Thursday, November 12, 2020

Karnataka HC Extends Interim Relief To PG Doctors Till Nov 23

Karnataka HC Extends Interim Relief To PG Doctors Till Nov 23: The Karnataka High Court on Wednesday extended till November 23, the interim relief granted earlier directing state government not to insist the appellants before the court (281 PG Doctors)

அஞ்சலக சேமிப்புக் கணக்கு: குறைந்தபட்ச இருப்புத் தொகையை உயர்த்த டிச.11 கடைசி

அஞ்சலக சேமிப்புக் கணக்கு: குறைந்தபட்ச இருப்புத் தொகையை உயர்த்த டிச.11 கடைசி


வங்கி சேவையில் ஈடுபட்டு வரும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.50ஆக இருந்தது. இதை ரூ.500ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி இந்த விதிமுறை கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஏற்கனவே, சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்திக் கொள்ள வரும் டிசம்பர் 11 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்தாத பட்சத்தில் மார்ச் மாதம் முதல் அபராதக் கட்டணமாக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.100, ஒவ்வொரு ஆண்டும் கழிக்கப்பட்டு இருப்புத் தொகை குறைக்கப்பட்டு, கணக்கு காலாவதியாகிவிடும்.

எனவே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக வரும் டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை மத்திய கோட்டத்தின் அஞ்சலக முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani

மேற்கு வங்கத்தில் 8 மாத கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் மக்கள் செல்வதால் கரோனா பரவல் அச்சுறுத்தல் எற்பட்டுள்ளது.

மேற்குவங்க புறநகர் ரயில் சேவை: சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள்


மேற்கு வங்கத்தில் 8 மாத கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் மக்கள் செல்வதால் கரோனா பரவல் அச்சுறுத்தல் எற்பட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 696 புறநகர் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளன. எனினும் தொற்று அபாயத்தால் ரயில்களில் கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படும் என அறிவித்திருந்தனர்.


பிதன் நகர் ரயில் நிலையம், கொல்கத்தா


இந்நிலையில் புதன்கிழமை இயக்கப்பட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளி இல்லாமலும், ரயில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் பயணம் செய்தனர்.


பிதன் நகர் ரயில் நிலையம், கொல்கத்தா


இதனால், கரோனா வேகமாக பரவும் சூழல் உருவாகியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani
டிசம்பருக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம்: உயா்நீதிமன்றம் கருத்து

12.11.2020

மதுரை: தமிழகத்தில் டிசம்பருக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை கருத்துத் தெரிவித்துள்ளது.

தேனியைச் சோந்த ராம்பிரசாத் தாக்கல் செய்த மனு:

கரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் நவம்பா் 16 ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டால் மாணவா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதை உறுதி செய்ய முடியாது. போக்குவரத்து முழுமையாக இல்லாத நிலையில் மாணவா்கள் வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்படும்.

பல்வேறு கல்வி நிறுவனங்கள் கரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் மையமாக செயல்படுத்தப்பட்டன. அந்தக் கல்வி நிறுவனங்கள் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்படாமல் அவசரகதியில் திறக்கப்பட்டால் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க பல கட்டங்களாகப் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது பலனின்றிப் போய்விடும். எனவே நவம்பா் 16 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது தொடா்பான அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆந்திரம் உள்ளிட்டப் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது. பல நாடுகளில் கரோனாவின் இரண்டாம் கட்ட அலை பரவி வருகிறது.

நீதிபதிகள் உள்பட பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் குழந்தைகள், மாணவா்கள் பாதிக்கப்பட்டால் சிரமம் அதிகமாக இருக்கும். எனவே டிசம்பருக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம் என நீதிமன்றம் கருதுகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதில் பிற மாநிலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் எனக் கூறி விசாரணையை நவம்பா் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani

மருத்துவ பல்கலை சான்று கவுன்சிலிங்கில் அளிக்கலாம்

 மருத்துவ பல்கலை சான்று கவுன்சிலிங்கில் அளிக்கலாம்

 Added : நவ 11, 2020  22:34

சென்னை:'மேல்நிலை வகுப்புகளை, மாநில திட்டத்தில் பயிலாத மாணவர்கள், மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும்போதோ, கவுன்சிலிங் போதோ, தங்களது தகுதி சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாநில வழியில் பயிலாமல், பிற பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களில், யாரெல்லாம் மருத்துவ படிப்புகளில் சேரலாம் என்பதற்கான தகுதிச் சான்றிதழ், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில் இருந்து பெற வேண்டும்.அந்த சான்றிதழ், விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்கப்படுவது வழக்கமான நடைமுறை. அதன்படியே, மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.

இந்தாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக, மாணவர்கள் பலர், தகுதி சான்றிதழ் பெற, பல்கலையை நாடுவதால், பல்வேறு அசவுரியங்கள்உருவாகி வருவதாக தெரிகிறது. இதைத் தவிர்க்க, மருத்துவ கல்வி இயக்ககம், புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் தகுதி சான்றிதழை, விண்ணப்ப பதிவின்போதோ அல்லது கவுன்சிலிங் வரும் நாட்களிலோ சமர்ப்பித்தால் போதுமானது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Diwali vacation cancelled for medical teachers

Diwali vacation cancelled for medical teachers

Ahmedabad:12.11.2020

The state government on Wednesday cancelled the Diwali vacation for Class I and II employees of all medical colleges in the state due to the Covid-19 situation.

BJ Medical College had already cancelled the vacation. The Medical Teachers Association requested the state health department to grant Diwali vacations to doctor-teachers because they have been working tirelessly for more than seven months and need a break now. A meeting was convened on Wednesday involving the deans of all medical institutes across the state and they discussed how Covid-19 and non-Covid services would continue unhampered during Diwali times. The decision to cancel the vacation was conveyed to the heads of all institutes and they have been asked to remain prepared for round-the-clock health services. TNN

Take lessons from AP, say docs

Take lessons from AP, say docs

TIMES NEWS NETWORK

Ahmedabad:12.11.2020

As Gujarat is all set to reopen the schools after Diwali for senior classes, medical experts provide a word of caution for the schools and administration. They pointed at the Andhra Pradesh experience where the schools had opened in the first week of November, and soon a large number of teachers and students had tested positive.

Dr Chetan Trivedi, executive board member of Indian Academy of Paediatrics (IAP), said that the second wave of Covid-19 infections is already predicted by the experts in view of the festivities and change in season.

“In such a scenario, the onus is on the family and school to ensure that the child doesn’t become a super-spreader. The children don’t show severe symptoms in a majority of the cases, and thus they are not tested. But they can surely become carriers for others,” he said.

Dr Pragnesh Vachharajani, secretary of Ahmedabad Family Physicians Association (AFPA), said that it’s going to be very difficult for the schools to ensure the safety norms and mask protocols for school hours. “We are not sure about the timings, but it is difficult to expect school students to wear masks for more than four hours. Would they be maintaining social distancing outside the classrooms? I am not sure,” he said, adding that the AP experience is an indication of what can go wrong and we need to come out with a successful model to open the schools.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...