Saturday, December 5, 2020

அரசு கல்லுாரிகளில் ஓ.சி., - பி.சி., இடங்கள் நிரம்பின


அரசு கல்லுாரிகளில் ஓ.சி., - பி.சி., இடங்கள் நிரம்பின

Added : டிச 04, 2020 22:25

சென்னை:சென்னை, நேரு விளையாட்டரங்கில், 2020 - 21ம் கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

கவுன்சிலிங்கிற்கு, 472 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அதில், 453 பேர் பங்கேற்றனர். அவர்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 148 எம்.பி.பி.எஸ்., - 19 பி.டி.எஸ்., பல் மருத்துவ படிப்பு இடங்களை, மாணவர்கள் தேர்வு செய்தனர். அதேபோல, சுயநிதி கல்லுாரிகளில், 217 எம்.பி.பி.எஸ்., இடங்களை, மாணவர்கள் தேர்வு செய்தனர்.

இதுவரை நடந்த மாணவர் சேர்க்கையில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ஒதுக்கீடு இடங்கள் நிரம்பின. தற்போது, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின வகுப்பினருக்கான ஒதுக்கீடு இடங்கள் உள்ளன.அதன்படி தற்போது, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 711 எம்.பி.பி.எஸ்., - 127 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில், 728 எம்.பி.பி.எஸ்., - 985 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...