Saturday, April 3, 2021

புதிய துணைவேந்தர் தேர்வு தேடல் குழு நியமனம்


புதிய துணைவேந்தர் தேர்வு தேடல் குழு நியமனம்

Added : ஏப் 02, 2021 22:56

சென்னை:அண்ணா பல்கலை புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர் அடங்கிய தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவின் பதவிக்காலம், வரும், 11ம் தேதி முடிகிறது.

புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.பல்கலை வேந்தரான கவர்னர் தரப்பில், மூன்று பேர் அடங்கிய தேடல் குழு அமைக்கப்பட்டுஉள்ளது. டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், கவர்னர் பிரதிநிதியாகவும், குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட உள்ளார்.பல்கலையின், 'சிண்டிகேட்' குழு பிரதிநிதியாக, அவினாசிலிங்கம் பல்கலை துணைவேந்தர் தியாகராஜன், அரசு தரப்பு பிரதிநிதியாக ஷீலாராணி சுங்கத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த கமிட்டி சார்பில், மூன்று மாதங்களுக்குள் புதிய துணைவேந்தர் தேர்வு செய்யப்படுவார் என, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

No comments:

Post a Comment

No more physical Aadhaar copies as new app enables digital verification

No more physical Aadhaar copies as new app enables digital verification  TIMES NEWS NETWORK 29.01.2026 New Delhi : Eliminating the need to s...