Monday, April 13, 2020


வீட்டிலிருந்து பணிபுரிவோர் கவனத்துக்கு.. இணையம் வழியாக கணினிகள் ஹேக் செய்யப்படலாம்: மத்திய சைபர் பிரிவு எச்சரிக்கை

13.04.2020



வீட்டில் இருந்து பணிபுரியும் நபர்களின் கணினிகள், இணையம் வழியாக ஹேக் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று மத்திய சைபர் பிரிவு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை வீட்டில் இருந்து வேலைபார்க்கும்படி கூறி அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தன. அதற்காக லேப்டாப், கணினி உள்ளிட்ட சாதனங்களை நிறுவனங்கள் வழங்கின.


தற்போது வீட்டில் இருந்துபணிபுரியும் நபர்கள் இணையசேவையை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதனால், இணையம் மூலம் கணினியில் உள்ள தகவல் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் சைபர் பிரிவு எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சைபர் பிரிவு வெளியிட்ட அறிக்கை:

பணியாளர்கள் தங்களின் அலுவலங்களில் இணைய சேவையை பயன்படுத்துவதற்கும் வீட்டில் இருந்து பயன்படுத்துவதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.அலுவலகங்களில் இணையசேவைக்கான பல பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். ஆனால், வீட்டில் பயன்படுத்தும்போது சுய பாதுகாப்பு ஏற்பாடுகளை நாமே செய்யவேண்டும். பொது இணையசேவை மூலம்உங்களது கணினி ஹேக் செய்யப்பட்டு, தகவல் திருடப்படலாம். எனவே பொது இலவச வைஃபை சேவையை பயன்படுத்தவேண்டாம்.

கணினி மற்றும் லேப்டாப்பில்ஆன்டி வைரஸ் மென்பொருள் முறையாக செயல்படுகிறதா என்று அடிக்கடி சோதனை செய்யவேண்டும். தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்யவேண்டாம். அலுவலக வேலைகளை செய்யும் சாதனங்களில் சமூக வலைதளத்தைப் பயன்படுத்த வேண்டாம். கடவுச்சொல்லை பலமாக கட்டமைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...