Thursday, February 27, 2020

துணை வேந்தர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி

Added : பிப் 26, 2020 22:36

சென்னை,:'பல்கலை துணைவேந்தர்களுக்கு, தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, சிறந்த நிர்வாகம், உள் கட்டமைப்பு, கல்வித் தரம் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை தேர்வு செய்து, அவற்றுக்கு சீர்மிகு அந்தஸ்து வழங்கி வருகிறது. உயர்தர கல்வி நிறுவனங்களை வரிசைப்படுத்தி, தேசிய அளவிலான தரவரிசை பட்டியல் வெளியிட்டு வருகிறது. நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைகளின் நிர்வாகிகளுக்கு, தலைமை பண்பை வளர்க்கும் வகையில், சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் கவுன்சில் உதவியுடன், இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.துணைவேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள், நிர்வாக அதிகாரிகள் போன்றவர்களுக்கு, இந்த பயிற்சி தரப்பட உள்ளது.பயிற்சி பெற விரும்புவோர், யு.ஜி.சி.,க்கு விண்ணப்பிக்குமாறு, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...