Monday, April 12, 2021

முக கவசம் அணியாதவர்கள் வங்கிகளுக்கு செல்ல முடியாது

முக கவசம் அணியாதவர்கள் வங்கிகளுக்கு செல்ல முடியாது

Added : ஏப் 12, 2021 04:46

சென்னை : 'முக கவசம் அணியாத வாடிக்கையாளர்களை, வங்கிகளுக்குள் அனுமதிக்கக் கூடாது' என, அனைத்து வங்கிகளுக்கும், தமிழக மாநில வங்கியாளர்கள் குழுமம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.



அந்த சுற்றறிக்கை விபரம்: கொரோனா தொற்று பரவல் தொடர்பாக, தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை, ஏப்ரல், 30 வரை, தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும், வங்கிகளில் பின்பற்ற வேண்டிய, வழிமுறைகள் குறித்தும், தமிழக அரசு அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்படி, வாடிக்கையாளர்கள் முக கவசம்அணியாமல், வங்கிகளுக்குள் வர அனுமதிக்கக்கூடாது.

முக கவசம் அணித்து வரும் வாடிக்கையாளர்களும், வங்கியை விட்டு செல்லும் வரை, வாய் மற்றும் மூக்கை மூடும் வகையில் அணிது இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும்,உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தொடுதல் இல்லாத வகையில், கிருமிநாசினி திரவம் மற்றும் கை கழுவும் திரவங்களை வங்கி நுழைவாயிலும், வளாகத்தின் பொது இடத்திலும் வைக்க வேண்டும்.



வங்கியில் அதிககூட்டம் கூடுவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அலுவலக, 'லிப்டு'களை, இரண்டு அல்லது நான்கு நபர்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இடையே, தனி மனித இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

வங்கி கிளைகளில், அவ்வப்போது கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.அரசு விதிகளின் படி,கொரோனா தடுப்பூசி போடுவதற்கானஅனைத்து நடவடிக்கைகளையும், வங்கி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Annamalai University staff begin indefinite sit-in over pending dues

Annamalai University staff begin indefinite sit-in over pending dues The members also sought settlement of retirement benefits, including co...