Thursday, January 12, 2017

கவனம் தேவை!

By ப. இசக்கி  |   Published on : 12th January 2017 01:30 AM  
 
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை நம்பி அப்பாவி பொதுஜனம் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி சேமித்து வைத்திருந்த பணத்தையெல்லாம் வங்கிகளில் செலுத்தியாகி விட்டது.

பிரதமரின் அதிக மதிப்பு செலாவணி செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு, நாட்டில் புழக்கத்தில் இருந்த 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூ.1000 மற்றும் 500-இல் சுமார் 15 லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கு வந்தாயிற்று.
இப்போது பொதுமக்கள் கையில் பணம் இல்லை; ஆனால் வங்கிகளின் கையில் பணப் புழக்கம் ஏராளம்.

வங்கிகள் என்பவை பணக்காரர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், மேட்டுக்குடி மக்களுக்குமே கைகட்டி சேவையாற்றி வந்த நிலையில்தான் 1969 ஜூலை 19 நள்ளிரவில் அவற்றை தேசியமயமாக்கி
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். அன்று அவர் நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் ஆற்றிய உரையில், வங்கிகளை குறிப்பிட்ட நபர்களின் பிடியில் இருந்து விடுவித்தல், விவசாயிகளுக்குத் தேவையான கடன் வழங்குதல் உள்ளிட்ட ஐந்து முக்கிய நோக்கங்களை அறிவித்தார்.
ஆனால் அரை நூற்றாண்டு காலம் ஆகியும் அந்த நோக்கம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
இன்னமும்கூட வங்கிகள் பெரிய தொழிலதிபர்களுக்கும், வணிக கூட்டாண்மை நிறுவனங்களுக்கும் சேவை செய்வதில்தான் ஆர்வம் காட்டுகின்றனவே தவிர சாமானிய ஏழை, எளிய மக்களின் தேவையை பூர்த்தி செய்வதை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. அரசின் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் கூட ஏகப்பட்ட அழுத்தங்களுக்கு பிறகுதான் அரைகுறை மனதுடன் சம்மதம் தெரிவிக்கின்றன.
நாட்டில் உள்ள தனியார் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட 49 வங்கிகளின் கடந்த மார்ச் 2016 வரை வாராக் கடன் ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 929 கோடி. கடந்த 10 மாதங்களில் இந்த தொகை மேலும் அதிகரித்திருக்கும். இந்த வாராக் கடன் பட்டியலில் உள்ள முதல் 20 பெரிய நிறுவனங்களின் கடன் தொகை மட்டும் சுமார் ரூ.1.54 லட்சம் கோடி. அவற்றை வழங்கியவை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்தான்.
இதற்கு காரணம், கடன் வழங்கும்போது கவனக் குறைவு, அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தலையீடு முக்கியமானவை. இந்த வாராக் கடன்களால் வங்கிகளின் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

அதுமட்டுமன்றி வங்கிகளின் நம்பகத்தன்மையே கேள்விக் குறியாகியது.
கடந்த 2000-ஆம் ஆண்டின் பிற்பகுதி முதல் 2010-ஆம் ஆண்டு வரை உலகில் பல நாடுகளை அச்சுறுத்திய பொருளாதார மந்தநிலையில் கூட இந்திய பொருளாதாரமும், வங்கிகளும் தாக்குப் பிடித்தன. அதற்கு காரணம், நம் நாட்டு மக்களின் பாரம்பரிய பண சேமிப்பு முறைதான் என்பது நிபுணர்களின் கருத்து.
இப்போது அந்த சேமிப்பு எல்லாம் செலாவணி செல்லாததாக்கிய அறிவிப்பால் வங்கிகளின் கஜானாவில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றின் சொந்தக்காரர்கள் இனிமேல் அவ்வளவு எளிதில் அவற்றை திரும்ப எடுத்துக் கொள்ள முடியாது.

அப்படியானால் அந்த பணத்தை வங்கிகள் என்ன செய்யப் போகின்றன? கடன்தான் கொடுக்க வேண்டும். ஆனால் அந்த கடன் யாருக்கு போய்ச் சேரும் என்பதுதான் சமானிய மக்களின் அச்சமாக உள்ளது.

முழுக்கால் சட்டை, புறச்சட்டை (கோட்), கழுத்துப்பட்டை அணிந்து குளிரூட்டப்பட்ட அறையில் வங்கி மேலாளருடன் கோடிக்கணக்கில் கடன் கேட்டு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பார் ஒருவர். விவசாயக் கடனுக்காக தங்க நகையை கையில் வைத்துக் கொண்டு கண்ணாடிக் கதவுக்கு வெளியே கால் கடுக்க நின்று கொண்டிருப்பார் ஒரு ஏழை விவசாயி. இது வங்கிகளில் அன்றாட காட்சி.

பெரிய தொழில் நிறுவனங்களுக்குக் கொடுத்த கடனை வசூலிக்க வங்கிகளுக்கு திராணி இருக்காது. ஏழை விவசாயி வாங்கிய கடனுக்காக அவரது புகைப்படத்தையும், விலாசத்தையும் அம்பலப்படுத்தி அவமானப்படுத்துவார்கள்.

இந்த நிலை இனிமேலும் தொடருமா, அல்லது சாமானிய ஏழை, எளிய மக்களின் சேமிப்பு, தேவையுள்ள ஏழை, எளிய மக்களுக்கே கடனாக கிடைக்குமா என்பதுதான் கேள்வி.
வாராக் கடன்களால் வங்கித் துறை சீரழிந்து கொண்டிருந்த நேரத்தில் பிரதமரின் அறிவிப்பு அவற்றுக்கு புதுரத்தம் பாய்ச்சியுள்ளது. வங்கிகளில் கொட்டிக்கிடக்கும் சுமார் ரூ.15 லட்சம் கோடியில் எந்த வகையில் பார்த்தாலும் ரூ.6 லட்சம் கோடிக்கு மேல் இப்போது உரியவர்களால் வெளியே எடுக்க முடியாது. அந்த நிதி என்பது வங்கிகளின் இதுவரையிலான வாராக் கடன் தொகைக்கு நிகரானது.

எனவே, இனிமேல் வங்கிகள் வாராக் கடன் நிதி பற்றாக்குறையால் தள்ளாட வேண்டியது இருக்காது. இந்த உபரி நிதியைக் கொண்டு மீண்டும் புதுக் கடன்களை கொடுப்பார்கள்.

புதுக் கடன் கொடுப்பதில் அரசும், வங்கிகளும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். ஒரு தொழில் நிறுவனம் அல்லது தொழிலதிபர் நாட்டில் எந்த ஒரு வங்கியிலாவது வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்பச் செலுத்தவில்லை என்றால் அவருக்கு இனிமேல் புதுக் கடன் வழங்க முடியாது.

தொழில் நிறுவனத்தின் பெயரில் கடன் பெறும் அதன் உரிமையாளரே அந்த கடனுக்கு முழுப் பொறுப்பு. தொழிலில் இழப்பு ஏற்பட்டாலும் அவரது பிற சொத்துகள் அல்லது தொழில் மூலம் பணம் ஈட்டி கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற நிலை உருவாக வேண்டும்.

மேலும், பெரிய தொழில் நிறுவனங்களின் கடனை வசூலிப்பதில் உள்ள சட்டப் போராட்டங்களைத் தவிர்க்க தேவையான மாற்றங்களையும் உடனே அரசு கொண்டு வந்தால்தான் சமானிய மக்களுக்கு மோடி கொடுத்த வாக்குறுதி உண்மையுள்ளதாக இருக்கும்.

Pranab for mobile dental clinics to address low dentist to patient ratio

By Express News Service  |   Published: 24th December 2016 02:16 AM
HYDERABAD: There are over 300 dental colleges in the country producing around 30,000 dentists annually. But these numbers are somewhat inadequate as the ‘dentist to patient’ ratio is small, particularly in the suburban and rural areas,  President Pranab Mukherjee has said.
Presiding over the convocation ceremony of the Army College of Dental Sciences in Secunderabad on Friday, he said, “As against an already low ratio of 1:8,000 in urban areas, the dentist-to-population ratio is acute in rural areas with one dentist for every 50,000 people. There is need to close the gap between the number of people seeking dental treatment and the number of dentists available.”
He mooted mobile dental clinics for serving the weaker sections in the society.
Lauding the Army Dental College, he said the college had done remarkably well in a short span of time. “From gaining a grade ‘A’ NAAC accreditation to being ranked consistently amongst the top dental institutions in the country, it has brought glory to both the Indian Army and the country,” he said.
“I am happy to find a number of girls amongst the graduating students today. Empowered women make for an empowered society. I wish to see this encouraging feature strengthen further in the coming years,” he said.
The President advised the young graduates to use their knowledge and technical expertise for the welfare of the common man. “With your professional might, contribute to the cause of humanity, and touch and transform the lives of millions,” he exhorted them.
“Good health is a gift of God. It is also earned through the maintenance of a healthy lifestyle.
It is important to regulate our daily routine so that we can enjoy good health throughout our life. Oral health is an important component of the overall health profile of an individual. But not much attention is being paid to this aspect of human well-being.”
Calling upon people to keep their health in good condition, Mukherjee quoted Lord Buddha to say that keeping the body in good health is one’s duty and is essential to keep the mind strong and clear.
Degrees were conferred upon 38 graduating students and nine postgraduates from six specialities of dental surgery.
The President presented the ‘Best Outgoing Student in Bachelor of Dental Surgery (BDS)’ award to Kumari Archana Chauhan and the ‘Best Outgoing Student in Master of Dental Surgery (MDS)’ award to Sagar Dahiya.
He also presented awards to the students who secured first, second and third places in Bachelor of Dental Surgery.

'கையாலாகாத கவர்மென்ட்!' ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் மனக்குமுறல்

ந்த  ஞாயிறு ஒரு புதுமையான விடியலாக இருந்தது மெரினா கடற்கரைக்கு மட்டும் அல்ல தமிழகம் முழுமைக்கும் தான். வழக்கமாக வாக்கிங்  வருபவர்களைத் தாண்டி, வேட்டி கட்டிய இளைஞர்கள் பட்டாளம் கையில் பதாகைகளுடன் மெரினாவைச் சுற்றி வந்தனர். பார்த்தவர்கள் ஏதோ அரசியல்  கட்சிக் கூட்டம் என்று தான் முதலில் நினைத்தனர். ஆனால் வேட்டிகளில் கட்சிக் கரைகள் இல்லை. சாராய வாடை இல்லை, மீடியாவுக்கான நாடகத்தனம்  எவர் முகத்திலும் இல்லை. யாருக்கும்  காத்து  இருக்காமல் அந்த  கூட்டம் நடக்கத் துவங்கியதும்  அது பேரணியாக  மாறியது. ஒன்றும் புரியாமல்  வெலவெலத்துப் போனது  உளவுத்துறை.  செய்வதறியாமல் கைகட்டி நின்றனர் காவல்  துறையினர். ''மத்திய அரசே, ஜல்லிக்கட்டுக்கான  தடையை  நீக்கு'' என்கிற  கோஷம் வங்காள  கடலில் கலந்த போதுதான் தமிழக  அரசியல் கட்சிகள் மீது இளைஞர்கள்  எந்த  அளவுக்கு நம்பிக்கை இழந்துள்ளனர்  என்று  உணர்த்தியுள்ளது. நாடகத்தனமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கட்சிகளுக்கு மாணவர்கள் எதை  உணர்த்த  விரும்புகின்றனர்?
தகரும் நம்பிக்கைகள் 
கடந்த  இரண்டு  மாதங்களாக பல்வேறு  அரசியல் காரணங்களால் உலையில் வைத்த நீராய் மக்கள்  கொதித்துக்கொண்டு  இருக்கின்றனர். அரசியல் கட்சிகளோ  சோற்றுச்சட்டிகள் போல் எந்தச்  சலனமும்  இல்லாமல் இருக்கின்றன. நிலைமை  கைமீறும் போது  எல்லாம் தட்டுகளைக் கொண்டு கொதி  நீரைப் பானைக்குள் தள்ளும்  வேலையை  மட்டும்  செய்து வருகின்றன. ஒரு பிரச்னை  அதற்கான  தீர்வை அதுவே  சென்று  அடையும்போது, அதன்மீது கருத்துக்களை  சொல்லி, இருப்பைத்  தக்கவைத்துக்கொள்ளும்  முறையைத்தான்  இதுவரை தமிழக  அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன. மூன்று வருடம் ஆகிறது ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதித்து. ஆனால்  பொங்கலுக்கு ஒருவாரத்திற்கு  முன்பு தான்  அதுபற்றிப் பேசுவார்கள். பொங்கல் முடிந்ததும் அடுத்த வேலைக்குக் கிளம்பி விடுவார்கள். இதுபோலத் தான் எல்லா பிரச்னைகளிலும். கடந்த  இரண்டு மாதமாக ரூபாய் நோட்டுப்  பிரச்னையால் தவித்து வரும் மக்களுக்கு ஆதரவாக எந்த அரசியல் கட்சியும் முனைப்பான  போராட்டத்தை நடத்தி இருக்கிறார்களா? ஜெயலலிதா மரணத்தின் மர்மம் குறித்து  எந்தக்  கேள்வியும்  எழுப்ப மறுப்பது, சசிகலா  பொதுச்செயலாளர் ஆனது  குறித்துகூட கருத்து கூறாமல் இருப்பது, என்று மக்கள்  கோபம் கொண்டுள்ள கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லாமல், வேறு வழியில் அரசியல் கட்சிகள் பயணத்தை ஆரம்பித்து இருப்பது, அந்தக் கட்சிகள் மீதான நம்பிக்கையை இழக்கச்செய்து, கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதன் ஆரம்பம்தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எந்த அரசியல் கட்சியையும் நம்பாமல் இளைஞர்கள் போராட்டத்தில்  இறங்கியது.
ஜெயலலிதா மரணம் 
அரசியல் கட்சிகளுக்கு எதிராக இளைஞர்கள் இருப்பது ஒன்றும் புது விஷயம் இல்லை. அது இந்த காலகட்டங்களில் அதிகம் ஆவதற்கு காரணம் ஜெயலலிதா  மரணத்தில் உள்ள சந்தேகம். ஜெயலலிதா இருந்த போது அவரை  வெறுத்தவர்களுக்குக் கூட அவரது மரணம் உருகச் செய்தது. அதில் அரசியல் கட்சிகள் காட்டிய  கள்ள மௌனம், அவர்கள் மீதான நம்பிக்கை  உடைய முதல் காரணம். தமிழகத்தில் இருந்த எதிர்க்கட்சிகள் முதல் துக்கடா கட்சிகள் வரை அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அப்போலோ வாசலில் பேட்டி கொடுத்தனர். ஆனால் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு மக்களுக்கு எழுந்த சந்தேகங்களுக்கு எந்தக் கட்சியும் சரியான பதிலை வாங்கிக் கொடுக்கவில்லை.
பணப் பிரச்னை 
பழைய 500 மற்றும்1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாது  என்று மத்திய  அரசு அறிவித்து  2 மாதத்திற்கு  மேல்  ஆகிறது. மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி  வருகின்றனர். ஆனால்  பேருக்கு ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு ஒதுங்கிக்  கொண்டன  அரசியல்  கட்சிகள். தமிழக அரசோ  இது பற்றி  இதுவரை எந்த  அக்கறையும் இல்லாமல் தங்கள்  கட்சிக்கு பொதுச்செயலாளரைத் தேர்ந்து எடுக்கும் வேலையில் மும்மரமாக இருந்தது. இது இந்த குறுகிய காலத்தில் நம்பிக்கையை  இழக்க இரண்டாவது காரணம் 
சசிகலா பொதுச் செயலாளர் 
ஜெயலலிதா மரணத்தில் உள்ள  மர்மங்களை சசிகலா சொல்ல வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆளுநரையே அப்போலோ வாசலில் நிறுத்தியவர்  மக்களின் கேள்விகளை  வீதியில்  நிறுத்திவிட்டு கட்சியின்  பொதுச்செயலாளர்  ஆகி விட்டார். அடுத்து முதல்வராகப் போகிறார். தங்கள்  எண்ணங்களுக்கு  எதிராக ஒரு செயல் வெற்றிபெற்றுக்கொண்டே  செல்வது மக்களிடம்  ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு  எதிராக  யாராவது கேள்வி  கேட்க  மாட்டார்களா  என்று காத்து  இருந்தனர். ஆனால் எதிர்க்கட்சிகளோ  அது  உள் கட்சி  விவகாரம்  நாங்கள்  தலையிட  முடியாது  என்று ஒதுங்கிக்கொண்டனர். ஜெயலலிதா  மரணத்திலும் சசிகலா பொதுச்செயலாளர்  ஆன விஷயத்திலும் அரசியல்  கட்சிகள்  செய்ய வேண்டிய அரசியலை,  செய்யாமல்  ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது நம்பிக்கை  இழக்க  மூன்றாவது  காரணம்.
ஜல்லிகட்டு அரசியல் 
காவிரி தீர்ப்பில் உச்ச  நீதிமன்றத்திற்கு எதிராக கர்நாடக அரசியல்  கட்சிகள்  எல்லாம் பேசுகின்றன. முல்லை பெரியாருக்காக கேரள  அரசியல்  கட்சிகள் உச்சநீதிமன்றத்தை எதிர்க்கின்றன. ஆனால் தமிழகத்தின்  நிலைமையோ ஊழல் வழக்கில் சிறைசென்ற போது தீர்ப்பு சொன்ன நீதிபதி உருவ பொம்மையை எரித்து வீரம் காட்டியவர்கள், தீர்மானம் நிறைவேற்றியர்வர்கள் எல்லாம் காவிரி, முல்லை பெரியார், ஜல்லிக்கட்டு என்று வருகிறபோது ஒழுக்க சீலர்களாக மாறி, சட்டத்தைப் பின்பற்றுவது வேடிக்கை  தான்.  மூன்று வருடங்களாக ஜல்லிக்கட்டுக்கான நாடகத்தை நடத்துகின்றனர் அரசியல்  கட்சிகள்.  ஆனால், ஒரு முன்னேற்றமும் இல்லை. பொறுத்துப்பொறுத்து பார்த்த இளைஞர்கள், இனிமேலும் இவர்களை நம்பினால் எதுவும் நடக்காது என்று புரிந்து கொண்டுதான்  தன்  எழுச்சியாக மெரினாவில் கூடினர். இது  தற்போது அரசியல்  கட்சிகளுக்குப் பெரிய அழுத்தத்தைக்  கொடுத்துள்ளது.
இளைஞர்கள் எழுச்சி  
ஃபேஸ்புக் மூலமாக ஒருங்கிணைத்து ஒரு 250 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்த மெரினா பேரணிக்கு ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் வந்தது, ஒரு சாதாரண  நிகழ்வு கிடையாது. அதைத் தொடர்ந்து மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்  என்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ள எழுச்சிக்குக் காரணம், தமிழக அரசியல் கட்சிகள்தான். இதற்கு முன்னர்,  ஈழப்போரின்போது இதேபோன்ற எழுச்சி, மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது. தற்போது  மீண்டும் அதேபோன்ற ஒரு  நிலைமை தமிழகத்தில் உருவாகி உள்ளது. ஒரு இயக்கம்  மீண்டும்  மீண்டும்  தன்னைப் புதுப்பித்துக்கொள்ள இளைஞர்கள் சக்தி  அவசியம். இளைஞர்களின்  நம்பிக்கையை இழந்துஉள்ள  அரசியல் கட்சிகள்  இந்த  புது  ரத்தத்தைப்  பெற தங்களை மாற்றித் தான் ஆகவேண்டும். ஏன்  என்றால் வரலாற்றில் பெரிய நிகழ்வுகளுக்கு  எல்லாம்  சின்ன  தொடக்கம்  தான் காரணமாக  இருந்துள்ளதை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது. உணர்ந்து செயல்படுவார்களா?.
- பிரம்மா

இந்தியாவிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் கோவை.. எப்படி?

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோவை தேர்வு  செய்யப்பட்டுள்ளது. பெண்களை மரியாதையாக நடத்துவதில் கோவைவாசிகள் சிறந்தவர்கள் என தேசிய குற்றப்பதிவுகள் ஆவணம் (2015ன்படி) தெரிவிக்கிறது. 
நாட்டின் தலைநகரமான டெல்லி நிச்சயம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக அல்ல. அங்கு பாலியல் பலாத்காரம், ஈவ்டீசிங் அடிக்கடி நடக்கும். வர்த்தக நகரமான மும்பையிலும் அதே நிலைதான். இந்தியாவின் இன்டர்நெட் நகரம் என்று  அழைக்கப்படும் பெங்களூருவில், புத்தாண்டு இரவு கொண்டாட்டங்களின் போது பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வீடியோ ஆதாரங்கள் வைரலானது. 
நாட்டில் பெரும்பாலான நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பற்றதாக மாறி வரும் நிலையில், தமிழக நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு மிகுந்ததாக விளங்குவதாக குற்றப்பதிவு ஆவணத்தின் பதிவுகள் சொல்கிறது. 
இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் முக்கிய குற்றங்களை மையமாக வைத்து, குற்றச்செயல்கள் ஆராயப்பட்டது. பாலியல் பலாத்காரம், பலாத்கார முயற்சி, வரதட்சணைக் கொடுமை, பாலியல் தொல்லை, பாலியல் துன்புறுத்தல், கணவர் கொடுமை, கணவரின் உறவினர்களால் கொடுமை போன்ற 7 குற்றச் செயல்களை மையமாக வைத்து ஆய்வு செய்யப்பட்டது. 
பாதுகாப்பான நகரம் கோவை
அதில், இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக கோவை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 53 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக இந்தியாவில் ஜோத்பூர் இருக்கிறது. கோவையில் 0.01 குற்றச் செயல் என்றால் ஜோத்பூரில் 0.54 என பெண்களுக்கு எதிரான குற்றச் செயல் நிகழ்கிறது. 
கோவை முதலிடம் பிடிக்க பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, நன்றாக படிக்க வைப்பது, பொதுவாகவே பெண்களை மரியாதையாக பார்க்கும் கண்ணோட்டம் கோவைவாசிகளிடம் இருக்கிறதாம். பெண்களை மரியாதையாக நடத்துவதிலும் கோவை முதலிடம் பிடிக்கிறது. 
பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை தலைநகர் சென்னை பிடித்திருக்கிறது. ஐந்தாவது இடத்தை திருச்சி 0.03 புள்ளிகளுடன் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முதல் 10 நகரங்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று நகரங்கள் பெற்றுள்ளன. அதே வேளையில் பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில் முதல் 10 இடத்தில் எந்த தமிழக நகரங்களும் இடம் பெறவில்லை என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். இது வேறு எந்த மாநிலத்துக்கும் கிடைக்காத பெருமை.
தமிழகத்தை அடுத்து கேரளத்தைச் சேர்ந்த கண்ணூர், மலப்புரம் பாதுகாப்பான முதல் பத்து நகரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. கண்ணூர் நகரத்தை கேரளத்தின் பீகார் என்பார்கள். வன்முறைக்கு பெயர் போன நகரம். ஆனாலும் பெண்கள் பாதுகாப்பில் கண்ணூர் நகரம் அகில இந்திய அளவில் 4-வது இடத்தைப் பெற்றுள்ளது. 
பாதுகாப்பான நகரங்கள்: கோவை 0.01, சென்னை 0.01, சூரத் 0.3, கண்ணூர் 0.03, திருச்சி 0.03, அகமதாபாத் 0.04, மலப்புரம் 0.05, வதோரா 0.06, ராஜ்கோட் 0.06, கொல்கத்தா 0.07. சென்னை, கொல்கத்தா ஆகிய இரண்டு மெட்ரோ நகரங்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 
பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரங்கள் பட்டியலில் ராஜஸ்தானின் ஜோத்பூர் 0.54 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லி 0. 47 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. பாட்னா, கேட்டா, குவாலியர், அசன்சால், விஜயவாடா, பரீதாபாத், மீரட், ஜெய்ப்பூர் நகரங்கள் முதல் பத்து இடங்களில் உள்ளன.

4 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த என்கவுன்டர்!

நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் ரவுடி ஒருவரை காவல்துறையினர் என்கவுன்டர் மூலம் சுட்டுக்கொன்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சமூகவிழாவின் பாதுகாப்புக்காக சென்ற எஸ்.ஐ. ஆல்வின் சுதனை திருப்பாச்சேத்தியைச் சேர்ந்த ரவுடிகள் குத்திக் கொலை செய்தனர். இதைத்தொடர்ந்து அப்போது மானாமதுரை டி.எஸ்.பி.யாக இருந்த வெள்ளத்துரை தலைமையிலான டீம் கொலையாளிகள் மூவரையும் சுட்டுகொன்றது. அதற்கு பின் சிவகங்கை மாவட்டத்தில் ரவுடியிசம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் சமீபகாலமாக சமூக விரோதிகள் மீண்டும் பல குற்ற செயல்களில் ஈடுபட, சிவகங்கை மாவட்டம் மீண்டும் குற்ற தேசமாக மாறிப்போனது. இந்த நிலையில்தான் இன்று காலை கார்த்திகைசாமி என்பவரை என்கவுன்டரில் போலீஸ் போட்டுத்தள்ளியுள்ளது. இதனால் சிவகங்கை வட்டாரம் பதற்றத்துக்குள்ளானது.
இது பற்றி நம்மிடம் கூறிய காவல்துறையினர், "இன்று அதிகாலையில் மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் சாலையில் ரவுடிக் கும்பல் ஒன்று வாகனத்தில் வந்தது. வருகிற வழியில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் கேட்ட  பங்க் ஊழியரை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றது. உடனே இச்சம்பவம் போலீஸ் கவனத்துக்கு வர, உயர் அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் லோக்கல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த சிவகங்கை காவல்துறையினர்  கொள்ளை கோஷ்டியை மடக்கினர். பயங்கர ஆயுதங்களுடன் இருந்த ரவுடிகும்பல், வேல்முருகன் என்ற போலீஸ்காரரை கடுமையாக  அரிவாளால் வெட்டியது. இன்னும் இரண்டு காவலர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. வேல்முருகனுக்கு கை சுண்டுவிரலிலும், முகத்திலும் காயம் ஏற்பட்டது. தாக்கிவிட்டு ரவுடி கும்பல் தப்பி ஓடிவிட்டது. போலீஸார் தாக்கப்பட்டது தொடர்பாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் அதிகாரிகள் விரைந்து வந்து அந்த கும்பலை பிடிக்க முயற்சி செய்தனர்.
மானாமதுரை அருகே புதுக்குளம் முந்திரிதோப்பில் அவர்கள் பதுங்கியுள்ளதை கண்டுபிடித்த போலீஸார் அங்கு அவர்களை பிடிக்க சுற்றி வளைத்தனர். அங்கும் போலீஸ் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தனர். அதற்குபிறகு  வேறு வழியில்லாமல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார்த்திகை சாமி என்ற ரவுடி கொல்லப்பட்டார்" என்கிறார்கள்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை எஸ்.பி. ஜெயச்சந்திரன்,  "தற்பாதுகாப்புக்காகத்தான் காவல்துறையினர் துப்பாக்கிச்  சூடு நடத்தியுள்ளனர். அதில் ரவுடி கார்த்திகைசாமி காயமடைந்ததும், அவரை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி வந்தனர். இங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த கார்த்திகை சாமி மீது மதுரை, திருப்பூர், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை என 32 வழக்குகள் உள்ளன" என்றார்.
காவல்துறை இப்படி கூறினாலும், அப்பகுதி மக்களோ இது திட்டமிட்ட என்கவுன்டர் கொலை என்று புகார் கூறுகிறார்கள்.
- செ.சல்மான்

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க 10 டிப்ஸ்! 

   #ControlDiabetes​


ஏதோ ஓர் உடல்நலக் கோளாறு. மருத்துவரிடம் செல்கிறார் ஒருவர். அவருக்கு வயது 40-ஐத் தாண்டியிருந்தால், மருத்துவர் கேட்கும் முதல் கேள்வி... 'சுகர் இருக்கா?’ என்பதுதான். இன்றைக்கு 35 வயதைக் கடந்துவிட்டாலே சர்க்கரைநோய் இருக்குமோ என்கிற சந்தேகம் பரவலாகிவருகிறது. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. மாறிவரும் வாழ்க்கை முறை, முறைப்படுத்தப்படாத உணவு முறை, மன அழுத்தம்... என எத்தனையோ காரணங்களை அடுக்கலாம். இதுவே சர்க்கரைநோய்க்கு ஆளானவர்களாக இருந்தால், 'பால் சேர்க்காதீங்க... பழம் சாப்பிடாதீங்க’ என உடன் இருப்பவர்களிடம் இருந்து அசால்ட்டாக வந்துவிழும் அட்வைஸ் மழை! ஆரம்பகட்ட நிலையில் இருந்தாலும் சரி, காலையில் பல்துலக்கும் காரியம்போல இன்சுலின் ஊசியைப் போட்டுக்கொள்ளும் அபாயகரமான நிலையில் இருப்பவராக இருந்தாலும் சரி... சிலவற்றைச் சாப்பிடுவதன் மூலமாகவே சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு சாப்பிடவேண்டிய உணவுப் பொருட்கள், மூலிகைகள், உணவுகள் 10 இங்கே...


1. வெந்தயம்
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பாக்கி, பித்தத்தை முறிக்கும். இரவில் ஊறவைத்த வெந்தயத்தை, காலையில் நீருடன் சேர்த்து குடிக்கலாம். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீர் ஊற்றிக் கொதிக்கவைத்து, ஆறிய பின்னர் அந்தக நீரை குடிக்கலாம். முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.
சர்க்கரை
2. நெல்லிக்காய்
ரத்தத்தில் கலக்கும் இன்சுலினை, சிறந்த முறையில் கிரகிக்க நெல்லிக்காய் உதவுகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் சாற்றை, அதைவிட நான்கு மடங்கு நீருடன் சேர்த்து அருந்தலாம்; ஆனால், வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது.
3. பட்டை
டைப் 2 சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து. இன்சுலின் உடலில் சீராகச் சுரக்க உதவும். சர்க்கரையின் அளவைக் குறைக்கும். ஒரு டீஸ்பூன் பொடியைத் தண்ணீரில் கலந்து, இரண்டு வேளை உட்கொண்டு வரலாம். அரை டீஸ்பூன் பட்டை தூளை ஒன்றரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து, அந்த நீரை ஆறிய பின்னர் குடிக்கலாம்.
4. நாவல்பழம்
நாவல்பழத்தில் உள்ள துவர்ப்புத் தன்மை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். கணையத்தைச் சீராக்கிப் பாதுகாக்கும். பித்தத்தைத் தணிக்கும். நாவல் விதைப் பொடியை ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து இரண்டு வேளை குடிக்கலாம். நாவல் பழத்தின் சாற்றை தினசரி குடிக்கலாம். தொடர்ந்து நாவல் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை, இதயத்தின் தசைகள் வலுவாகும்.
5. பாகற்காய்
சர்க்கரைநோய்க்கு பாகற்காய் சிறந்த மருந்து. இது, கணையத்தில் உள்ள பீட்டா செல்களை புத்துயிர் பெறச் செய்கிறது. பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட், கண்நோய் வராமல் காக்கும். தினசரி பாகற்காய்ச் சாற்றை வெறும் வயிற்றில் அருந்தலாம். அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு கப் பாகற்காய் சூப், அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகி, தோல் பளபளப்பாகும்.
6. வேம்பு
சிறந்த கிருமி நாசினி; பூச்சிக்கொல்லி; பக்க விளைவு இல்லாத சர்க்கரைநோய் மருந்து. தேவையான இன்சுலினைச் சுரக்க உதவும். வேப்பம் பூவை உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். வாரம் ஒருமுறை வேப்பம் பூ ரசம் சாப்பிடுவது நல்லது. பித்தத்தை குணப்படுத்தும்.
7. துளசி
துளசியில் உள்ள துவர்ப்பு, சர்க்கரைநோய்க்கு சிறந்த மருந்து. இது கணையத்தில் உள்ள பீட்டா செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கும். மேலும், இன்சுலின் சுரப்பைச் சீராக்கும். தினமும் 10-15 துளசி இலைகளைச் சாப்பிடலாம்.
8. ஆவாரை
ஆவாரை ஒரு சிறந்த ஆன்டிபயாட்டிக். தினசரி ஐந்து ஆவாரம் பூவை மென்று சாப்பிட்டு வர, சர்க்கரையின் அளவு குறையும். ஆவாரைப் பொடியை பால் அல்லது நீருடன் சேர்த்துக் குடிக்கலாம். ஆவாரம் பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து வெயிலில் காயவைத்து தூள் செய்து, அதில் நீர் ஊற்றி, கஷாயம் செய்ய வேண்டும். கஷாயத்தைப் பாலுடன் சேர்த்துப் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
9. மஞ்சள்
மஞ்சள், சிறந்த ஆன்டிபயாட்டிக். இதில் உள்ள குர்குமின் காயத்தை ஆற்றும். இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். புற்றுநோயைத் தடுக்கும். இரண்டு சிட்டிகை மஞ்சள் தூளை, சூடான நீர் அல்லது பாலுடன் கலந்து கொதிக்கவைத்துக் குடிக்கவும்.
10. அத்திப்பழம்
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது இன்சுலின் சுரப்பைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. ரத்த விருத்தியை அதிகரிக்கும். உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தரும். தினசரி அத்திப் பழப் பொடியை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டுவர, ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம்.
கவனிக்க...
இந்த மூலிகைகளை தினசரி எவ்வளவு எடுக்கலாம் என சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, பின்பற்ற வேண்டியது அவசியம்.
மூலிகைகளை உணவாக காலையும் இரவும் சாப்பிட்டுவர சர்க்கரைநோயால் ஏற்படும் பக்க விளைவுக்கான வாய்ப்பு குறையும்
சர்க்கரை அளவு குறைந்துவிட்டது என்று, சர்க்கரை நோய் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுப்பதை நிறுத்த வேண்டாம். மருத்துவர் ஆலோசனையிபடி மட்டுமே சர்க்கரை நோய்க்கான மருந்துகளை குறைப்பது அல்லது நிறுத்துவதை மேற்கொள்ள வேண்டும்.

- ச.மோகனப்பிரியா

உங்கள் அதிகாரம் மொத்தமும் பறிபோய்விடும்!' - கார்டன் தூதுவரிடம் மனம் திறந்த ஓ.பன்னீர்செல்வம்

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்குப் போட்டியாக தொடர் கடிதங்களை எழுதி வந்த சசிகலா, தற்போது நிதானமாகச் செயல்பட்டு வருகிறார். 'கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்துக்குள் நூறு சதவீத அதிகாரத்தைக் கைப்பற்றும் வேலையில் நீங்கள் இறங்கினால், இருக்கும் அதிகாரங்களும் பறிபோய்விடும்' என சசிகலா தூதுவரிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். 
அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, கோட்டையை நோக்கிப் பார்வையை திருப்பினார் சசிகலா. அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்பட கட்சியின் சீனியர்கள் அனைவரும் ஒரே குரலில், 'முதல்வர் பதவியில் சசிகலா அமர வேண்டும். பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும்' எனப் பேசி வந்தனர். இதற்கு பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து எந்த அசைவுகளும் இல்லை. 'தங்களிடம் அடங்கி இருந்தவர், எஜமானன் போல் செயல்படுவதா?' எனக் கோபத்தைக் காட்ட ஆரம்பித்தார் சசிகலா. மீனவர் பிரச்னை உள்பட தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னைகள் குறித்து பிரதமருக்குக் கடிதம் எழுதினார் பன்னீர்செல்வம். அதே கோரிக்கைகளை வலியுறுத்தி சசிகலாவும் கடிதம் எழுதினார். ஆட்சியில் இருந்தும் கட்சியில் இருந்தும் ஒரே கோரிக்கைக்காக இரண்டு பேர் கடிதம் எழுதியதை ஆச்சரியத்தோடு கவனித்தனர் அரசியல் விமர்சகர்கள். "அதிகாரத்தில் இருந்து விலகும் முடிவில் பன்னீர்செல்வம் இல்லை என்பதை அறிந்தபிறகுதான், நேரடியாகவே எதிர்ப்பை வெளிக்காட்டினார் சசிகலா. இந்தியா டுடே மாநாட்டில் பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருக்கும்போதே மேடையில் இருந்து வெளியேறினார். 'பொங்கலுக்குள் முதல்வர் ஆகிவிட வேண்டும்' என்ற அவருடைய திட்டமும் கை நழுவிவிட்டது. 'அவர் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்?' என உளவுத்துறையின் உயர் அதிகாரி மூலம் தூது அனுப்பினார் சசிகலா. நேற்று அந்த அதிகாரியிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் ஓ.பி.எஸ்" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.
"ஆட்சி அதிகாரத்துக்குள் மத்திய அரசின் ஆதிக்கம் குறித்து அதிகாரியிடம் விளக்கினார் பன்னீர்செல்வம். நீண்ட நேரம் நடந்த விவாதத்தில், தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து கலங்கிய கண்களோடு விவரித்தார். 'கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டுத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். அரசின் கொள்கை முடிவுகளை கார்டன் ஆலோசனையின்படியே எடுத்து வருகிறோம். பாடநூல் கழகத் தலைவர் பதவிக்கு வளர்மதி பெயரை சின்னம்மா முன்மொழிந்தார். உடனே பதவியை வழங்கினோம். 'முதல்வர் பதவியில் இருந்து நான் விலக வேண்டும்' என்று அவர்கள் வற்புறுத்துகின்றனர். இந்தப் பதவியில் நான் இருப்பதால்தான், அதிகாரம் சீராகச் சென்று கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கு இணக்கமாக நடந்து கொண்டு பல திட்டங்களைக் கொண்டு வர முடிகிறது. முதலமைச்சராக சின்னம்மா வந்துவிட்டால், இருக்கும் மொத்த அதிகாரத்தையும் பறித்துவிடுவார்கள். கோட்டையில் நடக்கும் விவகாரங்களை ஆளுநர் கவனித்துக் கொண்டு வருகிறார். அதிகாரத்துக்குள் குழப்பம் வந்துவிட்டால், ஆட்சி கைவிட்டுப் போய்விடும். நமக்கு அடுத்தபடியாக இருக்கும் தி.மு.கவுக்குத்தான் வாய்ப்பு போகும்.
Sasikala
தி.மு.க தலைவருக்கும் ஸ்டாலினுக்கும் ஆளுநர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததையும் கவனியுங்கள். குடியரசு தினத்தில் என்னைக் கொடியேற்றுமாறு ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார். அதற்குள் நீங்கள், 'முதல்வர் பதவி; மந்திரி சபை பட்டியல்' என ஆளுநரிடம் போய் நின்றால், விளைவுகள் வேறு மாதிரி ஆகிவிடும். அனைவரையும் அரவணைத்துக் கொண்டு ஆட்சியை செலுத்திக் கொண்டிருக்கிறேன். எதார்த்த நிலைகளை தயவு செய்து உணர்ந்து கொள்ளுங்கள். இதையும் தாண்டி நீங்கள் வருவதாக இருந்தால், அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன். எந்த மாதிரியான சூழலில் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்பதை நேரில் அமர்ந்து பார்த்துக் கொள்ளுங்கள். என்னுடைய சொந்த மாவட்டத்திலேயே எனக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார் தங்க தமிழ்ச்செல்வன். அதிகாரத்தில் இருந்து நான் விலகிவிட்டால், அங்கு தலைகாட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும்' என சசிகலாவிடம் தெரிவிக்க வேண்டிய தகவல்களைக் கூறியிருக்கிறார் ஓ.பி.எஸ். இந்தத் தகவல்களை கார்டன் வட்டாரத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் அந்த அதிகாரி. கார்டன் தரப்பில் இருந்து எந்த வார்த்தைகளும் வெளிப்படவில்லை" என்றார் விரிவாக. 
"பன்னீர்செல்வத்தை வழிக்குக் கொண்டு வருவது குறித்து மன்னார்குடி உறவுகள் தீவிரமாக விவாதித்து வருகின்றன. 'லெக்சஸ் கார் இறக்குமதி வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்' என ம.நடராசன் வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்த வழக்கை தீவிரமாகக் கையாண்டு வருகிறது அமலாக்கத்துறை. டி.டி.வி.தினகரன் மீதான பணப் பரிவர்த்தனை வழக்கும் சிக்கலை அதிகப்படுத்தியிருக்கிறது. சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் அளித்த வாக்குமூலங்களில் தமிழக அமைச்சர்களும் கார்டன் புள்ளிகளும் வகையாகச் சிக்கியுள்ளனர். மத்திய நிதித்துறையில் இருந்து உத்தரவு வந்தால், மீண்டும் ரெய்டு நடவடிக்கைகள் தொடங்கும். முதலமைச்சர் நாற்காலியை நோக்கி சசிகலா சென்றால், சேகர் ரெட்டியின் வாக்குமூல அடிப்படையில் பல புள்ளிகள் சிக்குவார்கள். இதையெல்லாம் உணர்ந்துதான், முதல்வர் முழக்கத்துக்கு தற்காலிக தடை போட்டிருக்கிறார் சசிகலா" என்கிறார் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

DM arrives late, sparks min’s fury, reprimand

DM arrives late, sparks min’s fury, reprimand  Neha.Lalchandani@timesofindia.com  28.03.2026 Lucknow : Made to wait for 45 minutes by the di...