Thursday, March 16, 2017

மத்திய அரசு ஊழியர்கள் இன்று 'ஸ்டிரைக்'

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், இன்று, 13 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

கடந்த, 2016ம் ஆண்டில், ஏழாவது ஊதியக்குழு அறிவிப்பை எதிர்த்து, மத்திய அரசு ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு, கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதியளித்தது. அவற்றை நடைமுறைப்படுத்த, பல்வேறு கமிட்டிகளை அமைத்தது. எனினும், அந்த கமிட்டிகள், எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.

அதனால், ஏமாற்றம் அடைந்துள்ள மத்திய அரசு ஊழியர்கள், இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இப்போராட்டம் குறித்து, மத்திய அரசு ஊழியர்கள் மகா
சம்மேளன தேசிய பொதுச் செயலர் எம்.கிருஷ்ணன் கூறியதாவது:
கடந்த ஆண்டில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி மற்றும் சுரேஷ் பிரபு ஆகியோர், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை. இதனால், 33 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 34 லட்சம் ஓய்வூதியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதனால் தான், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதில், நாடு முழுவதும், 13 லட்சம் ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு கூறினார். 

தபால் பட்டுவாடா பாதிக்கும்!
இன்றைய வேலை நிறுத்தத்தில் ரயில்வே
ஊழியர்கள் பங்கேற்கவில்லை. ஆனால்
வருமான வரி, மத்திய கலால், சுங்கம், தபால்
உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள்
பங்கேற்கின்றனர். எனவே தபால் பட்டுவாடா
பல இடங்களில் பாதிக்கும். தமிழகத்தில்
1.25 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில்
பங்கேற்கின்றனர். சென்னையில், சாஸ்திரி பவன் அருகிலும், மற்ற மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

- நமது நிருபர் -
உயர்ந்தது தக்காளி

பழநி, திண்டுக்கல் மாவட்டம் பழநி, பாலசமுத்திரம், சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, பாப்பம்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுமுழுவதும் தக்காளிசாகுபடி செய்கின்றனர். அவற்றை பழநி தக்காளிமார்க்கெட், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர்.

இவ்வாண்டுபோதிய மழை இல்லாததால் ஒருசில விவசாயிகள் சொட்டுநீர்பாசனத்தில் தக்காளி பயிரிட்டுள்ளனர். அவற்றிற்கும் போதிய தண்ணீர் இல்லாததால் செடிகள் வாடி பூக்கள் உதிர்ந்து வருகின்றன. நெல்லிக்காய் அளவிற்கு சிறியதாக காய்ப்பதால் வரத்துகுறைந்துள்ளது.
சந்தையில் 15கிலோ தக்காளி பெட்டி ரூ.250 முதல் ரூ.400 வரை தரத்திற்கு ஏற்றவாறு விலைபோகிறது. 

சில்லரை விலையில் ஒருகிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது. நல்ல விலை கிடைத்தும்
தக்காளி விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் கறுப்பு மை: தேர்வுத்துறை உத்தரவு

மதுரை, 'பிளஸ் 2 கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வில் இந்தாண்டு ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டுமே விடை நிரப்ப வேண்டும்' என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.இத்தேர்வு நாளை (மார்ச் 17) நடக்கிறது. 150 மதிப்பெண்கள் வினாக்களில், 75 ஒரு மதிப்பெண் வினாக்கள் 'அப்ஜெக்டிவ்' வகையாக கேட்கப்படும். இதற்கான விடைகள், தேர்வு அறையில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர்., ஷீட்டில் நிரப்ப வேண்டும். கடந்தாண்டு புளு அல்லது கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாக்களால் மாணவர்கள் விடை நிரப்பலாம் என அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், இந்தாண்டு கறுப்பு நிற பால் பாயின்ட் பேனாவால் மட்டும் தான் நிரப்ப வேண்டும் என்ற புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'ஆன்சர் கீ' வெளியிடப்படுமா: பொது தேர்வுக்கு பின், மாணவர் நலன் கருதி அனைத்து தேர்வு வினாக்களுக்கும், 'ஆன்சர் கீ' விவரம், ஆன்லைனில் தேர்வுத்துறையால் வெளியிடப்படும். ஆனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்வுக்கு மட்டும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும் மறுமதிப்பீட்டின் போது விடைத்தாள் புகைப்பட நகல் கேட்டு விண்ணப்பித்தால் 'தியரி' பகுதிக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
75 மதிப்பெண் பகுதியான 'ஓ.எம்.ஆர்., ஷீட்' நகல் வழங்குவதில்லை. எனவே, இந்தாண்டு முதல் 'ஆன்சர் கீ' வெளியிட்டு, ஓ.எம்.ஆர்., ஷீட் புகைப்பட நகல் வழங்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை
திருப்பூர்: 'தபால் அலுவலகங்களில், 50 ரூபாய் செலுத்தி கணக்கு துவங்கினால், பாஸ் புக் மற்றும் ஏ.டி.எம்., கார்டு பெறலாம்; பணம் எடுக்க கட்டுப்பாடுகளோ, கட்டணமோ கிடையாது' என்று, தபால் துறை அறிவித்துள்ளது. பண பரிவர்த்தனை செய்யவும், ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்கவும், வங்கிகள் விதிக்கும் அடுத்தடுத்த கட்டுப்பாடுகளால், வாடிக்கையாளர்கள் கவலைஅடைந்துள்ளனர். 

கணக்கு துவக்கலாம் : இதற்கு மாறாக, நலிவடைந்துள்ள தபால் துறையோ, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், எவ்வித சேவை கட்டணமுமின்றி, வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தர முன்வந்துள்ளது. அதன்படி, குறைந்தபட்சம், 50 ரூபாய் செலுத்தி, தபால் அலுவலகங்களில் கணக்கு துவக்கலாம்; பாஸ் புக், ஏ.டி.எம்., கார்டு பெற்று, பண பரிவர்த்தனையை எளிதில் மேற்கொள்ளும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டம், சேவூர் தபால் நிலைய துணை தபால் அதிகாரி சுப்ரமணியம் கூறியதாவது: தபால் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, எந்த தபால் நிலையத்திலோ, பிற வங்கி ஏ.டி.எம்.,களிலோ பணம் எடுக்கலாம்.
கட்டணம் கிடையாது : ஒரே நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்; அல்லது எடுக்கலாம். இதற்கு எந்த கட்டணமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். வங்கிகளை போலவே, தபால் நிலைய சேமிப்பு கணக்குக்கு, 4 சதவீதம் வட்டி வழங்கப்படும். 'போஸ்ட் பேமென்ட் பாங்கிங்' என்ற புதிய திட்டத்தில், 4.5 சதவீதம் முதல், 5.5 சதவீதம் வரை, 'டிபாசிட்' வட்டியை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக, தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிரெடிட் கார்டு சைஸில் ஈ.சி.ஜி., மெஷின் - இந்திய விஞ்ஞானிகள் சாதனை

மும்பை: வெறும் கிரெடிட் கார்டு சைஸில் இருதயத்தின் செயல்பாடுகளை கண்டறிய உதவும் ஈ.சி.ஜி., மெஷினை இந்தியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்து சாதனை புரிந்துள்ளனர்.

அரை நிமிடத்திற்கு ஒருவர்:

இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பால் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கையி்ல் மரணமடைந்து வருகின்றனர். மருத்துவர்கள் ஈ.சி.ஜி., என்ற கருவி மூலம் இருதயத்தின் செயல்பாடுகளை அறிந்து அதற்கு ஏற்றாற் போல் சிகிச்சை அளித்து நோயாளியை காப்பாற்றுகின்றனர். மாரடைப்பு பற்றிய விழிப்புணர்வு இன்மை மற்றும் அதை கண்டறிய கூடிய வசதி குறைவு போன்ற காரணங்களால் இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு 30 விநாடிகளுக்கும் ஒருவர் மாரடைப்பால் உயிரிழப்பதாக புள்ளி விவர கணக்கு ஒன்று கூறுகிறது.

டெலி ஈ.சி.ஜி.,

மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கிரெடிட் கார்டு அளவிலான ஈ.சி.ஜி., மிஷினை தயார் செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த சிறிய அளவிலான மிஷின் மூலம் இதயத்தின் செயல்பாடுகளை பதிவு செய்து மருத்துவர்களுக்கு நாம் மொபைல் மூலம் அனுப்பவும் முடியும். இந்த டெலி ஈ.சி.ஜி., மூலம் ஒருவர் வீட்டிலிருந்து கொண்டே தன் இருதய ஆரோக்கியம் குறித்த தகவ்ல்களை மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.

பத்து மடங்கு குறைவு:

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த ஈ.சி.ஜி., ரூ 4000 விலை மதிப்பு இருக்கும். மருத்துவர்கள் தற்போது பயன்படுத்தி வரும் ஈ.சி.ஜி. மிஷின் அளவில் பெரியதாகவும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் டெலி ஈ.சி.ஜி., போல் பத்து மடங்கு விலை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

புதுடில்லி: மத்திய அமைச்சரவை கூட்டம் துவங்கியது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்த அகவிலைப்படி உயர்வு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55.51லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர். ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும் ஐ.ஐ.டி. சட்ட திருத்த மசோதாவிற்கும் கூட்டத்தில் ஓப்புதல் அளித்துள்ளது. பொதுத்துறை தனியார் பங்களிப்புடன் ஐ.ஐ.டி நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 50 கேந்திரிய வித்யாலயா அமைக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு: தமிழக நிலைக்கு ஐகோர்ட் வேதனை

சென்னை: நீட் தேர்வை மற்ற மாநிலங்கள் ஏற்கும்போது, தமிழகம் மட்டும் எதிர்ப்பது தமிழக மாணவர்களின் தகுதியை குறைத்த மதிப்பிடுவது ஏன் என சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

வழக்கு:

மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு இடங்களை முழுமையாக வழங்க தனியார் மற்றும் சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அவமானம்:

அப்போது நீதிபதி கூறியதாவது: நீட் தேர்வு வேண்டாம் என அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இதையே அரசும் ஏற்கிறது. நீட் தேர்வு வேண்டாம் எனக்கூறுவது தரமான கல்வியை வழங்கவில்லை என்பது தான் அர்த்தம். பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழகம் மட்டும் தான் நீட்தேர்வை எதிர்க்கிறது. நீட் தேர்வு வேண்டாம் என கூறுவது மாணவர்களின் கல்வி தரத்தை குறைப்பதாகும். தகுதியான மாணவர்களுக்கு தகுதியான கல்வி மறுக்கப்படுவது அவமானத்திற்குரியது. பிற மாநிலங்கள் ஒப்புக்கொள்ளும்போது, அதனை எதிர்த்து தமிழக மாணவர்களின் தகுதியை குறைத்து மதிப்பிடுவது ஏன்? மூன்று ஆண்டுக்கு ரூ.1 கோடி செலவு செய்யும் மாணவர்கள் அதனை திருப்பி எடுப்பதை விட்டு விட்டு எவ்வாறு சேவை செய்வார்கள். 2016ல் அரசு ஒதுக்கீட்டில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டன. மருத்துவ கவுன்சில் விதிகளின்படி முறையாக மருத்துவ இட ஒதுக்கீடு செய்யப்பட்டதா? என்பது தொடர்பாக தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 27 க்கு ஒத்திவைத்தார்.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...