Monday, June 24, 2019


10 ரூபாய் நாணயங்களுக்கு தடை :அரசு போக்குவரத்துக்கழகம் கறார்


  Added : ஜூன் 24, 2019 01:19

 
 
அரசு பஸ்களில், 10 ரூபாய் நாணயங்களை வாங்க, அதிகாரிகள் தடை விதித்துள்ளது, பயணியர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழக, கோவை கோட்டம், ஈரோடு மண்டலம், திருப்பூர் கிளையில், 10 ரூபாய் நாணயங்களை, கண்டக்டர்கள், 'கேஷியரிடம்' செலுத்தினால், அவற்றை வாங்க மறுத்தனர். ஒரு மாதமாக இந்த நிலை நீடிக்கவே, இரு தரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டது.இதையடுத்து, கிளை மேலாளர், 21ம் தேதி, கண்டக்டர்களுக்கு வெளியிட்ட சுற்றறிக்கையில், '10 ரூபாய் நாணயங்களை, பயணியரிடம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். 'மீறி வாங்கினால், சக பயணியரிடமே கொடுத்து விடவும். வசூல் தொகையை, கேஷியரிடம் வழங்கும் போது, 10 ரூபாய் நாணயம் வழங்குவதை தவிர்க்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.கேஷியரின் அறை முன்பகுதியிலும், இதை ஒட்டியுள்ளனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில், நேற்று முதல், கண்டக்டர்கள், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து விட்டனர்; இதனால், பயணியர் அதிர்ச்சி அடைந்தனர்.திருப்பூர் கிளை கண்டக்டர்கள் சிலர் கூறியதாவது:மேலாளரின் இந்த உத்தரவு, கண்டக்டர்கள், பயணியர் இடையே மோதலையே ஏற்படுத்தும். நாணயங்களை வழங்கும் வங்கிகள், அவற்றை வாங்க மறுப்பது தான், இதற்கு காரணம்.அது மட்டுமின்றி, வசூல் தொகையை வாங்கும் கேஷியர்கள், நாணயங்களை எண்ண தாமதமாவதாக கூறி, இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள, அதிகாரிகளை நிர்ப்பந்தித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.சேலம், பாராமஹால் நாணயவியல் சங்க இயக்குனர், சுல்தான் கூறியதாவது:ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நாணயங்களை வாங்க மறுப்பது, சட்டப்படி குற்றம். அதிலும், போக்குவரத்துக் கழக அதிகாரியின் உத்தரவு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொதுத்துறை நிறுவனங்கள், சேவை மனப்பான்மையுடன் நடக்க வேண்டுமே தவிர, தொல்லை கொடுக்கும் வகையில் மாறக் கூடாது.வங்கிகளால் வினியோகிக்கப்படும் நாணயங்களை, பொதுமக்கள் மீண்டும் வங்கிகளுக்கு கொண்டு வரும் நிலையில், அதை வாங்க, அதிகாரிகள் மறுப்பதே, இந்த குழப்பத்துக்கு காரணம். முதலில், வங்கிகள் நாணயங்களை பெற முன்வரவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்
- நமது நிருபர் -.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...