Thursday, September 28, 2017

பணிக்கு வராத டாக்டர்கள் : பெண் பரிதாப சாவு
பதிவு செய்த நாள்28செப்
2017
02:45

பெரம்பலுார்: அரியலுார் அருகே, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க, டாக்டர்கள் பணியில் இல்லாததால், பெண் நோயாளி உயிரிழந்ததாக, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலுார் மாவட்டம், உடையார்பாளையத்தை சேர்ந்தவர் சாந்தி, 42. இரண்டு நாட்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சாந்தி, உடையார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாத்திரை வாங்கி சாப்பிட்டுள்ளார்.
நேற்று காலையில், காய்ச்சல் அதிகமாகி, வீட்டில் மயங்கி விழுந்தார்.
காலை, 6:30 மணிக்கு, சாந்தியை, உடையார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, அவரது கணவர், ரவி அழைத்து சென்றார். அப்போது, அங்கு டாக்டர்கள், நர்சுகள் யாரும் பணியில் இல்லை. பெண் ஊழியர் ஒருவர் மட்டும் இருந்தார்.

மனைவியை தன் மடியில் படுக்க வைத்தவாறு, மருத்துவமனை வராண்டாவில், டாக்டர்களுக்காக, ரவி காத்திருந்தார். காலை, 7:30 மணிக்கு டாக்டர்கள் பணிக்கு வந்தனர். சாந்தியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக, ரவியிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சாந்தியின் உறவினர்கள், அங்கு திரண்டனர். டாக்டர்கள் இல்லாததே சாந்தியின் சாவுக்கு காரணம் எனக்கூறி, மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

மெழுகுவர்த்தி ஒளியில் பிரசவம் : ஆரம்ப சுகாதார நிலைய அவலம்
பதிவு செய்த நாள்28செப்
2017
00:35

சிதம்பரம்: சிதம்பரம் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி, பிரசவம் பார்த்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த குமராட்சியைச் சேர்ந்த நித்யா என்பவர், பிரசவத்திற்காக, குமராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு, 24ம் தேதி இரவு, பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அப்பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. பதற்றம் அடைந்த மருத்துவக் குழுவினர், மெழுகுவர்த்தி ஏற்றி, அந்த வெளிச்சத்தில் பிரசவம் பார்த்துஉள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஜெனரேட்டர் வசதி இருந்தும், அதற்கு டீசல் நிதி ஒதுக்கப்படாததால், இயக்கப்படாமல் காட்சிப் பொருளாக மாறி விட்டது.
'இனியாவது, கடலுார் மாவட்ட நிர்வாகம், ஜெனரேட்டர் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு டீசல் வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இறந்தவர் உடலை மாற்றி எடுத்து சென்று தகனம் : கோவை அரசு மருத்துவமனையில் குழப்பம்
பதிவு செய்த நாள்28செப்
2017
02:28

கோவை: கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்து, சடலத்தை மாற்றி எடுத்துச் சென்று தகனம் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர், பெரியாயிபாளையத்தை சேர்ந்த சுப்ரமணி, 55, கடந்த, 25ம் தேதி விபத்தில் சிக்கினார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது சடலம், பிணவறையில் வைக்கப்பட்டது.இதேபோன்று, துடியலுாரை சேர்ந்த, கோபால், 52, என்பவர், சூலுாரில் நடந்த விபத்தில் சிக்கி, உயிரிழந்தார். இவரது சடலமும், பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.நேற்று முன்தினம் மட்டும், கோவை அரசு மருத்துவமனை பிணவறையில், பிரதே பரிசோதனைக்காக, 15 சடலங்கள் வைக்கப்பட்டிருந்தன; பிரதே பரிசோதனை செய்யப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.அமரர் ஊர்தி வாகனங்கள் தாமதமானதால், சடலங்கள் பிணவறை கூடத்துக்கு வெளியே, வைக்கப்பட்டிருந்தன. அப்போது வந்த ஒரு அமரர் ஊர்தியில், துடியலுாரை சேர்ந்த கோபால் சடலம் என்று நினைத்து அவரது உறவினர்கள், சுப்ரமணியின் சடலத்தை எடுத்து சென்றனர். அங்கு இறுதி சடங்குகள் செய்து தகனம் செய்தனர்.இதற்கிடையே, மருத்துவமனையில் சுப்பிரமணியின் சடலத்தை எடுத்துச் செல்ல வந்த அவரது உறவினர்கள், உடல் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், கோபாலின் உறவினர்கள் சுப்ரமணி சடலத்தை மாற்றி எடுத்து சென்றது தெரியவந்தது.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த சுப்ரமணி உறவினர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் போலீசார், இருதரப்பு உறவினர்களுடன் பேச்சு நடத்தினர். இதையடுத்து சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து கோபாலின் சடலமும், துடியலுாரில் தகனம் செய்யப்பட்டது. பின், இருவரது அஸ்தியும் அவரவர் உறவினர்கள் பெற்று சென்றனர்.

சடலம் மாறியது எப்படி: கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சவுந்திரவேலு கூறியதாவது:சம்பந்தப்பட்ட இருவரும், விபத்தில் இறந்தவர்கள். விபத்தில் முகம் சிதைந்து போனதால், உடல்கள் மாறிவிட்டன. இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.மொத்தம், 10 அமரர் ஊர்திகள் உள்ளன. இதில், நான்கு வண்டிகள் பணிமனைக்கு சென்றுள்ளதால், ஆறு வண்டிகள் மூலம், சடலங்களை அனுப்பி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேமராக்கள் கண்காணிப்பில் மதுரை காமராஜ் பல்கலை
பதிவு செய்த நாள்28செப்
2017
00:51

மதுரை: 'மதுரை காமராஜ் பல்கலையில், அனைத்து துறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்; அடையாள அட்டை உள்ளவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்' எனவும், துணைவேந்தர் செல்லத்துரை உத்தரவிட்டுள்ளார்.

மதுரை காமராஜ் பல்கலை, இதழியல் துறை தலைவர் ஜெனிபாவை, அவரது அலுவலகத்திற்குள் சென்று, முன்னாள் கவுரவ விரிவுரையாளர் ஜோதிமுருகன் கத்தியால் குத்திய சம்பவம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து, அனைத்து துறை பேராசிரியர்கள் ஆலோசனை கூட்டம், துணைவேந்தர் செல்லத்துரை தலைமையில் நடந்தது.
அப்போது, 'ஜோதிமுருகனின் பணி குறித்து, பல நாட்களாக ஜெனிபாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தது குறித்து, துணைவேந்தர் கவனத்திற்கு, அத்துறையினர் கொண்டு செல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவம், இனி நடக்காமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.

'அனைத்து துறைகளிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மேலும், இந்த அலுவலகங்களில், வருகை விபர பதிவேடு முறை கொண்டு வரப்பட்டு, அலுவலகத்திற்குள் செல்வோர் யாரை, எதற்காக சந்திக்க செல்கின்றனர் என்ற விபரம் பதிவு செய்யப்பட்ட பின்னரே, அனுமதிக்கப்படுவர்.

'அடையாள அட்டை இல்லாதவர்கள், புலம் மற்றும் துறை அலுவலகத்திற்குள் செல்ல, அக்., 2 முதல் அனுமதி கிடையாது' என்பது உட்பட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
துணை மருத்துவ படிப்பில் 5,231 இடங்கள் நிரம்பின
பதிவு செய்த நாள்28செப்
2017
00:02

சென்னை: துணை மருத்துவ படிப்பில், 5,231 இடங்கள் நிரம்பின; 2,772 இடங்கள் காலியாக உள்ளன. பி.எஸ்சி., நர்சிங்., -- பி.பார்ம்., உட்பட, ஒன்பது துணை மருத்துவ படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடந்து வருகிறது. இந்த படிப்புகளுக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசுக்கு ஒதுக்கீட்டுக்கு, 8,003 இடங்கள் உள்ளன. இதில், 5,231 இடங்கள் நிரம்பின. மீதம், 2,772 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி விடுமுறை முடிந்து, அக்., 4 முதல், 7 வரை, கவுன்சிலிங் நடைபெறும் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
1,000 சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கம்

பதிவு செய்த நாள்27செப்
2017
23:53


சென்னை: தொடர் பண்டிகைகள் வருவதால், நாளை முதல், அக்., 2 வரை, தமிழகம் முழுக்க, ௧,௦௦௦ சிறப்பு பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில், நாளை, ஆயுத பூஜை, நாளை மறுநாள், விஜயதசமி, ௧ல், மொகரம், 2ல், காந்தி ஜெயந்தி என, தொடர்ந்து நான்கு நாட்கள், அரசு விடுமுறை வருகிறது. அந்நாட்களில், அதிகம் பேர் வெளியூர் செல்ல வாய்ப்புள்ளது. அவர்களுக்காக, நாளை முதல், சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இருந்து, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட, கூடுதலாக, ௧,௦௦௦ பஸ்களை இயக்க, அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.
அரசு ஊழியர் ஊதிய உயர்வு எப்போது? : அலுவலர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு
பதிவு செய்த நாள்27செப்
2017
23:54

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு குறித்து பரிந்துரைப்பதற்கான, ஐந்து பேர் இடம் பெற்ற அலுவலர் குழு, நேற்று, முதல்வர் பழனிசாமியிடம், அறிக்கை வழங்கியது.

அதைத் தொடர்ந்து, ஊதிய உயர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டு உள்ளது. சட்டசபை தேர்தலின் போது, 'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதும், தமிழக அரசு பணியாளர்களுக்கும், ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஜெயலலிதா அறிவித்தார். அவரது அறிவிப்பை செயல்முறைப்படுத்த, தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, பிப்., 22ல், ஊதிய விகித மாற்றம் தொடர்பான பரிந்துரைகள் அளிக்க, அலுவலர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மத்திய அரசின், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் குறித்தும், மத்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்தும், ஆய்வு செய்தது. தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் சங்கங்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தது. அதன் அடிப்படையில், நேற்று, குழு உறுப்பினர்கள், சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்து, குழு அறிக்கையை வழங்கினர்.அப்போது, துணை முதல்வர், பன்னீர்செல்வம், தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.'ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை, உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு சார்பில், சமீபத்தில் வேலைநிறுத்தம் நடந்தது.

அப்போது, 'அலுவலர் குழு அறிக்கை அடிப்படையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என, முதல்வர் உறுதி அளித்திருந்தார். தற்போது, குழு அறிக்கை அளித்து விட்டதால், ஊதிய உயர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு, அரசு ஊழியர்களிடம் ஏற்பட்டுள்ளது.
சிவாஜி கணேசன் மணிமண்டபம் 1-ந்தேதி திறப்பு தமிழக அரசு அறிவிப்பு


சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபம் வருகிற 1-ந்தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

செப்டம்பர் 28, 2017, 04:16 AM

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசின் சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, சென்னை அடையாறு பகுதியில் ஆந்திர மகிளா சபா மருத்துவமனை அருகில் ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அரசாணையின்படி, மணிமண்டபம் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து, சிவாஜிகணேசனின் பிறந்தநாளான 1.10.2017 அன்று மணி மண்டப திறப்பு விழாவை தமிழக அரசின் சார்பில் நடத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திறப்பு விழா

இந்த மணிமண்டபம் திறப்புவிழா 1.10.2017 காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள்.

இந்த விழாவில், அமைச்சர்கள், நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தினர், திரையுலக பிரமுகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை கமிஷன் முன்பு அமைச்சர்கள் விளக்கம் அளிப்பார்கள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி



ஜெயலலிதாவை பார்த்ததாக அமைச்சர்கள் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ள நிலையில், விசாரணை கமிஷன் முன்பு அவர்கள் விளக்கம் அளிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

செப்டம்பர் 28, 2017, 05:00 AM
சென்னை,

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 113-வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பாண்டியராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர், அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தங்கு தடையில்லாமல் தமிழை பிழையில்லாமல் வாசிக்கக்கூடிய நிலையை நான் அடைந்ததற்கு சிறுவயதில் இருந்தே ‘தினத்தந்தி’ படித்து வந்தது தான் காரணம். அதுவே தமிழக சட்டசபை சபாநாயகராக ஜெயலலிதா என்னை நியமித்தபோதும் உதவியது. அப்படிப்பட்ட பெருமைமிக்க தினத்தந்தியை உருவாக்கிய பெருமை சி.பா.ஆதித்தனாரையே சாரும்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பேரவை தலைவராக இருந்த சமயத்தில் அவரது சபை நடவடிக்கைகள், ‘ஹவுஸ் ஆப் காமன்ஸ்’ மற்றும் ‘ஹவுஸ் ஆப் லார்ட்ஸ்’ என்ற இங்கிலாந்து பாராளுமன்ற மரபுகளை பிரதிபலிப்பதாக இருக் கும். அமைச்சராக இருந்தபோதும் கூட, மக்களுக்கு தொண்டாற்றிய பெருமகனாராக திகழ்ந்தார். இப்படி பெருமைமிக்க சி.பா.ஆதித்தனாருக்கு அ.தி.மு.க. அரசில், எம்.ஜி.ஆர். தான் சிலையை நிறுவினார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பூங்கா அமைக்கப்படும்

ஒரு இனிப்பான செய்தி, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலையை சுற்றி ஒரு அழகிய பூங்கா அமைப்பதற்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருக்கிறார். எனவே உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள். உங்களது குழந்தைகள் தங்கு தடையின்றி, பிழையின்றி தமிழ் வாசித்து பழகவேண்டும் என்றால், அவர்களை சிறு வயதில் இருந்தே தமிழ் நாளிதழை படிக்கவைக்க வேண்டும் என்று சி.பா.ஆதித்தனார் பிறந்தநாளில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு டி.ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-

அமைச்சர்கள் விளக்கம்

கேள்வி:- ஜெயலலிதா மரணத்தில் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகிறதே?

பதில்:- எல்லா சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் தான் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக நான் உள்பட யார் யார் கருத்துகள் சொன்னார்களோ, அவர்கள் அனைவரும் விசாரிக்கப்படுவார்கள். உண்மை நிலையை கண்டறிந்து அரசுக்கு விசாரணை கமிஷன் அறிக்கை அனுப்பும். அறிக்கையின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும்.

கேள்வி:- ஜெயலலிதா மரணத்தில் மக்களின் குழப்பம் தீருவது எப்போது?

பதில்:- அதற்காக தான் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை நடக்கட்டும். ஜெயலலிதா வீடியோ பதிவுகளும் சமர்ப்பிக்கப்பட்டும். அது உண்மையா இல்லையா என்பதை கமிஷன் முடிவு செய்யும். அமைச்சர்களின் கருத்துகள் விசாரணை கமிஷனின் உரிமைகளை பாதிக்கவில்லை. விசாரணையின்போது அதற்கான விளக்கத்தை அமைச்சர்கள் அளிப்பார்கள். விசாரணை கமிஷன் நல்ல முறையில் நடக்கும்.


கேள்வி:- அமைச்சர்கள் வாய் உளறி பேசி வருவதாக டி.டி.வி.தினகரன் கருத்து கூறியிருக்கிறாரே?


பதில்:- ஜெயலலிதா அரசில், அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் அனைவரும் திறமைசாலிகள். இதன்மூலம் ஜெயலலிதாவையே டி.டி.வி. தினகரன் குறை சொல்வது போல இருக்கிறது.


இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான படிவத்தில் வைக்கப்பட்டது ஜெயலலிதா கைரேகைதானா?



திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது தேர்தல் ஆணையத்துக்கு அளித்த படிவத்தில் உள்ளது ஜெயலலிதாவின் கைரேகை தானா? என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 28, 2017, 06:00 AM
சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஏ.கே.போசுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு அளித்த படிவத்தில் ஜெயலலிதா தனது இடது கை பெருவிரல் ரேகையை பதிவு செய்துள்ளார்.

இதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பாலாஜி அந்த படிவத்தில் சான்றொப்பம் அளித்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவுடன் தான் கை ரேகையை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது.

எனவே, அந்த கைரேகையின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். அந்த படிவத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது சட்டவிரோதம் என்று அறிவித்து ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை பெறுபவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்



வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை பெறுபவர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 28, 2017, 04:15 AM
சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்த பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.600 எனவும் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் அதற்குக்கீழ் படித்து பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மாதம் ரூ.600, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.1000 எனவும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஆகவே பயனாளிகள் தங்களது பெயர், முகவரி, வங்கிக்கணக்கு எண், வங்கியின் பெயர், கிளை, ஆதார் எண் வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டதற்கான ஆதாரங்களுடன் வருகிற 2-ந் தேதி சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் புதிதாக இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்பும் பதிவுதாரர்களும், உதவித்தொகை புதுப்பிக்க வருகை தரும் பதிவுதாரர்களும் ஆதார் எண் விவரங்களை தங்களது வங்கிக்கணக்கு எண்ணுடன் இணைத்து விண்ணப்பத்தை சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்காலியிடத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் வருகிற 9-ந்தேதி, 10-ந் தேதி என 2 நாட்கள் வேலூர் வர்கீஸ் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடத்தில் 50 சதவீத மதிப்பெண் தேர்ச்சி அல்லது டிப்ளமோ கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும். வயது 7.7.1997 மற்றும் 20.12.2000-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஏர்மேன் பணியிடத்திற்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுனர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. பாடக்குறிப்புகளுடன் மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படும். இவ்வகுப்பில் தேர்வின் முந்தைய வினாக்கள் மற்றும் இத்தேர்வில் தயார் செய்வது குறித்து ஆலோசனை வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்பும் இளைஞர்கள் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் அடையலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரோம்பேட்டையில் செல்போன் பறித்த வாலிபர்களை விரட்டிப்பிடித்த பெண் என்ஜினீயர்


குரோம்பேட்டையில் செல்போன் பறித்த வாலிபர்களை பெண் என்ஜினீயர் ஒருவர் பொதுமக்கள் உதவியுடன் விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

செப்டம்பர் 28, 2017, 07:00 AM
தாம்பரம்,

குரோம்பேட்டை பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசி (வயது 22). சென்னையில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 20-ந் தேதி இரவு அன்பரசி, குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் செல்போன் பேசியபடி சென்றார். அப்போது எதிரில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் அன்பரசியிடம் இருந்த செல்போனை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கழிந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அன்பரசி தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கடந்த 20-ந்தேதி அன்பரசியிடம் செல்போனை பறித்து சென்ற வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

கொள்ளையர்களை பார்த்த அன்பரசி, அவர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்றார். வழியில் குரோம்பேட்டை ரெயில்வேகேட் மூடிக்கிடந்தது. இதனால் கொள்ளையர்களால் தப்பிச்செல்ல முடியவில்லை. உடனே பொதுமக்கள் உதவியோடு அன்பரசி இருவரையும் மடக்கிப்பிடித்து சிட்லபாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த சிவசக்தி (25), பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ஜப்பார் (24) என்பது தெரியவந்தது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Wednesday, September 27, 2017

கல்விச் செய்தி: தமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள...

கல்விச் செய்தி: தமிழக அரசிடம் 7 வது ஊதியக்குழு சமர்ப்பிக்கப்பட்டுள...: 7- ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த சாத்தியங்களை ஆய்வு செய்த தமிழக அரசின் நிபுணர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் எடப்பாட...
தமிழகத்தின் பஞ்சமில்லா பரபரப்புகளும்; பற்றி எரியும் வதந்'தீ'களும்
By திருமலை சோமு | Published on : 26th September 2017 09:52 PM



சூடான காப்பி டீ மட்டுமல்ல சூடான செய்தியும் கூட நம்மை சுறுசுறுப்பாக்கும் என்பதற்கு சமீபத்திய தமிழக அரசியல் சூழலை உதாரணமாக சொல்லலாம். அந்த அளவிற்கு நாட்டின் நிகழ்வுகள் நம்மை விழிப்படைய செய்து விறுவிறுப்பாக வைத்திருக்கிறது.

அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் ஏறத்தாழ ஒரு க்ரைம் நாவல் படிக்கும் வாசகனைப் போல் நம் எல்லோரையுமே ஆக்கி வைத்திருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசயமும் தமிழக அரசியல் போக்கும், நாளுக்கு நாள் கணிக்க முடியாத அளவுக்கு திருப்பங்களும் நகர்வுகளும் நிறைந்ததாக இருப்பதோடு, அரசியல் நோக்கர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சாதாரண டீக்கடை விவாதங்களிலும் சந்தை வியாபாரிகள் மத்தியிலும் சூடு பிடித்திருப்பதை காணமுடிகிறது.

அதேசமயத்தில் சமூக வலைத்தளங்களில் சுதந்திரமாய் சுற்றித்திரியும் மீம்ஸ்களும், வதந்திகளும் வேறு தன் பங்கிற்கு மக்களை எப்போதும் பரபரப்பாகவே வைத்து அழகு பார்க்கிறது. காவல் துறை ஆணையரின் இன்றைய அறிவிப்பானது அதற்கு மேலும் வழிவகுத்தது போல் இருந்தது.

தமிழகத்தில் சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த உத்தரவு செய்தி தீயாகப் பரவியதால் ஆட்சிக் கலைப்பா, முக்கிய புள்ளிகளில் யாராவது மரணமா என்ற பீதி தமிழகம் முழுவதும் கிளம்பியது. இதே போன்று உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆளுநரை சந்தித்ததாக தகவல் வெளியானது. ஆட்சி கலைப்புக்காகத்தான் இப்படி சந்திப்பு நிகழ்ந்ததாகவும் அந்த வதந்தி செய்திகள் கூறின.

இதனிடையே தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதித்துள்ளனர். இதையடுத்து தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவியதால் ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டதாகவும் ஒரு வதந்தி கிளம்பியது. அத்துடன் சட்டப் பேரவை முடக்கப்பட உள்ளதாகவும் வதந்திகள் உலா வந்தன.

மேலும் திமுக தலைவர் கருணாநிதி, அதே போல சிகிச்சை பெற்று வரும் சசிகலா கணவர் நடராஜன் தொடர்பாகவும் வதந்திகள் பரவின. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார் என கனிமொழி எம்.பி. கூறினார். மேலும் அசாதாரண சம்பவங்கள் எதிர்பார்க்கப்படும் சூழலில் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம். என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தெரிவித்தார்.

எனவே பரபரப்பும், வதந்திகளும் கொஞ்சம் கட்டுக்குள் வந்தன என்றாலும் இவற்றையும் கடந்து சென்னை ஆளுநர் மாளிகையில் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுடன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் சந்தித்துள்ளனர் எனும் போது இன்னும் ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்புகள் ஏதும் வெளியாக்கூடுமோ என்ற சந்தேகமும் சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான உத்தரவு வரும் என்ற எதிர்பார்ப்பும், சாமானிய மக்களிடம் எழுவது இயல்பாகவே உள்ளது. எது எப்படியோ அடுத்து வரும் வாரங்களிலும் தமிழக அரசியலில் பரபரப்பு தொடரும் என்றே தெரிகிறது.
குறைந்த விலையில் ஸ்மார்ட் ஃபோன்! பண்டிகை கால சிறப்பு சலுகை வழங்கும் ஆன்லைன் நிறுவனங்கள்!! விலைப் பட்டியல்

By DIN | Published on : 26th September 2017 01:18 PM |



நவராத்திரி, தீபாவளி என வரிசை கட்டும் பண்டிகைகளை முன்னிட்டு ஆன்லைன் விற்பனை நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் பேடிஎம் மால் ஆகியவை பண்டிகைக் கால சிறப்பு சலுகைகளை போட்டுத் தாக்கி உள்ளன. பொதுவாகவே பண்டிகையென்றாலே விற்பனை சற்று சூடு பிடிக்கும், அந்தச் சமயத்தில் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுக்க விலையில் சலுகைகளை வழங்குவது விற்பனையாளர்கள் கையாளும் உக்திகளுள் ஒன்றுதான். இந்த முறை இந்த விற்பனை போர் ஆன்லைன் நிறுவனங்களிடையே உச்சத்தை எட்டியுள்ளது, ‘பிக் பில்லியன் டே’ விற்பனையை ஃபிளிப்கார்ட்டும், ‘மெரா கேஷ் பாக்’ தள்ளுபடியை பேடிஎம் நிறுவனமும், ‘கிரேட் இந்தியன் சேல்’ சலுகையை அமேசானும் வழங்கவுள்ளது.

முக்கியமாக இந்தத் தள்ளுபடி விற்பனையில் ஸ்மார்ட் போன்களின் விலை மிகவும் குறைந்துள்ளது. இப்படி சலுகை மழை பொழியும்போது வாங்குபவர்களுக்குப் பல குழப்பங்களை ஏற்படுத்தும், உங்கள் குழப்பங்களை தீர்த்து வைக்க எந்த ஸ்மார்ட் போன் எங்கு? என்ன தள்ளுபடி விலை? என்று இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

1. சாம்சங்:


அமேசான் - புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஃபோனின் அமேசான் விலை ரூ.67,900, ஆனால் விழாக் கால சலுகையாக ரூ.4,000 காஷ் பாக் தள்ளுபடியுடன், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. மாதம் ரூ.3,772 தொகையில் ஆரம்பமாகிறது தவணை முறை வசதி.
பிளிப்கார்ட் - சாம்சங் கேலக்ஸி எஸ்7-னின் இன்றைய விலை ரூ.46,000, ஆனால் தற்போது ஃபிளிப்கார்ட் தள்ளுபடி விற்பனையில் இதன் விலை ரூ.29,990 மட்டுமே. ரூ.15,000 வரை இதன் விலையைக் குறைத்துள்ளது ஃபிளிப்கார்ட், அது மட்டுமின்றி உங்கள் பழைய ஃபோனை மாற்றி வாங்கினால் கூடுதலாக ரூ.3,000 குறைக்கப்படும்.
பேடிஎம் - சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜை பேடிஎம்-ல் 28% விலை தள்ளுபடியில் வெறும் ரூ.42,900-க்கு வாங்கலாம். இந்த ஃபோனிற்கு எந்தவொரு காஷ் பாக் சலுகையும் இல்லை.

2. ஆப்பிள்:


அமேசான் - ஆப்பில் ஐஃபோன் எஸ்ஈ மோபைலை ரூ.18,999-க்கும், 32 ஜிபி ஐஃபோன் 6-ன் விலை ரூ.20,999 மற்றும் 128 ஜிபி ஐஃபோன் 7-ன் விலை ரூ.49,999 மட்டுமே. மேலும் கூடுதல் கட்டணம் இல்லாத தவணை முறை வசதியும் உள்ளது, ஆரம்பத்தொகையாக மாதம் ரூ.6,500 செலுத்தி ஐஃபோனை உங்களுக்குச் சொந்தமாக்கலாம். 

ஃபிளிப்கார்ட் - 32 ஜிபி ஆப்பிள் ஐஃபோன் 7 ரூ.17,201 தள்ளுபடியில் ரூ.38,999-க்கும், 128 ஜிபி ஐஃபோன் 7-ல் ரூ.16,201 தள்ளுபடியுடன் ரூ.59,999-க்கும், 32 ஜிபி ஐஃபோன் 6-ஐ ரூ.20,999-க்கும் வாங்கலாம். இதைத் தவிர பழைய ஃபோனை மாற்றி வாங்குபவர்களுக்கு விலை இன்னும் சற்று குறையும்.
பேடிஎம் - ஆப்பிள் ஐஃபோன் 7 , 32 ஜிபி-யில் 19% தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.48,466-க்கும், கூடுதலாக ரூ.9,600 காஷ் பாக் சலுகையும் இதற்கு வழங்கப்படுகிறது.

3. ரெட்மி:


அமேசான் - ரூ.10,999 மதிப்புள்ள சையோமி ரெட்மி 4 அமேசான் சலுகையில் ரூ.9,499-க்கு வாங்கலாம். அதே போல் மீமாக்ஸ் 2, 64 ஜிபி-யின் அமேசான தள்ளுபடி விலை ரூ.14,999 மட்டுமே. மேலும் கூடுதல் தொகையில்லாத தவணை முறை வசதியும் இரண்டு ஃபோன்களுக்கும் உண்டு.
ஃபிளிப்கார்ட் - 64 ஜிபி சையோமி ரெட்மி 4-ன் விலையான ரூ.12.999 ஃபிளிப்கார் ‘பிக் பில்லியன் டே’வில் ரூ.10,999-க்கு வாங்கலாம்.
பேடிஎம் - 64 ஜிபி சையோமி மி மாக்ஸ் 2-ன் பேடிஎம் விலை ரூ.16,999 மட்டுமே.

4. மோடோரோலா:




அமேசான் - மோட்டோ ஜி5 எஸ் பிளஸை ரூ.15,999-க்கும் மோட்டோ ஜி5 பிளஸை ரூ.500 தள்ளுபடியுடன் ரூ.12,999-க்கும் தவணை முறை வசதியுடன் வாங்கலாம்.
ஃபிளிப்கார்ட் - 32 ஜிபி மோடோ ஜி5 பிளஸை ரூ.12,999-க்கு வாங்கலாம், இந்த ஃபோனிற்கு ஃபிளிப்கார்ட் 12,000 வரை காஷ் பாக் தள்ளுபடியை வழங்குகிறது.
பேடிஎம் - 32 ஜிபி மோடோ ஜி5 பிளஸ் எக்ஸ்டியை ரூ.16,500-க்கு வாங்கி ரூ.3,300 காஷ் பாக் தள்ளுபடியைப் பெறலாம்.

5. ஆசஸ்:


அமேசான் - ஆசஸ் ஜென்ஃபோன் 3-க்கு அமேசான் மிகப் பெரிய சலுகையை வழங்குகிறது, ரூ.22,999 உள்ள இந்த ஃபோனின் விலை தள்ளுபடியில் ரூ.11,999-க்கு வாங்கலாம். கூடுதலாக உங்கள் பழைய ஃபோனை மாற்றி வாங்குபவர்களுக்கு ரூ.10,341 வரை தள்ளுபடி கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
ஃபிளிப்கார்ட் - அதே ஆசஸ் ஜின்ஃபோன் 3-யை ஃபிளிப்கார்ட் ரூ.21,999-க்கும் பழைய ஃபோனை மாற்றி வாங்குபவர்களுக்கு ரூ.20,000-க்கும் விற்பனை செய்கிறது.

பேடிஎம் - ஆசஸ் ஜின்ஃபோன் 3-யை தள்ளுபடி விலையான ரூ.16,999-க்கும் ரூ.2,720 காஷ் பாக் சலுகையையும் பேடிஎம் வழங்குகிறது.

புதிதாக ஸ்மார்ட் ஃபோனை வாங்க விரும்பும் நீங்கள் இந்தப் பண்டிகை கால சலுகைகளை சரியாகப் பயன்படுத்தி நன்கு அலசி ஆராய்ந்து சரியான ஃபோனை வாங்குங்கள். அவசரமாக வாங்கிவிட்டு அதன் பிறகு இதன் விலை இங்கு அதைவிடக் குறைவாக இருக்கிறதே என்று கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை. உங்கள் நண்பர்களுக்கும் இந்தத் தகவலை தெரிவித்து அவர்களின் பணத்தையும் மிச்சப்படுத்துங்கள்.
7ஆவது ஊதியக் குழு இறுதி அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சமர்ப்பிப்பு
By DIN | Published on : 27th September 2017 01:28 PM




7ஆவது ஊதியக் குழு தொடர்பான இறுதி அறிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று வழங்கப்பட்டது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமையில் அலுவலர் குழு அமைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.

இந்நிலையில் 7ஆவது ஊதியக் குழு தொடர்பான இறுதி அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், அலுவலர் குழு இன்று வழங்கியது. இதனை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் சமர்ப்பித்தார்.
மத்திய அரசுப் பணி மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயது 65-ஆக உயர்வு!

By IANS | Published on : 27th September 2017 05:49 PM



புதுதில்லி: மத்திய அரசின் பல்வேறு சுகாதார சேவைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதினை 65-ஆக உயர்ததுவது என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது

தில்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கபட்ட முடிவுகள் குறித்து மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் பல்வேறு சுகாதார சேவைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதினை தற்பொழுது உள்ள 62-இல் இருந்து 65-ஆக உயர்த்துவது என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது

இந்த உத்தரவானது முன்தேதியிட்டு 31.05.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இதன் காரணமாக மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிபுரியும் 1,455 மருத்துவர்கள் பயன்பெறுவார்கள்.

நோயாளிகளுக்கு சிகிச்சையின் தரம் உயர்த்துதலை நோக்கமாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பிரசாத் தெரிவித்தார்.

உங்களிடம் ஆதார் இருந்தால் இந்த தேதிகளைப் பற்றி அறிந்துதான் ஆக வேண்டும்! வேறு வழியில்லை!!


Published on : 27th September 2017 04:44 PM  |


புது தில்லி: உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ... ஆதார் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலைமைக்கு இந்தியா வந்துவிட்டது. இனி சிம்கார்டு வாங்கவும் ஆதார் அவசியமாகிவிட்டது.
ஆதார் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தினாலும், ஆதார் எண் இணைத்தால்தான் மானியங்கள் என்பதில் மத்திய அரசு உறுதியாகவே இருக்கிறது. சிலிண்டர் மானியம் முதல் முதியோர் ஓய்வூதியம் என தற்போது எல்லாவற்றுக்கும் ஆதார் அவசியம்.
ஒரு வகையில் ஆதார் அட்டை வந்த பிறகு, அடையாள அட்டை, முகவரிச் சான்றிதழ் என பல சான்றிதழ்களுக்கு தேவையில்லாமல் போனதும் ஒரு வகையில் சந்தோஷப்பட வேண்டியதாகவே உள்ளது.
சரி விஷயத்துக்கு வரலாம்.
அதாவது, ஒரே ஒரு ஆதார் எண்ணை வைத்துக் கொண்டு நாம் படும்பாடு இருக்கிறதே என்று சந்தானம் அளவுக்குப் புலம்ப வைத்துவிட்டது இந்த மத்திய அரசு. ஏன் என்றால், ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும். வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும், செல்போன் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று இப்படி இணைத்து இணைத்தே மக்கள் இளைத்துப் போகும் அளவுக்கு உத்தரவுகள் பறந்து கொண்டே இருக்கின்றன.
இதெல்லாம் ஒரே இடத்தில் நடக்குமா? இல்லையே ஒவ்வொரு இடமாக வரிசையில் நிற்க வேண்டியதுதான். மக்களவைத் தேர்தலின் போது வாக்களிக்க வரிசையில் நின்ற மக்கள் அதன்பிறகு வரிசையில் நிற்பதையே முழு நேர வேலையாக செய்து வருகிறார்.
ஏன் இப்படி ஜவ்வு மிட்டாயாக இழுக்கிறீர்கள் என்று கேட்கலாம்.. பொது மக்களின் புலம்பல்களை இங்கே பதிவு செய்ய வேண்டியது நமது கடமையல்லவா? அதற்காகத்தான்.
சரி.. வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்துப் பார்க்கலாம்.
வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுவிட்டது.  ஒருவர் எத்தனை வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும் அனைத்திலும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். அதற்கான கடைசி தேதி 2017ம் ஆண்டு டிசம்பர் 31. ஒரு வேளை இந்த தேதிக்குப் பிறகு வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்கவில்லை என்றால், வங்கிக் கணக்கை தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். ஒரு வேளை இந்த காலக்கெடு நீட்டிக்கப்படவும் வாய்ப்பு உண்டு.
நெட் பேங்கிங் வசதி கொண்ட வங்கி வாடிக்கையாளர்கள், இணையதளம் வாயிலாகவே தங்களது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
2. பான் அட்டையுடன் இணைக்க
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டது. அதோடு, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதையும் கட்டாயமாக்கியது. இதற்கான காலக்கெடு 2017 டிசம்பர் 31ம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணையதளம் வாயிலாகவே இணைத்துக் கொள்ளலாம். அதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
செல்போன் எண்களுடன் ஆதார்
ஒவ்வொருவரும் வைத்திருக்கும் செல்போன் எண்களுடன், தங்களது ஆதார் எண்ணை இணைக்கும்படி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான கடைசி தேதி 2018ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி. அதேப்போல புதிய சிம்கார்டு வாங்கும் போதும் ஆதார் எண்ணை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக நிச்சயம் ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் வைத்திருக்கும் வாடிக்கையாளர் சேவை மையத்தை மக்கள் நாடியே ஆக வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்மென்ட்
மியூச்சுவல் ஃபண்ட் அமைப்புகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், தங்களது வாடிக்கையாளர்களின் நிதிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயம். சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட பண மோசடி தடுப்புச் சட்டம் 2017ன் விதிமுறைப்படி இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியாகும்.
ஓய்வூதியக் கணக்கு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை அளிப்பதை கடந்த ஜனவரி மாதம் கட்டாயமாக்கியது.
இறப்புச் சான்றிதிழ்
2017ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் இறப்புச் சான்றிதழ் பெற ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறப்புச் சான்றிதழில் மோசடிகள் நடப்பதைத் தடுக்க இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல, பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பாக தவறான தகவல்கள் தருவது குற்றம் என்பதால், ஒருவர், தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் மரணத்தைத் தொடர்ந்து இறுப்புச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பிக்கும் நபரும் தனது ஆதார் எண்ணை அளிக்க வேண்டியது அவசியம்.
அடுத்து என்ன? ஓட்டுநர் உரிமம்தான்.
ஓட்டுநர் உரிமத்தோடு ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பு வெகு விரைவில் வெளியாக உள்ளது. இதன் மூலம் போலி ஓட்டுநர் உரிமங்களும், ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வைத்திருப்பதும் தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. அதோடு, புதிய அல்லது பழைய வாகனத்தை வாங்க பதிவு செய்யும் போது, ஆதார் எண் அளிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், திருட்டு வாகனங்கள் பதிவு செய்யப்படுவது தடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் எந்த ஒளிவு மறைவும் இல்லை’ - அப்போலோ

அஷ்வினி சிவலிங்கம்

"எங்களிடம் எந்த ஒளிவு மறைவும் இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தைவரவேற்பதாகவும் அப்போலோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.



மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இன்னும் விசாரணை தொடங்கவில்லை. இதனிடையே, ஜெயலலிதா மரணம்குறித்து விசாரிக்க தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனைகளின் நிர்வாகத் தலைவர் ஹரிபிரசாத், "ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அ.தி.மு.க அமைச்சர்கள் மருத்துவமனைக்கு வந்தது உண்மை. ஆனால், உள்ளே அனுமதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்று விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்க இருக்கிறோம். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில், சி.சி.டிவி கேமராக்கள் இல்லை என்பதால், சிகிச்சைக்கான வீடியோ காட்சிகள் கிடையாது. ஆனால், மருத்துவமனை வளாகத்தில் பதிவான சி.சி.டிவி காட்சிகள் அனைத்தும் உள்ளன.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, அவருக்குக் கொடுக்கப்பட்ட உணவு குறித்த முழு விவரம் இருக்கிறது. அ.தி.மு.க அமைச்சர்களின் பலதரப்பட்ட கருத்துகளுக்குப் பதில் சொல்ல முடியாது. ஜெயலலிதா கைரேகை வைத்தது குறித்த விவரங்கள் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கப்படும். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் குறித்த அனைத்து பதிவுகளும் உள்ளது. அப்போலோ தரப்பில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. மரணம்குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தை வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார்.
யாரை விசாரிக்க இந்த கமிஷன்? ஜெயலலிதா மரணமும்... தீராத சந்தேகங்களும்..!

vikatan

ச.ஜெ.ரவி




தமிழகத்தில் சில விஷயங்கள் சாதாரண மக்களுக்குத் தெரிவதில்லை. புரிவதுமில்லை. அப்படி ஒரு விஷயமாக மாறியுள்ளது ஜெயலலிதா மரணம். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரது ஆதரவாளர்கள் யாரும், அவர் திரும்பி வரமாட்டார் என அறிந்திருக்கவில்லை. ஒரு கட்டத்தில் 'ஜெயலலிதா திரும்பமாட்டார்' என தகவல் வெளியாக அதைக்கூட அவர்கள் நம்பவில்லை. இதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதா என்ற ஆளுமை. ஜெயலலிதாவை மிகவும் நேசித்தவர்கள், அவர் திரும்ப வேண்டும் என்பதையே விரும்பினார்கள். அதனால் அதையே நம்பினார்கள்.

இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது அது ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்தபோது அவர் குறித்து சொல்லப்பட்ட தகவல்கள். இதுவே, ஜெயலலிதா இறந்தபோது மக்கள் பலருக்கு அவரது மரணத்தில் சந்தேகம் எழவும் காரணமாக இருந்தது. சாதாரணக் காய்ச்சல் எனச்சொல்லி அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நாள்கள் நீண்டு கொண்டேபோனபோது மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தது; தேர்தல் ஆணைய படிவத்தில் கையெழுத்துக்குப் பதிலாக ஜெயலலிதாவின் கைரேகை பதியப்பட்டிருந்தது; அரசியல் தலைவர்கள் துவங்கி யாரும் ஜெயலலிதா தங்கிய அறைக்கு அருகில் கூட அனுமதிக்கப்படாதது போன்றவை சந்தேகத்தை வலுப்படுத்தியது. கட்சித் தலைவர்கள், ஆளுநர், ஊடகங்கள் என யாருக்கும் திறக்காத அப்போலோ கதவுகளுக்குப் பின்னால் என்னதான் நடந்திருக்கும் சந்தேகம் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.



ஆனால், அப்போதெல்லாம் அமைதியாக இருந்தது ஆளும் தரப்பு. அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதா உடல்நலம் பற்றி கருத்துச் சொல்லவில்லை. அ.தி.மு.க. சார்பில் செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே பேசினார்கள். 'அம்மா இட்லி சாப்பிட்டார்; டி,வி.பார்க்கிறார்; நலமுடன் இருக்கிறார்; எங்களுக்கு இனிப்பு கொடுத்தார்' என அப்போது வெளியான தகவல்களை செய்தித் தொடர்பாளர்களே சொன்னார்கள்.

ஜெயலலிதா ஆன்மா உந்தியதாகச்சொல்லி 'தர்மயுத்தம்' துவங்கிய பன்னீர்செல்வம் அப்போது முதல்வரின் இலாகாக்களை தன்வசம் வைத்திருந்தவர். அவர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து எதுவும் பேசவில்லை. ஜெயலலிதா உயிரிழந்த நாளில், அவசர அவசரமாக பொறுப்பேற்றுக்கொண்டபோதும், அதன் பின்னர் சில நாள்கள் முதல்வர் பதவியை தன் வசம் தக்கவைத்திருந்தபோதும் அவர் இதை உணர்ந்திருந்தாரா என்பது தெரியவில்லை.

இப்போது ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச் சொல்லி விசாரணை கமிஷன் அமைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மருத்துவமனையில் இறந்தபோது முக்கிய அமைச்சராக இருந்தவர். அப்போது இவர் எதுவும் சொல்லிவிடவில்லை. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச் சொல்லப்பட்டபோது, இவர் கடுமையாக மறுத்தார். பிரிந்த பன்னீர்செல்வம் அணி சேர நிபந்தனை விதிக்கப்பட... இப்போது ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச்சொல்லி விசாரணைக் கமிஷன் அமைத்திருக்கிறார்.



ஜெயலலிதா மரணம் குறித்த பரபரப்பான தகவல்களை வெளியிடுபவர்களில் முக்கியமானவர் திண்டுக்கல் சீனிவாசன். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது இவர் கருத்து ஏதும் சொல்லிவிடவில்லை. ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியபோதுதான் இவர் கருத்துச் சொல்லத் துவங்கினார். 'மருத்துவமனையில் நாங்கள் ஜெயலலிதாவை சந்தித்தோம்; அவர் டை அடிக்காமல் நரைத்த முடியுடன் இருந்ததால் அந்தப் படங்களை வெளியிட முடியவில்லை; ஜெயலலிதா எங்களை அழைத்து சந்தித்தார்; எங்களுக்கு ஸ்வீட் கொடுத்தார்; டி.வி. பார்த்தார்' என இவர் சொன்ன தகவல்கள் எல்லாம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. நாள்கள் நகர்ந்தன. இப்போது அணிகள் இணைப்புக்குப் பின்னர் இவர் சொல்லும் தகவல் தான் பகீர் ரகம். 'ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார், இனிப்பு கொடுத்தார், எங்களோடு பேசினார் என நான் சொன்னது எல்லாம் பொய். நாங்கள் யாருமே சந்திக்கவே இல்லை. எங்களை அனுமதிக்கவுமில்லை. பொய் சொன்னதற்கு எங்களை மன்னித்து விடுங்கள். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமிருக்கிறது," எனச்சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மறுபுறம் 'நானும் பிற அமைச்சர்களும் அம்மாவை சந்தித்தோம்' செல்லூர் ராஜூ பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.



அடுத்து முன்னாள் அமைச்சர் பொன்னையன். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரது உடல்நிலை குறித்த அதிகத் தகவல்களை பகிர்ந்துகொண்டது பொன்னையன்தான். "ஜெயலலிதா சுபிக்‌ஷமாக இருக்கிறார். நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள். நாளுக்கு நாள் அபரிவிதமான முன்னேற்றம் இருந்து வருகிறது. மிகச்சிறப்பான சிகிச்சை கொடுக்கிறார்கள். மிக விரைவில் வீடு திரும்பி கட்சி, ஆட்சிப்பணிகளை கவனிப்பார்," என தொடர்ச்சியாகப் பேட்டிக்கொடுத்தவர் பொன்னையன். 

அவர் இப்போது சொல்வது அதற்கு நேரெதிர் குற்றச்சாட்டுகள். "ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போதே 60 சதவிகிதம் உடல்நிலை மோசமடைந்திருந்தது. 40 சதவிகிதம்தான் நன்றாக இருந்தது. அந்த நிலையில் இருந்து ஏன் காப்பாற்ற முடியவில்லை என்பதை அரசு சொல்ல வேண்டும். மருத்துவமனைக்கு வரும் முன்னர் அவர் எங்கே சிகிச்சை பெற்றார். யார் தவறு செய்தார்கள்? அவரது உடல்நிலை குறித்து, உண்மை வாரிசுகளான பொறுப்பாளர்களுக்கு ஏன் தெரிவிக்கப்படவில்லை என்பதை தெரிவிக்க வேண்டும். அவருக்கு சிகிச்சை சரியாக கொடுக்கப்படவில்லை. அவரது உடல்நிலை மோசமடைய அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை முறைகள்தான் முக்கிய காரணம்," என குற்றஞ்சாட்டி வருகிறார்.



பதவியை இழக்கும் வரை பன்னீர்செல்வம் இதைச் சொல்லவில்லை. பதவிக்கு ஆபத்து வரும்வரை எடப்பாடி பழனிசாமி இதைச் செய்யவில்லை. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக பன்னீர்செல்வம் சொன்னதை அன்று மறுத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பன்னீர்செல்வம் அணியோடு இணைந்த பின்னர், மறுத்ததை மறுக்கிறார். அன்று ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சையை வியந்து பாராட்டிய பொன்னையன், சிகிச்சையின் அடிப்படையே தவறு என இப்போது சொல்கிறார். 'சத்தியமிட்டுச் சொல்கிறேன் அம்மா நலமாக இருக்கிறார்' எனச்சொன்னவர், 'அம்மாவை நாங்கள் சந்திக்கவேயில்லை. இன்று சொல்வது தான் உண்மை' என மீண்டும் சத்தியம் செய்கிறார். இவை போதாது என்று, அக்டோபர் 1-ம் தேதிக்குப் பின்னர் சசிகலாவே ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்கிறார் டி.டி.வி. தினகரன். 'வீடியோ ஆதாரம் இருக்கிறது. சசிகலாவே வீடியோ எடுத்தார். உரிய நேரம் வரும்போது, வெளியிட தயாராகவே இருக்கிறேன்' என்கிறார் அவர்.

முதல்வர் பதவியை இழக்காவிடில் பன்னீர்செல்வம் இதைச்சொல்லி இருப்பாரா? அணி பிரிந்து பதவிக்கு ஆபத்து வராமல் இருந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி இதைச் செய்திருப்பாரா? இவை இரண்டும் நடக்காமல் இருந்திருந்தால் திண்டுக்கல் சீனிவாசன் முன்னர் ஒன்றும், பின்னர் அதை மாற்றியும் பேசியிருப்பாரா என ஏராளமான கேள்விகள் நமக்குள் எழுந்தபடியே இருக்கின்றன. ஆளுநர் வந்து யாரைப்பார்த்தார்? உள்துறை அமைச்சர் யாரைப் பார்த்து பேசிவிட்டுச் சென்றார். பிரதமர் ஆலோசனையின் பேரில் வந்ததாகச் சொல்லப்படும் எய்ம்ஸ் மருத்துவர்கள் என்ன செய்தார்கள்? என ஏகப்பட்ட கேள்விகள் குவிந்து கிடக்கிறது.



இப்போது இதற்கெல்லாம் விடைகொடுக்க விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது அரசு. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் இத்தனை சிக்கல்கள் உள்ள நிலையில், இந்தக் குழு யாரை விசாரிக்கப்போகிறது? ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தது அவரது இல்லமான போயஸ் கார்டனில் அல்ல. அப்போலோ என்ற பிரபலமான மருத்துவமனையில். வெளிநாட்டு மருத்துவர்கள் வந்தார்கள். டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தார்கள். மருத்துவமனையில் காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்ததாக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டது. ஆளுநரும், மத்திய உள்துறை அமைச்சரும், இன்னபிற அமைச்சர்களும் வந்து விசாரித்துச் சென்றார்கள். ஜெயலலிதா பெயரிலேயே அறிக்கையும் வெளியானது. தேர்தல் ஆணைய படிவமொன்றில் ஜெயலலிதா தன் கைரேகையை பதிவு செய்திருந்தார். இதில் எது உண்மை, எது பொய்?

இதைக் கட்டாயம் விசாரிக்க வேண்டும். மக்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. ஆனால், இப்போது யாரை இந்த ஆணையம் விசாரிக்கப்போகிறது என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.
எப்படி இருக்கிறார் பேராசிரியை ஜெனிபா? மருத்துவர்கள் விளக்கம்

அருண் சின்னதுரை






மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த பேராசிரியை ஜெனிபா அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில், இதழியல்துறையின் தலைவர் ஜெனிபாவை, ஜோதிமுருகன் என்ற முன்னாள் கெளரவ விரிவுரையாளர், நேற்று காலை கத்தியால் குத்தினார். அதைத் தொடர்ந்து, ஜெனிபா தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . கத்தியால் குத்திய ஜோதிமுருகன், நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே பேராசிரியை உடல் நிலை குறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் கேட்டபோது, ஜெனிபா உடலில் 15 இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் கழுத்து, முதுகு உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டு ஜெனிபாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், ஜெனிபாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆபத்து எதுவும் இல்லை'' என்று தெரிவித்தனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, ''ஜெனிபா நல்லபடியாக உள்ளார்; பயப்படத் தேவையில்லை. ஜெனிபா ஒரு சில நாளில் பூரண குணமடைவார். பல்கலைக்கழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. நேற்று, வேலைவாய்ப்பு முகாம் நடந்ததைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, ஜோதிமுருகன் இப்படிச் செய்துள்ளார். இனி, இதுபோன்ற தவறுகள் நடக்காதபடி பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அனைவரிடமும் அடையாள அட்டை காண்பித்த பின்தான் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்'' என்று தெரிவித்தார் .







தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குநராக எட்வின் ஜோ தற்காலிகமாகத் தொடர நீதிமன்றம் உத்தரவு
அருண் சின்னதுரை





ரேவதி கயிலைராஜனை தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குநராக நியமிக்கக்கோரிய தனிநீதிபதி உத்தரவை ரத்துசெய்யக் கோரி அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்தவர் மருத்துவர் ரேவதி கயிலைராஜன். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக உள்ளார். இந்நிலையில், இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அம்மனுவில், "மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனத்துக்கு வேலைசெய்யும் சீனியாரிட்டி அடிப்படையிலும், குறிப்பிட்ட கால அளவு டீனாகவும் பணியாற்றியிருக்க வேண்டும். இதுபோன்ற குறிப்பிட்ட விதிகளுக்குப் புறம்பாக, தமக்கு வேண்டியவர்களை நியமிக்கும் வகையில் விதிகளைத் தளர்வு செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம் நடைபெற்றுள்ளது. ஆனால், தற்போது என்னைவிட பணி மூப்பு குறைவான டாக்டர் எட்வின் ஜோ மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது விதிக்கு முற்றிலும் மாறானது. எனவே, பணி மூப்பு மற்றும் டீனாகப் பணிபுரிந்த அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் என்னை மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த மதுரைக்கிளை நீதிபதி கடந்த 20-ம் தேதி, "எட்வின் ஜோ நியமனம் விதிப்படி நடைபெறவில்லை. எனவே, மருத்துவக் கல்வி இயக்குநராக ரேவதி கயிலைராஜனை உடனடியாக மருத்துவ கல்வி இயக்குநராக நியமித்து சுகாதாரத்துறைச் செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

இந்நிலையில், தனிநீதிபதியின் இந்த உத்தரவை ரத்துசெய்யக்கோரி, தமிழக அரசுத்தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கல்யாணசுந்தரம், சுந்தர் அடங்கிய அமர்வு, வழக்கில் தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டு, இதுகுறித்து ரேவதி கயிலை ராஜன் பதில்மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
என்ன செய்கிறார்கள் குன்ஹாவும் குமாரசாமியும்?! - ‘ஜட்ஜ்மெண்ட் டே’ செப்டம்பர் 27 #VikatanExclusive
ஆ.விஜயானந்த்




‘உங்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது. தீர்ப்பை அறிவிக்கும்வரையில் பக்கத்தில் உள்ள அறையில் அமர்ந்திருங்கள்’ - 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே நாளில் சொத்துக் குவிப்பு வழக்கின் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அறிவித்தபோது, மனதளவில் நொறுங்கிப் போனார் ஜெயலலிதா. ஒரு மாநில முதல்வரின் அத்தனை அதிகாரங்களையும் ஒடுக்கி, அவரைக் குற்றவாளி என அறிவித்தார் குன்ஹா. ஜெயலலிதாவைப் போலவே, இந்தத் தீர்ப்பால் அ.தி.மு.க தொண்டர்களும் நிலைகுலைந்தார்கள். 'காவிரியை வைத்துக்கொள்; அம்மாவை விடுதலை செய்' என்ற முழக்கங்களும் பதவியேற்பில் கதறியழுது கொண்டே அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டதும் அடுத்தடுத்த நாள்களில் அரங்கேறின.


அகில இந்திய அளவில் தலைப்புச் செய்தியாக மாறிப் போனார் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா. 22 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு மக்கள் வெள்ளத்தில் நீந்தியவாறே போயஸ் கார்டனுக்குள் நுழைந்த ஜெயலலிதா, நீண்டநாள்களாக வெளியுலகைப் பார்க்காமல் முடங்கிக் கிடந்தார். கார்டன் கதவுகள் யாருக்காகவும் திறக்கப்படவில்லை. அவரது மனதையும் உடலையும் ஒருசேர பாதித்த நிகழ்வாக நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துவிட்டது. தீர்ப்பு வெளிவந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது ஜெயலலிதாவும் இல்லை. அவர் அரும்பாடுபட்டு வளர்த்த இரட்டை இலையும் இல்லை. கார்டன் ரகசியங்களைப்போல, அவரது மரணமும் மர்மமாகவே முடிந்துவிட்டது. 2014 செப்டம்பர் 27 அன்று வரலாற்றுத் தீர்ப்பு எழுதிய மைக்கேல் டி குன்ஹா, எந்தவித அவசரமும் இல்லாமல் சட்டப் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்.

என்ன செய்து கொண்டிருக்கிறார் மைக்கேன் குன்ஹா?

" கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக, தனது அரசாங்கப் பணியை கவனித்துக்கொண்டு வருகிறார் குன்ஹா. அண்மையில், அவருடைய நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்ட விழாவில், ‘ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா?’ என ஒருவர் கேள்வி எழுப்பியபோது, 'நான் ஓர் அரசாங்க ஊழியன். சட்டம் என்ன சொன்னதோ அதை மட்டுமே செய்தேன். மற்ற வழக்குகளைப் போலவேதான் அந்த வழக்கையும் பார்த்தேன். தீர்ப்பு வழங்கியதோடு என்னுடைய பணி முடிந்துவிட்டது. எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்பையும் அந்த வழக்கில் நான் காட்டவில்லை' என இயல்பாகப் பேசியிருக்கிறார். 'இதுதான் குன்ஹாவின் வழக்கம்' என்கிறார்கள் அவருடைய நண்பர்கள். எவ்வளவு பெரிய தீர்ப்பு வழங்கினாலும், அதைப் பற்றி பெருமிதம் கொள்ளாமல் அடுத்த வழக்கை கவனிக்கச் சென்றுவிடுவார். புத்தகம் வாசிக்கும் வழக்கம் உள்ள குன்ஹா, நீதிமன்றப் பணியில் இருந்து ஓய்வுபெற இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. 'ஓய்வுக்குப் பிறகு புத்தகம் எழுதும் முடிவில் இருக்கிறார். அதில், அவரது நீதிமன்ற வாழ்க்கை குறித்த அரிய தகவல்களை விவரிக்க இருக்கிறார்' என்கின்றனர்.

இதே சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமியையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கார்டனை விட்டு ஜெயலலிதா வெளியில் வர இந்தத் தீர்ப்பு ஒரு காரணமாக அமைந்தது. அதேநேரம், 'குமாரசாமி கால்குலேட்டர்' என விமர்சிக்கும் அளவுக்குக் கெட்ட பெயர் சம்பாதித்தார். கார்டன் சொத்துகளைப் பட்டியலிடுவதில் ஏற்பட்ட 'அரித்மெட்டிக் எர்ரர்' நீதித்துறை வட்டாரத்தை கதிகலக்கியது. 'இது ஒரு மனிதத் தவறு. பொதுவாக நீதியரசர்கள் கூட்டல் கழித்தல் கணக்குகளைக் கவனிக்க மாட்டார்கள். தீர்ப்பு விவரம் சரியாக இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள்' என மூத்த வழக்கறிஞர்கள் காரணம் கூறினாலும், 'குமாரசாமி கணக்கு' வரலாற்றில் இடம்பெற்றது.

'இப்போது என்ன செய்கிறார் குமாரசாமி?' என நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்தோம்.

“சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விடுதலை என தீர்ப்பு வழங்கிய ஓர் ஆண்டிலேயே குமாரசாமி ஓய்வு பெற்றுவிட்டார். பொதுவாக, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால், அவரை அரசு சார்ந்த துறைகளின் விசாரணை அதிகாரியாகவோ, தனி அதிகாரியாகவோ அரசு பயன்படுத்திக் கொள்ளும். ஓய்வுக்குப் பிறகு பத்துக்கும் மேற்பட்ட அரசுத் துறைகளில் பணியாற்ற விருப்ப கடிதம் கொடுத்தார் குமாரசாமி. அந்தக் கடிதங்களைக் கிடப்பில் போட்டுவிட்டது கர்நாடக அரசு. அவருக்குப் பிறகு ஓய்வுபெற்ற நீதியரசர் சந்திரசேகரை (ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுத்த நீதிபதி இவர்) பல்வேறு அரசுத் துறைகளில் பயன்படுத்திக்கொண்டது கர்நாடக அரசு. இதனால் மனம் நொந்து போன குமாரசாமி, மத்திய அரசின் ரயில்வே வாரியத்தின் (Accident claim) பணிக்கு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது. மீண்டும் கர்நாடக அரசின் அட்மினிஸ்ட்ரேஷன் கிரிமினல் (Criminal Justice Administration) என்ற பதவிக்கும் விண்ணப்பித்தார். இந்தப் பதவியையும் சந்திரசேகருக்கு அளித்துவிட்டு, குமாரசாமியை குப்புறத்தள்ளியது அரசாங்கம்.

ஒரே ஒரு தீர்ப்புக்காக ஒருவர் கொண்டாடப்படுகிறார். மற்றவர் நிராகரிக்கப்படுகிறார். ‘நீதிபதிகள் பாரபட்சமின்றி, விதிப்படி கடமையைச் செய்ய வேண்டும்; அப்பொழுதுதான் மக்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள்' என்ற அர்த்த சாஸ்திர வரிகளை மைக்கேல் டி குன்ஹா நன்றாக அறிந்து வைத்திருக்கிறார் போலும்.
Read more at Medical Dialogues: BAMS practitioner fined Rs 2 lakh for insisting to be allowed ultrasounds under PC-PNDT Act 

http://medicaldialogues.in/bams-practitioner-fined-rs-2-lakh-for-insisting-to-be-allowed-ultrasounds-under-pc-pndt-act/
Read more at Medical Dialogues: NEET PG will be one Session Exam: Prime Minister 

Office http://medicaldialogues.in/neet-pg-will-be-one-session-exam-prime-minister-office/
24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதிக்கும் 6 நாடுகள் !!
காலையில் சூரியன் உதிக்கும் மாலையில் மறைந்திடும். சூரியனைச் சுற்றியே எல்லா உயிர்களும் தங்களின் செயல்பாடுகளை வகுத்துக் கொண்டிருக்கின்றன,அறிவியல் கோட்பாடுகளின் படி இப்படி நடப்பது தான் வழக்கம். ஆனால் உலகின் சில நாடுகளில் சூரியன் மறையாமல் 24 நான்கு மணி நேரமும் வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கிறது. இரவு ஏழு மணி அந்தி சாயும் நேரத்தில் கருமை படந்து பார்த்தே பழகிய நமக்கு பகல் பன்னிரெண்டு மணி போல சுரீரென்று வெயில் அடித்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். எந்தெந்த நாடுகளில் இரவுகளில் சூரியன் தெரிகிறது தெரியுமா?

நார்வே :
ஆர்டிக் சர்கிளில் அமைந்திருக்கிறது நார்வே. நடுஇரவு சூரியனுக்கு இந்த ஊர் ரொம்பவே பிரபலம். இங்கே இரவில் சூரியனைக் காணவே பல்வேறு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள். இங்கே இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா சுமார் 100 ஆண்டுகள் முழுவதுமே சூரியனே தெரியாமல் இருட்டாகவே இருந்திருக்கிறது.

ஃபின்லாந்து :

ஆயிரம் ஏரிகளுடன் இயற்கை சூழல் நிரம்பிய இடம் இது. இங்கே கோடைக் கால ஆரம்பத்தில் சூரியன் உதிக்கிறது. அதன்பிறகு 73 நாட்கள் கழித்தே மறைகிறது. தொடர்ந்து 73 நாட்களும் சூரியனை நாம் பார்க்கமுடியும்.


அலஸ்கா :

பனிக்கட்டிகள் நிறைந்த இடம் இது. மே முதல் ஜூலை வரை சுமார் 1440 மணி நேரங்கள் இங்கே பகலாகத் தான் இருக்கும். இந்த காலத்தில் சூரியன் மறையாது.

ஐஸ்லாந்து :

ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய தீவு இது. மே முதல் தேதியில் இருந்து ஜூலை கடைசி தேதி வரையில் இங்கே சூரியன் தெரிந்து கொண்டேயிருக்கும். கோடைகாலங்களில் நடு இரவில் தான் சூரியன் மறையும் மீண்டும் அதிகாலை மூன்று மணிக்கு சூரியன் உதித்திடும்.

கனடா:

அதிக நாட்கள் ஐஸ்கட்டி உறைந்திருக்கும் நாடுகளின் பட்டியலில் கனடா இரண்டாவது இடம் வகிக்கிறது. இங்கே கோடைக்காலங்களில் 50 நாட்கள் சூரியன் மறையாமல் இருக்கும்.

ஸ்வீடன் :

இங்கே குறிப்பிட்டுள்ள நாடுகளில் இங்கே கொஞ்சம் குளிர் குறைவு. இங்கே நடு இரவில் சூரியன் மறைந்து அதிகாலை 4.30 மணிக்கே சூரியன் உதித்து விடும். மே முதல் ஆகஸ்ட் வரையில் இப்படித் தான்.
இரண்டுக்கு மேல் குழந்தைகள்: நீதிபதி பதவி பறிப்பு!!!

மத்தியப் பிரதேசத்தில் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றதால்
இரண்டு நீதிபதிகளின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச சிவில் சேவைகள் சட்டப் பிரிவு 196இல் திருத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், 26 ஜனவரி 2001ஆம் ஆண்டுக்குப் பின் அரசு அதிகாரிகள், நீதித் துறையில் பணியாற்றுவோர் ஆகியோர் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருந்தால் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, இச்சட்டத்தின் கீழ் 2 பயிற்சி நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் குவாலியர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி மனோஜ்குமார். மற்றொருவர் கபல்பூர் கூடுதல் மாவட்ட பயிற்சி நீதிபதி அஷ்ரப் அலி. இத்தகவலை போபால் உயர் நீதிமன்றப் பதிவாளர் முகமது ஃபாஹிம் அன்வர் நேற்று (செப். 25) தெரிவித்தார்.

இவர்கள் இருவரும் சட்டத்தை மீறி 3ஆவது குழந்தை பெற்றதையடுத்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி இருவரையும் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டதாக அவர் கூறியுள்ளார். பதவியை இழந்த நீதிபதிகள் இருவரும் கடந்த ஆண்டுதான் கூடுதல் மாவட்ட நீதிபதிக்கான தேர்வு எழுதி நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1-க்கு விற்பனை:சியோமியின் அசத்தல் தீபாவளி..!!



தீபாவளியை முன்னிட்டு பல நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகிறது. மொபைல் ரீசார்ஜ் கட்டணம் முதல்  ஸ்மார்ட்போன் கட்டணம் வரை அனைத்தும் சலுகை விலையில் வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில், முன்னணி நிறுவனமான சியோமி நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு வாடிக்கையாளர்களை பல்வேறு சலுகைகளை அளிக்க இருக்கிறது.Diwali with Mi என்ற பெயரில் செப்டம்பர் 27 ஆம்தேதி காலை 10 மணி முதல் செப்டம்பர் 29 ஆம் தேதி வரை சலுகைகளை வாரி வழங்குகிறது இந்நிறுவனம்.தினமும் காலை 11 மணிக்கும் மாலை 5 மணிக்கும் ரெட்மி நோட் 4, Mi ரவுட்டர் 3C, ரெட்மி 4, ப்ளூடூத்மினி ஸ்பீக்கர், Miசெல்ஃபி ஸ்டிக், ரெட்மி 4A, Mi பேண்ட் HRX எடிஷன், Mi கேப்சூல் இயர்போன்,Mi வைபை ரிப்பீட்டர், Mi பேக்பேக் மற்றும் Mi VR பிளே ஆகியவற்றை ரூ.1-க்கு விற்பனை செய்யவுள்ளது.

மேலும், மீ மொபைல் அப்ளிகேஷன் மூலம் தினமும் மதியம் 2 மணிக்கும் மாலை 6 மணிக்கும் Bid to Win என்ற போட்டி நடைபெறுகிறது.மேலும், ரூ.500 முதல் ரூ.3999 வரைசலுகை அளிக்கும் கூப்பன்களை வெல்ல, சியோமி இணையதளத்தில் உள்ள தி தியா ஹண்ட் என்றபோட்டியில் விளையாட வேண்டும்.

Colleges owe Rs. 139 crore to govt.

DCE directs them to hand over excess fees collected

The Department of Collegiate Education (DCE) has directed aided colleges across the State to hand over the excess fees collected from students to the department.
Sources in the department said that several colleges were getting grants from the government and were supposed to hand over to the government the tuition and laboratory fees collected from students. They owe the government Rs. 139 crore for the 2004 to 2014 period.
Salaries
A senior official said the principals are responsible for handing over the money to the government, failing which their salaries will be stopped.
“If they do not comply with the order, we will consider stopping grants to these colleges,” he said.

  • ‘Principals are responsible for handing over
    the money to the government, failing
    which their salaries
    will be stopped.

  • Attack on professor brings to fore security issues

    ‘Nobody should be allowed to enter the MKU premises with weapons’

    The brazen attack on the Head of the Department of Journalism and Science Communication of Madurai Kamaraj University, S. Jenefa, in her office on Tuesday morning has highlighted the need for improving safety measures on the university premises.
    Highlighting that the assailant, V. Jothimurugan (32), a former guest lecturer of the university, had carried a knife with him to attack Ms. Jenefa, a section of faculty members and students said that no persons should be allowed to enter the premises with weapons.
    The Chairperson of one of the Schools in the MKU highlighted that the entry to the campus, through the main gate and the gate near the guest house, remained unrestricted now.
    “No registers on who enters or leaves the campus are maintained. The identity cards of staff members and students are also not checked,” he said.
    “With availability of computers and web cameras, capturing of images of visitors and issuing of temporary identity cards with details of their purpose of visit and whom they are to meet, are not such a difficult thing to do,” he added.
    A senior woman faculty member said that though checking at the entrance should not be taken to the extent of thorough frisking of all visitors, a minimum check of the bags carried by visitors would be necessary.
    “The university administration should also consider installing scanners at the entrance to make these checks easier,” she said.
    A former Registrar of the MKU said that if resources and manpower permitted, the university must also consider increasing deployment of security guards on the 400-plus-acre campus, with at least one person for every two or three buildings. He also stressed the need for installing CCTV cameras in key locations.
    Acknowledging the need for improving safety measures, the head of a department, however, asked whether such precautionary measures would be of any help if the offender was a person associated with the university, as in the case Jothimurugan.
    Speaking to The Hindu , Vice-Chancellor P.P. Chellathurai said that the university staff and students had always been reluctant to subject themselves even for checking identity cards at the entrance.
    “However, I am sure that today’s incident must have made them realise the importance of such measures. We would use this situation to considerably improve security and safety features to the level of institutions like the IITs after receiving suggestions from various stakeholders,” he said.

    NEWS TODAY 30.12.2025