Monday, November 10, 2014

PARKING AREA

கிராமங்களில், ஆடு சுவரில் முட்டிக்கொண்டு ஒரு மார்க்கமாக நின்றுகொண்டிருக்கும். அதேபோல், 'வேலி முட்டி’ என்ற டானிக்கைக் குடித்துவிட்டு வேலியையோ, சுவரையோ முட்டிக் கொண்டு விசித்திரமான போஸில் குடிமகன்கள் நிற்பார்கள். இவற்றையெல்லாம் காணக் கொடுத்து வைக்காத நகரத்து மக்கள், எகனைமொகனையாக பார்க் செய்யப்பட்டு இருக்கும் கார்களைப் பார்த்து, மனதைத் தேற்றிக்கொள்ளலாம்.
தற்போது, பலருக்கு ஒரு குன்ஸாக கார் ஓட்டத் தெரிந்துவிடுகிறது. ஆனால், பார்க்கிங் செய்ய சுத்தமாகத் தெரியாது. பார்க்கிங் செய்ய டிரைவிங் நேர்த்தி வேண்டும். பார்க்கிங் செய்யத் தெரியாமல் பலர் ஏன் சொதப்புகிறார்கள் என்றால், பெரும்பாலும் இவர்களுக்கு பார்க்கிங் செய்தே பழக்கம் இல்லை. பல இடங்களில் வேலட் பார்க்கிங்; பல இடங்களில் பார்க்கிங் இல்லை. எப்படி பார்க்கிங் செய்து பழகுவது? கிடைத்த இடத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு காரை நிறுத்துவதற்குப் பெயர், பார்க்கிங் அல்ல.
முதன்முதலில் கார் ஓட்டக் கற்றுக் கொண்டு, ஓட்ட ஆரம்பிப்பவர்கள் மற்ற கார்களையோ, சுவரையோ இடித்து டொக்கு வாங்குவதைவிட, பார்க்கிங் செய்யும்போது காரின் முகறையைப் பெயர்ப்பதுதான் வழக்கம். சிலருக்கு பார்க்கிங் என்றாலே டென்ஷன், அலர்ஜி, நடுக்கம் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து. மூளையைச் சொறிந்துவிட்டு குத்து டான்ஸ் போடும். அப்படிப்பட்டவர்களை மால் பார்க்கிங்கில், சினிமா தியேட்டர் பார்க்கிங்கில் பார்த்திருக்கலாம். ரிவர்ஸ் கியரைப் போட்டுவிட்டு, அது பாட்டுக்கு 'நக்ச்ஷிக்கோ நக்ச்ஷிக்கோ நக்ச்ஷிக்கோ’ என கத்திக்கொண்டு இருக்க... சம்பந்தப்பட்ட நபர், டிரைவர் சீட்டில் கால்கள் நடுங்க அமர்ந்துகொண்டு ஒன்றுமே செய்யாமல், ஸ்டீயரிங்கைப் பற்றியபடி தேவாங்குபோல அமர்ந்திருப்பதைக் காணலாம்.
பார்க்கிங்கை வைத்து பல காமெடி கூத்துக்கள் நம் ஊரில்தான் நடக்கும். பைக்கூட நுழைய முடியாத தெருவாக இருக்கும்; அந்தத் தெருவில் இருக்கும் அனைத்து வீடுகளின் முன்பும் 'டு நாட் பார்க் இன் ஃப்ரன்ட் ஆஃப் தி கேட்’ என போர்டு மாட்டியிருக்கும்.
தொழிலதிபர்கள் முதல் தமிழக முதலமைச்சர் வரை வைத்தியம் பார்த்துக்கொள்ளும் சென்னையின் மிகப் பிரசித்தமான அந்த மருத்துவமனைக்கு என, பிரத்யேக பார்க்கிங் கிடையாது. மருத்துவமனைக்கு வெளியே ரோட்டின் ஓரம் இருக்கும் கார்ப்பரேஷன் பார்க்கிங்தான். அதிலும் பாதி பார்க்கிங்கை அந்த நிறுவனத்தின் நர்ஸிங் கல்லூரிப் பேருந்துகளும் ஆம்புலன்ஸுகளுமே ஆக்கிரமித்துக்கொள்ளும். வேலட் பார்க்கிங் என போர்டு வைத்து இருப்பார்கள். ஆளே இருக்க மாட்டார்கள். அப்படியே அங்கே ஆள் இருந்தாலும் அவருக்கும் நிறுத்த இடம் வேண்டும் அல்லவா? அவரால் மெரீனா பீச்சில்தான் கொண்டுபோய் நிறுத்த முடியும்.
பார்க்கிங்குக்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பணத்தை வாங்கிக் கொண்டு, 'பார்க்கிங் அட் ஓனர்ஸ் ரிஸ்க்’ என கொட்டை எழுத்தில் எழுதி நக்கலடிப்பார்கள். ஓர் அலுவலகத்துக்கு காரில் செல்கையில், கேட்டினுள் காரின் பாதி நுழைந்ததுமே பேன்ட் அவிழ்ந்து விழுவதுகூடக் கவனிக்காமல், பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் போல புயலெனப் பறந்துவருவார் செக்யூரிட்டி. நாம் ஏதோ படு கேவலமான காரியம் செய்து விட்டதைப்போல, காறி உமிழ்ந்துவிட்டு படு அலட்சியமாகத் திட்டுவார். 'வெளிய போங்க’ என அதட்டலாகச் சொல்வார். எப்படி வந்தது இவருக்கு இவ்வளவு அதிகாரம் என வியப்பாக இருக்கும். பார்க்கிங் இடத்தைப் பாதுகாக்கிறார் அல்லவா? அதனால் கிடைத்த அதிகாரம்.
அபார்ட்மென்டில் சிலர் எதை வேண்டுமானாலும் தாரை வார்த்துக் கொடுத்துவிடுவார்கள். ஆனால், காரே இல்லை என்றாலும் அவர்களுடைய  பார்க்கிங் ஸ்பேஸை மட்டும் விட்டுத் தரமாட்டார்கள். ஒரு நிமிடம்கூட அடுத்தவர் கார் நிற்க அங்கே அனுமதிக்க மறுப்பார்கள்.
மல்டிப்ளெக்ஸ் மாலுக்கு சினிமா பார்க்கச் சென்றால், உங்களின் டிக்கட் ரேட்டைவிட பார்க்கிங் ரேட் அதிகமாக இருக்கும். ஒரு புது மாலுக்குச் சென்றிருந்தேன். தரைத்தளம் மட்டுமின்றி, எட்டு மாடி பார்க்கிங் வசதி உள்ள மால். எல்லாம் நல்லாத்தான் போயிட்டு இருந்தது. ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு வெளியேறலாம் என காரை எடுத்தால்... நம்புங்கள், மெயின் ரோட்டை அடைய ஒன்றரை மணி நேரம் ஆனது. ஒன்றரை மணி நேரமும் மாலுக்குள்ளேயே ஆமை போல நகர்ந்து கொண்டேயிருந்தன கார்கள்.
என்னதான் உயிர் போகும் அவசரம் என்றாலும் வெளியேற முடியாத வண்ணம் ஜாங்கிரி போல பலரும் சிக்கிக்கொண்டனர். ஏன் இப்படி ஆனது? எப்போது இது சரியாகும் என்று விளக்கிச் சொல்லக்கூட ஆள் இல்லை. என்ன எழவு எனத் தெரியாமலேயே அனைவரும் எரிச்சலோடு அமர்ந்திருந்தனர். காருக்குள் அசதியில், பசி மயக்கத்தில் குழந்தைகள் தூங்கிவிட்டனர். வளைந்து நெளிந்து குகைக்குள் இருந்து வெளிவருவது போல, ஒருவழியாக வெளியேவந்து பார்த்தால், மாலில் இருந்து வெளியேறும் வாகனங்களை, மெயின் ரோட்டில் சடாரென குறுகலான ரோட்டின் மூலம் இணைத்திருந்ததால் டிராஃபிக் ஜாம் ஆகி இருந்தது. அந்த மெயின் ரோடே சின்ன ரோடுதான். திடீரென அங்கே ஒரு மால் முளைத்து, இவ்வளவு கார்கள் படையெடுக்கும் என அந்த மெயின் ரோடு கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்காது. ஆனால், இந்த மாலுக்கு பெர்மிஷன் கொடுத்தவர்களுக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கும்.
இவ்வளவு களேபரத்துக்கு இடையிலும் செக்போஸ்ட் வைத்து, மால் ஆட்கள் பார்க்கிங் கட்டணம் வசூலித்துக்கொண்டு இருந்தனர். காரை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கிக் கத்தினேன். 'ரெண்டு மணி நேரம் என்னை மாலுக்குள் சிறை வைத்துவிட்டீர்கள். நீங்கள்தான் நஷ்ட ஈடு தர வேண்டும். அதை விட்டுவிட்டு பார்க்கிங் சார்ஜ் வாங்கி இன்னும் தாமதப்படுத்துகிறீர்கள்’ என்று சண்டை போட்டதும் செக்போஸ்ட் ஓப்பன் ஆனது.
தமிழில் பூங்கா, ஆங்கிலத்தில் பார்க். நம் ஆட்கள் பார்க் என்று இருப்பதால், அதை பார்க்கிங் செய்யும் இடம் என நினைத்துக்கொண்டு, அதைச் சுற்றிலும் பார்க்கிங் செய்து விடுவார்கள். அரசாங்கமும் அவ்வாறே கருதிக்கொண்டு, பார்க்கைச் சுற்றிலும் பார்க்கிங் டோக்கனுடன் ஆட்களை நிப்பாட்டிவிடும்.
ஏதேனும் எக்ஸிபிஷன், கிரிக்கெட் என நடந்தால், பார்க்கிங் மேனேஜ்மென்டைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்க வேண்டியதுதான். ஒரு சைன் போர்டும் இருக்காது. கும்மிருட்டில் தடவிக்கொண்டு போவதுபோல, மனம் போன போக்கில் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஒரு உதவியும் ஏற்பாடு செய்திருக்க மாட்டார்கள். எங்கேனும் தெய்வாதீனமாக இடம் கிடைத்து பார்க்கிங் செய்த அடுத்த கணமே, டோக்கனுடன் அங்கே ஒருவர் பிரசன்னமாவது மட்டுமே இந்தியனின் பார்க்கிங் மேனேஜ்மென்ட் கான்செப்ட்.
தன் பங்குக்கு தானும் கொஞ்சம் காமெடி செய்யலாம் என முடிவெடுத்தது, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா. ஊரெல்லாம் பார்க்கிங்குத்தானே கட்டணம் வசூலிக்கிறார்கள்? 'இங்கே மட்டும் பார்க் பண்ணு, பண்ணாமப் போ. உள்ளே வந்து அஞ்சு நிமிஷத்துக்குள்ள வெளியே போகலைன்னா, 67 ரூபா சார்ஜ். அதுவும் 10 நிமிடங்களுக்குள் வெளியேறினால்தான். இல்லைன்னா இன்னும் அதிகம். அவ்வளோ பெரிய ஏர்போர்ட்டில் நுழைந்து இறக்கிவிட்டோ, ஏற்றிக்கொண்டோ வெளியேற ஐந்து நிமிடங்கள் போதுமா? இதில் உச்சபட்ச காமெடி என்னவென்றால், உள்ளே கார்களுக்கான ஸ்பீடு லிமிட் மணிக்கு வெறும் 10 கிமீ வேகம்தான். இதனால், ஏர்போர்ட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கில் கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் சாலை, தேவையில்லாமல் ஜாம் ஆகிறது. ஏர்போர்ட்டுக்கு உள்ளேயும் கால் டாக்ஸி டிரைவர்கள் ஐந்து நிமிடங்களுக்குள் வெளியேற வேண்டும் என்று பதட்டத்துடன் நடுநடுங்கியபடி ஓட்டுகின்றனர்.
ரயில் நிலையங்களை எடுத்துக்கொண்டால் பெங்களூர், ஹைதராபாத் எல்லாம் நல்ல பார்க்கிங் வசதிகளோடும், கார்கள் வந்துசெல்ல ஏதுவாகவும் இருக்கும். நம் ஊர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், காரை உள்ளே நுழைப்பதே பெரும்பாடு. யாரையேனும் பிக்-அப் செய்ய வந்திருந்தால், அவரை பிக்-அப் செய்து காருக்குள் அடைத்து வெளியேறுவதற்குள், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி உங்களுடைய நுரையீரல் வாய் வழியே வெளியே வந்துவிடும்.
தமிழ்நாட்டில், மக்களும் அரசாங்கத்துக்கும் நிறுவனங்களுக்கும் போட்டியாக பார்க்கிங் விஷயத்தில் எகிறி அடிக்கிறார்கள். கார் வைத்திருக்கும் 60 சதவிகிதம் ஆட்களுக்கு, வீட்டில் பார்க்கிங் இடம் இருக்காது. தங்கள் தெருவில் இருமருங்கிலும் கார்களை வரிசையாக பார்க்கிங் செய்துவைத்திருப்பார்கள். சிலருக்கு வீட்டினுள் பார்க்கிங் இடம் இருந்தாலும், வெளியேதான் விடுவார்கள். இல்லை என்றால், வேறு யாரேனும் அந்த இடத்தில் அவர்கள் காரை பார்க் செய்துவிடுவார்கள் என்ற தமிழருக்கே உரித்தான 'லேட்ரல் திங்கிங்’ காரணம்.
கோடிகள் சர்வசாதாரணமாகப் புழங்கும் புகழ் பெற்ற திநகர் போன்ற இடத்திலேயே, அரசாங்கத்தால் இன்னும் ஒரு பார்க்கிங் ஏரியாவை உருவாக்க முடியவில்லை. மொத்தத் தமிழகத்துக்கும் பார்க்கிங் வசதியை தமிழக அரசு எப்போது நிர்மாணித்துத் தரும் என்று யோசித்தால், மூளை - ஆயில் தீர்ந்த இன்ஜின்போல சூடாகிறது. கொள்கை அளவில், தியரட்டிக்கலாகக்கூட அரசிடம் இதற்கென ஒரு ஐடியா இருப்பதுபோலத் தெரியவில்லை. இப்படியே போனால், டாஸ்மாக்கைவிட அதிக வருமானம் ஈட்டித் தரும் தொழிலாகிவிடும், டிராஃபிக் போலீஸ் தொழில்.
ஆம், நோ பார்க்கிங்கில் ஃபைன் போடுவது மூலம் கோடிக்கணக்கில் பணத்தை அள்ள முடியும். கார்கள் தினமும் பெருகிக்கொண்டே உள்ளன. கடமைக்கு ஆங்காங்கே ரோட்டின் ஓரம் சில இடங்களில் மட்டும் பார்க்கிங் போர்டு வைப்பதன் மூலம் தன் கடமை முடிந்துவிட்டதாக அரசு நினைக்கிறது. 'நோ பார்க்கிங்’ போர்டுகள்தான் எங்கு நோக்கினும் தெரிகிறது.
தி.நகரில் ஒரு டயக்னாஸ்டிக் சென்டர் உள்ளது. என் அம்மாவுக்கு ரத்தப் பரிசோதனைக்காக அந்த டயக்னாஸ்டிக் சென்டரின் எதிரில் ரோட்டின் ஓரமாக காரை பார்க் செய்தேன். அது 'நோ பார்க்கிங்’ என்பது எனக்குத் தெரியும். அந்த சென்டரில் கார் பார்க்கிங் வசதி இல்லை. அரசும் அந்த இடத்தைச் சுற்றி எங்கும் பார்க்கிங் வசதி செய்து கொடுத்திருக்கவில்லை. வேலை முடிந்து திரும்ப வந்து பார்த்தால், வீலில் லாக் போட்டிருந்தார்கள். அரை மணி நேரக் காத்திருத்தலுக்குப் பின்பு வந்து, லாக்கை அவிழ்த்து 100 ரூபாய் ஃபைன் போட்டனர். கட்டிவிட்டுக் கிளம்பினேன். அந்த மாதத்திலேயே அடுத்தடுத்து அதே இடத்துக்குச் செல்ல வேண்டி வந்தது. அதேபோல காரை அங்கேயே பார்க்கிங் செய்து, அவர்களும் லாக் போட்டு, ஃபைன் கட்டி, அதே கதையே தொடர்ந்தது. மூன்றாவது முறை சார்ஜன்ட் என்னை அடையாளம் கண்டுகொண்டார்.
''ஏன் சார்? அதான் லாக் போடறோமே, திரும்பத் திரும்ப இங்கயே ஏன் நிறுத்தறீங்க?''
''பக்கத்துல ரெண்டு கிலோ மீட்டர் வரைக்கும் பார்க்கிங் செய்ய இடம் இல்லை. அதுவும் இல்லாம இப்ப எல்லாம் மல்ட்டி ப்ளக்ஸ்ல நிறுத்தினாலும் 100 ரூபாய் ஆயிடுது. இங்க லாக் வேற போட்டு ரொம்ப பாதுகாப்பா காரைப் பார்த்துக்கறீங்க. அதான் சந்தோஷமா 100 ரூபாய் பார்க்கிங் சார்ஜ் கொடுத்துடலாம்னு.... வேற வழியும் இல்லை சார்...'' என்றேன்.
தொப்பியைக் கழற்றி தலைக்குக் காற்று வருவதுபோல விசிறிக்கொள்ள ஆரம்பித்தார்.
(பார்க் பண்ணியாச்சு)

Sunday, November 9, 2014

An RTI applicant stated that ‘Filing RTI is my hobby, and there is no public interest in those RTI”.

rti-is-my-hobby


Can one make RTI as a hobby? Especially when there is no public interest? In the hearing at Central Information Commission, an RTI applicant stated that ‘Filing RTI is my hobby, and there is no public interest in those RTI”.

CIC came heavily on to the applicant and stated that such hobby of filing RTI without any public interest causes loss of both time and energy of the Government and it causes disproportionate diversion of the resources of the public authority. (Clause 7 (9) of the RTI Act 2005)

CIC warned the applicant not to waste time and resources of the public authority, or else Central Information Commission shall not take cognisance of such appeal or complaint.
Earlier, the RTI applicant has filed 11 applications with 15 to 23 points each related to log books of the Government and Private vehicles of Prasar Bharti, Hissar. When CIC asked why this information is required and what is the public interest involved in such RTI, the applicant stated that he is posted in Agriculture university Haryana and asking such information from All India Radio is his hobby and there is no public interest but only his personal interest.

The decision is available in Hindi at the CIC website here: Sh. Chandrabhan Didhoria Vs Prasar Bharti, Hissar

Information cannot be denied on mere pendency of investigation

pendency of investigation

Mere pendency of investigation / enquiry is not sufficient justification by itself for withholding the information. It must be shown by the Central Public Information Officer (CPIO) that the disclosure of the information would ‘impede’ or even on a lesser threshold ‘hamper’ or ‘interfere’ with the enquiry.


The Hon’ble Delhi High Court in its decision dated 03/12/2007 [WP(C) 3114/2007, Bhagat Singh Vs. CIC & Anrs] has held as under:-

“13. Access to information, under Section 3 of the Act, is the rule and exemptions under Section 8, the exception. Section 8 being a restriction on this fundamental right, must therefore is to be strictly construed. It should not be interpreted in manner as to shadow the very right itself. Under Section 8, exemption from releasing information is granted if it would impede the process of investigation or the prosecution of the offenders.

It is apparent that the mere existence of an investigation process cannot be a ground for refusal of the information; the authority withholding information must show satisfactory reasons as to why the release of such information would hamper the investigation process. Such reasons should be germane, and the opinion of the process being hampered should be reasonable and based on some material. Sans this consideration, Section 8(1)(h) and other such provisions would become a haven for dodging demands for information.”


The case citation can be read here: Mr. Y. N. Chaubey Vs M/o Labour & Employment

Vexatious and frivolous RTI are ground of denial

frivolous RTI
After filing 30 applications on the same subject with different names but with the same handwriting, Central Information Commission came heavily by warning to desist from misusing the provisions of the RTI Act for settling his personal scores with the respondent. CIC further stated that “In case the appellant continues to prefer RTI applications which are vexatious and frivolous in nature with a view to disproportionately divert the resources of the public authority, then the PIO will be free to deny information under the provisions of section 7 (9) of the Act.”
It is certain that this variety of the vexatious and frivolous petitions is not going to serve the interest of the Right to Information ⎯ the self-serving, pious protestations of serial petitioners such as this one notwithstanding.
NDMC, the Respondent informed that appellant who has filed at least 30 RTI applications in different names with similar queries, having the same handwriting regarding pending payment of M/s Gyan Const Co. against work done by the agency.

The Commission emphasised that though the Respondents are duty-bound to supply information asked for by the Appellants, the Appellants are also required to keep in mind the objectives of the RTI Act as outlined in the Preamble to the Act: and that is, to introduce the elements of transparency and accountability in the functioning of the public authorities and to contain corruption.

The citation is available here: Sh. R.K. Chauhan & Sh. N. Singh Vs NDMC
Some of the similar decisions posted at our Case segments are as below:
  1. Probe into the motive behind repeated RTI
  2. No Right to Repeat: Citizen has right to information only once- Rules CIC

In 8 Years, He Has Not Taken a Single Day Off


In 8 Years, He Has Not Taken a Single Day Off
INDORE:  In the last eight years, this government employee from Madhya Pradesh has not taken a single day off. Dr Bharat Bajpai, the head of the Mortuary in a government hospital in Indore, and two of his team members earned a special mention in the Limca Book of Records in 2011 for not taking a single day off for 1,200 days. 

Three years later, Dr Bajpai continues to work without taking a single day off. He is the head of the Mortuary in the city's Gobind Ballabh Pant Government Hospital. In a career spanning two decades, he has conducted over 10,000 postmortems.

"We should be as useful as possible I believe, we should help people as much as we can. I have never worked with the expectation of any post, reward or honour. I do not even have a name plate at my home. I never seek any publicity for what I do; it is all God's will," he said.

But the infrastructure of the mortuary at this hospital is not quite as high as the commitment level of the team running it. The post-mortems are conducted in a room which used to be a public toilet. Another room, in which post-mortems are supposed to be conducted, has not been constructed completely. 

The contractor building the room reportedly received only the first installment of his due payment for the work from the state health department. Funds to get a body freezer and better equipment have been held up for over a year, in spite of being approved by the authorities.

Santosh, an office assistant with the post-mortem unit, was also part of the team felicitated by the Limca Book of Records. "The working condition here is not that good. We manage to do our work but yes, there are problems. The post-mortem room is very small. If there are too many dead bodies, we face problems," he said.

எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் நடித்த அனுபவங்கள்: குட்டி பத்மினி வெளியிடும் தகவல்கள்




குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கிய குட்டி பத்மினி, எம்.ஜி.ஆருடனும், சிவாஜிகணேசனுடனும் பல படங்களில் நடித்தார்.

சிவாஜியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து குட்டி பத்மினி கூறியதாவது:-

"நடிப்பில் சிவாஜி சார் இமயம் என்று தெரியும். ஆனால், அப்போது பேபி நட்சத்திரமாக இருந்த எனக்கு, இது தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.

ஏ.பி.நாகராஜன் அங்கிள் அப்போது எடுத்த "திருவருட்செல்வர்" படத்தில் சிவாஜி சார் நடித்தார். இந்தப் படத்தில் சிவாஜி சாருடன் விவாதம் செய்யும் ஒரு காட்சியில் நடிக்க என்னை 'புக்' செய்தார்கள். புராணப்படம் என்பதால் தூய தமிழில் பேச ஏ.பி.நாகராஜன் அங்கிள் வீட்டில் ஒரு வாரம் எனக்கு 'சுத்தத் தமிழ்' கற்றுத் தந்தார்கள். இந்த ஒரு வாரத்தில் ஏ.பி.என். அங்கிளின் பிள்ளைகளும் எனக்கு 'பிரண்ட்ஸ்' ஆகிவிட்டார்கள்.

சிவாஜி சாருடன் நான் நடிக்க வேண்டிய காட்சி படமாகும் நாளும் வந்தது. அப்போதெல்லாம் எனக்கு 'நடிப்பு' பற்றி பயமே இருந்ததில்லை. படத்தில் திருமலை மன்னராக வரும் சிவாஜி சாருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவருக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்தும் சிறுமியாக நான் வந்தேன். கடவுள் நம்பிக்கை பற்றி நான் அவரிடம் பேசப்போக, அவரோ "கடவுள் இருக்கிறார் என்றால், அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று கேட்பார்.

"இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமானால் என்னை திருமலை மன்னராக்கி அரியணையில் அமர வைக்கவேண்டும்" என்பேன்.

உடனே திருமலை மன்னர் என்னை அரியணையில் அமர்த்தி மன்னராக மகுடம் சூட்டுவார். அடுத்த கணம் நான், "யாரங்கே! இதுவரை திருமலை மன்னராக இருந்த இவரை பிடித்து சிறையில் அடையுங்கள்" என்பேன். அப்படி உத்தரவிட்டு விட்டு, "கடவுள் இப்போது இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்" என்பேன்.

இதன் பிறகு திருமலை மன்னர் கடவுள் நம்பிக்கை உடையவராக திருந்துவதுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சியில் திருமலை மன்னராக நடிக்கும் சிவாஜி சார் உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டு, என் காலில் விழுவதாக அந்தக் காட்சி முடியும்.

இந்தக்காட்சி பற்றி சிவாஜி சாரிடம் விளக்கிய உதவி இயக்குனர்கள், கடைசியில் 'கடவுள் ஞானம்' கொடுத்த சிறுமியின் காலில் விழுவதுடன் காட்சி முடியும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னார்கள். ஆனால் சிவாஜி சார் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. காட்சியில் உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டு வந்தவர், "அம்மா நீ சிறு பெண்ணல்ல; என் அறிவுக்கண் திறக்க வந்த தெய்வம்" என்று சொல்லி என் கால் பக்கமாக விழுந்து விட்டார்.

டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அங்கிள் 'கட்' செய்யவும் மறந்து ஒரு கணம் பிரமித்து நின்று விட்டார். காட்சியின் கனம் கருதி எந்த நடிப்புக்கும் தயாராக இருந்த சிவாஜி சாரை நினைத்தால் இப்போதும் அவர் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது. இந்தப்படம் பற்றி அப்போது விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை, இந்தக் காட்சி பற்றி குறிப்பிடும்போது "திமிங்கலத்தை சின்ன மீன் விழுங்கிவிட்டது" என்று வர்ணித்திருந்தது.

அதுமாதிரி, "திருமால் பெருமை" படத்திலும் ஒரு உணர்ச்சிமயமான காட்சி சிவாஜி சாருக்கும் எனக்கும் இருந்தது. படத்தில் குட்டி ஆண்டாளாக வரும் நான் திருமாலுக்கு என் தந்தை (சிவாஜி) சூடிய மாலையை என் கழுத்தில் எடுத்து போட்டுக்கொள்வேன். ஆத்திரமாகும் அப்பா என் மீது கோபப்படுவதாக காட்சி. இந்தக் காட்சியின்போது நான் கொஞ்சமும் எதிர்பாராமல் சிவாஜி சார் என் கன்னத்தில் ஓங்கி விட்டார் ஒரு அறை. அந்த அறையின் வேகத்தில் என் காதில் இருந்த கம்மல் தெறித்து விழுந்தது. பொறி கலங்கிப்போனேன். என்றாலும் நான் தொடர்ந்து பேசவேண்டிய வசனத்தை பேசி முடித்தேன்.

காட்சி முடிந்ததும் சிவாஜி சார் ஓடிவந்து என் கன்னத்தை தடவி விட்டார். பிறகு அம்மாவிடம் அந்தக் காட்சிக்கான விளக்கம் சொன்னார். "இந்தக் காட்சியில் நான் கன்னத்தில் அறைவதை முதலிலேயே சொல்லியிருந்தால் உங்கள் பெண், நான் அடிக்கும்போது கன்னத்தை திருப்பியிருப்பாள். அப்படிச் செய்திருந்தால் அந்தக்காட்சி இயல்பாக அமையாது. அதனால்தான் அடிப்பதை முன்கூட்டியே சொல்லவில்லை. ஆனால் இப்படி சொல்லாமல் கன்னத்தில் அடித்தும், நடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதுகொண்டே வசனம் பேசி நடித்த உங்கள் பெண் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டாள்" என்று சொன்னவர், "உங்க கையை நீட்டுங்க" என்றார், அம்மாவிடம்.

அம்மா 'எதற்கு' என்று புரியாமல் பார்த்த நேரத்தில், "எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுங்க. உங்க பொண்ணு ஹீரோயினா நடிக்கிற கால கட்டத்துல என்கூட தான் முதல்ல நடிக்கணும்" என்றார்.

அம்மா அப்படியே நெகிழ்ந்து போய்விட்டார். பெண்ணின் நடிப்பு மீது அந்த மகா கலைஞர் வைத்த நம்பிக்கையும், சிறு குழந்தை மாதிரி அவர் கேட்ட சத்தியமும் அம்மாவை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது."

இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

குட்டி பத்மினி 'பேபி'யாக நடித்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த 'நம் நாடு' படம் முக்கியமானது. இந்தப் படத்தில் குட்டி பத்மினியும், பேபி ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். படத்தில் இருவரும் எம்.ஜி.ஆரின் அண்ணன் டி.கே.பகவதியின் மகள் - மகனாக (ஸ்ரீதேவிக்கு பையன் வேடம்) நடித்தனர்.

எம்.ஜி.ஆருடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் பற்றி குட்டி பத்மினி கூறியதாவது:-

"அப்போது நான் தொடர்ந்து பல படங்களில் மற்ற மொழிப் படங்களில் பிசியாக இருந்ததால் எம்.ஜி.ஆர். சாரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் வந்து வந்து கைநழுவிப் போகும். காரணம் அவர் படம் என்றால் நிறைய நாட்களை மொத்தமாக கேட்பார்கள். ஆனால் படத்தை தயாரித்த நாகிரெட்டி அங்கிள் "இந்தப் படத்தில் குட்டி பத்மினி இருந்தேயாக வேண்டும்" என்று சொல்லி விட்டதால், என் வாய்ப்பு உறுதியானது.

எம்.ஜி.ஆர். சார் எனக்கு உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றி வகுப்பே எடுப்பார். தினமும் காலையில் என்னைப் பார்த்ததும், "ஸ்கிப்பிங் பண்ணினாயா?" என்று கேட்பார். "இல்லை" என்று சொன்னால் தன் காரில் இருக்கும் ஸ்கிப்பிங் கயிறை எடுத்து வரச்செய்து, 'ஷாட்' இல்லாத நேரத்தில் பயிற்சி எடுக்கச் செய்வார்.

மதியம் சாப்பாட்டு நேரத்தில் அவருடனே சாப்பிடச் செய்வார். சாப்பிட்டு முடிந்ததும் ஒரு மணி நேரம் ஆகும் வரை தண்ணீர் சாப்பிடக்கூடாது என்பார். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது தவறில்லை என்பார்.

ஒருமுறை செட்டில் அம்மாவிடம் கோபமாக பேசிவிட்டேன். இதை கவனித்த எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார். "அம்மாவை மட்டும் எப்போதும் மரியாதையாய் பேசணும். "தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை"ன்னு பெரியவங்க எதுக்காக சொல்லி இருக்காங்க? அந்த அளவுக்கு அம்மாங்கறவங்க தெய்வத்துக்கு சமமானவங்க. எனக்கு எங்கம்மா இருந்தப்ப அவங்களோட அருமை தெரியலை. அவங்க இல்லாதப்பதான் 'தெய்வத்தை அல்லவா இழந்திருக்கிறோம்'னு புரிஞ்சுது. அம்மா என்கூட இல்லைங்கறது இப்ப வரைக்கும் எனக்கு இழப்புதான். அதனால் ஒருநாளும் அம்மா கிட்ட முகம் சுளிக்கிற மாதிரி கூட பேசக்கூடாது" என்றார்.

இதை அவருக்கே உரிய பாசக்குரலில் அவர் சொன்னபோது, 'அம்மா'வின் அன்பு எனக்கும் புரிந்தது. அதன் பிறகு அம்மாவிடம் கொஞ்சம் குரல் உயர்த்தி பேசுவதைக்கூட விட்டுவிட்டேன்.

நான் பார்த்தவரை அவரைப் பார்த்து உதவி கேட்க, எப்போதும் யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். இதற்கென்றே அவரது மானேஜராக இருந்த பத்மனாபன் பணத்துடன் தயாராக இருப்பார். அத்தியாவசிய உதவி என்றால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது கொடுப்பார். ஆயிரம் ரூபாய் என்பது அப்போது மிகப்பெரிய தொகை. யாராவது 'ஸ்கூல் பீஸ்' கேட்டு வந்தால், "முகவரி கொடுத்திட்டுப் போங்க. பணம் அனுப்புகிறேன்" என்பார். அது மாதிரி உதவி பெற்ற பலர் அவரை சந்தித்து கண் கலங்க நன்றி சொல்வதையும் பார்த்திருக்கிறேன்.

இப்படி ஒரு தர்மத்தலைவரை என் சிறு வயதில் பார்த்ததால்தான் நானும் வளர்ந்த நேரத்தில் "மித்ராலயா" டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி என்னாலான உதவிகளை ஓசைப்படாமல் செய்து வருகிறேன்."

இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

சென்னை: மெட்ரோ ரயில் செல்வதற்காக சுரங்க பாதை அமைக்கும் பணி இதுவரை 65 சதவீதம் முடிந்துள்ளது.




சென்னை: மெட்ரோ ரயில் செல்வதற்காக சுரங்க பாதை அமைக்கும் பணி இதுவரை 65 சதவீதம் முடிந்துள்ளது. 2015ம் ஆண்டு இறுதிக்குள் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கூறினார். மெட்ரோ ரயிலுக்காக வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை, சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை என 45 கிமீ தூரம் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில், 24 கி.மீ தூரம் சுரங்கப்பாதையாகும். இதற்காக சுரங்கம் தோண்டும் பணி 2012 ஜூலை 28ம் தேதி நேரு பூங்காவில் தொடங்கியது. சுரங்கப்பாதையில் 2 வழித்தடங்களிலும் மொத்தம் 36,308 மீட்டர் தூரத்துக்கு (சுமார் 36 கிலோ மீட்டர் தூரம்) 6 மீட்டர் விட்டத்தில் சுரங்கம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இதுவரை 24 கி.மீ. தூரம் (65 சதவீதம்) சுரங்கம் தோண்டும் பணிகள் முடிந்துள்ளன. சென்னையின் முக்கிய பகுதியாக திகழும் அண்ணா சாலைக்கு அடியில் இரண்டு வழித்தடத்தில் எல்ஐசி வரை சுரங்கம் தோண்டும் பணி முடிந்துள்ளது.

அதேபோன்று ஷெனாய் நகரில் இருந்து திருமங்கலம் வரையும், மே தின பூங்காவில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம், வண்ணாரப்பேட்டையில் இருந்து உயர் நீதிமன்றம் வரை, எழும்பூரில் இருந்து கீழ்பாக்கம் ஆகிய பகுதிகளில் சுரங்கம் தோண்டும் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள இடங்களிலும் சுரங்கம் தோண்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு , ஆலந்தூர் இடையே உயர்த்தப்பட்ட (மேம்பாலம்) பாதையில் 10 கி.மீ. தூரம் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை 2015ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இயக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக 4 பெட்டிகளை கொண்ட 15 ரயில்கள் தயார் நிலையில் கோயம்பேடு பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி கூறும்போது, சென்னையில், சுரங்கப்பாதையில் இதுவரை 65 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. ஒரு மாதத்திற்கு 4 முதல் 5 சதவீதம் பணிகள் நடைபெறுகிறது. 2015ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து இடங்களிலும் சுரங்கம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் என்றார்.

NEWS TODAY 01,02.2026