Thursday, February 2, 2017


குளிர்பானம்... வயிற்றைக் குப்பையாக்கும்! நலம் நல்லது-59 #DailyHealthDose



கோடை காலம் நெருங்கிவருகிறது. கோடையை, இப்போதெல்லாம் அன்றில் பறவை வந்து அறிவிப்பது இல்லை; குளிர்பான கம்பெனிகள்தான் கூவிக் கூவி அறிவிக்கின்றன. உண்மையில், இந்த வெப்ப காலத்தில் நமக்குக் கூடுதல் தண்ணீர்தான் அவசியத் தேவையே தவிர, குளிர்பானம் அல்ல. நம் உடலில் இருந்து கழிவாக வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை, நம் ஊரில் களவாடிய தண்ணீரிலேயே கலந்து, அதில் கூடுதல் சர்க்கரை, உப்புடன் கூடுதல் சுவை ஊட்டியாக குடிப்பவர்களுக்குத் தெரியாத, அடிமைப்படுத்தும் ரசாயன ‘வஸ்து’வைக் கலந்து கொடுக்கும் திரவம், இந்தப் புவியையும் நம்மையும் வெப்பப்படுத்துமே தவிர, குளிர்விக்காது.



‘வெளியே போ’ என நம் உடல் விரட்டும் வாயுவை, நன்றாக ஏப்பம் வருகிறது என பிரியாணிக்குப் பிறகு குளிர்பானம் அருந்தும் பழக்கம் இருந்துகொண்டே இருக்கும்வரை, நம்மை ஏப்பமிடும் வணிகமும் இருந்துகொண்டேதான் இருக்கும். குளிர்பானம், ஏப்பம் மட்டும் தராது, ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) எனும் எலும்பில் சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டில் இருந்து, ‘ஏன்ஜைனா பெக்டாரிஸ்’ (Angina Pectoris) எனும் இதயவலியையும் தரும் என்கிறது உணவு அறிவியல்.

குளிர்பானம் தவிர்க்க என்ன செய்யலாம்?

* உக்கிரமான கோடை காலத்துக்கு என எண்ணெய்க் குளியலுடன் சம்பா அரிசி வகைகளையும் எள்ளையும் உளுந்தையும் சாப்பிடச் சொல்லிப் பரிந்துரைத்தார்கள் நம் முன்னோர். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில், சூழல் மீது நாம் நடத்தும் வன்முறைகளால், புவியின் வெப்பம் மேலும் மேலும் உயர்ந்துவருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் `மாலத் தீவுகளைக் காணோம்; நியூசிலாந்தைக் காணோம் என்று சொல்லும் நிலை வரலாம்’ என எச்சரிக்கிறார்கள் சூழலியலாளர்கள். வெப்பத்தில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளும் அதே வேளையில், இந்தப் பூமியையும் காப்பாற்றியாக வேண்டியிருக்கிறது.

* பதநீர், இளநீர், மோர், நன்னாரி பானங்கள் ஆகியவையே நமக்கான கோடைக் கேடயங்கள். உடல் சோர்வு உடனடியாகத் தீர பானகமோ, கருப்புச் சாறோ போதும். நீர்த்துவம் உடலில் குறைந்து சிறுநீர்ச் சுருக்கு ஏற்படுவதற்கு, லேசான அமிலத் தன்மையுடன் உடலைக் குளிர்விக்கும் புளியைக் கரைத்து பனைவெல்லம் கலந்து உருவாக்கப்படும் பானகம் அருமருந்து.



* கோடைக்கு புரோபயாட்டிக்காக இருந்து குடல் காக்கும் மோரும், சிறுநீரகப் பாதைத் தொற்று நீக்கும் வெங்காயமும், இரும்பு, கால்சியம் நிறைந்து உடலை உறுதியாக்கும் கம்பங்கூழும் போதும்... எத்தனை உக்கிரமான அக்னி நட்சத்திரத்தையும் சமாளித்துவிடலாம். இந்தப் பொருட்கள், வெம்மையால் வரும் அம்மை நோயையும் தடுக்கும்.

* கோடை காலத்தில் அம்மை, வாந்தி, பேதி, காமாலை, சிறுநீரகக் கல், கண்கட்டி, வேனல் கட்டிகள், வேர்க்குரு... போன்ற வெப்பத்துக்கான பிரதிநிதிகள் விருந்தாளிகளாக வந்து போகலாம். இருந்தாலும், குளியல் முதல் தூக்கம் வரை நாம் க்டைப்பிடிக்கும் சிற்சில நடவடிக்கைகள் மூலம் அவற்றைச் சமாளிக்க முடியும். வாரத்துக்கு இரண்டு நாட்கள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளியல், மீதி நாள் தலைக்குக் குளியல். எள்ளுத் துவையலுடன், தொலி உளுந்து (முழு உளுந்து) சாதம், கம்பங்கூழ் - சிறிய வெங்காயத்துடன் வாழைத்தண்டு, மோர் பச்சடி, வெள்ளைப் பூசணி-பாசிப்பயறு கூட்டு, உளுந்தங் களி, வெந்தயக் களி, முழு உளுந்து போட்டு ஆட்டிய மாவில் தோசை... எனச் சாப்பிடுங்கள்.

* தர்பூசணிச் சாற்றுடன் மாதுளைச் சாறு கலந்து அருந்தி தாகம் தணிக்கலாம். மோருக்கும் இளநீருக்கும் இணையான கனிமமும் வைட்டமினும் கலந்த பானங்கள் செயற்கையில் கிடைக்காது; அதாவது, குளிர்பானம் அந்த அருமை இல்லாதது.

* உறங்குவதற்கு முன்னர் ஒரு குளியல் போடுங்கள். அக்குள் போன்ற உடலின் மடிப்புப் பிரதேசங்களில் படர்ந்திருக்கும் வியர்வைப் படிமத்தை அழுக்குப் போக தேய்த்துக் குளியுங்கள்.



பருவத்தை ஒட்டி வாழச் சொன்னது நம் பாரம்பர்யம். பொருளை ஒட்டி வாழச் சொல்வது நவீனம். உணவில் அரை டீஸ்பூன் காரம் அதிகமாகிவிட்டால் நாம் என்ன ஆட்டம் ஆடுகிறோம்? ஆனால், தினமும் சில மில்லியன் ரசாயனங்களை கடலிலும், காற்றிலும், பூமியின் வயிற்றிலும் கொட்டிவிட்டு, உடல் சூடு தணிக்க, `குற்றாலத்துக்குப் போறேன்; குன்னூருக்குப் போறேன்’ என உல்லாச உலா செல்வது நியாயமா? அங்கேயும் போய் வயிற்றைக் குப்பையாக்க, குளிர்பானம் அருந்துவது தகுமா?

புவி மீதான நம் அக்கறை அதிகரிக்காவிட்டால், நாம் எதிர்பார்க்காத வேகத்தில் அந்த மலை வாசஸ்தலங்களும் மரணித்துவிடும். அதனால், கோடை காலத்தில் கேட்டு வாங்கிப் பருகுவோம் நீர் மோரையும் பானகத்தையும்! குளிர்பானம்..? கோடைக்கு மட்டுமல்ல எந்தக் காலத்துக்கும் அது நமக்கு வேண்டாம். ‘ஆளை விடுறா சாமி...’ என்று அதைத் தலைதெறிக்க ஓடவைப்போம்!

தலைவலி, உடல்வலிக்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் கவனிக்க!

- பாலு சத்யா

DOCTOR VIKATAN

மெடிக்கல் ஷாப்பில் போய் நின்று, `தலைவலி, உடல்வலி... மாத்திரை ஏதாவது கொடுங்க’ என்கிறார் கிராமத்துப் பெண்மணி ஒருவர்; `ஃபீவரிஷ்ஷா இருக்கு... பேரசிட்டமால் ஒண்ணு குடுங்களேன்’ என்கிறார் படித்த இளைஞர் ஒருவர். இந்த விஷயத்தில் இருவருக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. நோய், உடல்நலக் குறைபாடு எதுவாக இருந்தாலும், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தையும் சாப்பிடக் கூடாது. இது அலோபதி தொடங்கி இயற்கை வைத்தியம் வரை அத்தனைக்கும் பொருந்தும். சிலர், மருந்துக்கடையில் வேறு யாருக்காவது மாத்திரை, மருந்து வாங்குவார்கள். `முதுகுல வலி’ என்பார்கள். மருந்துக்கடைக்காரருக்கு, அந்த மருந்தைச் சாப்பிடப்போவது ஆணா, பெண்ணா, குழந்தையா, எத்தனை வயது என்று எதுவும் தெரியாது. ஆனாலும் மருந்தைக் கொடுத்துவிடுவார். அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு அவர் பொறுப்பாக மாட்டார். பல நாடுகளில் டாக்டரின் மருந்துச்சீட்டு இல்லாமல் எந்த மருந்தையும் வாங்க முடியாது. தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டால் வாகனம் ஓட்டக் கூடாது. மீறி ஓட்டினால் அபராதம் விதிக்கிறார்கள் சில நாடுகளில்! ஆனால், இந்தியாவில் இப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லாததே மருந்துக்கடைகளில் தானாக மருந்து வாங்கிச் சாப்பிடும் கூட்டம் அதிகரிப்பதற்கான காரணம்.



ஒரு காலத்தில், `பாட்டி வைத்தியம்’ என ஒரு வழக்கம் இருந்தது. `குழந்தை சாப்பிட மாட்டேனு அடம் பிடிக்குது’ என வந்து நிற்பார் தாய். அந்த வீட்டில் உள்ள பெண்மணி, `மாந்தமா இருக்கும்’ என்று சொல்லி, கைவைத்தியம் ஒன்றைப் பரிந்துரைப்பார். மாலைக்குள் குழந்தை அம்மா உருட்டிக்கொடுக்கும் கவளச் சோற்றை ஆசை ஆசையாகச் சாப்பிட ஆரம்பித்துவிடும். அந்த பாட்டி வைத்தியம்கூட தங்கள் அனுபவத்தில் கண்ட வைத்தியத்தை யாரோ யாருக்கோ சொல்லி, செவிவழியாகக் கற்றவைதான். ஆனாலும், அது சிறுசிறு உடல் பிரச்னைகளுக்கு தீர்வு தந்தது. பாட்டி வைத்தியம் வழக்கொழிந்து போனாலும், இன்றைக்கு வீட்டுக்கு ஒரு டாக்டர் இருக்கிறார் என்று அடித்தே சொல்லலாம். அதாவது, சின்னத் தீக்காயம் தொடங்கி, இதய நோய் வரைக்கும் ஆலோசனை சொல்பவர்கள்! இவர்கள் தங்கள் ஆலோசனைக்கு ஆதாரமாக வைத்திருப்பவை... சில மருத்துவப் புத்தகங்கள்; வார, மாத இதழ்களில் வெளியான மருத்துவத் துணுக்குச் செய்திகள்; யாரோ சொல்லிக் கேட்ட சிகிச்சை முறைகள்... முக்கியமாக கூகுள் தேடல்!

`டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு...!’ எனச் சொல்லிக்கொண்டு இணையத்தில் மேய்ந்து, பித்தப்பை கற்களுக்கான உணவுகளில் இருந்து, கேன்சருக்கான கீமோதெரப்பி வரை புள்ளிவிவரங்களை சேகரித்து வைத்திருப்பார்கள். பித்தப்பைக் கல்லா, சிறுநீரகக் கல்லா என்பது தெரியாமலேயே `கல்லுக்கு வாழைத்தண்டு கண்கண்ட மருந்துப்பா...’ என ஆலோசனை சொல்வார்கள். இவர்களிடம் இருந்து விலகி இருப்பதே நம் ஆரோக்கியத்துக்கு நல்லது. நேரடியாகச் சந்திக்கும்போதுதான் நோயாளிக்கு என்ன பிரச்னை என்பதை டாக்டரால் புரிந்துகொள்ள முடியும். நோயாளியின் வயது, உடல்நிலை, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, நோயின் தாக்கம் எல்லாவற்றையும் கணக்கிட்டுத்தான் டாக்டர், நோயாளிக்குச் சரியான மருந்தைப் பரிந்துரைப்பார். அது எந்த மருந்தாக இருந்தாலும் சரி, மாத்திரையாக இருந்தாலும் சரி... தேவையில்லாமல் நம் உடலுக்குள் செல்லும்போது பல பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். வாந்தி, வயிற்றுப் புண் வரும்; சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்; எலும்பு மஜ்ஜை பிரச்னையைக்கூட உண்டாக்கும்.



வீட்டில் யாருக்கோ தலைவலி என்று மருத்துவர் ஒரு மருந்தை எழுதிக் கொடுத்திருப்பார். வீட்டில் யாருக்கு தலைவலி வந்தாலும், அதே மருந்தைச் சிலர் கொடுப்பார்கள். இதுவும் தவறு. அதேபோல, ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் பிரச்னைகளுக்கு வீட்டில் உள்ள ஒருவர் சாப்பிடும் மருந்தையே அனைவரும் சாப்பிடுவதும் தவறு. இது, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பெரிய பிரச்னைகளுக்குக்கூட வழிவகுத்துவிடும். மாத்திரைகள் நான்கு வகை... சத்து மாத்திரை, கிருமிகளைக் கொல்பவை (Antibiotic), ஆன்டி அலர்ஜிக், வலி நிவாரணி! இவற்றில் எந்த மாத்திரையாக இருந்தாலும், தேவையில்லாமலோ அதிக அளவிலோ சாப்பிட்டால், பல பக்க விளைவுகள் ஏற்படும். சத்து மாத்திரைகள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்துபவை. ஆன்டிபயாடிக், செரிமானக் கோளாறுகளையும் வயிற்றுப் பிரச்னைகளையும் உண்டாக்குபவை. ஆன்டி அலர்ஜிக், தூக்கம், மயக்கம், சோர்வைத் தருபவை. வலி நிவாரணிகள், வயிற்றுப் புண், சிறுநீரகப் பாதிப்பு, ரத்தம் உற்பத்தியாவதில் பிரச்னைகளை ஏற்படுத்துபவை.

சிலர் டாக்டரிடம் வரும்போதே, `டாக்டர்... எனக்கு வந்திருக்கிறது சாதாரண ஜுரம் மாதிரி தெரியலை. எதுக்கும் ஒரு பிளட் டெஸ்ட் எடுத்துப் பாத்துரலாமா?’ என்பார்கள். இல்லையென்றால், `போன தடவை குடுத்தீங்களே ஒரு மாத்திரை அது கேட்கவே மாட்டேங்குது... 500 எம்.ஜியா எழுதிக் குடுங்க டாக்டர்...’ என்பார்கள். இப்படி அதீத ஆர்வம், எதற்கெடுத்தாலும் சந்தேகம் என்பது சிகிச்சை கொடுக்கும் மருத்துவருக்குத்தான் சிக்கலை ஏற்படுத்தும். மருத்துவரிடம் சந்தேகம் கேட்பது இருக்கட்டும்... என்ன பிரச்னை, என்ன சிகிச்சை கொடுக்கிறார் என்பதை நோயாளிக்கு மருத்துவர் தெரிவிக்கவேண்டியதும் மருத்துவரின் கடமையே!



இன்னொரு விஷயம்... காய்ச்சல் என்று மருத்துவரிடம் போகிறோம். அவர், குறிப்பிட்ட காலத்துக்கு (ஒரு கோர்ஸ்) சாப்பிடச் சொல்லி மருந்துகளைப் பரிந்துரைத்திருப்பார். சிலர் காய்ச்சல் குணமானவுடன் மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிடுவார்கள். இதுவும் தவறு. டாக்டர், கிருமிகளைக் கொல்வதற்காகவே மருந்து கொடுத்திருப்பார். இடையில் நிறுத்தினால், கிருமி வளரும்; மறுபடியும் அதே காய்ச்சல் வரும். அதோடு, அந்த மருந்துக்கு எதிராகச் செயல்படும் தன்மையையும் அந்தக் கிருமி பெற்றுவிடும். பல ஆண்டுகளாக மருத்துவர்-நோயாளி ஜோக்குகளை பத்திரிகைகள் வெளியிட்டு தீர்த்துவிட்டன. இப்படியான நகைச்சுவைகள் இன்றைக்கும் அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபிபோல் நிஜ வாழ்க்கையிலும் தொடர்ந்துகொண்டே இருப்பதுதான் சுவாரஸ்யமும் வருத்தமும் தரும் செய்தி. சுயவைத்தியம் என்பது மருத்துவரைத் தவிர வேறு யாரும் செய்துகொள்ளக் கூடாதது. அதிலும், சில சிகிச்சைகளை மருத்துவர், தனக்குத் தானே செய்துகொள்ளவும் முடியாது.

இப்படி நாம் ஒவ்வொருவருமே தெரிந்துகொள்ளவேண்டிய, பின்பற்றவேண்டியவை மருத்துவத்தில் அநேகம். ஒருவர் நெஞ்சு கரிக்கிறது என்று சொல்லி ஒரு டாக்டரிடம் போகிறார். டாக்டர் அவரை ஈ.சி.ஜி எடுக்கச் சொல்லி, அவருக்கு இதயத்தில் பிரச்னை இருப்பதை உறுதிசெய்கிறார். ஆனாலும், அந்த நபர், `ஒரு சோடா குடிச்சா சரியாப் போகும்’ என்று மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சையை மறுத்துவிட்டு, பெட்டிக்கடைக்கு ஓடினால் என்ன ஆகும்? அதற்கு விலையாகக் கொடுக்க வேண்டியது அவருடைய உயிரை அல்லவா? பின்னங்கால் நரம்பில் வலியா? உடனே கூகுளில் தேடி சிகிச்சை எடுப்பது தவறு. நல்ல மருத்துவரை நாடிப் போவதே சரி. ஒருவேளை, அந்த நரம்புவலி பக்கவாதத்தில்கூட கொண்டுபோய் விட்டுவிடலாம். எனவே பொருத்தமான, நல்ல மருத்துவரிடம் சந்தேகங்களைக் கேட்பதும், சிகிச்சை பெறுவதும்தான் ஆரோக்கியம் காக்க உதவும்.

டியர் யூத்ஸ்.. உங்க உடம்ப பத்திரமா பாத்துக்க சில டிப்ஸ்!

‘மெய்ப்’பொருள் காப்பது அறிவு

இளமையில் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தாமல் பணம் சம்பாதித்து வாழ்க்கையில் செட்டில் ஆவதே குறியாக இருக்க வேண்டியது. பிறகு, வயதான காலத்தில் சம்பாதித்த பணம் முழுவதையும் மருத்துவமனைகளுக்கு அழுவது. இதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள். ஆனால், நாம் நலமுடன் இருக்கும்போதே சற்றே கவனமாக இருந்தால் இந்த வாழ்க்கை எனும் வட்டத்தை அழகான ஆரோக்கியமான ஹார்டீனாக மாற்றலாம். இப்போது நாம் பார்க்க போகும் விஷயங்களை பின்பற்ற உங்கள் நேரமோ, பணமோ சிறிதுகூட விரயமாகாது. உங்கள் அன்றாட வாழ்வின் செயல்களினூடாக இதையெல்லாம் செய்தாலே போதும். இதோ அதற்கான டிப்ஸ்...



பிளாஸ்டிக் வேணாம் ப்ளீஸ்!

எளிதாக கிடைக்கும், அதிக விலை இல்லை, எளிதில் உடைந்து போகாது. இப்படி பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உடல் நலத்திற்கு தீங்கை மட்டுமே அளிக்கும். எனவே பள்ளிகளுக்கு குழந்தைகள் எடுத்துச்செல்லும் தண்ணீர் பாட்டில்கள் (அதுவும் கூட போதுமான தடிமன் கொண்ட பாட்டில்கள் மட்டுமே) தவிர மற்ற இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதைத் தவர்த்து விடுங்கள். ஏனெனில், நாள்பட்ட பயன்பாடுகளில் பிளாஸ்டிக் தன் வேலையைக் காட்டிவிடும். மேலும், கண்ணாடி பாட்டில்களில் பாக்டீரியா தொற்றும் சுத்தமாக இருக்காது.

விளம்பர இடைவேளைகள் நல்லது!

உங்களுக்கு பிடித்த ஒரு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துகொண்டிருக்கிறீர்கள். திடீரென விளம்பர இடைவேளை வந்து விட்டது. செம்ம காண்டாவீர்கள் இல்லையா? இனி அப்படியெல்லாம் கோபப்படாதீர்கள் இடைவேளை வந்தவுடன் சின்னதாக உடம்பை வளைத்து நெளித்து ஒரு சிம்பிள் ‛ஸ்ட்ரெச்’ செய்யுங்கள். ஓய்வில் உள்ள உங்கள் உடல் உறுப்புகளை புத்துணர்வாக்கும். அதேபோல், அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவராக இருந்தால் இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை இருபது வினாடிகள், இருபது அடிகள் தொலைவில் உள்ள பொருள் ஒன்றினை பார்த்துப் பழகுங்கள்.

மேக் இட் சின்னது!

உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லையென்றால் நாம் என்னதான், எவ்வளவுதான் முயன்றாலும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியாது. பெரும்பாலும் நம்முடைய ஃபிட்னஸ் ஆசையில் ‘கொழுப்பை’ அள்ளிப் போட்டது நம்ம ஃபேவரைட் உணவாகத்தான் இருக்கும். என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் போலவே, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதும் ரொம்ப முக்கியம். முதலில் உங்கள் வீட்டில் உள்ள பெரிய சைஸ் உணவு தட்டுகளை எடுத்து ஒளித்து வைத்து விடுங்கள். அதற்கு பதிலாக அளவில் சிறிய தட்டுகளை பயன் படுத்துங்கள். சிறிய தட்டுகளை குறைந்த அளவிலான உணவே அதிகமாக தெரியும். சோ, நம்மை அறியாமலே நம் உணவின் அளவும் குறையும்.

தெரிந்து உண்ணுங்கள்

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பது நமக்கு நிச்சயமாய் தெரிந்து இருக்காது. வீட்டில் சமைக்கும் உணவாக இருந்தால் என்னென்ன சேர்க்கிறோம் என்பது தெரியும். அதேபோல், பாக்கெட்டுக்குள் அடைக்கப்பட்ட உணவுகளில் என்னென்ன மூலப்பொருட்கள் எந்த விகிதத்தில் கலந்துள்ளது என்பதை அதன் ‘இன்கிரிடியன்ஸ்’ லிஸ்டில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை அதை எல்லாம் தெரிந்து கொண்டால், நீங்களே அதை எல்லாம் உண்பதை குறைத்துக் கொள்வீர்கள். அல்லது அதற்கு ஈடான உடற்பயிற்சி செய்யப் பழகுவீர்கள்.

கருப்பு சாக்லேட்டும் கலரில்லாத தண்ணீரும்

இது நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். காலையில் எழுந்தவுடன் ஒரு குவளை வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவது சாலச்சிறந்தது. பிறகு, சாதாரண சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட சாக்லேட்டுகளுக்கு பதிலாக கருப்பு சாக்லேட்டுகளை எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேற்கூறிய இரண்டு விஷயங்களையும் செய்தாலே போதும் உங்கள் உடல் எடையில் ஆச்சர்யப்படுமளவிற்கு மாற்றம் தெரியும்.

ஏறுங்கள், இறங்குங்கள்

ஒன்று அல்லது இரண்டு மாடிகள் மட்டுமே ஏற வேண்டும் என்னும் போது லிஃப்ட் பயன்படுத்துவதை (சோர்வாக இருக்கும் போதோ அல்லது நேரம் இல்லாத போத தவிர) தவிர்த்து விடுங்கள். மற்ற பொது இடங்களிலும் எஸ்கலேட்டரை பயன்படுதத்துவதை தவிர்த்து படிகளை பயன் படுத்துங்கள். அதே போல் உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கடைகளுக்கு செல்லும் பொது நடந்தே செல்ல பழகுங்கள்.

கடித்து சாப்பிடுங்கள்

எப்போதும் சாப்பிடும் போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். இங்கே நாம் பழங்களை சாப்பிடுவதை பற்றி பார்ப்போம். பழங்கள் என்பவை கடித்துச் சாப்பிட வேண்டியவை. எனவே பழங்களை ஜூஸாக குடிப்பதை குறைத்துக் கொண்டு பழங்களாகவே கடித்து சாப்பிடத் தொடங்குங்கள். அதேபோல் பசித்த பின், உண்ணும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள். பொழுதுபோக்கிற்காக உண்பதை தவிர்த்து விடுங்கள்.

இரவு தூக்கம், காலை உணவு

இரவு தூக்கம் என்பதை கொஞ்சம் சீரியசாக எடுத்து கொள்ளுங்கள். நாம் எவ்வளவு ஓய்வை நம் உடலுக்கு கொடுக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். நல்ல தூக்கம் இதய நோய் சதவீதத்தையும் குறைக்கிறது. அதே போல் காலை உணவு என்பது மிக மிக முக்கியம். இரவு முழுதும் கிட்டத்தட்ட பனிரெண்டு மணி நேரம் பட்டினி இருந்த நாம் கண்டிப்பாக காலை உணவு எடுத்து கொள்ள வேண்டும். காலை உணவை தவிர்ப்பது மூளையின் செயல் திறனை பாதிக்கும்.

இதையெல்லாம் பின்பற்றினாலே நம் வாழ்க்கையில் நாம் சம்பாதிக்கும் பணத்தை நாம் விரும்பிய வழிகளில் செலவழிக்கலாம்.

60 வயதுக்காரரின் 24 ஆண்டு உழைப்பு உங்கள் நாளையே மாற்றும்! 

#MorningMotivation





சேலத்தில் உள்ள பெரும்பாலான சுவர்களில் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் பயனுள்ள வகையில் தன்னம்பிக்கையும் விழிப்புணர்வும் ஏற்படுத்தும் விதமாக வாரந்தோறும் பல்வேறு வகையான தகவல்களை எம்.எம்.எம் கார்னர் (MMM Corner) என்ற பெயரில் எழுதி வருகிறார் பசுபதிநாதன். இன்று நேற்றல்ல. இருபத்து நான்கு வருடங்களாக! தீபாவளி பொங்கல் சுதந்திர தினம் குடியரசு தினம் போன்ற விழா காலங்களில் அது தொடர்பான பல்வேறு வாசகங்களை எழுதி வருகிறார். சேலத்தில் இவரின் வாசகத்திற்காக பல மாணவர்கள் மற்றும் மக்கள் என ரசிகர் பட்டாளமே உள்ளன. அவரை சந்தித்த போது..

வாசகங்கள் எழுத வேண்டும் என்று எப்படி ஆர்வம் வந்தது?

ஆரம்பத்தில் சினிமா போன்ற சுவர் விளம்பரங்களை வரைந்தும் எழுதியும் வந்தேன். என்னுடைய தந்தை ஒரு சுதந்திர போராட்ட தியாகி. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தம்முடைய வாழ்நாளில் ஏதாவது ஒரு நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்று அடிக்கடி கூறுவார். அவரது வழி வந்த நான் மக்களுக்கு ஏதாவது நல்ல செயல்கள் செய்ய வேண்டும் என்று எண்னினேன். அதற்காக 1993 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இருபத்து நான்கு ஆண்டுகளாக சமூக அக்கறை, பொன்மொழி, தன்னம்பிக்கை வரிகள் போன்றவற்றை வாரம் ஒரு முறை எழுதி வருகிறேன்.

முதன் முதலாக எழுதியது பற்றி கூறுங்கள்?

முதன் முதலாக ஒரே ஒரு இடத்தில் 'வெற்றிகரமாக வாழ்ந்து காட்டு, வஞ்சகம் தீர்க்க இதை தவிர வேறு எதுவுமில்லை' என்று எழுதினேன். இந்த வரிகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் அடுத்த வாரமே ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெவ்வேறு வாசகங்களை எழுதினேன். வெவ்வேறு வாசகங்கள் எழுதும் போது நிறைய பேர் எங்க எல்லாம் எழுதி இருக்கீங்க என்னென்ன வரிகள் எழுதி இருக்கீங்கனு கேட்டார்கள். அதனால் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான வாசகங்களை எழுத முடிவு செய்தேன். தற்போது 35 இடங்களில் எழுதி வருகிறேன்.

இதன் மூலம் ஏற்பட்ட அனுபவங்கள் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றி கூறுங்கள்?



ஒரு சில காரணங்களால் இயக்குநர் சசி படம் ஒன்று பாதியில் நின்று விட்டது. அப்போது நான் எழுதி இருந்த ' ஒரு நொடி துணிந்திருந்தால் இறந்துவிடலாம், ஒவ்வொரு நொடியும் துணிச்சல் இருந்தால் வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம்' என்ற வரியை பார்த்து விட்டு மீண்டும் படத்தை இயக்கி வெற்றி படமாக வெளியிட்டார். இன்று வரை என்னிடம் நண்பராக தொடர்பில் உள்ளார்.ஒரு முறை நான் சுவரில் எழுதி இருந்த வாசகத்தை பார்த்த பள்ளி மாணவன் ஒருவன் மற்ற இடங்களில் எழுதி உள்ளதை போன்று எங்கள் வீட்டு சுவரிலும் எழுத வேண்டும் என்று கூறினான். அன்றிலிருந்து இன்று வரை அந்த மாணவன் வீட்டு சுவற்றிலும் எழுதி வருகிறேன்.என்னுடைய வாசகங்களை படித்து விட்டு நிறைய பேர் என்னிடம் வந்து அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட காரணமாக எனது வாசகங்கள் உள்ளதாக கூறுவார்கள். பல்வேறு தனியார் அமைப்புகள், ஊடகங்கள் என்னுடைய பணியை பாராட்டி பல்வேறு அங்கீகாரங்கள் அளித்துள்ளனர். அதை விட முக்கியமாக மக்கள் ஆதரவு என்ற அங்கீகாரம் உள்ளது.


பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் ஆதரவு எப்படி உள்ளது?

ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை மக்களிடமும் மாணவர்களிடமும் நல்ல ஆதரவு உள்ளது. சேலம் மக்கள் மட்டுமின்றி அனைத்து மக்களும் என்னுடைய வாசகங்களை தெரிந்து கொள்ளும் வகையில் முகநூல் பக்கம் ஒன்றை உருவாக்கி அதில் அந்த வாரத்திற்கான வாசகங்களை பதிவேற்றம் செய்து விடுவேன். அதில் மக்கள் ஆதரவு பலமாக உள்ளன.




வாசகங்கள் எப்படி தயார் செய்கிறீர்கள்?

கல்வி மற்றும் வாழ்க்கையில் கற்று கொண்டவை, ஆங்காங்கே படித்தவற்றை எழுதி வருகிறேன். வாழ்க்கை அனுபவங்கள் மூலம் கற்றுக் கொண்ட பாடங்களையும் வாசகங்களாக எழுதி வருகிறேன். நான் கற்றுக் கொண்டதை பிறருக்கு கற்று தருகிறேன்.சமூக அக்கறையுடன் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்ட பின்பு சுவர் வாசகத்திற்காக செலவு செய்யும் தொகை ஒன்றும் பெரியதாக தெரியாது.

ஒவ்வொரு நாளையும் ஊக்கத்துடன் தொடங்க நினைக்கும் பலருக்கும், இவர் அமைதியாக தன் தொண்டை செய்து வருகிறார். இவர் எழுதிய வாசகங்களைக் கடந்து செல்லும் எவருக்கும், அது ஓர் எனர்ஜி பூஸ்டர்தான்! புதியன விரும்பும் இளைய சமுதாயத்தினருக்கும் இந்த 60 வயதுக்காரரின் வாழ்க்கை ஒரு ஊக்கம்தரும் பாடம்தான்!

Smartcards with health details cheer senior citizens

Recognising the dangers of senior citizens, particular ly those living alone, fall ing victim to a health condition and being unattended, the Union budget presented on Wednesday announced introduction of Aadhaar-based smart cards containing their health details.

The move has especially brought cheer to Tamil Nadu's elderly whose desire to live independently is high and the number of such senior citizens in the state is higher than the national average.

"It gives us more confidence to be out alone or stay home alone," said 65-year-old Shanthakrishnan, who until now took his daily morning constitutional bogged by the fear that nobody would know of his heart ailments and diabetic condition if he fainted on a street.

Doctors and officials running elderly care institutions, too, are happy. "Several senior citizens, especially those living alone, do not have the practice of keeping their health records," said D Rajasekaran, general secretary of Chennai-based Tamil Nadu Senior Citizen's Association.

"Even if they do have a record, they keep a bunch of all prescriptions and papers of their past which is not helpful. This move will be great because there will be an abridged summary statement where the main problems will be highlighted so doctors can understand their condition," he added.

Geriatric expert Dr V S Natara jan said the the smartcard should also contain a list of drugs used by the patient apart from emergency contacts. "It is important that senior citizens carry their ID cards with them," he said. "For instance, if heshe is diabetic, giving glucose will do. So, the card should contain their ailments, drugs they use, allergies, contacts and address."

A few, however, remain sceptical as an increasing number of facilities are linked to Aadhaar."Many of us are worried that our personal details will be out by attaching details with Aadhaar card," said Kamakshi Subramanian, an octogenarian living by herself in Besant Nagar. "When the Supreme Court has said it is not mandatory , we are not clear how this is going to work or help."


ஞாபக மறதி நோயால் கருணாநிதி அவதி:

இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது?

ஞாபதி மறதி, பேச்சு திறன் இன்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, 'ஸ்பீச் தெரபி' சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, சில மாதங்களுக்கு முன், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க, தொண்டையில் துளையிட்டு, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, அவர் கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்; மருத்துவ சிகிச்சை தொடர்கிறது. மூன்று டாக்டர்கள், செவிலியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

கருணாநிதியை பார்க்க விரும்புவோருக்கு, கண்ணாடி கதவு வழியாக பார்க்க, அனுமதி வழங்கப்படுகிறது. பார்க்க வரும் கட்சி பிரமுகர்களின் பெயர், அங்குள்ள வருகைபதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது.

'ஸ்பீச் தெரபி' சிகிச்சை

தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: வயோதிகம் காரணமாக, ஞாபக மறதி, கருணாநிதிக்கு அதிகம் உள்ளது. பேச்சும் குறைந்துள்ளது. அதனால், 'ஸ்பீச் தெரபி' சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், ஞாபக மறதியை குணப்படுத்துவதற்கான சிகிச்சையும் தரப்படுகிறது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க பொருத்தப்பட்டிருந்த, குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன.
மூன்றுநாட்களுக்கு முன், அவரை மாடியிலிருந்து கீழ் தளத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது, அங்கு இருந்த குடும்ப உறுப்பினர்களை பார்த்து, கருணாநிதி சிரித்துள்ளார். ஆனால், பேச முடியவில்லை.

அவரை தனிமையில் இருக்க விடாமல், நெருக்கமானவர்களை சுற்றி இருக்க செய்துள்ளனர். பழைய நினைவுகள் குறித்தும், சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றியும், கருணாநிதியிடம் பேசினால், அவர் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என, டாக்டர்கள் கருதுகின்றனர்.

மற்றபடி அவரது உடல் நலத்தில், எந்த குறையும் இல்லை. பேச்சு திறனும், ஞாபகமும் வந்து விட்டால் போதும், அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -

5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கான வரி, பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

புதுடில்லி: வரும், 2017 - 18 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், சாமானிய மக்களுக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில், 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கான வரி, பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கிராம கட்டமைப்பு, விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில், விவசாயக் கடனுக்கான ஒதுக்கீடு உயர்வு, மூத்த குடிமக்களின் மருத்துவத்துக்கு, 'ஸ்மார்ட் கார்டு' என, ஏழை, எளிய, சாதாரண மக்களுக்கான பட்ஜெட்டாக, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது.
ஊழலை ஒழிக்கும் வகையில், அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைக்கு கடிவாளத்தை போட்டுள்ள இந்த பட்ஜெட்டில், குற்றவாளிகள் வெளிநாடு தப்பினால், சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிரடி அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.

முதல் ஒருங்கிணைந்த பட்ஜெட்

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின் வெளியாகும் முதல் பட்ஜெட் என்பதால், மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பட்ஜெட், வழக்கமான, பிப்., 28க்கு பதிலாக முன்னதாகவே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என, பல்வேறு வகைகளில், இந்த பட்ஜெட் வரலாற்றில் இடம் பெறுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்த பின், அதன், நான்காவது பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார்.
ரயில்வேக்கு என, தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. மற்ற துறைகளைப் போல ரயில்வேக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால், வழக்கமான புதிய ரயில்கள் போன்ற அறிவிப்புகள் இடம்பெறவில்லை.

பட்ஜெட் முக்கிய அம்சங்கள்


வரும், 2017 - 18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

* வருமான வரி வரம்பில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரத்தில், 2.5 லட்சம் ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரையிலான வரம்புக்கான வரி விகிதம், 10 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது
* 50 லட்சம் ரூபாய் முதல், ஒரு கோடி ரூபாய் வரையிலான வரம்புக்கு, 10 சதவீதம் வருமான வரி விதிக்கப்படும்

* ஒரு கோடி ரூபாய்க்கு மேற்பட்டவருமானத்திற்கு, 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும்

* ஐந்து லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ளவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் விண்ணப்பம், ஒரு பக்கமாக குறைக்கப்படும்

* அனைத்து பரிவர்த்தனைக்கும், மூன்று லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பயன்படுத்த தடை

* மூத்த குடிமக்களுக்கு, ஆதார் அடிப்படையிலான சுகாதார அட்டை வழங்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு, ஆண்டுக்கு, 8 சதவீதம் உறுதியான வருவாய் கிடைக்கும்

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு, 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது

* வரும் நிதியாண்டில், 10 லட்சம் கோடி ரூபாய் வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது

* பயிர் காப்பீட்டு திட்டம், மேலும், 40 சதவீத நிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இதற்கான ஒதுக்கீடு, 1.41 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது

* பாசன திட்ட நிதி தொகுப்பு, இரட்டிப்பாக்கப்பட்டு, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது
* வாங்கக் கூடிய விலையிலான வீடுகளுக்கு, அடிப்படை கட்டமைப்பு அந்தஸ்து அளிக்கப்படுகிறது

* வீடில்லாத, ஒரு கோடி பேருக்கு, 2019க்குள் சொந்த வீடு
* வரும், 2018, மே மாதத்திற்குள், 100 சதவீத கிராமங்களுக்கு மின்சார வசதி

* அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீடு, 3.96 லட்சம் கோடி

Advertisement

ரூபாயாக இருக்கும்

* அரசியல் கட்சிகள், 2,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக நன்கொடை பெறுவதற்கு தடை

* அரசியல் கட்சிகள், செக், மின்னணு முறைகள், ரிசர்வ் வங்கி வெளியிடும் தேர்தல் பாண்டுகள் மூலம், நன்கொடைகளை பெறலாம்

* பொருளாதார குற்றம் செய்துவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி செல்பவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் வகையில், சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்

* மோசடி, 'டிபாசிட்' திட்டங்கள் பிரச்னையை தடுக்கும் வகையில், மசோதா கொண்டு வரப்படும்

* பணமில்லாமல் செக் திரும்பும் வழக்குகளை எதிர்கொள்ளும் வகையில், செலாவணி சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்

* சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கான உற்பத்தி வரி உயர்த்தப்படுகிறது.

'எக்சலன்ட்' பட்ஜெட்:பிரதமர் மோடி பாராட்டு


'நிதியமைச்சர் அருண் ஜெட்லி மிகச்சிறந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்,'' என, பிரதமர், நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.மத்திய பட்ஜெட் குறித்து, பிரதமர் மோடி கூறியதாவது:கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வகையில், பழைய, 500 - 1,000 ரூபாய் செல்லாது என அறிவித்தோம்; அதற்கு ஊக்கம் தரும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டு வரும் பல மாற்றங்களை பட்ஜெட் உணர்த்துகிறது. விவசாயிகள், கிராம மக்கள், பெண்கள் பலன் பெறும் வகையில் பட்ஜெட் உள்ளது; விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

முதன்முறையாக, ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது; போக்குவரத்து துறையின் வளர்ச்சி பட்ஜெட்டில் எதிரொலிக்கிறது. ரயில்வே பாதுகாப்பு நிதி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது, சிறந்த நடவடிக்கை. சர்வதேச தரத்திற்கு நிகராக, தங்கள் தொழில்களை உயர்த்த, வர்த்தகர்களுக்கு வாய்ப்பு ஏற்படும். இந்த பட்ஜெட் மூலம், சிறு வர்த்தகர்கள், உடனடியாக பலன் பெறுவர்; வீடு கட்டுமான துறை வளர்ச்சியடையும். இவ்வாறு அவர் கூறினார்.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...