Sunday, May 10, 2015

அனைவருக்கும் பான் கார்டு வழங்க மத்திய அரசு முடிவு!


புதுடெல்லி: இந்திய மக்கள் அனைவருக்கும் பான் கார்டு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

பாரத பிரதமராக மோடி பதவியேற்ற பின், நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கப்படுவதற்காக ஜன் தன் யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத் திட்டம் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து தற்போது அனைத்து மக்களுக்கும் பான்கார்டு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இவ்வாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொகைக்கான பொருட்களை வாங்குபவர்கள், தங்கள் பான் எண்ணைத் தெரிவிக்கவேண்டியது கட்டாயம் என கூறப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த கவலையை உண்டாக்கியது. ஏனென்றால் நாட்டில் உள்ள பெரும்பாலான கிராம மக்களுக்கு பான் கார்டு என்றால் என்னவென்றே தெரியாது என்பது குறிப்பிடத் தக்கது.

எனவே பொதுமக்களின் அறியாமை மற்றும் கவலையை போக்க ஆன்லைன் மூலம் 48 மண நேரத்திற்குள் பான் கார்டு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே போல் பான் கார்டு வழங்கும் சிறப்பு முகாமை நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் 25 கோடி குடும்பங்கள் உள்ள நிலையில், வெறும் 21 கோடி பேர் மட்டுமே பான் கார்டு வைத்துள்ளனர். இதில் 7.5 லட்சம் பேர் கார்ப்பரேட் நிறுவனத்தினர் ஆவார்கள். எனவே நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பான் கார்டு வைத்திருக்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த கூற்றை மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்காவும் ஒப்புக்கொண்டுள்ளார். எனவே எளிதில் மக்களுக்கு பான் கார்டு கிடைக்க போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சின்கா தெரிவித்துள்ளார்.

சொல்லத் தோணுது 33: சண்டைக்கோழிகள் + கறிக்கோழிகள் = மாணவர்கள்



Return to frontpage

இனி, எந்நாளுமே தற்கொலை காலங்கள்தான். உழவர்களிடம் இருந்து தொடங்கிய தற் கொலைகள், இப்போது அரசு அதிகாரி களைத் தொற்றிக்கொண்டது. தற்போது கல்வி கற்று இந்நாட்டை மேம்படுத்த அனுப்பப்பட்டவர்கள் தற்கொலை செய்து மாண்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தற்கொலைகளின் பின்னாலுள்ள அரசியலையும் அதற்கானத் தீர்வையும் பற்றி யாருமே சிந்திப்பதில்லை. சிந்தித் துத் தீர்வை உருவாக்க வேண்டிய ஆட்சியாளர்களும், பெற்றோர்களும் தீர்வை உருவாக்குவது தங்களுடைய கடமை இல்லை என நினைக்கிறார்கள்.

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் மதிப்பெண் சாதனை புரிந்தவர்களின் படங்களின் அருகே தேர்வில் தோல்வி அடைந்து தற்கொலையில் வாழ்வை முடித்துக்கொண்ட மாணவர்களின் படங்களையும் நாளேடுகளில் காண்பது பற்றிய கவலை ‘தற்காலிகமானது’ என நினைக்கிறோம்.

மதிப்பெண்கள்தான் வாழ்வின் முடி வைத் தீர்மானிப்பதாக நினைத்து தற் கொலை செய்துகொண்ட மாணவர் களும், வெற்றி பெற்று பணம் எனும் ஒன்றை மட்டுமே சிந்தனையில் முன்னிறுத்திக்கொண்டு கல்விக்கூடங்களுக்குச் சென்று கொண்டிருக்கும் மாணவர்களும்தான் நாம் உருவாக்கி வைத்திருக் கும் கல்வி முறையின் விளைச்சல்கள்.

இந்தப் பள்ளிகள் யாருக்கானவை? ஆசிரி யர்களுக்கா? பெற்றோர் களுக்கா? மாணவர் களுக்கா? அல்லது அனை வரையும் ஆட்சிபுரியும் அரசுகளுக்கா? அவை அறிவுக்கானதாகவும், வாழ்வியலுக்கானதாக வும் இல்லாமல் எதிலும் நம்பிக்கைகளை இழந்த கோழைகளை யும், எல்லாவற்றுக்கும் வளைந்து கொடுக்கும் அடிமைகளையும் உருவாக்கு வதால்தான் இந்தக் கேள்விகள்!

கல்வியைக் கற்றுக் கொடுப்பதால் கல்லா கட்ட முடியாது. வெறும் செலவு தான் என்பதால் அதிக வருமானம் வருகிற துறையை மட்டும் ஆட்சியாளர்கள் கையில் வைத்துக்கொண்டார்கள். மக்களின் கேள்வியில் இருந்து தப்பிக்கும் நோக்கில் மட்டுமே, மிஞ்சியிருக்கிற அரசுப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. ‘அதெல்லாம் இல்லை. சிறந்த கல்வியை அரசுப் பள்ளிகள்தான் தருகின்றன’ எனச் சொன்னால், அரசாங்கத்தை நடத்துபவர்களின் பிள்ளைகள் அங்கே தானே படித்திருக்க வேண்டும்? எது எதற்கோ சட்டம் இயற்றுபவர்கள், அரசு ஊதியம் பெறுகிறவர்களின் பிள்ளை களும் அரசின் கல்விக் கூடங்களில்தான் பயில வேண்டும் என்கிற சட்டத்தை உட னடியாக இயற்றியிருக்க வேண்டும் அல் லவா? கல்வித் துறையில் அரசாங்கத்தின் வேலை என்பது தேர்வை நடத்தி முடிப்பதற்கு மட்டுமே பயன்படுகிறது.

கோழிச்சண்டைக்காக வளர்க்கப் படும் கோழிகள் என்னென்ன முறைகளில் வளர்க்கப்படுகிறதோ. அவ்வாறேதான் இங்கு பயிலும் மாணவர்களும் உருவாக் கப்படுகிறார்கள். மாணவர்களுக்குள் ளேயே போட்டி மனப்பான்மையை உருவாக்கி, மனப்பாடம் செய்ய வைத்து, அதனை மீண்டும் தேர்வுத் தாளில் வாந்தி எடுக்கும் தலைமுறைகள்தான் இவர்களால் உருவாக்கப்படுகின்றன.

எதிலும் நம்பிக்கையற்ற, அடிமைத் தனமும் கோழைத்தனமும் கொண்ட, போர்க்குணம் அற்ற, கேள்வி கேட்காத தலை முறைகளை உருவாக்கிக் கொண்டு இந்நாட்டை சீரழித்துக் கொண்ச்டிருக் கிறோம் என்கிற குற்றவுணர்வு பெற்றோர் களுக்கும் இருப்பதில்லை; நிறுவனங் களுக்கும் இருப்பதில்லை; அரசுக்கும் இருப்பதில்லை.

இந்த எல்லாக் குறைபாடுகளை யும் களைந்து, வளமான முன்னேற் றப் பாதைக்கு இந்நாட்டைக் கொண் டுச் செல்ல இனி எங்கிருந்து, யார் வரப் போகிறார்கள்? அரசியலை தொழிலாக மாற்றிக் கொண்டுவிட்ட, அரசியல்வாதிகளிடமா நாம் தீர்வையும், விடுதலையையும் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறோம்?

ஒருவேளை யாராவது வந்தால் சத்தியமாக அவர்கள் அடிமைகளையும் கோழைகளையும் உருவாக்கும் ஆங்கிலக் கல்வி புகட்டும் தனியார்ப் பள்ளியில் இருந்து வர மாட்டார்கள். யாருமே கண்டுகொள்ளப்படாத, கால் வயிற்றுக்கும், அரை வயிற்றுக்கும் கஞ்சி இல்லாததால் காய்ந்த தலையுடன், புழுதிக் கால்களுடன் நடந்து சென்று படிக்கிற, ஒவ்வோர் ஆண்டும் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் அரசுப் பள்ளிக்கூடங்களில் இருந்துதான் வருவார்கள். எல்லா இடர்பாடுகளையும், தடைகளையும் கடந்து வளரும் அந்தக் காட்டுச் செடிகள்தான் நம் நாட்டுக்கு ஒரே நம்பிக்கை. ஆனால், நாம் அனைவரும் ஒருநாள் கவனிக்காமல்கூட போனால், வாடி வதங்கி பட்டுப்போகும் எந்தப் பலனையும் தராத, வெறும் காட்சிப் பொருளான குரோட்டன் செடிகளைத்தான் தனியார் பள்ளிகளில் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

மதிப்பெண்களே கல்வி என்பதனையும் கடந்து மதிப்பெண்களே வாழ்க்கை என கற்பித்து மாணவர்களின் உயிரை காவு கொள்ளும் பள்ளிகள்தான் இந்நாட்டின் புற்று நோய்கள். மதிப் பெண்களை குறைவாகப் பெற்றதற் காகவும், தேர்வில் தோல்வி அடைந்த தற்காகவும் நிம்மதியை இழந்து ஒவ்வொரு நொடியும் அவமானத்தில் உழலும் மாணவர்களை உருவாக்கும் போக்கு நீடிக்கத்தான் வேண்டுமா? என்றைக்காவது இந்தக் கல்வி ---முறை சரியில்லை எனச் சொல்லி நாம் போராடியிருக்கிறோமா? ஊதிய உயர்வுக்காகவும், பிற தன்னலத் தேவைக் காகவும் போராடும் ஆசிரியர்கள் இந்தக் கொடுமைகளில் இருந்து இம் மாணவர்களை காப்பாற்ற வேண்டும் எனப் போராடியிருக்கார்களா?

ஆசிரியர்களின் ஒடுக்குமுறைகளுக் கும், அதிகாரத்துக்கும் பயந்து நடுங்கி அடையாளத்தை இழந்து, உடன் பயிலும் தோழமையை எதிரியாகக் கருதும் எண்ணத்தில் வளர்ந்து, ஆராய்ச்சி மற்றும் ஆய்ந்தறியும் மனநிலையை இழந்து, கோழைகளாகவே கறிக் கோழிகள் போல் வெறும் பணம் சம்பாதிக்கவே வளர்க்கப்படும் நம் தலைமுறைகளின் நிலை யார் கண்களுக்கும் தெரியவில்லையா?

மாநில அளவில் சாதனைபுரிந்து மதிப் பெண்களை வாரிக் குவித்தவர்களின் தற் போதைய வாழ்க்கை என்னவாக இருக் கிறது? கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றவர்கள் தற்போது என்ன செய்துகொண்டிருக் கிறார்கள்? யாருக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

எதற்கும் விளங்காதவர், யாருக் கும் பயன்படாதவர் என பெற்றோர் களாலும், ஆசிரியர்களாலும் இகழப் பட்ட மாணவர்கள்தான் இம்மக்களுக் காக, இம்மொழிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். சொந்தக் காலில் நின்று பெரும் தொழில் செய்யும் முதலாளிகளாக, உற்பத்தியாளர்களாக, சூழலியல் செயல்பாட்டாளர்களாக, மக்கள் செயல்பாட்டாளர்களாக, அரசி யல் தலைவர்களாக, திரைப்பட இயக்குநர்களாக, மக்கள் கொண்டாடும் நடிகர்களாக, எழுத்தாளர்களாக, ஓவியர் களாக, சிற்பிகளாக, இசைக் கலைஞர் களாக இவை எல்லாவற்றையும்விட நமக்கெல்லாம் உணவை உற்பத்தி செய்து தரும் யாரும் கண்டுகொள்ளாத உழவர்களாக இந்நாட்டிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சாலையில் நடந்து செல்லும்போதுகூட அடிபட்டால் ஓடிவந்து தூக்கி உதவிசெய்து காப்பாற்று பவர்கள் அதிக மதிப்பெண்களை பெறத் தெரியாதவர்கள்தான். அதிக மதிப்பெண் பெற்றவர்கள் வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருக்கிறார்கள். இதுதான் நம் கல்வி!

இதனை மாற்றாமல் இங்கு எந்த அரசியல் மாற்றமோ, சமூக மாற்றமோ, புரட்சியோ நடக்கப் போவதில்லை. சண்டைக் கோழிகளையும், கறிக் கோழிகளையும் உற்பத்தி செய்துத் தருகினற நம் கல்விமுறை இருக்கும் வரை நாம் வெறும் இனப்பெருக்கத்தை உற்பத்தி செய்யும் கூட்டம்தான்.

- சொல்லத் தோணுது…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

DME NOTIFICATION 2015-16..DIRECTORATE OF MEDICAL EDUCATION


ஆதார்' எண்ணை ஏற்க வருமான வரித்துறை மறுப்பு


'பான்' கார்டு வழங்க, ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக ஏற்க, வருமான வரித்துறை மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.

தனி நபரின் குடும்ப விவரங்கள் உட்பட, அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய, 'ஆதார்' எண், அனைத்து விதமான விண்ணப்பங்களுக்கும் சான்றாக ஏற்கப்படுகிறது. ஆனால், 'பான்' கார்டு வழங்க, 'ஆதார்' எண்ணை, அடையாளச் சான்றாக, வருமான வரித்துறை ஏற்க மறுக்கிறது. இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விண்ணப்பதாரரின் பெயர், தந்தை பெயர், முகவரி, வயது ஆகியவை உள்ள ஆவணத்தைத் தான், அடையாளச் சான்றாக ஏற்க முடியும். ஆனால், 'ஆதார்' எண்ணில், விண்ணப்பதாரரின் பெயர் உள்ளது. தந்தை பெயர் என்ற இடத்தில், இனிஷியல் தான் உள்ளது. உதாரணத்துக்கு, எஸ்.மணிவேல் என்ற விண்ணப்பதாரருக்கு, 'எஸ்' என்ற இனிஷியலுக்கு, விரிவாக்கம் தேவை. 'எஸ்' என்ற எழுத்தில், பல ஆயிரம் பெயர்கள் உள்ளன. விண்ணப்பதாரர் கூறும், 'எஸ்' என்ற எழுத்துக்கான விரிவாக்கம், ஆதார் எண்ணில் இல்லை. இதனால், பெயரில் தவறு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, இனிஷியலுக்கு, விரிவாக்கம் இல்லாத, 'ஆதார்' எண்ணை, அடையாளச் சான்றாக ஏற்க முடியாது. அரசின் விதிகளுக்கு உட்பட்ட சான்றுகளையே அங்கீகரிக்க முடியும். அரசு விதிகளுக்கு உட்படாத சான்றுகளை ஏற்க முடியாது. இவ்வாறு, அவர் கூறினார்.

இதுகுறித்து, ஆதார் திட்ட இணை இயக்குனர் கிருஷ்ணா ராவ் கூறியதாவது: 'ஆதார்' எண் உருவாக்க சேகரிக்கப்படும் தகவல்களில், தனி நபரின் முழு விவரங்கள் இருக்கும். எனினும், 'ஆதார்' எண் அட்டையில், இனிஷியல் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. இனிஷியலுக்கான விரிவாக்கம் குறிப்பிடுவதில்லை. இனிஷியல் விரிவாக்கம் வேண்டும் எனக் கூறினால், விரிவாக்கம் சேர்த்து வழங்கப்படும். ஏற்கனவே, 'ஆதார்' எண் உருவாக்கப்பட்டவர்கள், தங்களின் இனிஷியல் விரிவாக்கம் கேட்டு விண்ணப்பித்தால், அதற்கேற்ப மாற்றித் தரப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.



உடனடி நடவடிக்கை:





தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்கத் தலைவர் சடகோபன் கூறியதாவது: எதிர்காலத்தில், 'ஆதார்' எண்ணை அடிப்படையாகக் கொண்டே, அனைத்து விதமான திட்ட சலுகைகள் வழங்கப்பட உள்ள நிலையில், அடையாளச் சான்றாக, ஆதார் எண்ணை ஏற்க முடியாது என, வருமான வரித்துறை கூறுகிறது. குறைபாடுகள் இருந்தால், அதை உடனடியாக போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -

பாக்கி வைத்துள்ளோருக்கு பி.எஸ்.என்.எல்., கிடுக்கிப்பிடி


பில் பாக்கி வைத்திருப்போரின் போட்டோக்களை, அலுவலகம் மற்றும் சேவை மையங்களில் வெளியிட, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில், தொலைபேசி இணைப்பு பெற்று, கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்ய, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இணைப்பை துண்டிப்பது, முதற்கட்ட நடவடிக்கை. அடுத்து, ஊழியரை வீட்டுக்கு அனுப்பி, கட்டணம் செலுத்த அறிவுறுத்துவது, நீண்ட காலமாக பாக்கி வைத்திருப்போரிடம் நீதிமன்றம் மூலம் வசூலிப்பது என, நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, பில் பாக்கி வைத்திருக்கும் வாடிக்கையாளர் பெயர், போட்டோ மற்றும் விவரங்களை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் மற்றும் வாடிக்கையாளர் சேவை மையங்களில் விளம்பரப்படுத்த முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: பில் பாக்கி வைத்திருப்போரிடம், கட்டணத் தொகையை வசூலிக்க, நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல்., கணக்கு அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, பாக்கி வைத்திருப்பவரின் வீட்டுக்கு நேரில் சென்று, நிலுவைத் தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கட்டண பாக்கி வைத்திருக்கும் வாடிக்கையாளர் விவரத்தை, போட்டோவுடன் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -

இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்குமா


'இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகளை மூடும் முடிவை கைவிட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிராக, இ.எஸ்.ஐ., சந்தாதாரர்கள், நீதிமன்றம் சென்றுள்ளதால் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

நிதிச்சுமை:

தமிழகத்தில், சென்னை, கோவை உட்பட, நாடு முழுவதும், 13 இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிகள் உள்ளன. நிதிச்சுமையால் திணறிய, இ.எஸ்.ஐ., நிர்வாகம், மாணவர் சேர்க்கை நிறுத்தி விட்டு, கல்லூரிகளை மூடும் முடிவுக்கு வந்தது. 'மாநில அரசுகள் விரும்பினால், மருத்துவ கல்லூரிகள் ஒப்படைக்கப்படும்' எனவும், அறிவித்தது. இதனால், நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். எதிர்ப்பு அதிகமானதால், கல்லூரிகளை மூடும் முடிவை கைவிட்டதோடு, 'நடப்பு ஆண்டில் வழக்கம்போல் மாணவர் சேர்க்கப்படுவர்' என, அறிவித்துள்ளது. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், 'தொழிலாளர்களின் மருத்துவ சேவைக்காக துவக்கப்பட்ட, இ.எஸ்.ஐ., நிர்வாகம், மருத்துவ சேவையை மேலும் மேம்படுத்த வேண்டும்; மருத்துவக்கல்வி தருதல் என்ற தவறான முடிவு எடுத்ததால், நிதி நெருக்கடியில் சிக்கியது. மாணவர் சேர்க்கை எனும், தவறை மீண்டும் செய்யக்கூடாது' என, இ.எஸ்.ஐ.,க்கு பணம் செலுத்தும் சந்தாதாரர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

இ.எஸ்.ஐ., சந்தாதாரர்கள் ஒன்றிணைந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'மாணவர் சேர்க்கை நடந்தாலும், அது நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது' என, அறிவித்துள்ளது. மேலும், மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ கழகத்துக்கும், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. பிரச்னை நீதிமன்றம் வரை சென்றுள்ளதால், மீண்டும் மாணவர் சேர்க்கை நடக்குமா என்ற, கேள்வி எழுந்து உள்ளது.

அனுமதி கிடைக்கும்:

இதுகுறித்து, இ.எஸ்.ஐ., இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு எதிரான வழக்கு விசாரணையில் உள்ளது. ஆனால், நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. நிச்சயம் அனுமதி கிடைக்கும் என, நம்புகிறோம்' என்றனர்.

-நமது நிருபர் -

சிவகங்கை அருகே:என்ஜின் பழுதால் நடுவழியில் ராமேசுவரம் ரயில் நிறுத்தம்; பயணிகள் அவதி

சிவகங்கை அருகே சனிக்கிழமை என்ஜினில் ஏற்பட்ட பழுதால் ராமேசுவரம் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னர், மாற்று என்ஜின் பொருத்தப்பட்டு 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 9.40 மணிக்கு புறப்பட்ட ராமேசுவரம் விரைவு ரயில் சிவகங்கை அருகே உள்ள பனங்குடி என்ற இடத்தில் வந்தபோது என்ஜினில் பழுது ஏற்பட்டது.

இதையடுத்து நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டது.

இது குறித்து உடனடியாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவஇடத்துக்கு வந்த அதிகாரிகள், திருச்சியிலிருந்து ராமேசுவரம் வந்த பயணிகள் ரயிலை பனங்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தி, அதன் என்ஜினைக் கொண்டு ராமேசுவரம் விரைவு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயிலில், திருச்சியிலிருந்து வந்த பயணிகள் அனைவரையும் ஏற்றி ராமேசுவரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சுமார் 3 மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

இதையடுத்து, மதுரையிலிருந்து மாற்று என்ஜின் வரவழைக்கப்பட்டு பனங்குடி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருச்சி ரயிலுடன் இணைக்கப்பட்டு மானாமதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

NEWS TODAY 25.07.2026