Monday, May 16, 2016

வாட்ஸ் அப் அழைப்பு சேவை

THE HINDU

மெசேஜிங் சேவைகளில் பிரபலமாக இருக்கும் வாட்ஸ் அப் குரல் வழி வசதி பற்றிக் கொஞ்ச காலமாகவே பேசப்பட்டுவருகிறது. இந்த வாட்ஸ் அப் காலிங் வசதி இப்போது பயனாளிகளுக்கு அறிமுகமாகியுள்ளது. வாட்ஸ் அப் மெசஞ்சரின் சமீபத்தில் வடிவில் இதைப் பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் பிளேவில் இருந்து இதை டவுன்லோடு செய்துகொள்ளலாம். (வர்ஷென் 2.11.561)

இந்த வசதியை நிறுவும் முறை சுபலமானது. முதலில் கூகுள் பிளேவில் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டும். ஆனால் இதன் பிறகு வேறு ஒரு பயனாளியிடம் இருந்து அழைப்பு வந்தால்தான் இந்த சேவை ஆக்டிவேட் ஆகும். எனவே சக பயனாளிகளிடம் கோரிக்கை அவைத்து அவர்கள் அழைத்த பிறகு , வாட்ஸ் அப்பின் செயலியில் அரட்டை வசதிக்கு அருகே கால் செய்யும் வசதியைப் பார்க்கலாம்.

அதிகார்பூர்வ செயலிகளை மட்டுமே வாட்ஸ் அப் அங்கீகரிப்பதால் கூகுளில் பிளேவில் இருந்து அல்லது வாட்ஸ் அப் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்யவும்: இதனிடையே ஐபோனிலும் இந்த வசதியை வாட்ஸ் அப் அறிமுகம் செய்ய உள்ளது!

டவுன்லோடு செய்ய; https://play.google.com/store/apps/details?id=com.whatsapp&hl=en

இணையத்தின் நிறம் என்ன?


இந்தக் கேள்விக்கான பதில் உங்கள் மனதில் நீல நிறத்தில் தோன்றிக்கொண்டிருக்கலாம். பலவிதமான நீல நிறங்கள். கூகுள் இணைப்புகளில் பார்க்கும் நீலம்! பேஸ்புக் நீலம்! ட்விட்டர் நீலம்! இன்ஸ்டாகிராம் நீலம்!

இப்போது ‘ஏன் நீலம்?' என்று உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். ஆனால் அதை விட இன்னொரு முக்கியமான கேள்வி இருக்கிறது. இணைய இணைப்புகளின் நிறம் என்ன என்பதுதான் அது. இதற்கான பதிலும் நீலம்தான். தீர்மானமாக நீலம். ஏனெனில் இணையத்தின் ஆரம்ப காலம் தொட்டு இணைப்புகள் நீல நிறத்தில்தான் இருந்து வருகின்றன‌.

எதற்கு இந்த நிற ஆராய்ச்சி என்று கேட்கலாம். காரணம் இல்லாமல் இல்லை. முன்னணி தேடியந்திரமான கூகுள் இணைய இணைப்புகளின் நிறத்தை அதன் வழக்கமான நிறமான நீலத்தில் இருந்து கருப்பு நிறத்திற்கு மாற்றிப் பார்க்கும் சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சோதனை இணைய அபிமானிகள் பலரை அதிருப்தியில் ஆழ்த்தி, ‘எங்கே எங்கள் நீல நிறம்’ என்று பொங்க வைத்திருக்கிறது. அதனால்தான் இணைய இணைப்புகளின் நிறம் பற்றிய கேள்வி எழுந்துள்ளது.

நீங்களேகூட ஒரு கணம் கண்களை மூடிக்கொண்டு யோசித்துப் பார்த்தால், ‘எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக கூகுள் தேடல் இணைப்புகள் நீல நிறத்தில்தான் தோன்றுகின்றன' என்று பதில் சொல்வீர்கள். கூகுள் என்றில்லை, ஆதிகால அல்டாவிஸ்டா, லைகோஸ் உள்ளிட்ட எல்லா தேடியந்திரங்களிலும் இணைப்புகளின் நிறம் நீலம்தான்.

இதை நீங்கள் கவனிக்காமலே இருந்தாலும் சரி, உங்கள் மனது நீல நிற இணைப்புகளுக்குப் பழகியிருக்கும். இணைய முகவரிகள் பச்சை வண்ணத்தில் அமைந்திருக்கும். அது மட்டும் அல்ல ஏற்கெனவே கிளிக் செய்யப்பட்ட இணைப்பு எனில் அதன் வண்ணம் ஊதா நிறத்தில் மாறுபட்டிருப்பதையும் உங்கள் இணைய மனது பதிவு செய்திருக்கும்.

இணையத்தைப் பொறுத்தவரை இணைப்புகளின் நிறம் என்பது நீலம்தான்!

அதனால்தான் கூகுள் இந்த நிறத்தை மாற்றும் சோதனையில் ஈடுபட்டிருப்பது இணைய உலகில் சலசல‌ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தேடல் முடிவுகளில் வரிசையாக இடம்பெறும் முடிவுகளின் பட்டியலை வழக்கமான நீல நிறத்திற்குப் பதிலாகக் கருப்பு நிறத்தில் தோன்ற வைத்துள்ளது. இப்படி நிறம் மாறியிருப்பதைப் பார்த்த பல இணையவாசிகள் திடுக்கிட்டு போயிருக்கின்றனர். ஒருசிலர் இது குறித்த அதிருப்தியையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இதற்காக ’பிரிங் பேக் தி ப்ளு’ (#BringBackTheBlue) எனும் ஹாஷ்டேகுடன் இந்தக் கருத்துகளை ட்விட்டரில் குறும்பதிவுகளாக வெளியிட்டு வருகின்றனர்.

இணையக் கிளர்ச்சியாக இது வெடிக்கவில்லை என்றாலும் நிச்சயம் பரவலான அதிருப்தி ஏற்பட்டுள்ள‌து. இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக கூகுள் இந்த மாற்றத்தைப் பரவலாகக் கொண்டுவர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. அல்லது சோதனை அளவிலேயே கைவிட்டாலும் வியப்பதற்கில்லை.

இப்போதைக்கு இணையவாசிகள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்று மட்டும் வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறது. கூகுள் இது தொடர்பாக வெளிப்படையாகப் பதில் அளிக்கவில்லை, ஆனால் சின்னச் சின்னதாகச் சோதனைகளை அவ்வப்போது மேற்கொள்வது வழக்கம் என்று மட்டும் கூறியிருக்கிறது.

உண்மைதான்! கூகுள் இது போன்ற சோதனைகளை நடத்துவது புதிதல்ல. எழுத்துரு தொடங்கி சின்னச் சின்ன விஷயங்களில் கூகுல் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னதாக இணைப்புகள் மற்றும் ஜிமெயில் விளம்பர இணைப்புகளுக்காக 41 வகையான நீல நிறங்களை கூகுள் பரிசோதனை செய்து பார்த்துத் தற்போது பயன்பாட்டில் உள்ள குறிப்பிட்ட நீல நிறத்தைத் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

எந்த நிறத்தைப் பயனாளிகள் அதிகம் கிளிக் செய்கின்றனர் என சோதித்துப் பார்த்து அதனடிப்படையில் கூகுள் செயல்பட்டதாகவும், இதன் காரணமாக ஆண்டுக்கு 200 மில்லியன் கூடுதலாக விளம்பர வருவாய் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதே போல இணைப்புகளின் கீழே தோன்றும் சிவப்புக் கோட்டையும் நீலமாக மாற்றியிருக்கிறது. இந்த முறையும் இதே போன்ற வருவாய் நோக்கம் ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

கூகுள் மட்டும் அல்ல, ஃபேஸ்புக் கூட இது போன்ற சோதனையைப் பயனாளிகள் மத்தியில் மேற்கொள்ளும் வழக்கம் கொண்டிருக்கிறது. இதனிடையே கூகுள் கணக்குப் பக்கத்தில் ‘லாக் இன்' செய்து வெளியே வந்தால் இந்தச் சோதனையில் இருந்து விடுபட்டு, நீல இணைப்புகளுக்கு மாறிக்கொள்ளும் வசதி இருப்பதாகவும் கூகுள் விவாதக் குழுக்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.

நிற்க, இணைப்புகளின் நிறம் அத்தனை முக்கியமா எனும் கேள்வி எழலாம். நீல நிற இணைப்புகள் என்பது இணையப் பாரம்பரியமாகவே இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டிய விஷயம். 1990களில் ‘www' அறிமுகமான காலம் முதல் இணைய இணைப்புகள் நீல நிறத்திலேயே அடையாளம் காட்டப்படுகின்றன.

இணையத்தின் தந்தை எனப் போற்றப்படும், வலையை உருவாக்கிய‌ பிரிட்டன் விஞ்ஞானி டிம் பெர்னர்ஸ் லீ, கருப்பு நிற எழுத்துக்களுக்கு மத்தியில் பளிச்செனத் தெரிவதற்காக இணைப்புகளை நீல நிறமாக தோன்றச் செய்தார். ஆரம்ப கால பிரவுசர்களான மொசைக் போன்றவற்றில் இணைப்புகளுக்கு இதே நிறம் பயன்பட்டிருக்கிறது. அதற்கு முன்னரே கூட, ஹைபர் லிங்க் வசதிக்கு நீல நிறமே பயன்பட்டிருக்கிறது.

அது மட்டும் அல்ல, இணையத்தில் நிறங்கள் என்பவை பொதுவான சில அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. இணையக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் பார்த்தால், நீல நிற இணைப்பு என்பது தற்போது பயன்பாட்டில் உள்ள பக்கங்களைக் குறிக்கிறது. அடர் நீல நிறம் என்றால் ஏற்கெனவே விஜயம் செய்த இணையப் பக்கங்களைக் குறிக்கும். சிவப்பு நிற இணைப்பு எனில் அந்தப் பக்கம் விக்கிப்பீடியாவில் இல்லை எனப் பொருள். வெளிர் சிவப்பு என்றால்,

இப்போது இல்லாத ஆனால் நீங்கள் ஏற்கெனவே விஜயம் செய்த பக்கம் என்று பொருள். இன்னும் நிறைய அடையாளங்கள் இருக்கின்றன. விக்கிப்பீடியாவில் இதற்கான விரிவான பட்டியலைப் பார்க்கலாம்.

ஆக, இணையம் தனக்கென‌ பொதுவான சில செயல்பாட்டு நடைமுறைகளைக் கொண்டிருக்கிறது. வர்த்தக நிறுவனங்கள் தங்கள் நலனுக்காக அதைச் சோதனைக்கு உள்ளாக்கலாமா என்ற கேள்வியையும் இணைய வல்லுந‌ர்கள் எழுப்புகின்றனர்.

தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்:
அவகாசம் கேட்கிறது திமுக:விளக்கம் அளித்தது அதிமுக

தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டதற்காக தேர்தல் ஆணையம் கோரிய விளக்கத்தை அளிக்க திமுக கால அவகாசம் கோரியுள்ளது.
அதேசமயம், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் விளக்கத்தை அதிமுக அளித்துள்ளது.
சட்டப் பேரவைத் தேர்தலில் களம் இறங்கும் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்படும் அறிக்கைகளில் மக்களைக் கவரும் இலவசங்கள் குறித்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்கான உரிய நிதி ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தை விதி வலியுறுத்துகிறது.
தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பானது அப்படியே தேர்தல் நடத்தை விதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரதான கட்சிகளுக்கு நோட்டீஸ்:
 சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக உள்ளிட்ட இரண்டு பிரதான கட்சிகளுமே தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கைகளில் சில இலவச அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்கான நிதி ஆதாரங்களை இரண்டு கட்சிகளும் குறிப்பிடப்பிடவில்லை என்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த தேர்தல் ஆணையம், இரண்டு கட்சிகளும் ஞாயிற்றுக்கிழமை (மே 15) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அவகாசம் கேட்டது திமுக:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அதிமுக தரப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்குள் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், விளக்கத்தை அளிக்க கால அவகாசம் வேண்டும் என்று திமுக தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் அதிமுக வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளரும் பெரம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான பி.வெற்றிவேல் கோரிக்கை மனுவை அளித்தார். அதன் விவரம்:
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த இலவச திட்டங்களை எப்படிச் செயல்படுத்துவோம் என்ற விளக்கத்தை அளிக்காமல் பொய்யான வாக்குறுதியை அளித்துள்ளனர். தேர்தல் ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமலும், விளக்கம் ஏதும் கூறாமலும் மேலும் இரண்டு நாள்கள் அவகாசம் கேட்டுள்ளனர். இது தமிழக மக்களை ஏமாற்றும் செயல்.
எனவே, இந்தத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் அனைத்து வேட்பாளர்களையும் தகுதி இழப்பு செய்து உத்தரவிட வேண்டும் என்று தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா விளக்கம்
தேர்தல் பிரசாரத்தின்போதே, அதிமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா விளக்கம் அளித்திருந்தார்.
""எந்த வாக்குறுதியை கொடுப்பதற்கு முன்பும், அதைப் பற்றி நூறு தடவை அல்ல, ஆயிரம் தடவை யோசித்து வாக்குறுதி தருவேன். என்னால் நிறைவேற்ற முடியும் என்றால்தான் எந்த வாக்குறுதியையும் அளிப்பேன். இது, தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். எங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்'' என்று உறுதி அளித்திருந்தார்.
தேர்தல் விடுமுறையை ஈடுசெய்ய விதிமீறும் ஐ.டி., நிறுவனம்

பதிவு செய்த நாள்: மே 15,2016 21:36

எழுத்தின் அளவு:

தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி, சென்னையில் உள்ள தனியார், ஐ.டி., நிறுவனம், தேர்தல் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஊழியர்களை, மே, 21ல் பணிக்கு வரச்சொல்லி தகவல் அனுப்பியுள்ளது.'அனைவரும் ஓட்டளிக்கும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தேர்தல் நாளன்று, அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்' என, தொழிலாளர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நாளன்று விடுமுறை அளிப்பதால், மற்றொரு விடுமுறை நாளில் பணி செய்து, அதை

ஈடுசெய்யுமாறு சில, ஐ.டி., நிறுவனங்கள் கூறிஇருந்தன; இது குறித்து, தேர்தல் அதிகாரிகளுக்கு புகார்கள் பறந்தன. இந்நிலையில், நாடு முழுவதும் கிளைகளை உடைய, சர்வதேச ஐ.டி., நிறுவனம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தன் ஊழியர்களுக்கு, விடுமுறை தினமான, 21ம் தேதி சனிக்கிழமை பணிக்கு வரக் கூறி, ஒரு மின்னஞ்சல் அனுப்பிஉள்ளது.

அதில், 'அலுவலக தேவை இருப்பதால், மே, 21ல் அனைவரும் பணிக்கு வரவேண்டும்; உங்கள்

ஒத்துழைப்புக்கு நன்றி' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் செய்தால் தங்களுக்கு பாதிப்பு வரும் என, ஊழியர்கள் அஞ்சுகின்றனர்.- நமது நிருபர் -
நாளை பிளஸ் 2 'ரிசல்ட்' 19ம் தேதி தற்காலிக சான்றிதழ்

பதிவு செய்த நாள்: மே 16,2016 05:09

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன. 19ம் தேதி முதல் இணையதளத்திலும், 21ம் தேதி முதல் பள்ளிகளிலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கிடைக்கும் என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, அதிகாரிகள் மேலும் கூறியதாவது:பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், நாளை காலை, 10:31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. lதேர்வர்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் மூலம், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்பள்ளிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களில் தேர்வு முடிவுகளை கட்டணமின்றி தெரிந்து கொள்ளலாம்தேர்வர்கள் மே, 19ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்யலாம் மே, 21ம் தேதி முதல், தேர்வர்கள் தாங்கள் படித்த அல்லது தேர்வு எழுதிய பள்ளியில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெறலாம்விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறு கூட்டலுக்கு பள்ளிகள் மூலம், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மே 23ல் சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள்:மத்திய இடைநிலை கல்வி

வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 23ம் தேதி வெளியாகும் என தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகள், தனியார் பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவில், பிளஸ் 2 தேர்வுகள்

நடத்தப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் மே, 23ல் வெளியாகும் என, தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில், 55 ஆயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும், 15 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.

- நமது நிருபர் -
நிதியை பயன்படுத்தாத தமிழக பல்கலைகளுக்கு சிக்கல்

பதிவு செய்த நாள்: மே 15,2016 21:3

சென்னை பல்கலை, அண்ணாமலை பல்கலை உள்ளிட்ட நான்கு பல்கலைக் கழகங்கள், நான்கு ஆண்டுகளாக, யு.ஜி.சி., யின் நிதியை பயன்படுத்தாதது தெரிய வந்துள்ளது. இதனால், வரும் ஆண்டுகளில் இந்த பல்கலைகளுக்கு மானியம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ், நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் மத்திய, மாநில அரசின் பல்கலைகளுக்கு, பல்வேறு திட்டங்களுக்காக, யு.ஜி.சி., யில் இருந்து ஆண்டுதோறும் நிதிஉதவி வழங்கப்படுகிறது.

ஆராய்ச்சி திட்டங்கள்:இந்த நிதியில், ஆராய்ச்சி படிப்புகள் துவங்க வேண்டும்; புதிய ஆராய்ச்சி திட்டங்கள் கொண்டு வர லாம்; புதிய பாடப்பிரிவுகளும் துவங்கலாம். இந்நிலையில், பல்கலைகளின் நிதி செலவீடு குறித்த அறிக்கையை, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள பல அரசு பல்கலைகள், யு.ஜி.சி., ஒதுக்கிய நிதியை செலவு செய்யாதது தெரிய வந்துள்ளது.
அறிக்கை:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கு, 7.76 கோடி; கோவை பாரதியார் பல்கலைக்கு, 5.97 கோடி; சென்னை பல்கலைக்கு, 10.88 கோடி; சேலம் பெரியார் பல்கலைக்கு, 5.06 கோடி ரூபாய் என, நான்கு ஆண்டுகளில் மொத்தம், 29.67 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை, பல்கலைகள் செலவு செய்யாததால் செலவு குறித்த அறிக்கையை வழங்கவில்லை.

அதே நேரம், காரைக்குடி அழகப்பா பல்கலை, சென்னை அண்ணா பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, அன்னை தெரசா மகளிர் பல்கலை, தஞ்சை தமிழ் பல்கலை, அம்பேத்கர் சட்ட பல்கலை ஆகிய பல்கலைக்கழகங்கள், யு.ஜி.சி., நிதியை செலவு செய்து, 29.67 கோடி ரூபாய்க்கான செலவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளன.

இந்த பல்கலைகளுக்கு மட்டும், வரும் கல்வியாண்டில் மானியம் வழங்க, யு.ஜி.சி., முடிவு
 உள்ளது. செலவு அறிக்கை தாக்கல் செய்யாத, நான்கு பல்கலைகளுக்கும் மானியம் நிறுத்தப்படும் என தெரிகிறது.- நமது நிருபர் -

ரூ.105 கோடி பறிமுதல்;ரூ.48 கோடி திருப்பி அளிப்பு

இதுவரை ரூ.105 கோடி பறிமுதல்;ரூ.48 கோடி திருப்பி அளிப்பு

தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.105.5 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரூ.48 கோடி திருப்பி அளிக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் பறக்கும் படையினர் கடந்த 13-ஆம் தேதியன்று வாகன சோதனை மேற்கொண்ட போது, வேலூர் மாவட்டத்தில் ரூ.14.38 லட்சமும், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று, நாகை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திண்டுக்கல், அரியலூர், கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் பொருள்களும், ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.2.62 கோடியாகும்.

தேர்தல் நடத்தை விதி நடைமுறை அமலானதிலிருந்து, இதுவரை மொத்தம் ரூ.105.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரூ.47.91 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.105.5 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரூ.48 கோடி திருப்பி அளிக்கப்பட்டதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இதுகுறித்து, ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் பறக்கும் படையினர் கடந்த 13-ஆம் தேதியன்று வாகன சோதனை மேற்கொண்ட போது, வேலூர் மாவட்டத்தில் ரூ.14.38 லட்சமும், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று, நாகை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திண்டுக்கல், அரியலூர், கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் பொருள்களும், ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.2.62 கோடியாகும்.

தேர்தல் நடத்தை விதி நடைமுறை அமலானதிலிருந்து, இதுவரை மொத்தம் ரூ.105.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், உரிய ஆவணங்களைக் காட்டியதால் ரூ.47.91 கோடி திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...