Saturday, March 14, 2015

ஒரு தலைக்காதலால் அரசு பெண் ஊழியருக்கு நடந்த கொடூரம்!

கிருஷ்ணகிரி: காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த என்ஜினீயர், தனது உடலில் தீ வைத்துக் கொண்டதோடு, அரசு பெண் ஊழியரையும் கட்டிப்பிடித்ததால் இரண்டு பேரின் உடல் கருகியது. ஒருதலை காதலால் நடந்த இந்த சோக சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் (24), 6 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்2 படித்து வந்தார். அதே பள்ளியில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த ராணி (24) (பெயர் மாற்றம்) பிளஸ்2 படித்து வந்தார். அப்போது முதல் சந்தோஷ், ராணியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவரது காதலை ராணி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே, பள்ளி படிப்பு முடிந்ததும் சந்தோஷ் சென்னையில் பொறியியல் கல்லூரியில் படித்தார். பாலக்கோட்டை சேர்ந்த ராணி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அந்த காலத்திலும் சந்தோஷ், ராணியை தொடர்ந்து ஒருதலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கல்லூரி படிப்பை முடித்த ராணி, குரூப்-1 தேர்வு எழுதி தேர்வானார். அவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் அலுவலகத்தில் உதவியாளராக பணி கிடைத்தது. அவர் தினமும் பாலக்கோட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்தார். இதனிடையே, ராணியை ஒருதலையாக காதலித்து வந்த சந்தோஷ், அவரை திருமணம் செய்ய முடிவு செய்து, பாலக்கோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார்.

அப்போது ராணியின் வீட்டார், திருமணத்திற்கு விருப்பம் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனாலும் சந்தோஷ் விடாமல் தொடர்ந்து 3 முறை ராணி வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் அவர்களோ, சந்தோசிற்கு தங்களின் மகள் ராணியை கொடுப்பதில்லை என்று உறுதியாக தெரிவித்து விட்டனர். இதனால் சந்தோஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை ராணி, கெலமங்கலத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு வேலைக்கு செல்வதற்காக பாலக்கோடு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அங்கு சந்தோஷ் தயாராக நின்று கொண்டிருந்தார். பாலக்கோட்டில் இருந்து புறப்பட்ட பேருந்தில் ராணி ஏற, பின்னால் உள்ள இருக்கையில் சந்தோஷ் அமர்ந்து கொண்டார். கெலமங்கலம் பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்ததும் ராணி இறங்கியுள்ளார். அவரை பின்தொடர்ந்து சென்ற சந்தோஷ், "ஏன், என்னை காதலிக்க மறுக்கிறாய். உன்னை விடாமல் 6 ஆண்டுகளாக நான் காதலித்து வருகிறேன். என்னுடைய காதலை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறாய்?“ என்று ராணியிடம் கேட்டுள்ளார்.

அப்போது ராணி, “நான் தான் அப்போதே சொல்லி விட்டேனே. என்னை காதலிக்க வேண்டாம் என்று பலமுறை கூறியும் ஏன் என்னை தொடர்ந்து வருகிறாய்?“ என்று கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கெலமங்கலம் சுல்தான்பேட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேனில், சந்தோஷ் பெட்ரோலை வாங்கியுள்ளார். பின்னர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ராணியிடம், "கடைசியாக கேட்கிறேன். என்னை காதலிக்கிறாயா இல்லையா?" என்று கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ராணி, தனது உறவினருக்கு செல்போன் மூலம் பேசி தான் ஆபத்தான சூழலில் உள்ளதாகவும், தன்னை வந்து மீட்டு செல்லும்படியும் கூறியுள்ளார். அப்போது திடீரென்று சந்தோஷ், தான் வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை தனது உடலில் மளமளவென்று ஊற்றியுள்ளார். பின்னர் சிகரெட் பற்ற வைக்கும் லைட்டர் மூலம் தனது உடலில் தீயை பற்ற வைத்துள்ளார்.

இதில் அவரது உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த ராணி அங்கிருந்து ஓட முயற்சி செய்வதற்குள் எரியும் தீயுடன் ஓடிய சந்தோஷ், “என்னுடன் வாழ முடியாது என்று தான் கூறி விட்டாய். சாவிலாவது நாம் ஒன்றாக இணைவோம்“ என்று கூறி, எரியும் நெருப்புடன் ராணியை கட்டிப்பிடித்து கொண்டார். இதில் அவரது உடலிலும் தீப்பிடித்தது. 2 பேர் உடலிலும் தீப்பிடித்து எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு கெலமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். சந்தோஷ் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் காவல்துறையினர், சிகிச்சை பெற்று வரும் ராணி மற்றும் சந்தோஷிடம் விசாரணை நடத்தினர். ராணி அளித்த வாக்குமூலத்தில், "என்னை ஒருதலைபட்சமாக காதலித்து வந்த சந்தோஷ், தொடர்ந்து என்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்தார். நான் காதலிக்க மறுத்ததால் ஆத்திரத்தில், அவரது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டு, என்னையும் கட்டிப்பிடித்து, கொலை செய்ய முயன்றார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார்.

அந்த புகாரின் பேரில் கெலமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

'எச் - 1பி விசா' விண்ணப்பங்கள் ஏப்., 1ம் தேதி முதல் ஏற்கப்படும்..DINAMALAR 14.3.2015

வாஷிங்டன்: அமெரிக்காவில் பணிபுரிய, இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு வழங்கப்படும், எச் - 1பி விசா விண்ணப்பங்கள், வரும் ஏப்., 1ம் தேதி முதல் ஏற்றுக் கொள்ளப்படும் என, அமெரிக்க அரசு தெரிவித்து உள்ளது. வரும் அக்டோபரில் துவங்கும், 2015 - 16ம் நிதியாண்டில், 65 ஆயிரம் எச் - 1பி விசாக்கள் வழங்கப்பட உள்ளன. முதல் ஐந்து அலுவல் தினங்களில், மேற்கண்ட எண்ணிக்கைக்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அதிகளவு விண்ணப்பங்கள் வரும் நிலையில், விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய, கடந்த ஆண்டைப் போலவே, குலுக்கல் முறை பயன்படுத்தப்பட உள்ளது என, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

கணக்குக்கு விடை தெரியாதவன் கணவனா: மணமகள் ஆவேசம்

லக்னோ: எளியமையான கணக்கு ஒன்றிற்கு விடை சொல்ல முடியாதவனிற்கு மனைவியாக முடியாது என திருமணத்தை நிறுத்தினார் பெண் ஒருவர்.

உ.பி., மாநிலம் கான்பூர் அருகே உளள ரசூலாபாத்தி்ல் வசித்து வரும் இரு குடும்பத்தினரிடையே கடந்த புதன்கிழமை திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமண தினம் நெருங்கி வந்த வேளையில் மணமகள் மணமகனிடம் விளையாட்டாக எளிய கணக்கு ஒன்றை கேட்டார்.
கணக்கிற்கான பதிலை கேட்டு அதிர்ச்சியடைந்த மணமகள் எளிய வகை கணக்கிற்கு கூட விடை சொல்ல தெரியாதவனை திருமணம் செய்ய முடியாது என கூறி திருமணத்தை நிறுத்தியது மட்டு மல்லாமல் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார். மணமகனின் வீ்ட்டார் சமரசத்தை ஏற்றுக்கொள்ளாத மணமகளின் தந்தை போலீசார் மூலம் மணமகனிற்கு அளித்த வரதட்சனை பணம் மற்றும் நகைகளை திரும்ப பெற்றுக்கொண்டார்.
15ஐயும் 6ஐயும் கூட்டினால் வரும் விடை என்ன ?மணப்பெண் கேட்ட கேள்வி இது தான். மாப்பிள்ளை உடனடியாக அளித்த பதில் 17 என்பதாகும்.

தமிழகத்தில், பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட, 10 ஆயிரம் பேர், 'மானிய விலை, சமையல் காஸ் சிலிண்டர் வேண்டாம்' என, எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்புதல் படிவம் கொடுத்துள்ளனர்.

தமிழகத்தில், பிரபல நடிகர்கள், தொழிலதிபர்கள் உட்பட, 10 ஆயிரம் பேர், 'மானிய விலை, சமையல் காஸ் சிலிண்டர் வேண்டாம்' என, எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்புதல் படிவம் கொடுத்துள்ளனர். இதன் மூலம், மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அவர்கள் உருவாகி உள்ளனர்.

தமிழகத்தில், பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.53 கோடி, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர்.மத்திய அரசு, உணவு, உரம், பெட்ரோலிய பொருட்களை, மானிய விலையில், மக்களுக்கு வழங்கி வருகிறது. இதனால், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, மானிய விலையில் வினியோகம் செய்யப்படும், சமையல் காஸ் சிலிண்டரில், ஏராளமான முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது.இதையடுத்து, மத்திய அரசு, மாற்றி அமைக்கப்பட்ட சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தை, கடந்த ஜனவரியில், தமிழகம் உட்பட, நாடு முழுவதும் அமல்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர், சந்தை விலையில், சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான மானிய தொகை, அவரின் வங்கி கணக்கில், நேரடியாக வரவு வைக்கப்படும்.தமிழகம் உட்பட, பல மாநிலங்களில், ஏழை முதல், எம்.எல்.ஏ., - எம்.பி., அமைச்சர், கோடீஸ்வரர் வரை ஏராளமானோர் மானிய விலை, சிலிண்டர் பெற்று வருகின்றனர்.இதை கட்டுப்படுத்த, 'மானியத்தை விட்டுக் கொடுங்கள், நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு எடுங்கள்' என, மத்திய அரசின் சார்பில், எண்ணெய் நிறுவனங்கள், வாடிக்கையாளரின் மொபைல் போன்களுக்கு, எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பி வருகின்றன.மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உட்பட, வசதி படைத்த பலர், சந்தை விலையில், காஸ் சிலிண்டர் வாங்க விருப்பம் தெரிவித்து, மானிய சிலிண்டர் வேண்டாம் என, எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்புதல் படிவம் கொடுத்துள்ளனர். அதன்படி, தமிழகத்தில், 10,412 வாடிக்கையாளர்கள், 'மானிய சிலிண்டர் வேண்டாம்' என, எண்ணெய் நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளனர்.
பட்டியல்:நடிகர்கள் கமல்ஹாசன், பிரசாந்த்;திரைப்பட இயக்குனர்கள் மணிரத்னம், சங்கர்; திரைப்பட பின்னணி பாடகர் ஜேசுதாஸ் மற்றும் தொழிலதிபர்கள் பலர் இப்பட்டியலில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.ஆனால், தமிழக அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட பலர், இன்னமும் மானிய சிலிண்டர் தான் வாங்கி வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:மானியம் அல்லாத சிலிண்டர் விலை, 600 ரூபாய் முதல், 800 ரூபாய் வரை உள்ளது. நேரடி மானிய திட்டத்தின் கீழ், இந்த விலையில் தான், காஸ் சிலிண்டர் வாங்க வேண்டும்.பின், மானிய தொகை, அவரின், வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மானியம் அல்லாத சிலிண்டர் திட்டத்தில், யாரையும் கட்டாயப்படுத்தி சேர்க்கவில்லை. விருப்பப்பட்டு இணைந்தால், மானியம் அல்லாத சிலிண்டர் வழங்கப்படும். தற்போது, இந்தியாவில், 1.02 லட்சம் பேர் 'மானிய சிலிண்டர் வேண்டாம்' என, கூறி உள்ளனர். தமிழகத்தில், 10,412 பேர் இவ்வாறு கூறி உள்ளனர்.மானிய அல்லாத சிலிண்டர் திட்டத்தில், பலர் இணைவதன் மூலம், அந்த நிதியில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முடியும். இவ்வாறு, அவர்கூறினார்.

ஏஜென்சி உரிமம் ரத்து: சென்னை, ஆதம்பாக்கத்தில், ஐ.ஓ.சி., நிறுவனத்தின், 'ரோஸ்' காஸ் ஏஜென்சி உள்ளது. இதில், 25 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு, காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஏஜென்சி மீது, குறித்த நேரத்தில், காஸ் வினியோகம் செய்யாதது உள்ளிட்ட, பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இதன் உரிமத்தை, ஐ.ஓ.சி., அதிகாரிகள், நேற்று, ரத்து செய்தனர்.

விண்ணப்பம் போதும்!மானியம் அல்லாத சிலிண்டர் பெற விரும்பும் வாடிக்கையாளர், காஸ் ஏஜென்சிக்கு சென்று, 'மானிய சிலிண்டர் வேண்டாம்' என்பதற்காக உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.பின், அவர்களுக்கு சந்தை விலையில், சிலிண்டர் வழங்கப்படும். அதற்கான மானியம், வங்கியில் செலுத்தப்படாது.

- நமது நிருபர் -

பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வு ஏற்படுத்திய குழப்பம்

மதுரை: பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் அமல்படுத்தப்பட்ட புதிய நடைமுறை மற்றும் தவறாக இடம் பெற்ற கேள்வியால் மாணவர்கள் குழப்பம் அடைந் தனர். இத்தேர்வில் தமிழ் மீடியம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 'பி' வரிசை வினாத்தாளில் 48வது கேள்வி 'ஸ்டார் பேஸில் புல வகைகள் எத்தனை' என்பதற்கு பதில் 'ஸ்டார் பேஸில் பல வகைகள் எத்தனை' என மாறி கேட்கப்பட்டது. இதனால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

குழப்பம்:

இத்தேர்வில் இந்தாண்டு முதல் சில மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டன. இதன்படி 'அப்ஜெக்டிவ்' முறையில் முதல் 75 ஒரு மார்க் கேள்விகள் 75 நிமிடங்களில் எழுதி முடித்த பின் விடை நிரப்பிய ஓ.எம்.ஆர்., தாளை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இதன்பின் தான் 'தியரி' பகுதி எழுத மாணவர்களை அனுமதிக்க வேண்டும். விடைகளை பால் பாயின்ட் பேனாக்களால் மட்டுமே நிரப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதற்குமுன் பென்சிலால் விடை நிரப்பப்பட்டது. அப்போது முதலில் தவறாக விடை நிரப்பி னாலும், பின் சரியான விடை தெரியவந்தால் அதை மாணவர்கள் திருத்தும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இம்முறை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் 75 நிமிடங்களில் எழுத வேண்டிய ஒரு மார்க் கேள்விகளை நன்றாக படிக்கும் பல மாணவர்கள் 25 நிமிடங்களில் நிரப்பி விட்டனர். ஆனால் பல பள்ளிகளில் 75 நிமிடங்கள் கழிந்த பின்பே 'தியரி' பகுதி எழுத அந்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதுவரை தேர்வறையில் அவர்கள் 'சும்மா' அமர்ந்திருந்தனர். சில தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்- மாணவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில் "இத்தேர்வில் மாணவர் களுக்கு ஏற்பட்ட குழப்பங்கள் அசவுரியங்களை கண்காணித்து அடுத்த தேர்வில் நிவர்த்தி செய்ய தேர்வுத் துறை முன்வர வேண்டும்" என்றனர்.

பெரியகுளத்தில் மாவடு சீசன் துவக்கம்: முன்பதிவு செய்யும் மக்கள்



பெரியகுளம்: பெரியகுளத்தில் மாவடு சீசன் துவங்குவதற்கு சில தினங்கள் உள்ள நிலையில் 'அட்வான்ஸ் புக்கிங்' நடந்து வருகிறது. தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அடுத்தபடியாக மாங்காய் விளைச்சலில் நான்காம் இடம் பிடித்துள்ளது பெரியகுளம். அம்மா ஊட்டும் சோறுக்கு வாய் திறக்காத சிறுவர்கள் மாவடு சேர்த்து ஊட்டினால் வாய் திறப்பர் என்ற சொல் உண்டு.

மாங்காய் சீசன் துவங்குவதற்கு முன்னால் மாவடு சீசன் துவங்கும். மலைப்பகுதிகளில் உயரமான மாமரங்களில் மாவடு விளைகிறது. மாவடுவுடன் விளக்கெண்ணெய், மஞ்சள்பொடி, மிளகாய்பொடி கலவையை கலந்து பக்குவப்படுத்தி வைத்தால் ஒரு ஆண்டு முழுவதும் வைத்து ருசித்து சாப்பிடலாம். தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். மார்ச் கடைசி வாரத்திலிருந்து, ஏப்ரல் வரை மாவடுகாய் கிடைக்கும். பெரியகுளத்திலிருந்து மதுரை, சென்னை மற்றும் வடமாநிலங்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. மேலும் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அரபு நாடுகளான ஈரான், சவுதி நாடுகளுக்கு மாவடு பனக்கொட்டான்களில் பக்குவமாக அனுப்பப்படுகிறது.


கடந்தாண்டு ஒரு மரக்காய் (4படி) ரூ.300 முதல் 400 வரை விற்கப்பட்டது. தற்போது சீசன் துவங்க உள்ளதால் மாவடு வாங்க முன்பதிவு துவங்கியுள்ளது. தங்கள் உறவினர்களுக்கு வாங்கி அனுப்ப வியாபாரிகளிடம் ஆயிரம் ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை பலர் முன்தொகை கொடுத்து வைத்துள்ளனர். இந்த ஆண்டு ஒரு மரக்காய் ரூ.400 முதல் 500 வரை விலை போகும் என மாவடு வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

Now a woman, she wants sex change in docu

CHENNAI: A transgender, who was born Pradeep Kumar but became Pratika Yashini after a sex re-assignment surgery, has moved the Madras high court asking that her school and college level certificates and passport be updated by identifying her as a female with her new name.

Justice T S Sivagnanam has asked authorities to take action on her representation within a period of eight weeks.

A post-graduate diploma in computer applications and a student of ayurvedic medicine, Pratika said she felt some changes during her higher secondary studies. "I understood that I am not as normal as any other male. I could feel my physical features drifting towards feminine character," she said. She consulted a doctor who confirmed that she was indeed a transgender. She underwent a sex re-assignment surgery in November 2011 at Kilpauk Medical College in Chennai.

In October 2013, she changed her name as Pratika Yashini from Pradeep Kumar, and got it published in government gazette. Pratika said she now needed her updated documents and certificates to pursue higher studies and for employment. Despite the sex re-assignment surgery and change of name which had been duly notified, institutions and companies still go by her original name of Pradeep Kumar, she said, adding, "Society is still illiterate to accept me or similar people as transgenders." Though she has submitted two representations to the authorities concerned, changes have not been carried out on her certificates, she said. Authorities are not receiving or acknowledging her representations, she said, adding, "I have been made to run from pillar to post."

She wanted the court to direct the authorities to make necessary changes in all her records and certificates, indicating her present name.

NEWS TODAY 14.06.2026