Sunday, November 8, 2020

யோகா மேற்படிப்பு இன்று கவுன்சிலிங்

யோகா மேற்படிப்பு இன்று கவுன்சிலிங்

Added : நவ 07, 2020 23:29

சென்னை:யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், இன்று நடக்கிறது.

சென்னையில் உள்ள, அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரியில், முதுநிலை யோகா மருத்துவம், முதுநிலை இயற்கை மருத்துவம், முதுநிலை அக்குபஞ்சர் மருத்துவம் ஆகிய படிப்புகளில், தலா, ஐந்து இடங்கள் வீதம், 15 இடங்கள் உள்ளன. மூன்றாண்டு படிப்பான அவற்றில் சேர, இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பை நிறைவு செய்திருத்தல் அவசியம்.

மேலும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தேர்வு குழுவால் நடத்தப்படும், நுழைவு தேர்வில் பங்கேற்க வேண்டும். அதில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில், தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.அந்த வகையில், இந்தாண்டுக்கான நுழைவு தேர்வு, சென்னையில் நேற்று நடந்தது. அதில், 105 மாணவர்கள் பங்கேற்றனர்.

விடைத்தாள்கள் உடனடியாக திருத்தப்பட்டு, முடிவுகளும், தரவரிசை பட்டியலும் மாலையில் வெளியிடப்பட்டன. அதில், டாக்டர் பாமா, செந்தில்குமார், யோகபிரியா ஆகியோர் முறையே, முதல் மூன்று இடங்களை பெற்றனர். இதற்கான மாணவர் சேர்க்கை, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தேர்வு அலுவலகத்தில், கவுன்சிலிங் முறையில், இன்று நடைபெற உள்ளது.

பி.ஆர்க்., கவுன்சிலிங் இன்று துவக்கம்

பி.ஆர்க்., கவுன்சிலிங் இன்று துவக்கம்

Added : நவ 07, 2020 21:44

சென்னை:பி.ஆர்க்., மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று கவுன்சிலிங் துவங்க உள்ளது.

தமிழகத்தில் உள்ள, 52 பி.ஆர்க்., கட்டட அமைப்பியல் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இதற்கான விண்ணப்பங்கள், 'ஆன்லைனில்' ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பு, நவம்பர், 2ல் முடிந்துள்ளது. மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், இன்று துவங்க உள்ளது. பொது பிரிவு மாணவர்களுக்கு, நாளை மற்றும் 10ம் தேதிகளில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது; 11ம் தேதி தோராய இட ஒதுக்கீடும், 12ல், இறுதி ஒதுக்கீட்டு உத்தரவும் வழங்கப்பட உள்ளது.

கைது! லஞ்சம் வாங்கிய 16 அரசு அலுவலர்கள்...:519 சவரன்; 6 கிலோ வெள்ளி சிக்கியது;ரூ.4.29 கோடி ரொக்கம் பறிமுதல்: பீதியில் உறைந்த 54 துறை அதிகாரிகள்

கைது! லஞ்சம் வாங்கிய 16 அரசு அலுவலர்கள்...:519 சவரன்; 6 கிலோ வெள்ளி சிக்கியது;ரூ.4.29 கோடி ரொக்கம் பறிமுதல்: பீதியில் உறைந்த 54 துறை அதிகாரிகள்

Added : நவ 07, 2020 23:38

வேலுாரில், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் வீட்டில் துவங்கி, தமிழகம் முழுதும் ஒரு மாதமாக, அரசு அலுவலகங்கள், அதிகாரிகளின் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய தொடர் வேட்டையில், லஞ்சம் வாங்கிய, 16 அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
சோதனை நடந்த இடங்களில் இருந்து, 4.29 கோடி ரூபாய் ரொக்கம்; 519 சவரன் தங்கம்; 9 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. லஞ்ச ஒழிப்பு துறையினரின் அதிரடி சோதனை தொடர்வதால், தங்கள் மீதும் நடவடிக்கை பாயுமோ என, அரசின், 54துறைஅதிகாரிகளும் பீதியில் உறைந்துள்ளனர்.

நாடு முழுதும், வரும், 14ம் தேதி, தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசு அலுவலகங்களில், வசூல் வேட்டை நடப்பதாக, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றன.உடன், 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஒரு தனிப்படையில், ஒரு டி.எஸ்.பி., - நான்கு இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் என, 20 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், அரசு அலுவலகங்களில் ரகசிய கண்காணிப்பு நடத்தினர்.

அதன் பயனாக, வேலுார் மாவட்டம், ராணிப்பேட்டையில், லஞ்ச வேட்டை நடத்தி வந்த, மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல பொறியாளர், பன்னீர் செல்வம் சிக்கினார்.பெயர் மாற்றம்இவரது கட்டுப்பாட்டின் கீழ், வேலுார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்துார், கிருஷ்ணகிரி, விழுப்புரம், தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இம்மாவட்டங்களில், புதிதாக தொழிற்சாலைகள், பள்ளிகள், சினிமா தியேட்டர்கள் துவங்குதல்; அவற்றுக்கான பெயர் மாற்றம், புதுப்பித்தல் தொடர்பான அனுமதியை, இவரிடம் தான் பெற வேண்டும்.

அத்துடன், பன்னீர் செல்வம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, தோல் தொழிற்சாலைகளை ஆய்வு செய்து, 'மாசு இல்லை' என, சான்றிதழ் வழங்க வேண்டும்.இதற்காக, மாதம் தோறும் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி குவித்துள்ளார். லஞ்சம் தர மறுக்கும் தோல் தொழிற்சாலையை இயங்கவிடாமல், 'சீல்' வைத்து விடுவேன் என மிரட்டியே, வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவரது அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், 25 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது, இவரது கார் உள்ளிட்ட வாகனங்களில், 33.73 லட்சம் ரூபாய் சிக்கியது.வீட்டில், 3.௨௫ கோடி ரூபாய்; 450 சவரன், 6 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் சிக்கின.

சேலத்தில்

சேலம் மண்டல பதிவுத்துறை, டி.ஐ.ஜி.,யாக ஆனந்த் என்பவர் பணியாற்றினார். இவருக்கு கீழ், சேலம் கிழக்கு, மேற்கு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பதிவுத்துறை அலுவலகங்கள் வருகின்றன. இவர், தனக்கு அரசியல் செல்வாக்கு அதிகம் இருப்பதாக கூறி, மாதம் தோறும் பல லட்சம் ரூபாயை, லஞ்சமாக வாரி சுருட்டியுள்ளார்.

சமீபத்தில், கடலுார் மண்டல அலுவலகத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.இவருக்காக நடத்தப்பட்ட விழா ஒன்றில், அதிகாரிகள் பரிசு மழையில் நனைத்து விட்டனர். ஆனந்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு 3.20 லட்சம் ரூபாய், 34 சவரன் நகைகளை கைப்பற்றினர்.

சென்னை, அண்ணா நகர் மேற்கு பகுதியில், 63.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் ஆனந்த் மற்றும் உறவினர்களின், ஏழு வங்கி கணக்குகளில் பதுக்கி இருந்த, 1 கோடி ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முடக்கி உள்ளனர். இதுபோல, அக்., 1 முதல், நவம்பர், 6 வரை, தமிழகம் முழுவதும், 54 இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடி சோதனை நடத்தினர்.

லஞ்சம் வாங்கும் போது, கையும், களவுமாக சிக்கிய, 16 அரசு அலுவலர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சோதனை நடந்த அலுவலகம் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் இருந்து, 4.29 கோடி ரூபாய் ரொக்கம், 519 சவரன் தங்கம், 6 கிலோ வெள்ளி மற்றும் முறைகேடாக வாங்கிய சொத்துக்களுக்கான ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்நிலையில், கோவை, ராஜா தெருவில், பத்திரப் பதிவுத்துறை, இணை பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத, 1.70 லட்சம் ரூபாயை கைப்பற்றினர்.

இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர், ஜெயந்த் முரளி கூறுகையில், ''மாநிலம் முழுவதும், லஞ்சத்திற்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது; இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடரும்,'' என, தெரிவித்துள்ளார்.லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை தொடர்ந்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற பீதியில், அரசின், 54 துறை அதிகாரிகள் பீதியில் உறைந்துள்ளனர்.

- நமது நிருபர் குழு -

ஏகாம்பரநாதர் கோவில் பல்லக்கில் 3 கிலோ வெள்ளி தகடு மாயம்

ஏகாம்பரநாதர் கோவில் பல்லக்கில் 3 கிலோ வெள்ளி தகடு மாயம்

Added : நவ 07, 2020 23:22 |

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பழைய பல்லக்கில், 3 கிலோ வெள்ளி தகடுகள் மாயமானது, ஆய்வில் தெரியவந்தது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறப்பு பெற்று விளங்கும் பழமையான ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள, ஆபரணங்களை ஆய்வு செய்ய வேண்டும் என, பக்தர்கள் சார்பில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.தொடர்ந்து, அக்டோபர், 13ம் தேதி, அறநிலையத் துறை துணை ஆணையர் தலைமையில், நகைகள் சரிபார்ப்பு குழு, ஆய்வை துவங்கியது.

கோவிலில் உள்ள பல சன்னிதிகளில், சுவாமிக்கு அணிவிக்கும் ஆபரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.இந்நிலையில், வெள்ளி சம்பந்தப்பட்ட பொருட்களை, ஆய்வுக் குழுவினர், நேற்று சரிபார்த்தனர். அப்போது, 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட, வெள்ளி தகடு பொருத்தப்பட்ட பல்லக்கில் இருந்த, வெள்ளி தகடுகள் காணாமல் போனது தெரியவந்தது.

அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவதுஇந்தப் பல்லக்கு, 200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும். ஒவ்வொரு முறை ஆய்வின்போது, என்னென்ன பொருட்கள் கோவிலில் இருக்கின்றன என, அதன் பட்டியலை பார்த்து, அந்த பொருட்களை எடை போடுவோம். அப்போது இருக்கும் எடை அளவை பதிவு செய்வோம். அதன்படி, வெள்ளி தகடு பொருத்தப்பட்ட பல்லக்கை, ஆய்வு செய்தோம். அதில், 1954ல் நடந்த ஆய்வின்போது, அந்த பல்லக்கில், 11 கிலோ எடையுடைய வெள்ளித் தகடு பொருத்தப்பட்டு உள்ளதாக கணக்கில் உள்ளது.

தற்போது நடத்திய ஆய்வில், 8.800 கிராம் வெள்ளி மட்டுமே இருந்தது. 3 கிலோ மாயமானது குறித்து, ஆணையருக்கு தெரியப்படுத்துவோம். அவர்கள் தான், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பர்.இவ்வாறு, அவர் கூறினார்.

மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் மாணவர்கள் திருத்தம் செய்ய வசதி

மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் மாணவர்கள் திருத்தம் செய்ய வசதி

Added : நவ 07, 2020 21:57

சென்னை:''மருத்துவ படிப்புக்கான, 'ஆன்லைன்' விண்ணப்பம் சமர்ப்பித்த பின், திருத்தம் மேற்கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது,'' என, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன் கூறினார்.

தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்காக, https://tnhealth.tn.gov.in, http://tnmedicalselection.org என்ற இணையதளத்தில், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஐந்து நாட்களில், அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள மருத்துவ இடங்களுக்கு, 17 ஆயிரத்து, 239 பேர்; தனியார் மருத்துவ கல்லுாரிகளுக்கு, 8,494 பேர் என, மொத்தம், 25 ஆயிரத்து, 733 பேர் பதிவு செய்துள்ளனர்.இவர்களில், 10 ஆயிரத்து, 190 பேர், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இது குறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜன் கூறியதாவது: மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, விண்ணப்பங்களை முழுமையாக சமர்ப்பித்தவர்களுக்கும், சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக, அதிக அழைப்புகள் வருகின்றன. எனவே, தங்கள் விண்ணப்பத்தில், சேர்க்க வேண்டிய பதிவுகள் மற்றும் சான்றிதழ் இருந்தால், selmedi@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, விண்ணப்ப பதிவு எண்ணுடன் சேர்க்க வேண்டிய சான்றிதழ்களை இணைத்து அனுப்பலாம்.

மருத்துவ கல்வி அதிகாரிகள், அதை, சம்பந்தப்பட்ட மாணவர்களின் விண்ணப்பத்தில் இணைத்து விடுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

How you can politely ask someone to wear a mask

How you can politely ask someone to wear a mask

If you’re around a person who isn’t wearing a mask and are feeling unsafe, etiquette experts suggest, make a discreet request, as shaming the person could make them even more defensive. Jan Kavookjian, a behavioural scientist at Auburn University, US, said that if they feel violated by the way you approach them, they are much less likely to make a change.

Citing recommendations or rules from health officials could be more helpful. “Someone feels less threatened when you say, ‘Here’s what the experts say’,” Kavookjian said.

Masks are key to reducing the spread of Covid-19. But asking a stranger to put one on could result in a volatile situation. And you’d rather not risk confrontation with a person who isn’t wearing a mask.

If you’re in a store or restaurant, it’s best to have a manager or someone in charge ask the person, said etiquette expert Diane Gottsman.

— AP

If the situation appears volatile, back away. You don’t want to risk confrontation with a person who isn’t wearing a mask

Within days of reopening, 97 students positive in 2 HP schools

Within days of reopening, 97 students positive in 2 HP schools

Of These, 92 From A Tibetan School Are Asymptomatic

TIMES NEWS NETWORK

Shimla:08.11.2020

Within days of schools reopening in Himachal Pradesh, 97 students in Mandi district tested positive for Covid-19 on Saturday. Of these, 92 are from a Tibetan school in Sojha and five are from a government school in Kot. On Friday, 27 school teachers had tested positive in the district.

At the Tibetan school, all 92 students who tested positive are asymptomatic. However, as a precautionary measure, the entire campus is being turned into an isolation centre. As Tibetan schools are governed under the rules of Central Tibetan Administration, students of classes X and XII had reached the campus between October 26 and 31from Ladakh, Arunachal Pradesh, Maharashtra and Nepal.

Five students at Kot school have also tested positive. The HP government started regular classes for students of classes IX to XII on November 2. However, physical attendance is not must and those coming to school will do so only with the written consent of parents. Online education is also continuing for the students.

Mandi deputy commissioner Rugved Milind Thakur said all precautionary measures are being taken and students have been kept in isolation and under regular monitoring of doctors. If needed, they will be shifted to covid care centres and hospital for treatment. “We are keeping a close watch on schools and monitoring the situation on a daily basis,” he added.

Director of higher education, Amarjeet Kumar Sharma said the government had allowed private educational institutions to function with strict adherence to safety protocols. There are 3.25 lakh students in classes from IX to XII and only around 22% of them attended school on Saturday, he said. So far, only 30 students have tested positive for coronavirus in schools under the education department, he said. Tibetan schools are governed under the rules of Central Tibetan Administration, he added.

Maintaining that the figure is not alarming, he said of the 50,000 employees in the state, only 200 have tested positive so far. “It shows that the situation is very much under control and there is nothing to panic about. Still, we have directed all deputy directors to monitor educational institutes under their control and decide on closing them in case positive cases are detected to break the spread chain of coronavirus,” he added.

State education minister Govind Singh Thakur has also been admitted in Indira Gandhi Medical College and Hospital, Shimla, for Covid treatment after he was detected with low oxygen level. He had tested positive a day after the cabinet decided to reopen schools and other educational institutions in the state.

Firefighters and locals attempt to douse a fire that broke out in a showroom at Lower Bazaar in Shimla on Saturday

NEWS TODAY 06.12.2025