Tuesday, August 6, 2019

மக்கள் வெள்ளத்தால் திணறும் காஞ்சிபுரம் - இன்று ஒரே நாளில் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

JAYAVEL B

vikatan

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் எழுந்தருளும் அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர். இன்று ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அத்திவரதர்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் எழுந்தருளும் அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர். இன்று ஒரே நாளில் 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



பக்தர்கள்

இன்று அதிகாலை முதலே காஞ்சிபுரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்றுவரை ரங்கசாமி குளம்வரை இயக்கப்பட்ட பேருந்துகள் தற்போது காந்தி ரோட்டிலேயே திருப்பி விடப்படுகின்றன.

காந்திரோடு வரை மட்டுமே மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. காந்திரோட்டில் கார்களும் அனுமதிக்கப்படவில்லை. காந்திரோட்டிலிருந்தே பக்தர்கள் சுமார் 2 கி.மீ தொலைவு நடந்தே கோயிலுக்கு வருகின்றனர்.



பக்தர்கள் கூட்டம்

மாஸ் க்ளீனிங் செய்ய சுகாதார பணியாளர்கள் டிகே நம்பி தெருவைக் கடந்து செல்ல முடியாமல் சில இடங்களில் தடுமாறுகின்றனர். வாலாஜாபாத், கீழம்பி தேசிய நெடுஞ்சாலை, ஒலிமுகமது பேட்டை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

கோயிலில் இருந்து வரும் பக்தர்கள், விஷ்ணு காஞ்சி போலீஸ் ஸ்டேஷன், சேஷாத்ரி பாளையத்தெரு வழியாக விளக்கடி கோயில் தெருவுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளனர். இதில், வீல் சேரில் வரும் பக்தர்கள், அந்த வீல் சேர்களைக் கண்ட இடத்தில் விட்டுச் சென்றுள்ளனர். சிலர், கையோடு எடுத்தும் செல்கின்றனர்.


அத்திவரதர்

இதனால் பக்தர்கள் மிகுந்த அசௌகர்யத்துக்கு ஆளாகின்றனர்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...