சித்தா டாக்டர்களுடன் அரசு ஆலோசனை
Added : ஏப் 22, 2020 23:33
சென்னை:கொரோனா பாதிப்புக்கு, அலோபதி மருத்துவத்துடன், இந்திய பாரம்பரிய மருத்துவ முறையையும் இணைத்து, சிகிச்சை அளிப்பது தொடர்பாக, ஆலோசனை கூட்டம் நடந்தது.
தலைமை செயலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, தலைமை செயலர், சண்முகம் தலைமை வகித்தார். சுகாதாரத் துறை அமைச்சர், விஜய பாஸ்கர், செயலர், பீலா ராஜேஷ் மற்றும் இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின்படி, நடவடிக்கை எடுப்பதுடன், இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளின்படி, சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மருத்துவ நிபுணர்களுடன், முதல்வர் இன்று ஆலோசனை நடத்துகிறார். அதன்பின், முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment