Monday, October 10, 2016

தேனிலவை பாழாக்கும் மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம் ஐகோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி


தேனிலவை பாழாக்கும் மனைவியிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம் என டெல்லி ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

தேனிலவு கசந்தால்?

திருமணமான எந்தவொரு தம்பதியருக்கும் தேனிலவு என்பது வாழ்வில் என்றைக்கும் நினைத்து நினைத்து, மனதில் இன்பம் அடைகிற சுகமான அனுபவமாக அமையும்.

ஆனால் அதுவே கசப்பான அனுபவமாக அமைந்தால்? அப்படித்தான் டெல்லியை சேர்ந்த அனுப் சர்மாவுக்கு (தம்பதியர் பெயர் மாற்றி தரப்பட்டுள்ளது.) மனைவி தீப்தியுடனான அனுபவம் அமைந்து விட்டது.

ஒத்துழைக்கவில்லை

இந்த தம்பதியருக்கு 2004–ம் ஆண்டு, ஜனவரி மாதம் திருமணமானது. திருமணமான மறுநாளே சிம்லாவுக்கு தேனிலவு சென்றார்கள். ஆனால் அந்த தேனிலவு அனுப் சர்மாவுக்கு இனிக்கவில்லை. காரணம், மனைவி அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அதுமட்டுமின்றி அவரை அவமதிக்கிற வகையில் மனைவி குற்றம் சாட்டி இருக்கிறார்.

தொடர்ந்து 3 மாத காலம் அவர்கள் இணைந்து வாழ்ந்தாலும்கூட, அது பிரச்சினைகளுடன்தான் நகர்ந்திருக்கிறது. 3 மாதங்கள் கழிந்த நிலையில், அந்த பெண், தனது கணவரை பிரிந்து, தன் தாய் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து கணவர் மீதும், கணவர் குடும்பத்தினர் மீதும் போலீசில் புகார் செய்தார். ஆனால் கணவர், நல்லிணக்கம் ஏற்படுத்தி, மீண்டும் அவருடன் இணைந்து வாழ்வதற்கு எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இப்படிப்பட்ட மனைவியோடு இனி வாழ்ந்து பயன் இல்லை என அவர் முடிவு செய்து, குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் அந்த பெண் அதை எதிர்த்தார்.

விவாகரத்து

இறுதியில், அந்த பெண்ணிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

அதை எதிர்த்து அந்த பெண், டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் பிரதீப் நந்திரஜாக், பிரதீபா ராணி ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்து, பாழான தேனிலவும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி மனதளவில் கொடுமை செய்துள்ளதும் அந்த பெண்ணிடம் இருந்து கணவர் விவாகரத்து பெறலாம் என்பதற்கு உகந்த காரணங்கள் ஆகி உள்ளன என தீர்ப்பு அளித்தது.

தீர்ப்பின் சாராம்சம்

அந்த தீர்ப்பின் சாராம்சம் வருமாறு:–

இந்த வழக்கு ஒரு விதிவிலக்கான வழக்கு.

30 வயது கடந்த நிலையில் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியரின் திருமண வாழ்க்கை, தொடங்கியதில் இருந்தே சரியாக அமையவில்லை. தேனிலவின்போது கணவர், திருமண வாழ்வின் பந்தத்தை நிறைவேற்றக்கூடிய நிலையில் இருந்தார். ஆனால் மனைவி எதிர்த்து நின்றிருக்கிறார். அதன்பின்னும் கணவருக்கு மனைவி தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார். அவர் மீதும், அவரது ஒட்டு மொத்த குடும்பத்தினர் மீதும் அவமதிப்பு ஏற்படுத்தத்தக்க குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.

ஒரு பெண்ணின் அத்தகைய நடத்தை, சித்ரவதைதான். அதையெல்லாம் ஒரு மனிதர் தாங்கிக்கொள்வது சாத்தியம் இல்லை.

திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதற்காக விவாகரத்துக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக, எத்தனையோ அவமதிப்புகளை தாங்கிக்கொண்டு கணவர், மிகவும் பொறுமை காட்டி உள்ளார்.

கணவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் அந்த பெண் சுமத்தியுள்ள வாய்மொழி அல்லது எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரம் இல்லை.

பாழான அனுபவங்கள்

பெற்றோரால் நிச்சயித்து நடக்கிற திருமணங்களில், அதுவும் திருமணங்களில் இணைகிற மணமக்களின் வயது 30–ஐ கடந்து விடுகிறபோது, கணவன், மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ள, புரிந்து கொள்ள ஏற்ற காலம், தேனிலவு காலம்தான். ஆனால் இந்த வழக்கு அதில் விதிவிலக்காக அமைந்துள்ளது. சிம்லாவுக்கு தேனிலவுக்கு சென்றவர்கள் கசப்பான நினைவுகளுடனும், பாழான தேனிலவு அனுபவங்களுடனும் திரும்பி உள்ளனர்.

எனவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட கணவர், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறலாம்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Sunday, October 9, 2016

Foreign students asked to leave India
By GEETA MOHAN | New Delhi | 9 October, 2016
Foreign nationals who had applied for MBBS and BDS courses in Indian private institutions for the academic year 2016 have been asked to leave. The Sunday Guardian spoke with some of the foreign nationals who find themselves in this predicament after the recent Supreme Court ruling of May this year which made NEET examinations mandatory for all students seeking medical admissions in private and deemed institutes.
Shenale Silva, a Sri Lankan national who had received her acceptance letter from Manipal University to pursue Bachelors in Dental Studies and started college on 16 September this year, said, “After getting my admissions done and starting classes for about a week they are asking us to leave because we haven’t taken the NEET. The thing is that we are foreign students and I am not eligible to write the NEET exam. My question is how am I supposed to clear NEET if I am not even eligible to take the examination?”
While the court ruling specifies that NEET needs to be cleared by all students, the NEET eligibility criteria say only Indian nationals and Overseas Citizens of India (OCI) can take the exam. It makes no mention of foreign nationals. Students who are citizens of various countries and have applied for MBBS and BDS (Bachelors in Dental Studies) courses in private institutions in India now may lose a year. The number of students admitted to MBBS/BDS courses under the foreign category for the academic year 2016-2107 in Manipal University is 22 and they come from Sri Lanka, Bangladesh, US, Canada, Australia and Nepal.
Distraught parents of these foreign students have been running from pillar to post seeking help. Shenali Silva’s father, Tilak Silva has flown down to New Delhi from Colombo. He met with the Sri Lankan High Commission officials who have said that they would be taking up the matter with the Indian Ministry of External Affairs. He said, “We respect India as a world university and they are closing the doors to foreign students. This is not nice. This is not correct. We are taking up the matter with the Government of India asking them to intervene. Please allow foreign students to come and be able to share knowledge.”
Manipal University on Friday informed the foreign students that the last day for admissions in BDS was Friday, 7 October and with no resolution in sight, the students would have to leave.
Devika Ganju, another affected student who hails from Canada, said, “I am absolutely devastated. To travel across the world and to be told to leave is extremely devastating. We had confirmed admission letters. Not once were we told about the exams or the need to write any exam”.
The Sunday Guardian got in touch with the Registrar of Manipal University Narayana  Sabhahit, who said, “We are actually helpless. We had to ask them to leave. We wrote to the HRD ministry questioning the policy. The government on the one hand, says students from abroad should come and study in India and on the other hand, NEET has to be cleared by everyone when there is no provision for foreign nationals to write the examination. We are in a fix.”
He added: “The students in our university are going through such trauma for the last 10 days. They are literally in tears. We tried our best to fight their case. The MCI should have included foreign nationals in the criteria of eligibility. The government will definitely have to change its policies. We will be taking up the matter with the government.”

எம்.ஜி.ஆரின் நான்காவது கால்! பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு பகிர்வு


- ஜெ.பிரகாஷ்

அண்ணாமலை, முத்துக்குமார்,வாசன் என திரை உலகில் மின்னும்இளங்கவிஞர்களுக்கு மட்டும் காலன் சீக்கிரமே நாள் குறித்துவிடுகிறான் போல. இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாய்ப் போய்ச் சேர்ந்தவர்தான் கவிஞர் கல்யாணசுந்தரம். அவருடைய நினைவுநாள் இன்று.

என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் புகழப்பட்டவர் இந்த மக்கள் கவிஞர். தமிழ்த் திரையுலகில் பாடல் புனைந்தவர்கள் பலர். அதிலும் குறுகிய காலத்திலேயே வளர்ச்சியடைந்தவர்கள் சிலர். இளம்வயதிலேயே தன்னுடைய பாடல்களில் பொதுவுடைமை கருத்துகளைக் கொட்டிக் கவிதை புனைந்தவர் கல்யாணசுந்தரம்.



நிருபரிடம் கூறிய வாழ்க்கை வரலாறு!

‘‘உங்கள் வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில் எழுதவேண்டும்’’ என்று கேட்டநிருபர் ஒருவரை, தம் வீட்டிலிருந்து அழைத்துக்கொண்டு தெருவில் சிறிது தூரம்நடந்துசென்றார் கல்யாணசுந்தரம். பிறகு, ரிக்‌ஷா ஒன்றில் அவரை அழைத்துச்சென்றார். அதன் பிறகு, பஸ்ஸில் பயணம். கடைசியில் கார் ஒன்றில் ஏறி, தன் பாடல் பதிவான ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் போய் இறங்க... தன்கூட பயணித்த நிருபர், ‘‘கவிஞரே, வாழ்க்கை வரலாறு’’ என்று ஞாபகப்படுத்தியுள்ளார். அதற்கு, ‘‘முதலில் நடையாய் நடந்தேன்; பிறகு, ரிக்‌ஷாவில் போனேன்; அதன் பிறகு,பஸ்ஸில் போக நேர்ந்தது; இப்போது கார். இதுதான், என் வாழ்க்கை. இதில் எங்கே இருக்கிறது வரலாறு?’’ என்று சிரித்துக்கொண்டே தன் வாழ்க்கையைச்சொல்லிவிட்டுப் போய்விட்டாராம் கவிஞர்.





இளம்வயதில் பாடல் எழுதியது எப்படி?

‘‘ஒருநாள் எங்கள் ஊரில் உள்ள வயலுக்குச் சென்றுவிட்டு ஏரிக்கரையில் இருந்த வேப்பமரத்துக்குக் கீழ்வந்து அமர்ந்தேன். நல்ல நிழலும், குளிர்ந்த தென்றலும் என்னைத் தழுவியிருந்த அந்த வேளையில், ஏரியைக் கண்டு ரசித்தேன். தண்ணீர் அலைகள் நெளிந்து நெளிந்து ஆடிவரத் தாமரை மலர்கள், ‘எம்மைப் பார்... எம் அழகைப் பார்’ என்று குலுங்கின. அந்தச் சமயத்தில், ஓர் இளங்கெண்டை மீன் பளிச்சென்று துள்ளிக் கரையோரத்தில் இருந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்திவிட்டுத் தலைகீழாய்க் குதித்தது. இதைப் பார்த்த நான்,

‘ஓடிப்போ... ஓடிப்போ கெண்டைக் குஞ்சே!

கரை ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே...

தூண்டில்காரன் வரும் நேரமாச்சு - ரொம்பத்

துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே!’

- என்று தன்னுடைய 15-வது வயதில் கவிதை பாடிய அனுபவத்தை ஒரு நிகழ்வில் குறிப்பிட்டிருக்கிறார் கல்யாணசுந்தரம்.



ஜீவா மூலம் பாடல் எழுதும் வாய்ப்பு!

பாடல் எழுதத் தொடங்கும்போதெல்லாம், ‘வாழ்க பாரதிதாசன்’ என்ற தலைப்பில் எழுதிவிட்டுத்தான் பாடல் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கல்யாணசுந்தரம். பாரதிதாசன் தலைமையில்தான் அவருடைய திருமணம் நடந்தது. 1954-ம் ஆண்டு ஜீவாவுடன் நெருங்கிய நண்பராக இருந்த காலத்தில் விவசாய சங்க மாநாட்டுக்காக ‘கண்ணின் மணிகள்’ என்ற நாடகம் தயாரிக்கப்பட்டது. அதில், பாடல் எழுதும் வாய்ப்பைத் தேடித்தந்தார் ஜீவா.

‘தேனாறு பாயுது...

செங்கதிரும் பாயுது...

ஆனாலும் மக்கள்

வயிறு காயுது!’ என்று அவர் எழுதிய அந்தப் பாடல்தான் பின்னர் திரைப்படத்தில் இடம்பெற்றது.

‘‘கல்யாணசுந்தரம், அவருடைய 29 வயதுக்குள் 17 வகையான தொழில்களைச் செய்திருக்கிறார்’’ என ஜீவா சொல்லியிருக்கிறார். ‘‘இதனால்தான் அவருடைய பாடல்களில் பன்முகங்களைக் காட்ட முடிந்தது’’ என்று சொல்பவர்கள் பலர்.பல்வேறு தொழில்களைச் செய்த அனுபவமே அவருக்குக் கைகொடுத்திருக்கிறது என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது. கல்யாணசுந்தரத்தின் பாடல்களில் பொதுவுடைமைக் கருத்துகள் நிறைந்திருந்தன. ‘‘கல்யாணசுந்தரத்தின் பாடல்களை 12 வகைகளாகப் பிரிக்கலாம்’’ என அவருடைய பாடல்களைத் தொகுத்த பாலகிருஷ்ணன் என்பவர் கூறியுள்ளார்.

பட அதிபருக்கு எழுதிய கவிதை!

கல்யாணசுந்தரம், ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் துணிச்சல்மிக்கவராக இருந்தார். திரைப்படம் நிறுவனம் ஒன்றுக்கு அவர் பாட்டு எழுதிக்கொடுத்தார்.ஆனால், பணம் கைக்கு வந்துசேரவில்லை. பணத்தைப் பெறுவதற்காகப் பட அதிபரிடம் நேரில் சென்று கேட்டிருக்கிறார். ‘‘பணம் இன்னிக்கு இல்லே...நாளைக்கு வந்து பாருங்கோ’’ என்று பட அதிபர் பதில் சொல்ல... அதைக் கேட்ட கல்யாணசுந்தரமோ, பணம் இல்லாமல் அந்த இடத்தைவிட்டு நகருவதில்லை என்ற உறுதியுடன் நின்றார். ‘‘நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும்’’ என்று பட அதிபர் சொல்லிவிட்டு வீட்டுக்குள் போய்விட்டார். உடனே கல்யாணசுந்தரம்,சட்டைப்பையில் இருந்த ஒரு தாளையும் பேனாவையும் எடுத்து சில வரிகள் எழுதி, மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.



‘தாயால் வளர்ந்தேன்...

தமிழால் அறிவு பெற்றேன்...

நாயே - நேற்றுன்னை நடுத்தெருவிலே சந்தித்தேன்...

நீ யார் என்னை நில் என்று சொல்ல?’ என்று அதில் இருந்ததைப் பார்த்த பட அதிபர், அடுத்தநிமிடமே பணத்தைக் கொடுத்தனுப்பினார்.



சிவப்புக்கொடி!

சென்னையில் ஒருநாள் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்கல்யாணசுந்தரம். அப்போது, வழியில் ஓர் இடத்தில் பள்ளம்தோண்டப்பட்டிருந்தது; அதோடு, பழுது பார்க்கும் வேலை நடப்பதாகச் சிவப்புக்கொடி ஒன்றும் நடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த கல்யாணசுந்தரம் தன்அருகிலிருந்தவரிடம், ‘‘எங்கே எல்லாம் பள்ளம் விழுந்து அது மேடாக நிரப்பப்படவேண்டுமோ... அங்கே எல்லாம் சிவப்புக்கொடி பறந்துதான் அந்தப் பணிகள்நடக்க வேண்டும் போலும்’’ என்றார்.

‘நண்டு செய்த தொண்டு!’

கல்யாணசுந்தரம் வசித்த ஊரில் ஒரு மிராசுதார் இருந்தார். அவரிடம் ஒரு சிறுநிலத்தைக் குத்தகைக்கு விவசாயம் செய்துவந்தது கவிஞரின் குடும்பம். ஒருநாள் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சச் சென்றார். அப்போது மிராசுதார், ‘‘எங்க வயலுக்குஇப்பத்தான் தண்ணி பாய்ச்சிக்கிட்டு இருக்கோம். அது, முடிஞ்சப்புறம் உங்கவயலுக்குத் தண்ணி பாய்ச்சு’’ என்று சொல்ல... வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பினார் கவிஞர். மிராசுதாருக்கு பலவேலி நிலம் என்பதால், அவை அனைத்துக்கும் தண்ணீர் பாய இரவாகிவிடும். ஆகையால், மறுநாள் காலையில் தான் நம் நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியும் என்று நினைத்த கவிஞர், அப்படியே தூங்கிப்போனார். மறுநாள் காலைச்எழுந்ததும், வயலுக்குச்சென்றார் கவிஞர். அங்கே, அவருடைய நிலத்திலும் தண்ணீர் தேங்கியிருந்தது.நமது நிலத்துக்கு யார் தண்ணீர் பாய்ச்சியிருப்பார்கள் என்று யோசித்த அவர்,நண்டு போட்ட துளை வழியாக தண்ணீர் வந்திருப்பதைத் தெரிந்துகொண்டார்.இதையே தான், ‘நண்டு செய்த தொண்டு’ என்று தலைப்பில் ஒரு கவிதையாக எழுதினார் கல்யாணசுந்தரம். அந்தக் கவிதை, ‘ஜனசக்தி’இதழில் வெளியானது.

மனைவிக்கு சன்மானம்!

‘ஆடை கட்டி வந்த நிலவோ...

கண்ணில் மேடைகட்டி ஆடும் எழிலோ’ என்று

அவர் எழுதியதுகூட திருமணத்துக்கு முன் அவர் பார்த்தபெண்ணைவைத்து எழுதிய பாட்டுதான். ஒருநாள் அவருடைய அண்ணன் மனைவிக்கு வளைகாப்பு. அன்று அவர் மனைவி கவிஞரிடம், ‘‘அக்காளுக்கு வளைகாப்பு. அத்தான் முகத்துல பொன் சிரிப்பு’’னு கிண்டலாகச் சொன்னாராம். இதைத்தான் அவர், ‘கல்யாணப் பரிசு’ படத்தில் பல்லவியாகப்போட்டு பாட்டு எழுதினார். ‘‘இது நீ எழுதிய பாட்டு. இந்தாப் பிடி சன்மானம்’’என்று அந்தப் பாட்டுக்குக் கிடைத்த பணத்தை அவர் மனைவி கையில் கொடுத்து அழகுபார்த்தவர் கல்யாணசுந்தரம்.



சமூக அவலங்களை மையப்படுத்திப் பல பாடல்களை எழுதினார். இறக்கும்காலம்வரை தன் புரட்சிகரமான பாடல்களை மக்களிடம் கொண்டுபோய்ச்சேர்த்தார் கல்யாணசுந்தரம்.

‘இரைபோடும் மனிதருக்கே

இரையாகும் வெள்ளாடே...- என்கிற பாடல் குறித்து,

‘‘எளிய சொற்கள், ஆழமான பொருள், நினைத்து இன்புறத்தக்க உவமை’’ என்று தன் கருத்தைப் பதிவுசெய்தார் குன்றக்குடிஅடிகளார். ‘‘பாட்டெழுதி நம்மைக் கவர்ந்த பாட்டாளி. அவன், நாட்டிலுள்ளநல்லவரின் கூட்டாளி’’ என்றார் பட்டுக்கோட்டை ஜெயகாந்தன். இப்படி பலரின்புகழுரைகளுக்குக் காரணமாய் இருந்தவர் மக்கள் கவிஞர்.

‘மேலே போனா எவனும் வரமாட்டான்!’

அந்தக் காலத்தில், திரைப்படக் கவிஞர்களை ஏளனமாகவும், கேலியாகவும் விமர்சித்தார் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர். அதற்கு, கவிஞர் கண்ணதாசனும் பலியானார். ஒரு விழாவில் அந்தப் பத்திரிகை ஆசிரியரைக் கல்யாணசுந்தரம் சந்தித்தபோது (கண்ணதாசனைக் குறிப்பிட்டு), ‘‘கவிஞர்கள்என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்குக்கவிதையைப் பற்றி என்ன தெரியும்?’’ என்று கோபத்துடன் கேட்டாராம்.கவிஞர்கள் விஷயத்தில் யாரையும் விட்டுக்கொடுக்காத இந்த மக்கள் கவிஞர், 1959- ம் ஆண்டு காலமானார். அவர் மறைந்தபோது கவிஞர் கண்ணதாசன்,

வாழும் தமிழ்நாடும் வளர்தமிழும் கலைஞர்களும்

வாழ்கின்ற காலம் வரை வாழ்ந்து வரும் நின்பெயரே! - என எழுதியிருந்தார்.



கவிஞர் கல்யாணசுந்தரம் தாம் இறப்பதற்கு முன் ஒரு திரைப்படத்துக்கு,

‘தானா எவனும் கெடமாட்டான்

தடுக்கி விடாம விழமாட்டான்

போனா எவனும் வரமாட்டான் - மேலே

போனா எவனும் வரமாட்டான் - இதப்

புரிஞ்சிக்கிட்டவன் அழமாட்டான்!’ - என்று எழுதியிருந்தார்.



ஆம் உண்மைதான். மேலே போனா எவனும் வரமாட்டான்!

'No discrimination between paid and free darshan anymore'


MADURAI: Administrators of the Sri Subramaniasamy temple in Thiruparankundramhave made arrangements to enable devotees who opt forfree darshan to worship all main deities at the temple, a government lawyer informed the Madurai bench of the Madras high court.

Arrangement have been made to allow devotees who go in the queue for free darshan and devotees who go in the queue for paid darshan, to merge at a point, from where they could worship all five deities. There would be no discrimination at the temple, he assured the court.

With this, the court completed a suo motu case, which was initiated based on a letter sent by Viswanathan from Madurai, who said that devotees were being discriminated at the temple.

Viswanathan said that while a devotee go to a temple for peace of mind, it was not in the case of the Subramaniasamy temple, which is one of the six abodes (Arupadai Veedu) of Lord Murugan. "The idols of five deities - Sri Murugan, Sri Vinayagar, Durgadevi, Shiva and Vishnu are in the main shrine. Of them, the first three deities are in a single row and idols of Shiva and Vishnu, which are on the two sides of the single row facing each other. A devotee who goes in the queue for free darshan is able to worship only three deities. But, those who go in the paid queue, is able to worship all the five. It is utter discrimination and against the Indian Constitution," he had said.

He further stated that if the judge visits the temple as an ordinary citizen and goes in the queue for free darshan, he could find out the situation prevailing there.

The letter prompted the Madurai bench to suo motu (on its own) take up the issue by treating it as a public interest litigation.

It then directed the Madurai collector and joint commissioner of the Hindu religious and charitable endowment department (HR&CE) to inspect the temple and file a report, which the officials did.
செல்போன் டவர் சந்தேகம் தீரவேண்டும்

தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் என்றாலும், நீதிபதிகள் என்றாலும் சரி, கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஓய்வுபெறும் நாளன்றுகூட, தங்கள் பணியை திறம்பட முடித்துவிட்டுத்தான் செல்வார்கள் என்ற நற்பெயர் இந்தியா முழுவதிலும் உண்டு. ஓய்வுபெற்ற தமிழக அரசு உணவுத்துறை செயலாளர் எம்.பி.நிர்மலா, மயிலாடுதுறையில் வருவாய்கோட்ட அதிகாரியாக பணியாற்றியபோது, ‘‘தூத்துக்குடி மாவட்டம், உமரிக்காட்டைச் சேர்ந்த எஸ்.ராமஜெயம் என்ற துணைகலெக்டர் ஓய்வுபெறும் நாளன்று இரவு 7 மணிவரை நெல் கொள்முதலுக்கான பணிகளில் அந்த மாவட்டம் முழுவதும் சுற்றி அலைந்தார். அவரது வழியனுப்பு விழாவே இரவில்தான் நடந்தது. ஒரு அதிகாரி எப்படி பணிபுரியவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்’’ என்று பெருமையாக பேசுவார். அதேபோலத்தான் உச்சநீதிமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி, கடந்த திங்கட்கிழமை ஓய்வுபெற்ற தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சி.நாகப்பனின் பணியும் அமைந்துள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.நாகப்பன் மாவட்ட நீதிபதி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி, ஒடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி என்று பணியாற்றி, கடந்த 3½ ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார்.

ஓய்வுபெறும் நாளன்று கடைசியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் சி.நாகப்பன், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் கொண்ட பெஞ்சு, மக்களுக்கு செல்போன் டவர் மீதுள்ள அச்சத்தை நீக்குவதற்கு ஒரு நல்ல வழியைக்காட்டி தீர்ப்பளித்துச்சென்றிருக்கிறது. இந்தத்தீர்ப்பின் முடிவு எதிர்காலத்தில், ‘செல்போன் டவர் மீது கொண்டுள்ள கதிர்வீச்சு அபாய அச்சம் சரியானதுதானா?, தேவையில்லையா?’ என்பதற்கு ஒரு சரியான விளக்கத்தைத்தரும். 1995–ம் ஆண்டு ஜூலை 31–ந் தேதி அன்று முதல் செல்போன் பயன்பாட்டை அப்போதைய மேற்குவங்காள முதல்–மந்திரி ஜோதிபாசு, மத்திய தகவல் தொடர்பு மந்திரியாக இருந்த சுக்ராமுடன் பேசி தொடங்கிவைத்தார். அப்போது ஒரு நிமிடத்திற்கு செல்போன் கட்டணம் ரூ.16 ஆக இருந்தது. அப்படியிருந்த செல்போன் இன்று பரம ஏழைகளுக்குக்கூட அத்தியாவசிய சாதனமாகிவிட்டது. இந்தியாவில் இப்போது 103 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன்கள் புழக்கத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 8 கோடியே 13 லட்சத்து 42 ஆயிரத்து 122 செல்போன்கள் இருக்கிறது.

இந்த நேரத்தில், செல்போன் டவரிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் மூளையில்கட்டி, நரம்புக்கோளாறுகள், மார்பக புற்றுநோய், கருச்சிதைவு, இதயநோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த கதிர்வீச்சின் பாதிப்பால்தான் சிட்டுக்குருவிகள், அணில் போன்ற சின்னஞ்சிறு பிராணிகள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன என்று ஒரு அபாயகரமான தகவல் நாடு முழுவதும் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவுகட்டும் வகையில், நீதிபதி சி.நாகப்பன் இடம்பெற்றுள்ள அந்த பெஞ்சு இந்தப்பிரச்சினை குறித்து மத்திய அரசாங்கம் வருகிற 17–ந் தேதி ஒரு அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். அந்த அறிக்கையில், ‘செல்போன் டவரிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகளால் மனிதகுலத்திற்கோ, பறவைகளுக்கோ, அல்லது மற்ற பிராணிகளுக்கோ, ஏதாவது பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்து அறிவியல் பூர்வ ஆய்வு எதுவும் நடத்தப்பட்டுள்ளதா?, அப்படி நடத்தப்பட்டுள்ளது என்றால், அந்த அறிவியல் ஆய்வின் முடிவுகள் என்ன?, கதிர்வீச்சு இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று செல்போன் டவருக்கு, ஏதாவது அளவை மத்திய அரசாங்கம் வகுத்துள்ளதா?, மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுபார்க்கும்போது, இந்தியாவில் கதிர்வீச்சின் அளவு எந்தளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?, ஏதாவது அந்த அளவுமீறல் நடந்துள்ளதா?, அதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?, சாதாரண மனிதர்களுக்கு, தங்கள் வீட்டின் அருகிலுள்ள செல்போன் டவரில் கதிர்வீச்சு எந்தளவு இருக்கிறது?, நிர்ணயிக்கப்பட்ட அளவில் இருக்கிறதா? என்பதை கொஞ்சம் கட்டணம் செலுத்தியே அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறதா?’ என்பதையெல்லாம் தெரிவிக்கவேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆக, வரும் 17–ந் தேதி மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்போகும் அறிக்கையில், செல்போன் டவரிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சினால் மக்களுக்கும், பறவைகளுக்கும் அபாயம் இருக்கிறதா?, இல்லையா? என்ற பெரிய கேள்விக்கு நிச்சயம் விடைக்கிடைத்துவிடும்.
மத வழக்கப்படி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 13 வயது சிறுமி சாவு விசாரணை நடத்த உத்தரவு

ஐதராபாத்,

மத வழக்கப்படி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 13 வயது சிறுமி இறந்தார். இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.

13 வயது சிறுமி

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் ஆராதனா (வயது 13). 8–ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தந்தை செகந்திராபாத் பாட்பஜார் பகுதியில் பிரபல நகைக்கடை நடத்தி வருகிறார்.

ஆராதனாவை அவருடைய பெற்றோர், உறவினர்கள், அப்பகுதி மக்கள் குழந்தை துறவியாக ஆராதித்து வந்தனர். ஜைன மத வழக்கப்படி அவரை உண்ணாவிரதம் இருக்க அவர்கள் ஊக்குவித்து உள்ளனர்.

பரிதாப சாவு

அதன்படி ‘சந்த்தாரா’ எனப்படும் உண்ணாவிரதத்தை ஆராதனா மேற்கொண்டார். 68 நாட்கள் உண்ணாவிரதத்தை 1–ந் தேதி முடித்தார். அதன் பிறகு 2 நாட்களுக்கு திரவ உணவை மட்டுமே உட்கொண்டார்.

இதனால் ரத்த அழுத்தம் குறைந்து அவருடைய உடல்நிலை மோசமானது. உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் 3–ந் தேதி பரிதாபமாக இறந்தார். ஆராதனா அவருடைய பெற்றோருக்கு ஒரே குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணைக்கு உத்தரவு

சிறுமி சாவு குறித்து அறிந்த குழந்தைகள் நல அமைப்பினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினர். அதன்படி இது பற்றிய விசாரணைக்கு ஐதராபாத் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸ் துணை கமிஷனர் சுமதி கூறுகையில், ஆராதனா இறந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை உண்ணாவிரதம் இருக்குமாறு உறவினர்கள் கட்டாயப்படுத்தி இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூடுதலாக நிர்ணயம் செய்ததாக கூறி விஏஓக்களின் பென்ஷனில் பிடித்தம் கருவூல உத்தரவுக்கு ஐகோர்ட் தடை
dinakaran

மதுரை: கூடுதலாக நிர்ணயம் செய்ததாக கூறி ஓய்வு பெற்ற விஏஓக்களின் பென்ஷனில் பிடித்தம் செய்த கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.   சிவகங்கை மாவட்டம், ஆணையடியைச் சேர்ந்த முத்துராமன், செக்காலை கனகசபாபதி, கண்டதேவி ஜெயப்ரகாஷ் ஆகியோர் விஏஓவாக பணியாற்றி ஓய்வு பெற்றனர். இவர்கள், தேவகோட்டை துணைக்கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியம் நிர்ணயித்தபோது கூடுதலாக நிர்ணயம் செய்துள்ளதாகக் கூறி, பென்ஷனில் முறையே ரூ.1,520, ரூ.1,404, ரூ.1,531, கடந்த ஏப்.1 முதல் பிடித்தம் செய்யப்பட்டது.

ஆனால், இதற்கான உத்தரவு ஜூலை 12ல்தான் வழங்கப்பட்டுள்ளது. உத்தரவிடுவதற்கு முன்பே ெபன்ஷனில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பென்ஷனில் பிடித்தம் செய்த உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இதைப் போன்ற வேறு வழக்கில் ஐகோர்ட் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தேவகோட்டை துணைக்கருவூல அதிகாரியின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...