Sunday, September 20, 2020

கூகுள் ட்ராஸில் 30 நாட்கள் பிறகு கோப்புகள் தானாக நீக்கப்படும்: கூகுள் அறிவிப்பு

கூகுள் ட்ராஸில் 30 நாட்கள் பிறகு கோப்புகள் தானாக நீக்கப்படும்: கூகுள் அறிவிப்பு

கூகுள் சேமிப்பகத்தில் உள்ள அழிக்கப்பட்ட கோப்புகளை 30 நாள்களுக்குப் பிறகு குப்பைத் தொட்டியிலிருந்து (ட்ராஸ்) தானாக நீக்கப்படும் என கூகுள் அறிவித்துள்ளது.

கூகுள் டிரைவ் என அழைக்கப்படும் கூகுள் சேமிப்பகம் தங்களது பயனர்களுக்கு கோப்புகளை சேமிக்கும் வசதியை வழங்கி வருகிறது.

தற்போது, ​​கூகிள் டிரைவ் குப்பைத் தொட்டியில் (ட்ராஸ்) உள்ள எல்லா கோப்புகளையும் காலவரையின்றி வைத்திருக்கும் முறை நடைமுறையில் உள்ளது. முன்னதாக குப்பைத்தொட்டி (ட்ராஸ்) பயனரால் காலியாக்கப்படும் வரை காலவரையின்றி தக்கவைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அக்டோபர் 13 முதல், கூகுள் சேமிப்பகத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளில்(ட்ராஸ்) சேர்ந்த அழிக்கப்பட்ட கோப்புகளை அதன் இயங்குதளத்தில் இருந்து 30 நாட்களுக்கு பிறகு தானாக நீக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை குறித்த அறிவிப்பை கூகுள் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு தெரிவித்து வருகிறது.

Dailyhunt

No comments:

Post a Comment

Patta transfer: officials asked to digitally process applications

Patta transfer: officials asked to digitally process applications Dennis S. Jesudasan CHENNAI. 27.01.2026 The Director of Survey and Settlem...