ரயில்வேயில் ரூ.15க்கு சாப்பாடு
Added : ஏப் 22, 2020 23:12
சென்னை:ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய, முக்கிய ரயில் நிலையங்களில், 15 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில், ரயில்வே சார்பில், நேற்று முன்தினம் வரை, ஏழைகள் மற்றும் கூலித்தொழிலாளர்களுக்கு, இலவசமாக, 20.5 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், மே, 3 வரை, 15 ரூபாய் விலையில், சாப்பாடும் வழங்கப்பட உள்ளது.
தினமும், 2.6 லட்சம் சாப்பாடு தயாரித்து வழங்கப்பட உள்ளது.தெற்கு ரயில்வேயில், செங்கல்பட்டு, காட்பாடி, திருச்சி, மதுரை ரயில் நிலையங்களில் உள்ள, ஐ.ஆர்.சி.டி.சி., உணவகங்களில், 15 ரூபாய் சாப்பாடு விற்கப்படும். பதிவு செய்தால், இருப்பிடத்திற்கே உணவு தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது, ஓரிரு நாளில் செயல்பாட்டுக்கு வரும் என, தெரிகிறது.
No comments:
Post a Comment