Saturday, April 25, 2020

கணவர் உடலுடன் தவிக்கும் மனைவி

Added : ஏப் 25, 2020 01:22

மயிலாடுதுறை:ஹாங்காங்கில், மாரடைப்பால் உயிரிழந்த, சீர்காழியை சேர்ந்த ஆடிட்டர் உடலையும், உடலுடன் தனிமையில் இருக்கும் அவரது மனைவியையும் மீட்டு தர வேண்டும் என, உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த எடகுடிவடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா, 37. இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன், ஹாங்காங்கில் ஆடிட்டர் வேலையில் சேர்ந்தார். அங்கு பணியாற்றி வந்த ராஜாவுக்கும், வழுவூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா, 30, என்பவருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.தம்பதி, ஹாங்காங்கில் வசித்து வந்தனர். மார்ச், 26ல், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, ஹாங்காங் குயின் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

.கணவர் இறந்தது குறித்து, உறவினர்களுக்கு அனிதா தகவல் தெரிவித்துள்ளார். ராஜா இறந்து, ஒரு மாதம் ஆகும் நிலையில், அவரது உடலை சொந்த நாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. மேலும், கணவரை இழந்து தவித்து வரும் அனிதாவை மீட்க முடியாமலும், உறவினர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.ராஜா உடலையும், அவரது மனைவி அனிதாவையும் மீட்டு வர வேண்டும் என, மத்திய - மாநில அரசுகளுக்கு, ராஜாவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer

New SOP for oncologists in TN to treat ovarian, cervical, uterine cancer  The new SOP requires official government mandates, structured trai...