Thursday, September 17, 2020

98-year-old govt BEd college asked not to admit students

 98-year-old govt BEd college asked not to admit students

NCTE Sends Last Reminder Over Faculty Shortage

Ragu.Raman@timesgroup.com

Chennai:17.09.2020

Ninety-eight-year-old Lady Willingdon Institute of Advanced Study in Education in Chennai which conducts admissions to all seven government colleges of education in the state every year has been told to stop admission for 2020-21due to vacant posts.

The prestigious government autonomous college admits 200 BEd students every year and has 17 faculty members against the required 39.

The southern regional committee of National Council for Teacher Education (NCTE), which met through video conference on September 14 and 15, decided to send a last reminder before withdrawal of the recognition.

The committee gave 90 days to fill the vacant posts in the institute and submit the relevant documents. “Till then, admissions for the academic session 2020-21 shall be deferred,” said the minutes of the meeting uploaded on the NCTE’s website.

“The NCTE increased the duration of the BEd course from one year to two in 2016. Following this, the staff strength must be doubled. Due to no recruitment in the past four years, the college has only half the required strength,” a faculty member said.

The council has also deferred admissions for 2020-21 in two other government colleges of education in Pudukottai and Komarapalayam due to shortage of faculty members. The faculty members of government colleges of education said the lacunae of Tamil Nadu Teachers Education University has resulted in stopping the admission for most sought-after colleges in the state. “The university should have inspected these colleges and warned the state government about the faculty shortage,” they said.

Wednesday, September 16, 2020

3 dental colleges told to pay ₹8.1cr - The Times Of India

TIMES NEWS NETWORK
Bengaluru:

Acting tough on illegal admissions to professional courses, the high court directed three dental colleges in north Karnataka to pay Rs 8.1 crore (Rs 10 lakh per student) as cost for granting post-facto approval to 81 students who had completed BDS course.

These students were admitted under the unexhausted CET or government quota seats and they hadn’t appeared for the entrance test.

As per the direction issued by a division bench comprising Justices Krishna S Dixit and P Krishna Bhat, the students have to submit a stamped affidavit in two months and an undertaking to do rural service in Karnataka. The cost amount also has to be deposited with the court in two months and it will be transferred to the Chief Minister’s Calamity/ Covid Relief Fund.

The high court’s Kalaburagi bench said the college has to pay for the violation and the students, who were beneficiaries of the same, need to render one-year community service.

SB Patil Dental College and Hospital, Bidar, along with 35 students; Hyderabad Karnataka Development Education Trust’s Dental College and Hospital, Humnabad, Bidar district, with 22 students and S Nijalingappa Institute of Dental Sciences and Research, Kalaburagi, with 25 students had approached the court in 2016 challenging endorsements issued by Rajiv Gandhi University of Health Sciences.

Admissions not approved

Refusing to approve the students’ admissions, the university stated that assessment of comparative merits by CET is a pre-condition for admission. However, it was later stated that the name of Mohammed Asif, a student of Kalaburagi college, was inadvertently included as a petitioner though he had appeared for CET.

The petitioners said there’s no legal requirement of CET as a pre-condition for admission of candidates under the unexhausted quota of government seats. Students shouldn’t be made scapegoats for the management’s fault, they added. During the pendency, by way of an interim order, the students were allowed to complete the course.```

கொடைக்கானல் செல்ல'இ - பாஸ்' கட்டாயம்

கொடைக்கானல் செல்ல'இ - பாஸ்' கட்டாயம்

Added : செப் 16, 2020 01:56

கொடைக்கானல்:கொடைக்கானலுக்கு செல்ல சுற்றுலாப் பயணியர் அனுமதிக்கப்பட்ட நிலையில், 'இ - பாஸ்' இன்றி பஸ்சில் செல்வோரை இறக்கி விடுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு, கடந்த வாரம் முதல், 'இ - பாஸ்' மூலம் சுற்றுலாப் பயணியர் அனுமதிக்கப்படுகின்றனர்.பொதுப் போக்குவரத்து துவங்கிய நிலையில், பஸ்சில் பயணியர் வருகின்றனர்.பஸ்சில் சுற்றுலா வருவோருக்கு, விண்ணப்பிக்க வசதி இல்லாத நிலையில், இ - பாஸ் நிராகரிக்கப்படுகிறது. அதேசமயம், இ - பாஸ் பெறாமல் வருவோர், வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனைச்சாவடியில் இறக்கி விடப்படுகின்றனர்.

தொடர்ந்து, இதுபோன்ற நிலை நீடிப்பதால், பஸ்சில் கொடைக்கானல் வரும் பயணியர் அவதிப்படுகின்றனர்.டாக்சி ஓட்டுனர்கள் சங்க செயலர் கணேசன் கூறுகையில், ''பஸ் பயணியரால் தான், எங்களை போன்றோருக்கு வாழ்வு கிடைக்கும். எனவே, பஸ் பயணியருக்கும் விண்ணப்பிக்கும் வசதியை அரசு பரிசீலிக்க வேண்டும்,'' என்றார்.

சப் - கலெக்டர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''கொடைக்கானலுக்கு பஸ்சில் வரும் பயணியர் விண்ணப்பிக்கும் வகையில், வசதி செய்து தரும்படி, அரசுக்கு பரிந்துரைத்துள்ளோம். இந்நடைமுறை இன்று முதல் அமலுக்கு வரும்,''என்றார்.

தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 'நீட்' தேர்வில் 96 சதவீத வினாக்கள்

தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 'நீட்' தேர்வில் 96 சதவீத வினாக்கள்

Added : செப் 16, 2020 01:35

சென்னை:சமீபத்தில் நடந்த, 'நீட்' தேர்வில், தமிழக பாடத் திட்டத்தில் இருந்து, 96 சதவீத கேள்விகள் இடம் பெற்றதாக, தமிழக ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர்.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு, செப்., 13ல், நாடு முழுதும் நடந்தது. தேர்வில், தமிழகத்தில், ஒரு லட்சம் பேர் உட்பட, 14 லட்சம் பேர் பங்கேற்றனர்.இந்த தேர்வில், மொத்தம், 180 வினாக்கள் இடம் பெற்றன. உயிரியல், விலங்கியல் மற்றும் தாவரவியலில், தலா, 45 வினாக்கள்; இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா, 45 வினாக்கள் இடம் பெற்றன.ஒவ்வொரு வினாவுக்கும், தலா, 4 மதிப்பெண் வீதம், மொத்தம், 180 வினாக்களுக்கு, 720 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.


இந்த தேர்வில் பெரும்பாலும், மத்திய அரசின், என்.சி.இ.ஆர்.டி., என்ற, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன புத்தகத்தில் இருந்தே, கேள்விகள் இடம் பெற்றதாக, மாணவ - மாணவியர் தெரிவித்தனர்.இந்த பாடத் திட்டத்தை, சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களே அதிகம் பின்பற்றுவதால், அவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் அதிகம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டிலும் சேர்த்து, புதிய பாடத் திட்டம் அமலான பின் நடக்கும் நீட் தேர்வு என்பதால், தமிழக பாடத் திட்ட புத்தகங்களுடன், நீட் தேர்வு வினாக்களை ஆசிரியர்கள் ஆய்வு செய்துள்ளனர்.இதில், 96 சதவீத வினாக்கள், தமிழக பாடத் திட்டங்களில் இருந்து இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

உயிரியலில் மொத்தம், 90 வினாக்களில், 87 வினாக்கள், தமிழக பாடத் திட்டத்தில் இருந்து இடம் பெற்றுஉள்ளன.இயற்பியல் மற்றும் வேதியியலில், 45க்கு தலா, 43 வினாக்கள் இடம் பெற்று உள்ளன. மொத்தம், 180 வினாக்களில், 173 வினாக்கள் நேரடியாக தமிழக பாடத் திட்ட புத்தகத்தில் இருந்து இடம் பெற்றுள்ளதாக, நீட் பயிற்சி அளித்த தமிழக ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர்.இந்த தகவல், தமிழக ஆசிரியர்களின், 'வாட்ஸ் ஆப்' குழுக்களில் பரவுகிறது.

தனியார் பஸ்கள் ஓடத் துவங்கின

தனியார் பஸ்கள் ஓடத் துவங்கின

Added : செப் 15, 2020 23:00

சென்னை:தமிழகத்தில் நேற்று முதல், தனியார் பஸ்கள் இயக்கம் துவங்கி உள்ளது. தமிழகத்தில், இம்மாதம் முதல், மாவட்டத்திற்கு உள்ளான பஸ் போக்குவரத்துக்கும், செப்., 7 முதல், மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்துக்கும், தமிழக அரசு அனுமதி அளித்தது.

ஆனால், பஸ்சின் மொத்த இருக்கைகளையும்நிரப்ப, அனுமதிக்க வேண்டும்; பஸ்கள் இயங்காத நாட்களுக்கு வரி வசூலிப்பதை, ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசு ஏற்றால் மட்டுமே, தனியார் பஸ்களை இயக்குவதாக, தனியார் பஸ் மற்றும் தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கங்கள் அறிவித்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம், தனியார்பஸ் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், 'பஸ்களை இயக்காத நாட்களுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகமான, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், 'ஸ்டாப்பேஜ்' என்ற படிவத்தை பூர்த்தி செய்தவர்களுக்கு, இன்சூரன்ஸ் கட்டணம் செலுத்துவதில் அவகாசம் நீட்டிக்கப்பட உள்ளது. 'அதற்கான நடவடிக்கைகளை, அனைத்து பஸ் உரிமையாளர்களும் செய்ய வேண்டும். பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில், பஸ்களை இயக்க வேண்டும்' என, முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதையடுத்து, திருச்சி மாவட்டத்தின் பல்வேறுபகுதிகளில், நேற்று குறைந்தளவு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று, தமிழகம் முழுதும், தனியார் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக, அவற்றின் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

சசிகலா விடுதலை ; இபிஎஸ் என்ன செய்வார்? - டிரண்டிங்கில் விவாதம்

சசிகலா விடுதலை ; இபிஎஸ் என்ன செய்வார்? - டிரண்டிங்கில் விவாதம்

Updated : செப் 15, 2020 14:09 | Added : செப் 15, 2020 13:33 

சென்னை : சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, அடுத்தாண்டு ஜனவரி 27ல் விடுதலையாக உள்ளார். இதனால் அதிமுக.,வினரை வைத்தும், முதல்வர் பழனிசாமியை வைத்தும் சமூகவலைதளங்களில் விவாதம் நடக்கிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை 2017ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராதத்தை செலுத்தவில்லை என்பதால், அவரின் விடுதலை தாமதமாகும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ், சசிகலாவின் விடுதலை குறித்து கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சிறை நிர்வாகம், சசிகலா 2021 ஜன., 27ல் விடுதலையாவதாக தெரிவித்துள்ளது. மேலும், அபராதத்தொகை ரூ.10 கோடியை அவர் செலுத்தாதபட்சத்தில் 2022ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தான் விடுதலையாவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுநாள் வரை சசிகலா அப்போது விடுதலை ஆவார், இப்போது விடுதலை ஆவார் என யூகங்களாக செய்திகள் வந்தன. ஆனால் இப்போது சிறை நிர்வாகமே அதிகாரப்பூர்வமாக இப்படி ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் சசிகலா ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதன்விளைவாக காலை முதலே #Sasikala என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரண்ட் ஆனது.

முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின் சசிகலா தான் முதல்வராக பொறுப்பேற்க இருந்தார். ஆனால் அதற்குள் சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்ற உத்தரவு வரவே இவர் சிறை செல்ல வேண்டியதாகிற்று. இதனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அறிவித்தார் சசிகலா. அதன்பின் தமிழகத்தில் நடந்த அரசியல் கூத்துகள் அனைவரும் அறிந்ததே. துணை முல்வர் பன்னீர் செல்வம் கட்சியிலிருந்து விலகி சென்றது. பின் அவர் இணைந்து, துணை முதல்வர் பதவி பெற்றார். சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கினர். தினகரன் தனிக்கட்சி தொடங்கினார். இப்படி அதிமுக., தலைமை பொறுப்பில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறின.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுக., கட்சியில் ஒருவித புகைச்சல் நிச்சயம் இருக்கும் என்ற கருத்தே இப்போதும் நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழலில் சசிகலாவின் விடுதலை பற்றிய அறிவிப்பு அதிமுக.,வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக இதை வைத்து சமூகவலைதளங்களில் நிறைய மீம்ஸ்களும், டிரோல்களும் வெளியாகி வருகின்றன. முதல்வர் பழனிசாமி முன்பு, சசிகலா காலில் விழுந்த வீடியோக்களை இப்போது மீண்டும் டிரண்ட் செய்து வருகின்றனர். சசிகலா விடுதலையாகி வந்த பின் அரசியலில் என்ன மாதிரியான விளைவுகள் இருக்கும் என விவாதங்கள் தொடங்கிவிட்டன. அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் வேறு வருகிறது. இதனால் சமூகவலைதளங்களில் இந்த விவகாரம் பரபரப்பு விவாதமாகிவிட்டது. இதனால் #Sasikala ஹேஷ்டாக் டுவிட்டரில் டிரெண்டிங்கில் வந்தது.

இதுபற்றி அதிமுக பிரமுகர் ஒருவர் கூறும்போது, முதல்வருக்கு எதிராக உள்ளவர்களும் எதிர்க்கட்சிகளும் சேர்ந்து சசிகலா விடுதலையை விவாதம் ஆக்குகிறார்கள். சசிகலா விடுதலையால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றார்.

ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் ஒரு தரப்பினர் அவரை ஆதரிக்கக் கூடும். அதிமுகவில் எங்களது ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் என்று டிடிவி தினகரன் ஒருமுறை கூறியதை மறந்துவிடக் கூடாது என்றார்.

'நீட்' தேர்வு 'கட்-ஆப்' மதிப்பெண் இந்தாண்டு எப்படி இருக்கும்?

'நீட்' தேர்வு 'கட்-ஆப்' மதிப்பெண் இந்தாண்டு எப்படி இருக்கும்?

Added : செப் 16, 2020 08:46

கோவை: நடப்பாண்டுக்கான 'நீட்' தேர்வு 'கட்-ஆப்' மதிப்பெண் குறித்து தேர்வு எழுதிய மாணவர்களிடம்எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ பட்ட படிப்புகளுக்கான 'நீட்' தேர்வு கடந்த, 13ம் தேதிநடந்தது. நீட் தேர்வு கட்-ஆப் மதிப்பெண்களை தேசிய தேர்வு ஆணையம் வெளியிட உள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும் அடிப்படை மதிப்பெண் தான் 'கட்-ஆப்' என்றுகருதப்படுகிறது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண், 50 சதவீதமும், எஸ்.சி.,/எஸ்.டி.,/ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, 40 சதவீதமும் உள்ளன.

வெளிநாட்டில் மருத்துவ படிப்பபை தொடர விரும்பும் மாணவர்களும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற வேண்டும்.நீட் தேர்வு-2020 'கட்-ஆப்' மதிப்பெண் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை, மொத்தகாலியிடங்கள், வினாத்தாளின் கடின நிலை, இட ஒதுக்கீடு போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தீர்மானிக் கப்படும்.

தேசிய தேர்வு ஆணைய அறிவிப்பின்படி, நீட் கட்-ஆப் சதவீதம் என்பது பிற தேர்வர்களை ஒப்பிடும்போது, ஒரு குறிப்பிட்ட தேர்வரின் செயல்திறன் விகிதம் குறித்த ஒப்பீட்டை அளிக்கிறது. அதேநேரம் 'கட்-ஆப்' மதிப்பெண் என்பது அந்த ஒரு குறிப்பிட்ட தேர்வர் மொத்த மதிப்பெண்களில் பெற்றஅளவை வழங்குகிறது. கட்-ஆப் சதவீதமும், மதிப்பெண்களும் இட ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு வேறுபடுகின்றன.கடந்தாண்டு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, 701-134, எஸ்.சி.,/எஸ்.டி.,/ஓ.பி.சி.,பிரிவினருக்கு, 133-107 கட்-ஆப் மதிப்பெண்களாக இருந்தது.

இந்தாண்டு முதல் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, 7.5 சத வீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

NEWS TODAY 26.01.2026