Wednesday, February 15, 2017

முட்டல் - மோதல்.... உடைகிறதா சசிகலா அணி?


சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஆளுநரிடம் ஆட்சியமைக்க உரிமைக் கோரினார். மேலும், ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த சசிகலாவின் அக்காள் மகன் டி.டி.வி. தினகரன் அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தற்போது செங்கோட்டையன்-எடப்பாடி-தினகரன் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது செங்கோட்டையனுக்கு பிடிக்கவில்லையாம். இதனால் அவர் யாருடனும் அதிகம் பேசுவதில்லை, இறுக்கமான முகத்துடனே இருக்கிறார் என்கின்றனர். அதேபோல், டி.டி.வி தினகரனை அதிமுக துணைப் பொதுச்செயலாளராக நியமித்தது எடப்பாடி பழனிச்சாமிக்கு பிடிக்கவில்லை என்கின்றனர்.



இதன் காரணமாக இவர்கள் மூவருக்கும் இடையே சரியாக பேச்சுவார்த்தை இல்லையாம். இதைத்தொடர்ந்து எம்.எல்.ஏக்களும் கூவத்தூர் ரிசார்ட்டில் இருக்க ஆர்வம் காட்டுவதில்லையாம். தற்போது கூவத்தூர் ரிசார்ட்டில் 47 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர் என்று கூறப்படுகிறது. அவர்களும் அங்கிருந்து வெளியேறத்தான் விரும்புகிறார்களாம்.

இந்நிலையில், முதல்வர் பன்னீர் அணியில் சேர்ந்துள்ள மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் சசிகலா மற்றும் எடப்பாடி மீது தொடர்ந்த கடத்தல் புகார், புயலை கிளப்பும் என கூறப்படுகிறது.

- ஜெயவேல்

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...