Thursday, August 8, 2019

பெற்றோரை கண்டறிய முடியாமல் பரிதவிக்கும் சிறுவன்

Updated : ஆக 08, 2019 02:09 | Added : ஆக 08, 2019 00:01



தஞ்சாவூர் : தஞ்சையில், 5 வயது சிறுவன், பெற்றோரை கண்டறிய முடியாமல், பரிதவித்து வருகிறான்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி, 29, என்பவர், 11, 7, 5 வயதுள்ள மூன்று சிறுவர்கள், 9 வயதுள்ள ஒரு சிறுமியுடன், பொள்ளாச்சி, திருப்பூர் போன்ற ஊர்களில் பிச்சை எடுத்துள்ளார். கரூர் ரயில்வே ஸ்டேஷனில், பிச்சை எடுத்த போது, 'சைல்டு லைன்' அமைப்பினர், குழந்தைகளை மீட்டனர்; பரமேஸ்வரி மாயமாகி விட்டார்.

அந்த குழந்தைகளிடம் விசாரித்த போது, தஞ்சாவூர் எனக் கூறியதால், தஞ்சை மாவட்ட குழந்தைகள் நல குழுவினரிடம், அவர்களை ஒப்படைத்துள்ளனர். இதில், இரண்டு சிறுவர், ஒரு சிறுமி என, மூன்று குழந்தைகள், தன்னுடையது என, மதுரையைச் சேர்ந்த கோச்சடையான் என்பவர், ஆவணங்களை காட்டி, அழைத்துச் சென்றார். தருண் என்ற, 5 வயது சிறுவன் மட்டும், 15 நாட்களாக, குழந்தைகள் நலக் குழுவினர் பராமரிப்பிலேயே இருந்து வருகிறான்.

தஞ்சை மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர், திலகவதி கூறியதாவது:தருணின் பெற்றோர் குறித்து, எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஊர், பொள்ளாச்சி, தந்தை சுரேஷ், தாய் சித்ரா, தம்பி ராகவா எனக் கூறுகிறான். மற்ற விபரங்கள் அவனுக்கு தெரியவில்லை. தருணின் பெற்றோரோ அல்லது அவனை பற்றிய விபரம் அறிந்தவர்களோ வந்து அழைத்து செல்லலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

BHOPAL NEWS