந்தாலும், அந்த கல்வி ஆண்டு முடியும் மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு பள்ளி, கல்லுாரிகள் செயல்படாததால், பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என்ற முடிவுக்கு, பள்ளி மற்றும் கல்லுாரி கல்வித்துறை வந்துள்ளது.

எனவே, விடை திருத்த பணிகள் உள்ள ஆசிரியர்களை தவிர, தொடக்க பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, பணி நீட்டிப்பு உத்தரவை நிறுத்தி வைக்க, மாவட்ட மற்றும் மண்டல அலுவலகங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.பணி நீட்டிப்பு வழங்காவிட்டால், மே மாத சம்பளம் வழங்கப்படாது; ஓய்வூதியம் மட்டுமே வழங்கப்படும். இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும் என, அரசுக்கு சில அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கை மீறினால் 14 நாட்கள் தனிமை!

2.5.2020

சென்னையில், ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவர்' என, சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.

மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு: சென்னையில், நோய் பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு விதிமுறைகளை, பொது மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். பொது வெளியில், 1 மீட்டர், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். வெளியில் வருவோர், கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினியால், கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

கடைகளுக்கு, நிறுவனங்களுக்கு வருவோர் கைகளை சுத்தப்படுத்த, கிருமி நாசினி வழங்க வேண்டும். விதிகளை மீறும், கடைகள், நிறுவனங்களுக்கு, 'சீல்' வைக்கப்படும்; உரிமம் ரத்து செய்யப்படும். ஊரடங்கு விதிகளை மீறுபவர்களுக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
அனுமதி சீட்டு: மாநகராட்சிக்கு வர வேண்டாம்

Added : மே 02, 2020 02:03

சென்னை : 'வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் செல்ல, அவசர பயண அனுமதி சீட்டு பெறுவதற்காக, யாரும் அலுவலகத்துக்கு வர வேண்டாம்' என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநக ராட்சி வெளியிட்டு உள்ள அறிக்கை:முன் கூட்டியே நிச்சயம் செய்த திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை, மரணம் ஆகியவற்றில் பங்கேற்க ரத்த தொடர்புடையவர்களுக்கு மட்டும், வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு செல்ல, அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. அரசின் வழிகாட்டுதல்படி, அவசர பயண அனுமதி சீட்டு வழங்கும் அதிகாரம், மின்னணு அனுமதி சீட்டு கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்டுள்ளது. தேவைப்படுபவர்கள், 'http://tnepass.tnega.org/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து, அவசர பயண அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.அனுமதி சீட்டு பெற, மாநகராட்சி அலுவலகத்துக்கு யாரும் வர வேண்டாம்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...