Tuesday, August 6, 2019

உயர் நீதிமன்ற மதுரை கிளை செய்திகள்

Added : ஆக 06, 2019 04:11

புதிய பெட்ரோல் பங்குகள்விசாரணை ஒத்தி வைப்பு

திண்டுக்கல் வேடசந்துார் வெங்கிடுசாமி தாக்கல் செய்த பொதுநல மனு: கிராமங்களில் பெட்ரோல் பங்குகளை தொடங்க பெட்ரோலியம் நிறுவனங்கள் கடந்த 2018 நவ., 25ல் டெண்டர் கோரியது. 2018 ஏப்., 1 நிலவரப்படி தமிழகத்தில் தனியார் உட்பட 5,388 பெட்ரோல் பங்குகள் உள்ளன. இந்நிலையில் குறைந்த கால அளவில் 5,125 பெட்ரோல் பங்குகளை தொடங்குவது அரசியல் அழுத்தத்தில் முறையாக ஆய்வு செய்யப்படாமல் எடுக்கப்பட்ட முடிவாகும். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும். எனவே, இதற்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும், என கூறியிருந்தார்.டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பெட்ரோலியம் நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ''முந்தைய காலத்தை விட தற்போது வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில், அதிக பெட்ரோல் நிலையங்கள் தேவைப்படுகின்றன. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது,'' என்றார்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ''ஒரே நேரத்தில் 5,000 க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் செயல்பட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளது,'' என்றார். விசாரணையை ஆக.,21க்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

நோட்டரி பப்ளிக் நியமனம்

பதிலளிக்க உத்தரவு  மதுரை சோழவந்தான் வழக்கறிஞர் ரவிக்குமார் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டனர். மாற்றுத் திறனாளியான நான் அதற்குரிய இட ஒதுக்கீடு முறையில் விண்ணப்பித்தேன். நியமன உத்தரவில் எனது பெயர் இல்லை. இதுகுறித்து மேல் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, நோட்டரி பப்ளிக் நியமனத்தை ரத்து செய்து மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்றார்.இம்மனு நீதிபதி சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. 

மத்திய அரசு வழக்கறிஞர், ''அரசு பணி நியமனத்தின் போது தான் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற முடியும். நோட்டரி என்பது வழக்கறிஞருக்கு உரிமம் வழங்குவது தான். இதில் இட ஒதுக்கீடு முறை பின்பற்ற இயலாது,'' என்றார்.நீதிபதி உத்தரவில், ''நோட்டரி பப்ளிக் நியமனத்தில் விண்ணப்பித்தவர் எத்தனை பேர், தேர்வு செய்யப்பட்டவர் எத்தனை பேர், நேர்காணலில் எந்த முறை பின்பற்றப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,'' என உத்தரவிட்டு விசாரணையை ஆக., 19க்கு ஒத்தி வைத்தார்.

நெல்லை சி.எஸ்.ஐ., நிர்வாகம்நீதிபதிகள் நிர்வகிக்க உத்தரவுநெல்லை சி.எஸ்.ஐ., திருமண்டல நிர்வாக குழு தேர்தலை எதிர்த்தும், திருமண்டல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளின் பணியாளர்கள் நியமனம், இடமாறுதல் தொடர்பாக உயர் நீதிமன்ற கிளையில் 31 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.இவ்வழக்குகளை விசாரித்து நீதிபதி ஆர்.மகாதேவன் நேற்று பிறப்பித்த உத்தரவு: நெல்லை சி.எஸ்.ஐ., திருமண்டலம், டி.டி.டி.ஏ., ஆகியவற்றுக்கு ஜம்மு- காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற ஓய்வு தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோர் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகின்றனர். இவர்களிடம் 2 வாரத்தில் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும். நெல்லை திருமண்டலத்தில் ஏப்., 23 முதல் நடந்த இடமாறுதல், பணி நியமனங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றம் நியமித்துள்ள நிர்வாகிகளிடம் வழங்க வேண்டும்.கல்வி நிறுவனங்கள், பிற நிறுவனங்களின் இடமாறுதல், புதிய நியமனங்கள் அனைத்தும் நிர்வாகக்குழு முன் வைத்து நிர்வாகிகள் மேற்பார்வையில் முடிவெடுக்க வேண்டும். இதில் பிரச்னை எழுந்தால் நிர்வாகிகளின் முடிவு இறுதியானது.பணிபுரிவோருக்கான சம்பளத்தை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக செப்.,30-ல் நீதிமன்றத்தில் நிறைவேறுதல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question

Karur stampede: Vijay in Delhi to appear before CBI; key points the agency will question CBI to question actor-TVK chief on crowd control la...