Thursday, February 14, 2019


வியாழக்கிழமை மெட்ரோ ரயில் பயணம்: இதை நினைவில் வச்சுக்கங்க

By DIN | Published on : 13th February 2019 08:09 PM |




சென்னை: வியாழக்கிழமை முதல் மெட்ரோ ரயில் பயணத்திற்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


ஏ.ஜி.டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை இடையே புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையை ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

இந்நிலையில் மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் செவ்வாய் வரை இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் முன்பே அறிவித்திருந்தது.

இதணையடுத்து சென்னை மெட்ரோ ரயிலில் 4வது நாளாக புதனன்றும் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறித்துள்ளது. இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் வியாழக்கிழமை முதல் மெட்ரோ ரயில் பயணத்திற்கு பொதுமக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து சென்னை வாழ் மக்களின் நான்கு நாள் இலவசப் பயணம் புதன்கிழமை இரவுடன் முடிவுக்கு வருகிறது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...