Tuesday, August 6, 2019

Published:22 Jul 2019 9 PMUpdated:22 Jul 2019 9 PM

இனி, பஸ் டிக்கெட்டுகளுடனே சிறப்பு தரிசனத்துக்கும் முன்பதிவு செய்யலாம்! #Tirupati

எஸ்.கதிரேசன்

திருமலை திருப்பதி செல்பவர்களின் வசதிக்காக, ஆந்திர பஸ் போக்குவரத்துக் கழகம் சார்பில் சில சலுகைகள் அளிக்கப்படுகின்றன.



திருப்பதி

சென்னையிலிருந்து திருப்பதி செல்பவர்களுக்கு, சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நான்கு ரயில்கள் மட்டுமே உள்ள நிலையில், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை திருமலைக்குச் செல்லும் விதமாக பேருந்துகள் புறப்படுகின்றன.


திருப்பதி


இந்தப் பேருந்துகளில், 5 வயது முதல் 12 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு அரை டிக்கெட் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 10 வயது தாண்டிய குழந்தைகளுக்கு, பிறப்புச் சான்றிதழாக ஆதார் கார்டை உடன் எடுத்துச்செல்வது நல்லது.

நீங்கள் முன்பதிவு செய்த குறிப்பிட்ட தேதியில், நீங்கள் பயணிக்க முடியாமல் போனால், 25 சதவிகித பிடித்தம்போக தொகையை உங்களுக்குத் தந்துவிடுவார்கள். ஆனால், மாற்றுத் தேதியில் நீங்கள் பயணிப்பதாகக் கூறினால், எந்தவித பிடித்தமும் இல்லாமல் புதிய டிக்கெட்டை பதிவுசெய்து தருவார்கள். இதில் சிரமம் என்னவென்றால், அந்த டிக்கெட்டை நீங்கள் ரத்துசெய்ய முடியாது. அந்தத் தேதியில் நீங்கள் பயணம் செய்துதான் ஆக வேண்டும்.

பக்தர்கள்

இதுதவிர, 60 வயது நிரம்பிய சீனியர் சிட்டிசன்களுக்கு பேருந்துக் கட்டணத்தில் 25 சதவிகிதம் குறைத்து வசூலிக்கப்படுகிறது.

திருமலையில் உடனடியாக சுவாமிதரிசனம் செய்ய விரும்புபவர்களுக்கு வசதியாக, 300 ரூபாய் சிறப்பு தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. ஆன்லைன் மூலமாக இதற்கான முன்பதிவைப் பெறலாம். அதற்கு அவகாசம் இல்லாமல்போனால், பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே 300 ரூபாய் தரிசனத்துக்கும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.



சந்திர பிரபை வாகனம்

திருமலைக்கு பயணிக்கும்போது, யார் யார் செல்கிறார்களோ அனைவரின் ஆதார் கார்டுகளையும் உடன் எடுத்துச்செல்வது டிக்கெட் முதல் தரிசனம் வரை தேவைப்படும்.

No comments:

Post a Comment

TAPS takes effect from Jan 1, 2026

TAPS takes effect from Jan 1, 2026  As per the G.O., TAPS will become operational after the notification of rules and completion of statutor...