Friday, November 22, 2019

ஆந்திர கோவில்களுக்கு தனி சிறப்பு ரயில் வசதி

Added : நவ 22, 2019 01:33

சென்னை ஆந்திர மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்றுவர வசதியாக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமாக ஐ.ஆர்.சி.டி.சி. தனி சிறப்பு ரயிலை இயக்குகிறது.இந்த ரயில் மதுரையில் இருந்து டிச. 11ல் புறப்பட்டு திண்டுக்கல் திருச்சி விழுப்புரம் சென்னை எழும்பூர் வழியாக செல்லும்.இப்பயணத்தில் ஆந்திராவில் அகோபிலம் நரசிம்மர் மகாநந்தீஸ்வரர் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஜோதிர்லிங்கம் பத்ராச்சலம் ஸ்ரீராமர் சிம்மாச்சலம் லட்சமிநரசிம்மர் கைலாசகிரி அன்னாவரம் ஸ்ரீசத்யநாராயண கோவில்களுக்கு சென்று வரலாம். விசாகப்பட்டினம் அழகிய கடற்கரையையும் பார்க்கலாம்.ஏழு நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு 7775 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் தகவலுக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் நிலைத்தில் உள்ள ஐ.ஆர்.சி.டி.சி. அலுவலகத்துக்கு 90031 40680 90031 40681 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...