Thursday, May 7, 2015

'மாணவர்களுக்கு கடும் தண்டனை கூடாது': ஐகோர்ட் கிளை உத்தரவு


மதுரை: 'கல்வி நிறுவனங்களில், ஒழுக்கம் முக்கியம்; மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, மிகக் கடுமையாக இருக்கக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தேர்வு எழுத தடை:

மதுரை மாவட்டம், சோழவந்தான், திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், பி.ஏ., (பொருளியல்) மூன்றாமாண்டு படித்த மாணவர் ஒருவர், கடந்த, மார்ச், 15ம் தேதி, மது அருந்தியதாக கூறி, வகுப்பிற்கு வரவும், இறுதி பருவத் தேர்வு எழுதவும் தடை விதித்து, நிர்வாகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, 'தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால், என் எதிர்காலம் பாதிக்கப்படும். வகுப்பில் பங்கேற்கவும், தேர்வு எழுத அனுமதித்தும் உத்தரவிட வேண்டும்' என, மாணவர் மனு செய்தார். விசாரணை நடத்திய தனி நீதிபதி, 'மாணவர்கள், எதிர்காலத்தில் தேசத்தை வழி நடத்தக்கூடியவர்கள்; அவர்களுக்கு, ஒழுக்கம் முக்கியம். மனுதாரர், தவறை ஒப்புக்கொண்டுள்ளார்; மனுவை தள்ளுபடி செய்கிறேன்' என்றார். இதை எதிர்த்து, மாணவர் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.மணிக்குமார் ஆகியோர் அடங்கிய, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: கல்லூரி நிர்வாகம், 'மனுதாரரை, ஓராண்டிற்கு தேர்வு எழுத அனுமதிக்க முடியாது' என்ற தடையை நீக்குகிறோம். 'மாணவரை, வகுப்பில் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம். ஜூனில் சிறப்புத் தேர்வு நடத்தி முடிவை வெளியிடுவோம்' என, இறுக்க மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாக கூறியுள்ளது. இதன் மூலம், மனுதாரர், மேற்படிப்பை தொடர முடியும்.

ஒழுக்கம் முக்கியம்:

கல்லூரி நிர்வாகத்தின் கருத்து ஏற்கும்படி உள்ளது. கல்வி நிறுவனங்களில், ஒழுக்கம் முக்கியம். தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது, மாணவர்களிடம் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் நன்மை, தீமைகளை அறிந்து கையாளத் தெரிய வேண்டும். ஒழுக்கம் முக்கியம் என்பதையும் தாண்டி, வெளி உலக சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயம், தங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

கடுமை கூடாது:

மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையும் மிகக் கடுமையாக இருக்கக்கூடாது. கல்லூரி நிர்வாகத்தின் நல்ல முடிவை பாராட்டுகிறோம். தனி நீதிபதியின் உத்தரவு மாற்றியமைக்கப்படுகிறது; வழக்கு முடிக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

'தள்ளாட்டத்தில்' வந்த தாசில்தார் கைது

திருவனந்தபுரம்: முழுபோதையில் தள்ளாடியபடி அலுவலகம் வந்த தாசில்தாரை, கலெக்டர் உத்தரவு படி போலீசார் கைது செய்தனர். இவரது போதை காரணமாக ஒரு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

திருச்சூர் 'ரெவன்யூ ரெக்கவரி' தாசில்தார் ஸ்ரீகுமார் 55. இவரை பாணாஞ்சேரி பஞ்சாயத்து நிலை கமிட்டியின் தேர்தல் அதிகாரியாக நியமித்து கலெக்டர் எம்.எஸ். ஜெயா உத்தரவிட்டிருந்தார். பஞ்சாயத்து அலுவலகத்தில் இத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்தலை நடத்த தாசில்தாரை அழைக்க பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து ஜீப் அனுப்பி வைக்கப்பட்டது. காலை நேரத்திலும் அலுவலகத்தில் முழுபோதையில் இருந்த ஸ்ரீகுமார் எழ முடியாத நிலையில் இருந்தார். இவரை அழைத்து சென்று எப்படி தேர்தலை நடத்த என விழித்த பஞ்சாயத்து அதிகாரிகள் கலெக்டருக்கு தகவல் கொடுத்தனர். அவரது உத்தரவு படி திருச்சூர் கிழக்கு எஸ்.ஐ., லால்குமார் 'ரெவன்யூ ரெக்கவரி' அலுவகத்துக்கு சென்று ஸ்ரீகுமாரை கைது செய்தார். தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு மருத்துவக்கல்லூரியில் நடந்தபரிசோதனையில் அவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. தாசில்தார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் பின்னர் அவரை ஜாமினில் விடுவித்தனர்.

வண்டு கடித்தவருக்கு நாய்கடி ஊசி: டாக்டர் தற்காலிக பணிநீக்கம்

சென்னை: வண்டு கடி சிகிச்சைக்கு சென்ற வாலிபருக்கு, நாய்கடி சிகிச்சைக்கான ஊசிக்கு பரிந்துரைத்த டாக்டர், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

காஞ்சிபுரத்தை அடுத்த, சிறுவாக்கத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி, 33; பெயின்டர். கடந்த வாரம், தன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, வண்டு கடித்தது. கை வீக்கம் அடைந்ததால், காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சென்றார். பாலசுப்ரமணியை பரிசோதித்த டாக்டர், வண்டு கடிக்கு சிகிச்சை அளிக்காமல், நாய்கடிக்கான, 'ஆன்டி ரேபீஸ் வேக்சின் - ஏ.ஆர்.வி.,' என்ற ஊசி போட பரிந்துரைத்து உள்ளார்; அதன்படி, ஊசி போடப்பட்டு உள்ளது. இரண்டாவது முறையாக ஊசி போடச் சென்ற போது, டாக்டரின் அலட்சியத்தால், நாய் கடி ஊசி போடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக, உரிய விசாரணை நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டது. மருத்துவ ஊரக நல பணிகள் இயக்குனர், சந்திரநாதன் நேரடி விசாரணை நடத்தினார். முதற்கட்ட விசாரணைக்கு பின், ஏ.ஆர்.வி., ஊசி போட பரிந்துரைத்த, டாக்டர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

இன்ஜி., பொது கவுன்சிலிங் ஜூலை 1ல் துவக்கம்: அண்ணா பல்கலை அறிவிப்பு


சென்னை: அண்ணா பல்கலைக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளின் பி.இ., - பி.டெக்., படிப்புக்கான பொது கவுன்சிலிங், ஜூலை, 1ம் தேதி துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்குட்பட்ட, 590 பொறியியல் கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் பணி, நேற்று துவங்கியது. சென்னையில், அண்ணா பல்கலை உட்பட தமிழகம் முழுவதும், 60 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலையில், வரும், 29ம் தேதி வரையிலும், மற்ற, 59 மையங்களில் வரும், 27ம் தேதி வரையிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படும். 29ம் தேதி மாலை, 6:00 மணிக்குள், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இந்நிலையில், ரேண்டம் எண், தர வரிசைப் பட்டியல் மற்றும் கவுன்சிலிங் தேதியை அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

* ஜூன், 15 - 'ரேண்டம்' எண்.


* ஜூன், 19 - 'கட் - ஆப்' மற்றும் ரேண்டம் எண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல்.


* ஜூன், 28 - விளையாட்டுப் பிரிவுக்கான கவுன்சிலிங்


* ஜூன், 29 - மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங்.


* ஜூலை, 1 - பொது கவுன்சிலிங் துவக்கம்.


* ஜூலை, 31 - அனைத்துப் பிரிவினருக்கும் கவுன்சிலிங் முடிவு. இந்தப் பட்டியலில் உள்ள சேர்க்கை நடவடிக்கைகளில், தேவைக்கேற்ப தேதி மாற்றங்கள் இருக்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

விளையாட்டு பல்கலை கழகத்தில் புதிய துணைவேந்தர் பொறுப்பேற்பு

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக, துணைவேந்தர் இல்லை. தற்போது புதிய துணைவேந்தராக, மூர்த்தி என்பவரை, கவர்னர் ரோசய்யா நியமித்து உள்ளார்; இவர், கோவிலூர் ஆண்டவர் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வராக பணியாற்றி உள்ளார்; சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் துணைவேந்தர் பதவியில், மூன்று ஆண்டுகள் இருப்பார்; இதற்கான உத்தரவு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

இன்ஜி., கல்லூரி விவரங்கள் வெளியீடு: 'கட் - ஆப்' வரிசை பட்டியல் இன்று வெளியாகும்

அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்புக் கல்லூரி பாட விவரங்கள் மற்றும் கட்டண விவரங்கள், அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இக்கல்லூரிகளின் கடந்த ஆண்டு ஜாதி வாரியான, 'கட் - ஆப்' பட்டியல் இன்று வெளியாகிறது.

அண்ணா பல்கலையின் இணைப்பில், 596 கல்லூரிகள் கடந்த ஆண்டு இணைப்பு பெற்றுள்ளன. இந்த ஆண்டு, மூன்று கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கேட்டுள்ளன; 593 கல்லூரிகள் இணைப்பு கேட்டு உள்ளன. பொறியியல், முதல் ஆண்டு சேர்க்கை விண்ணப்ப விற்பனை துவங்கியுள்ள நிலையில், அண்ணா பல்கலை இணைப்புக் கல்லூரிகளின் பெயர் மற்றும் விவரங்களை மாவட்ட வாரியாக, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. கல்லூரிகளின் பாட விவரங்கள், இணைப்பு விவரம், போக்குவரத்து வசதி, விடுதி வசதி, கேன்டீன் வசதி போன்ற விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த விவரங்களை, https://www.annauniv.edu/tnea2015 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டு, 593 கல்லூரிகளில் ஜாதி வாரியாக எவ்வளவு, 'கட் - ஆப்' தேவைப்பட்டது என்ற பட்டியல், இன்று வெளியாகிறது. இப்பட்டியலில், கடந்த ஆண்டு எந்த, கட் - ஆப் மதிப்பெண் வரை, எந்தப் பாடத்துக்கு மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டனர் என்ற விவரமும் இடம்பெறும். இதன்படி, இந்த ஆண்டு, கட் - ஆப் எண்ணைக் கணக்கிட்டு, கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்யலாம். மேலும், அண்ணா பல்கலை இணையதளத்தின் பெயரைப் போன்றே, பல போலி இணைய தளங்கள் திடீரென உருவாகியுள்ளன. இத்தளங்களில் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, தங்களுக்கு வேண்டிய கல்லூரிகளின் பட்டியல்களை தர வரிசைப் படுத்தி, 'கட் - ஆப்' மதிப்பெண்களை மாற்றிப் போட்டு, தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து, அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறும்போது,''பெற்றோர், மாணவ, மாணவியர், போலி இணையதளங்களில் கல்லூரி விவரங்களை எடுத்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. சரியான தகவல்களைப் பெற, அண்ணா பல்கலையின் நேரடி மாணவர் சேர்க்கை இணையதளத்தைப் பார்க்க வேண்டும். அதில், கல்லூரிகளின் உண்மையான விவரங்கள் இடம் பெறும்,''என்றார்.


- நமது நிருபர் -

Accused MBBS student leaked 3 papers: Police


CHANDIGARH: An MBBS student from Post Graduate Institute of Medical Sciences (PGIMS), Rohtak, has been involved in leaking question papers or answer keys of least three prestigious exams, including All India Pre-Medical and Pre-Dental Test (AIPMT) and Delhi's AIIMS in 2012, police have said.

Haryana police arrested Ravi Kumar along with three other accused, including two dental surgeons from Rohtak, on Sunday in connection with leaking answer keys of AIPMT exam held in different parts of the country the same day. Around six lakh students had taken the exam.

Currently, the accused are on police remand.

Ravi is second-year student of MBBS (Bachelor of Medicine and Bachelor of Surgery) at PGIMS. A resident of Nimaka village in Greater Noida, he is second oldest among three brothers. His father is a farmer and mother is a homemaker.

Rohtak range's inspector general of police Shrikant Jadhav told TOI that Ravi had gone to Kota town in Rajasthan to get coaching for AIPMT examination in 2005. "He succeeded in clearing the exam in 2007 and subsequently took admission in MBBS at PGIMS. However, he could pass just one class in the past eight years," Jadhav said.

Police are trying to verify whether he passed AIPMT on merit or took help from any gang. "The leader of the gang, Roop Kumar Dangi, has been active in Rajasthan for long and we suspect that Ravi may have also come in contact with such persons when he was taking coaching at Kota in 2005-06," said a police official associated with the probe.

According to investigators, in January 2012, Delhi Police had booked Ravi in connection with leakage of question paper for the exam conducted for admission to post graduation courses�MD and MS�in AIIMS.

About five moths later, the police again booked him in connection with an examination for recruitment in State Bank of India (SBI). "He has told us that he remained in jail for about a month and was later released on bail. Delhi Police have already filed a chargesheet against him in both the cases," said a police official.

NEWS TODAY 25.07.2026