Friday, August 23, 2019

வேளாங்கண்ணிக்கு 200 சிறப்பு பஸ்கள்

Added : ஆக 23, 2019 01:34

சென்னை, ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு, வேளாங்கண்ணிக்கு, நாளை மறு நாள் முதல், செப்., 10 வரை, 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், ஒவ்வொரு ஆண்டும், வேளாங்கண்ணி, புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலயத்தின் திருவிழாவின் போது, பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது. இந்த ஆண்டு திருவிழா, 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, நாளை மறுநாள் முதல், செப்., 10 வரை, சென்னை, பெங்களூரு, நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், கோவை ஆகிய நகரங்களில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பயணியரின் தேவைக்கேற்ப, மிதவை, குளிர்சாதன வசதி, படுக்கை வசதியுடைய, 200 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும், பயணியரின் வசதிக்காக, www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com ஆகிய இணையதளங்களின் வழியாக, முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...