Sunday, January 31, 2021

ஜோதிர்லிங்க யாத்திரைக்கு சிறப்பு ரயில் இயக்கம்


ஜோதிர்லிங்க யாத்திரைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

Added : ஜன 30, 2021 22:12

சென்னை:மகா சிவராத்திரியை முன்னிட்டு, நவ ஜோதிர்லிங்க யாத்திரை ரயிலை, ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது.

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி.,யானது, திருநெல்வேலியில் இருந்து, மார்ச், 8ல்இயக்கும், நவ ஜோதிர்லிங்க யாத்திரை ரயிலானது, மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி மற்றும், சென்னை பெரம்பூர் வழியாக செல்லும்.

இப்பயணத்தில், மஹாராஷ்டிர மாநிலத்தின், திரையம்பகேஷ்வர், பீமாசங்கர், குஷ்மேஸ்வர், அவுரங்காபாத், வைத்யநாத்; குஜராத் மாநிலத்தின் சோம்நாத்; மத்திய பிரதேசத்தின் ஓம்காரேஸ்வர், உஜ்ஜயினி மகாகாலேஷ்வர்; ஆந்திராவின், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் ஆகிய ஒன்பது ஜோதிர்லிங்க கோவில்களுக்கு சென்று வரலாம்.

மொத்தம், 13 நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு, 15 ஆயிரத்து, 350 ரூபாய் கட்டணம். விபரங்களுக்கு, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் சென்னை, 90031 40680; மதுரை, 82879 31977; திருச்சி அலுவலகங்களை, 82879 31974 என்ற, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை!

தேவை... திறன்களை மதிப்பிடும் முறை !  ]இன்றைய அவசர உலகில் மாணவா்கள் பல்வேறு திசைதிருப்பல்களுக்கு மத்தியில் தோ்வுக்கு தயாராவது என்பது கடினமே....