Friday, August 23, 2019

பாலியல் புகார் பேராசிரியர் டிஸ்மிஸ்

Added : ஆக 22, 2019 23:36 |

மதுரை, மதுரை காமராஜ் பல்கலை ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர் கர்ணமகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.இப்பல்கலை திரைப்படம் மற்றும் மின்னணு ஊடகவியல் துறை பேராசிரியராக 2013 முதல் பணியாற்றியவர் கர்ணமகாராஜன்,49. கேரள மாணவிக்கு பி.எச்.டி., வழிகாட்டியாக இருந்தார். அப்போது பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாக அவர் மீது மாணவி புகார் அளித்தார்.பாலியல் புகார்களை விசாரிக்கும் பல்கலை ஐ.சி.சி., கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. மாணவி பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது.இந்நிலையில் பிப்.,5ல் பல்கலையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், கர்ணமகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில் துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் அவசர சிண்டிகேட் கூட்டம் நேற்று நடந்தது. இதையடுத்து கர்ணமகாராஜனுக்கு கட்டாயஓய்வுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...