Thursday, February 21, 2019

நாங்கல்லாம் அப்பவே அப்படி! ஆனால் இப்போ? மறந்தே போன மால்கள்!!

By ENS  |   Published on : 20th February 2019 06:16 PM  
plazas

மிகப்பெரிய மால்களும், கண்ணைக் கவரும் பொழுதுபோக்கு அம்சங்களும் தற்போது நகரங்களின் அடிப்படை அம்சங்களாக மாறி நிற்கின்றன.
பொழுதுபோக்குக்காக பூங்காக்களை நாடும் பொது ஜனங்களுக்கு இணையாக, மால்களை நாடும் ஐ.டி. குடும்பங்களும் தற்போது அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் கூட இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு மால்களால் நிரப்பப்படுகிறது.
பரந்துவிரிந்த இடம், ஒரு சில மாடிகள், ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு என கட்டணக் கொள்ளையடிக்கும் வாகனப் பார்க்கிங் வசதி, எந்தப் பொருளைத் தொட்டாலும் விரலைச் சுட்டுவிடும் விலை, கையில் பணத்தை எடுத்துச் சென்று செலவிட முடியாத ஒரு கலாசாரம் என எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அன்னிய அடாவடித்தனத்தை ஒருங்கேக் கொண்டிருப்பதுதான் மால்கள். இது மால்களைப் பற்றி சாமானிய மனிதன் சொல்லும் கருத்து.
தற்போது புதிது புதிதாக மால்கள் திறக்கப்பட்டு கலைகட்டத் தொடங்கிவிட்டது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற மால்கள் திறக்கப்பட்டு, அதுவும் கன்னா பின்னாவென்று புகழ் அடைந்து, நாளடைவில் பழையதாகி, பிறகு மங்கி, மக்களின் மனதில் இருந்து மறைந்தே போன சில ஓய்வுபெற்ற மால்களைப் பற்றி இங்கேப் பார்க்கலாம்.
அல்சா மால்
எழும்பூரில் உள்ள அல்சா மாலைப் பற்றி பேசியதுமே, சென்னைவாசிகளுக்கு அங்கிருக்கும் சான்ட்விட்ச் கடைதான் நினைவுக்கு வருகிறது. 1980ம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது அல்சா மால். ஸ்பென்சர் ப்ளாஸாவுடன் தொடங்கப்பட்டு, மங்கி வரும் மால்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. அருகே இருக்கும் பல கல்லூரி மாணவர்கள் ஒன்றாக சந்திக்கும் இடமாக தற்போதும் அல்சா மால் உள்ளது.
அங்கே கடை வைத்திருக்கும் ஸகிர் என்பவர், இங்கே பல கடைகள் காலியாகி, அலுவலகமாக மாற்றப்பட்டுவிட்டது. கணிசமான வாடகை, நமக்கென்று இருக்கும் சில கஸ்டமர்களுக்காக இங்கே 20 ஆண்டுகளாகக் கடை வைத்திருக்கிறோம். குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில்  வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது என்கிறார்.
தற்போது ஆசிரியராக இருக்கும் பூர்ணிமா கூறுகையில், ஒன்றாவது படித்துக் கொண்டிருக்கும் போது உயர்தர பொருட்களை ஒரே இடத்தில்  தேடி வாங்க அல்சா மால்தான் சிறந்த இடமாக இருந்தது. ஆனால் இப்போது இதுபோன்ற பெரிய பெரிய மால்கள் வந்துவிட்டன என்கிறார் பழைய நினைவுகளோடு.
மாயாஸ் பிளாஸா
பாண்டிபஜாரில் அமைந்திருக்கும் மாயாஸ் பிளாஸா.. முக்கியமான மாலாக இருந்தது. தற்போது மறந்தே போன மால்களில் ஒன்றாக மாறியுள்ளது.
1994ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த மாலில் 89 கடைகள் உள்ளன. 25 வருடங்களுக்கு முன்பு பட்னி பிளாசாவைப் பார்த்த ஸ்ரீசந்த் என்பவர், அதன் மீது ஈர்க்கப்பட்டு இந்த இடத்தை வாங்கி இந்தக் கட்டடத்தைக் கட்டத் தொடங்கினார். அப்போது துரதிருஷ்டவசமாக அவரது மனைவி மாயா மறைந்துவிட்டார். அவரது நினைவால், இந்த கட்டடத்துக்கு மாயாஸ் பிளாஸா என்று பெயரிட்டார். 
இன்னமும் இங்குக் கடை வைத்திருப்பவர்கள் அனைவரும், திரைத்துறைக்கு பல்க் ஆர்டர்கள் கிடைப்பதை வைத்தே லாபம் பார்த்து வருகிறார்கள். பல புதிய மால்கள் வந்துவிட்டதால் இங்கு வரும் வாடிக்கையாளர்களின் வருகைக் குறைந்திருப்பது உண்மைதான். ஆனால் முக்கியமான சில வாடிக்கையாளர்கள் இன்னமும் வந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் கடை முதலாளிகள்.
ஃபௌண்டெயின் பிளாஸா
பாந்தியன் சாலையில் 1976ல் துவக்கப்பட்ட ஃபௌண்டெயின் பிளாஸாதான் நகரில் அமைந்த முதல் மால் என்ற பெருமையை பெருகிறது. தற்போது வணிகமே முற்றிலும் மாறிவிட்டது. பலரும் ஆன்லைன் ஷாப்பிங்கை அதிகம் விரும்ப ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் இங்கு வணிகம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் எங்களுக்கு என்று சில வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள் வணிகர்கள்.
1980களில் இங்கு வரும் தினமும் வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை ஐந்து ஆயிரமாக இருந்தது. இது தற்போது வெறும் 2 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
1980ம் ஆண்டு காலம் என்பது பொன்னான நாட்கள். இதுபோன்றதொரு மால் சென்னையிலேயே இங்குதான் இருந்தது என்பதால் ஏராளமான மக்கள் இங்கு வர விரும்புவார்கள். இங்கு பெண்களுக்கான பொருட்கள் அதிகம் விற்பனையாகும் என்பதால் பெண் வாடிக்கையாளர்களை அதிகம் கொண்டிருந்தது என்று கூறுகிறார் 50 ஆண்டுகளாக இங்கு தையலகம் நடத்தி வரும் ஜெயந்தி லால்.
இங்கு ஏராளமான திரைப்படக் காட்சிகளும் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை திரையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும் என்கிறார் இந்த மாலின் சங்கத் தலைவர் சுரேஷ் குமார்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...