Saturday, March 18, 2017


ஜியோ ப்ரைம் - ஏர்டெல் 349 - வோடோஃபோன் 345 - எந்த பிளான் பெஸ்ட்? #4G battle




ஆடிப்போய் இருக்கிறது இந்திய தொலைதொடர்பு துறை. ஜியோவின் கடந்த சில மாதங்களுக்கான இலவச சேவை, டெலிகாம் துறையையே அதிரடித்திருக்கிறது. கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மொபைலில் கிரிக்கெட் மேட்ச்சை லைவாக பார்த்தபடியே ஓட்டுகிறார்கள். பேருந்தில் செல்லும் சீரியல் விரும்பிகள், பயணத்திலே சீரியல் பார்க்கிறார்கள். எல்லோரும் 4ஜி வேகத்தில் இணையத்தை துழாவி எடுக்கும் பழக்கத்துக்கு வந்துவிட்டார்கள். காரணம், ஜியோ.

இந்த மாதத்துடன் ஜியோ சொன்ன கெடு முடிகிறது. முதலில் 2016 திசம்பர் வரை இலவசம் என்றார்கள் அடுத்து, மார்ச் வரை நீடித்திருக்கிறார்கள். இப்போது ஜியோ பிரைம் திட்டம் என்கிறார்கள். அதன்படி மார்ச் 31க்குள் 99ரூபாய் கட்டினால் ஜியோ பிரைம் மெம்பர் ஆகிவிடலாம். அதன்பின் மாதம் 303 ரூபாய் கட்டினால் போதும். அளவற்ற வாய்ஸ் கால், தினம் 1ஜிபி 4ஜி நெட் 28 நாட்களுக்கு நிச்சயம். அதாவது, இப்போது இலவசமாக கிடைக்கும் சேவைகள் ஏப்ரல் 1க்கு பிறகு மாதம் 303 ரூபாய். இதுதான் ஜியோவின் நீண்டகால பிளான் என்பதால், மற்ற நிறுவனங்கள் இதை சமாளித்தாக வேண்டியிருக்கிறது.



முக்கிய எதிர்கட்சிகளான ஏர்டெல்லும், வோடோஃபோனும் ஜியோவின் தாக்குதலால் ஏற்கெனவே நிலைகுலைந்து போயிருக்கின்றன. இனியும் விட்டால் ரெகுலர் கஸ்டமர்களும் மனம் மாறுவர்கள் என புது பிளான்களை அறிவித்திருக்கின்றன. அவை என்ன என்ன?

ஏர்டெல் 349:

ஜியோவின் 303 திட்டத்துக்கு சரியான பதிலடி ஏர்டெல்லின் 349. இந்த பிளானும் 28 நாட்களுக்கானதுதான். தினமும் 1 ஜிபி 4ஜி நெட். ஏர்டெல்லின் இந்த திட்டத்துக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இதில் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் கிடையாது. ஆனால், ரோமிங்கில் கட்டணம் உண்டு. தினமும் 1ஜிபி லிமிட் என்பது போல வாய்ஸ் கால்களுக்கும் தினமும் 300 நிமிடங்கள், வாரம் 1200 நிமிடங்கள் லிமிட் வைத்திருக்கிறார்கள். அதைத் தாண்டினால் கட்டணம் உண்டு. ஜியோ அளவுக்கு இறங்கி அடிக்கவில்லை என்றாலும், ஏர்டெல்லின் தற்போதைய கட்டணத்துக்கு இந்த ஆஃபர் உண்மையிலே ஜாக்பாட் தான்.

இந்த ஆபரையும் இப்போதுவரை ஏர்டெல் செக்மெண்ட்டெட் ஆபர் என்றுதான் வைத்திருக்கிறார்கள். அதாவது எல்லா வாடிக்கையாளருக்கும் இது கிடைக்காது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இது செல்லும். ஆனால், விரைவில் அனைவருக்கும் இந்த ஆஃபர் கிடைத்துவிடும் என நம்பலாம்.

பிற்சேர்ப்பு: ஏர்டெல் தரும் 1 ஜிபியில் 500 எம்பியை இரவு நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தோம். ஆனால், எப்போது வேண்டும் என்றாலும் பயன்படுத்துக் கொள்ளலாம். தினம் ஒரு ஜிபி என்பதுதான் லிமிட் என ஏர்டெல் சார்பாக நம்மிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

வோடோஃபோன் 346:

கிட்டத்தட்ட ஏர்டெல்லின் அதே கட்டணம் அதே சலுகைகள். ஆனால், வோடோஃபோன் ஏர்டெல்லை சின்ன மார்ஜினில் வெல்கிறது. வாய்ஸ் கால்களில் மாற்றம் இல்லை. தினம் 300 நிமிடங்கள் /வாரம் 1200 நிமிடங்கள் இலவசம் தான். டேட்டாவும் தினம் 1ஜிபி என 28 நாட்களுக்கு 28 ஜிபி தான். ஆனால், அந்த ஒரு ஜிபியை பயன்படுத்துவதில் ஏர்டெல் போல வோடோஃபோன் எந்த செக்கும் வைக்கவில்லை. நாள்முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம். மார்ச் 15க்குள் இந்த பிளானுக்குள் வருபவர்களுக்கு கூடுதலாக 28ஜிபியை தந்தது வோடோஃபோன்.

சேவைகள்ஜியோஎர்டெல்வோடோஃபோன்
  4ஜி டேட்டா1ஜிபி /நாள்1ஜிபி /நாள்1 ஜிபி /நாள்
 வேலிடிட்டி28 நாட்கள்28 நாட்கள்28 நாட்கள்
 வாய்ஸ் கால்/ குறுந்தகவல்இலவசம்300 நிமி/நாள்300 நிமி /நாள்
ரோமிங்இலவசம்இல்லைஇல்லை


- கார்க்கிபவா

ஹோட்டல்ல ரூம் எடுக்கப் போறீங்களா? உஷார் மக்களே..! #LEDbulbCamera




இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அனைத்துத் துறைகளிலும் வந்துவிட்டன. புதிய தொழில்நுட்பங்கள், மனிதர்களின் வேலைப் பளுவை குறைப்பதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டாலும், மற்றொருபுறம் மனிதர்களின் பிரைவஸிக்கு பங்கம் விளைவித்துக் கொண்டுள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. பொதுவாக ஹோட்டல்கள், பஸ் ஸ்டாண்டுகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் நாம் வைஃபையை தேடிக்கொண்டிருக்கும் சூழல் வந்துவிட்டது. ஒரு ஹோட்டலுக்குச் சென்றால் குளிர்சாதன வசதி இருக்கிறதா எனக் கேட்ட காலம் மாறி, இலவச வைஃபை இருக்கிறதா எனக் கேட்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொருவரும் ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கும்போது வைஃபை பயன்படுத்தியவர்களாகத்தான் இருப்போம்.



அதேபோல, ஒரு துணிக்கடைக்குச் செல்லும்போது உடை சரியாக பொருந்துகிறதா எனப் பார்ப்பதற்கு உடை மாற்றும் அறைக்குச் சென்று உடையை உடுத்திப் பார்க்கிறோம். அப்போது அந்த அறையிலும் வைஃபை சாதனம் மாட்டப்பட்டிருப்பதைக் காண்போம். திரைப்படங்களில் காண்பிக்கப்படுவது போல கண்ணாடிக்குப் பின்னாடி இருந்து வீடியோ எடுத்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது பாஸ். உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாகச் அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சாதனம்தான் வைஃபை கேமரா. உங்களுடைய பார்வைக்கு டிரையல் ரூமிலோ அல்லது ஹோட்டல் அறையிலோ வைஃபை சாதனம் பொருத்தப்பட்டது போன்றே இருக்கும். ஆனால், உங்களுடைய ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து கொண்டும் உங்களைப் படம் பிடித்துக் கொண்டும் இருக்கும் என்பது உங்களுக்குத் துளியும் தெரியாது. மேலும் இந்த கேமராவில் வைஃபை வசதியும் உண்டு அதன்மூலம் மொபைலிலும் லைவ்வாக உங்கள் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும்.



சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ள வைஃபை கேமரா, வைஃபை மற்றும் கேமரா என இரண்டு வேலையையும் ஒரே நேரத்தில் செய்யக்கூடியது. இந்த கேமரா 360 டிகிரி கோணத்தில் சுழன்று வேலை செய்யக்கூடியது. பொதுவாக ஹோட்டலில் அறையின் சுவரிலோ அல்லது மேற்கூரையின் மீதோ இந்த விளக்கு வடிவில் வைஃபை சாதனம் பொருத்தப்பட்டு இருக்கும். அது தோற்றத்தில் சாதாரண விளக்கைப் போல தெரிந்தாலும், அந்த அறை முழுவதும் அந்த வைஃபைக்குள் இருக்கும் கேமராவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நீங்கள் அந்த அறையில் தங்குகிறீர்கள் என்றால் உங்கள் ஒவ்வொரு செயலும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். வீடியோ எடுப்பதற்கென்றே பிரத்யோகமாக கேமராவானது (960P HD) ஹைச்.டி தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களின் ஒவ்வொரு அசைவினையும் சேமிக்கும் வகையில் உள்ளே 128 ஜிபி மெமரி கார்டும் இருக்கும். அந்த மெமரி கார்டானது உங்கள் ஒவ்வொரு அசைவினையும் தனது நினைவகத்தில் பதிவேற்றிக் கொள்ளும். இந்த கேமரா பகலில் மட்டுமல்லாது, இரவிலும் தன்னில் இருந்து 16 அடி தூரம் வரை உள்ள பொருட்களையோ, மனிதர்களையோ துல்லியமாக கண்காணித்துக்கொண்டே இருக்கும். மேலும் இந்த கேமராவின் மூலம் நீங்கள் பேசும் ஆடியோவினையும் எளிதாகப் பதிவு செய்ய முடியும்.



இந்த வைஃபை கேமராவானது வீட்டுப் பாதுகாப்புக்கு எனச் சொல்லி விற்கப்பட்டாலும், தவறான செயலுக்கு உபயோகப்படுத்த வாய்ப்புகள் மிக அதிகம். என்னதான் அறிவியல் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கிறது எனச் சொன்னாலும் இந்த கேமராவெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் பாஸ். "இவ்வளவு சொல்றீங்க அதை எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு கேக்குறீங்குளா" அது உங்க கையிலதான் இருக்கு பாஸ். உங்க மொபைல்தான் அதைக் கண்டுபிடிக்குறதுக்கான சாதனம். உங்களுக்கு சந்தேகம் வரும் இடத்துல உங்க மொபைல்ல இருந்து கஸ்டமர் கேர்க்கு கால் பண்ணுங்க. அப்போ எதிர் முனையிலோ அல்லது உங்கள் மொபைலிலோ வாய்ஸ் பிரேக் ஆனாலோ, வித்தியாசமான சப்தம் கேட்டாலோ அந்த அறையில கேமரா இருக்குனு தெரிஞ்சுக்கலாம். இதுபோல் வைஃபை தவிர, பிளக்பாயிண்ட், கடிகாரம் எனப்பல இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம்...உஷார் மக்களே!

- துரை.நாகராஜன்

பொறியியல் படித்த 60% பேருக்கு வேலையில்லை!


பொறியியல் படித்த மாணவர்களில், ஆண்டுக்கு சுமார் 60 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் இருக்கின்றனர் என்று அகில இந்திய தொழில்நுட்பப் படிப்புக் கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. NBA-வில் அனுமதிபெற்று, சுமார் 3,200 பொறியியல் கல்லூரிகள் நாடு முழுவதும் உள்ளன. மேலும், ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் மாணவர்கள் வீணடிக்கப்படுகின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

பொறியியல் படிப்புக்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான தகுதித் தேர்வு நடத்த, மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. அந்தத் தேர்வுகள், தேசியத் தேர்வு ஆணையத்தின் கீழ் நடைபெறும் என்று தெரிகிறது. இந்தத் தகுதித் தேர்வு 2018-ம் ஆண்டு ஜனவரி, மார்ச், மே மாதங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகளை நடத்துவதன்மூலம் வேலை பெறுபவர்கள் உடனடியாக 40 சதவிகிதத்திலிருந்து 60 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று மனிதவள மேம்பாட்டு ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கங்கை அமரனை ஆர்.கே. நகரில் களமிறக்கியது எதற்கு?



''நீங்கள், பி.ஜே.பி-யில் இருந்துகொண்டு முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கலாமா'' என்று அப்போது, நம் 'விகடன்' சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, ''தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை, மக்கள் சம்பந்தப்பட்ட பொதுப் பிரச்னை. பொது வாழ்க்கை, மக்கள் சேவையில் வருபவர்களுக்கு ஏதேனும் உண்மை சார்ந்த குற்றச்சாட்டுகள் இருப்பினும், அதைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது, ஓர் அரசியல்வாதியான என்னுடைய கடமையாகும். அவ்வாறு குற்றச்சாட்டு வைப்பதால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், சசிகலாவுக்கு எதிரியாகவும் கருதக்கூடாது. பி.ஜே.பி-யைச் சேர்ந்த நான், என்றும் என்னுடைய தேசத்துக்கும், மக்களுக்கும் நேர்மையான மக்கள் தொண்டாற்றுவதிலேயே கடமைகொண்டு இருக்கிறேன்'' என்றார், இசையமைப்பாளர் கங்கை அமரன்.

அந்தக் கங்கை அமரன்தான், தற்போது களைகட்டத் தொடங்கியிருக்கும் ஆர்.கே.நகர் தேர்தல் தொகுதியின் பி.ஜே.பி வேட்பாளர். அ.தி.மு.க-வின் கோட்டையான இந்தத் தொகுதியில், பலமுனைப் போட்டி நிலவுகிறது. ஒருசில கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் தங்களுடைய வேட்பாளர்களைக் களமிறக்கிவிட்டன. இதுதவிர, சுயேட்சை வேட்பாளர்களும் களம் கண்டுள்ளனர். இந்தநிலையில், தற்போது பி.ஜே.பி-யின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் கங்கை அமரன், ஆர்.கே.நகர் வேட்பாளராய் தேர்வானது எப்படி என தமிழக பி.ஜே.பி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

''ஓட்டு வங்கியைப் பிரிக்கும்''!

“ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு பி.ஜே.பி சார்பில் தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தரராஜன், நடிகைகள் கெளதமி, காயத்ரி ரகுராம், இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் விஜயகுமார் போன்றவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில், கங்கை அமரனின் பெயர் இறுதி செய்யப்பட்டது. இதற்குக் காரணம், அவர், தன் பண்ணை வீட்டை... சசிகலா அபகரித்ததாக ஏற்கெனவே பகிரங்கமாகப் புகார் கூறியிருந்தார். இதனை மனதில்வைத்தே, அ.தி.மு.க சார்பில் நிற்கும் டி.டி.வி.தினகரனை வீழ்த்த... இவரே சரியான ஆளாக இருக்கும் என்று கட்சி மேலிடம் நினைத்தது. மேலும், இவர் உலகம் அறிந்த பிரபலம்கூட. சிறு குழந்தைகளின் இதயங்களிலும் இடம்பிடித்தவர். ஆகையால், சசிகலா மீதுள்ள வெறுப்பைக் காட்ட அந்தத் தொகுதி மக்கள், ஒரு மாற்று வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க முயல்வர். அத்துடன், ஒரு புதுமுகத்துக்கும் வாய்ப்பளிக்க முன் வருவர். தற்போது, மத்திய அரசில் உள்ள பி.ஜே.பி-யின் செயல்பாடுகளை மக்கள் நன்கறிந்துள்ளனர். உலகமே எதிர்பார்த்த ஐந்து மாநில தேர்தல்களிலும் பி.ஜே.பி மிகப்பெரிய வெற்றியை எட்டிப்பிடித்திருக்கிறது. ஆக, தமிழகத்திலும் அதற்கான மாற்றம் நிச்சயம் வரும். அதற்கு ஒரு முன்னுதாரணமாகத்தான் ஆர்.கே.நகர் தேர்தலில் கங்கை அமரனை நிறுத்தியுள்ளனர். இது ஆளும் கட்சிக்குப் புளியைக் கரைப்பதோடு, அவர்களுடைய ஓட்டு வங்கியைப் பிரிக்கும்'' என்றனர், உற்சாகத்துடன்.

“மக்கள் மாற்றத்தை விரும்புவதால் நான் வெற்றி பெறுவேன்” என்று நம்பிக்கையுடன் சொல்லும் கங்கை அமரன், தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராய்; இயக்குநராய்; பாடலாசியராய்; நடிகராய்; பாடகராய் எனப் பன்முகங்களில் கோலோச்சியவர். தற்போது, பிரபலமான சின்னத்திரை ஒன்றில் குழந்தைகளைவைத்து இசை நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கிவருகிறார். இவர், இசைஞானி இளையராஜாவின் சகோதரரும்கூட.

முக்கியமான மூவர்!

''ஜெயலலிதாவின் நிலையைத் தற்போது நினைக்கும்போது மிக வருத்தமாக உள்ளது. உறவுகளைச் சந்திக்கவிடாமல் அவரைத் தனிமைச்சிறையில் வைத்திருந்திருந்தார்கள் என்பது அவருடைய அண்ணன் மகள் தீபா சொல்லியதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்களின் நலனை யோசிப்பவராக இருந்திருந்தால்... ஜெயலலிதாவின் மறைவை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு சென்றிருப்பார்கள்; அவர்களுடைய செல்வாக்கைப் பெறுவதற்கு முயற்சி செய்திருப்பார்கள்; அதையெல்லாம் விட்டுவிட்டு இப்போது தரம் தாழ்ந்த வேலைகளைச் செய்துவருகிறார்கள்; தமிழக அரசியலை எண்ணி அயல் நாடுகளில் உள்ளவர்களும் சிரிக்கிறார்கள்'' என்று சசிகலா குடும்பத்தைப் பற்றி முன்பே, 'விகடன்' இணையதளத்தில் பிரத்யேகமாகப் பேட்டி கொடுத்திருந்தார் கங்கை அமரன். மேலும் அவர், ''மக்களின் நலனுக்காக ஆட்சிக்கு வரவேண்டும் என்று இவர்கள் துடிக்கவில்லை... மாறாக, பணத்தைச் சம்பாதிக்கவே ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்'' என்றவர், ஓ.பன்னீர்செல்வத்தின் (முதல்வராக இருந்தபோது) ஆட்சியைப் புகழ்ந்து பேசினார்.

இப்படிச் சொன்ன கங்கை அமரனே, இன்று மேற்கண்ட மூன்று அணிகளுக்கும் போட்டியாய் நிற்கிறார். ஆம். அன்று, ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாய்ப் பேசிய கங்கை அமரன், இன்று அந்த அணியில் உள்ள இ.மதுசூதனனை எதிர்த்தும், ஜெ-வின் அண்ணன் மகளான தீபாவை எதிர்த்தும், அவருடைய பரம எதிரியான மன்னார்குடி கும்பலைச் சார்ந்த டி.டி.வி.தினகரனை எதிர்த்தும் களத்தில் நிற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிரிகளிடம் மறைமுகமாக மோத... களம் இறக்கப்பட்டிருக்கிறாரா, கங்கை அமரன்?

- ஜெ.பிரகாஷ்

ஏழை நோயாளிகளை கவனிக்காமல் தனியார் மருத்துவமனையில் வேலை செய்யும் அரசு டாக்டர்கள்:கட்டுப்படுத்த வருகிறது பயோமெட்ரிக் கருவி

சி.கண்ணன்
அரசு டாக்டர்கள் 10 சதவீதம் பேர் பணி நேரத்திலேயே தனியார் மருத்துவமனைக்கு சென்று பணியாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயோமெட்ரிக் கருவியை கட்டாயம் அமைக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பயோமெட்ரிக் கருவி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 31 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், தாலுகா அல்லாத மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் சுமார் 18 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். ஏழை நோயாளிகளுக்கு சேவை யாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் பணியாற்றி னாலும், பெயரளவுக்கு வந்து வருகையை பதிவு செய்து விட்டு, தனியார் மருத்துவமனை களில் வேலை செய்பவர்களும் இருக்கின்றனர். இத்தகைய டாக்டர்கள் அரசு மருத்துவ மனையைவிட தனியார் மருத்துவ மனையில்தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, அரசு டாக்டர் களை கண்காணிக்க முதல் கட்டமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் கருவி அமைக்கப் பட்டது. படிப்படியாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இக்கருவி அமைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அறிவித்தது. அரசு டாக்டர்கள் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் கண்டிப்பாக இதில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கு அரசு டாக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுகாதாரத் துறை கட்டாயமாக்கியதால், சில மாதங்கள் மட்டுமே இதில் டாக்டர்கள் பதிவு செய்தனர். அதன் பின் யாரும் பதிவு செய்யாததால், மீண்டும் வருகைப் பதிவேடு முறை அமலுக்கு வந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் பயோமெட்ரிக் கருவியை கட்டாயம் அமைக்கு மாறு நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அதன்படி பயோமெட்ரிக் கருவி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுதொடர்பாக தமிழக மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும், இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினருமான டாக்டர் ஆர்விஎஸ்.சுரேந்திரன் கூறியதாவது:
அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனையில் வேலை செய்யக்கூடாது. அரசு மருத்துவ மனைகளில் தங்களது பணி நேரத்தை முடித்துவிட்டு, பிறகு தனியார் மருத்துவமனைகள் அல்லது கிளினிக்குகளில் மருத்துவ ஆலோசகராக பணி யாற்றலாம். அதேபோல தங்கள் பெயரில் சொந்தமாக மருத்துவ மனை, கிளினிக் வைக்கக்கூடாது. ஆனால், பெரும்பாலான டாக்டர்கள் தங்களது மனைவி அல்லது வேறு யாராவது பெயரில் மருத்துவமனை, கிளினிக் நடத்துகின்றனர்.
அரசு டாக்டர்களில் சுமார் 10 சதவீதம் பேர் தங்களது பணி நேரத்திலேயே தனியார் மருத்துவமனைக்கு சென்று பணியாற்றுவதாக தகவல்கள் வருகின்றன. இத்தகைய அரசு டாக்டர்கள் மீது ஏற்கெனவே பலமுறை நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் கே.செந்திலிடம் கேட்டபோது, ‘‘நீதிமன்ற உத்தரவுப் படி அரசு மருத்துவமனைகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்தும் பணி நடந்துவருகிறது. பயோ மெட்ரிக் கருவி இருந்தாலும், வருகைப் பதிவேட்டையும் நடைமுறையில் வைக்க வேண்டும்’’ என்றார்.

சிசிடிவியும் வருகிறது

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஒருசில மாவட்ட மருத்துவமனைகளில் மட்டுமே கண்காணிப்பு கேமராக் கள் உள்ளன. குழந்தைகள் திருட்டை தடுக்க பிரசவ வார்டு களில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இவற்றில் பிரசவ வார்டுகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மட்டுமே பயன் பாட்டில் உள்ளன.

மற்ற இடங்களில் உள்ள கேமராக்கள் செயல்படுவதில்லை. இதனால் டாக்டர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல பிரச்சினை களில் உண்மையைக் கண்டறிய முடிவதில்லை. இதனால் அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் கண்காணிப்பு கேம ராவையும் பொருத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.

ருசியியல் சில குறிப்புகள் 14: திவ்யமான திருப்பதி லட்டு!

பா.ராகவன்

இந்தப் பூவுலகத்தில் கிடைக்கிற அத்தனை சுவைகளையும் ஒரு தட்டில் வைத்து எதிர்ப்புறம் ஒரு திருப்பதி லட்டை வைத்தால் நான் இரண்டாவதைத் தான் எடுப்பேன். இத்தனைக்கும் லட்டு என்பது எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத வஸ்து. சமூகத்தில் யாருக்குமே ருசியான லட்டு பிடிக்கத் தெரியவில்லை என்பது என் அபிப்பிராயம். அதுவும் கல்யாண வீட்டு லட்டு என்பது ஒரு காலக்கொடுமை. எண்ணெயில்தான் பொரிக்கிறானா, குரூடாயிலைக் கொண்டு கொட்டுகிறானா என்று எப்போதும் சந்தேகாஸ்பதத்தோடே அணுக வேண்டியிருக்கும். நிஜ லட்டின் ருசியானது மிகச் சில இடங்களில் மட்டுமே தரிசனம் கொடுக்கும். பெரும் பாலும் சேட்டுக் கடைகளில்.
அடிப்படையில் லட்டின் பிறப்பிடம் குஜராத் என்பது இதற்கொரு காரணமாக இருக்கலாம். அங்கே அதனை மோத்தி சூர் லாடு என்பார்கள். 12-ம் நூற்றாண்டு குஜராத்திய இலக் கியங்களில் ஆதி லட்டு பற்றிய குறிப்புகள் இருப் பதாகச் சொல்கிறார்கள். கடலை மாவு, சர்க்கரைக் கரைசல் (கம்பிப் பாகு பதம் முக்கியம்), நெய், திராட்சை, ஏலம், முந்திரி. அவ்வளவு தான். எளிய ஃபார்முலாதான் என்றாலும் செய்முறை அத்தனை எளிதல்ல.

இந்தக் கம்பிப் பாகு என்பது ஒரு பேஜார். கொஞ்சம் முன்னப்போனால் ஒட்டாது. அரை விநாடி தாமதித்து விட்டாலும் லட்டின்மீது ஓர் உப்பளம் ஏறி உட்கார்ந்துவிடும். லட்டில் சர்க்கரை படிவதென்பது பார்க்கக் கண்ணராவி யான சங்கதி. அதைத் தின்று தீர்ப்பது அதைவிட ஆபாசம். (இதே ஆபாசம் பாதுஷாவிலும் அடிக்கடி நிகழும்)

ஒரு முறை பெங்களூருக்குச் சென் றிருந்தபோது எம்டிஆரில் சாப்பிட்டேன். அங்கிருந்த மாஸ்டர் ஒருத்தர்தான் அந்தப் பதத்தைப் பற்றிச் சொன்னார். சர்க்கரையைக் காய்ச்சும்போது மெல் லிய மெரூன் நிறத்துக்கும் முழுத் தங்க நிறத்துக்கும் நடுவே ஒரு பாதரச நிறம் சில விநாடிகளுக்கு வரும். அந்த நிறம் தென்பட்டதும் அடுப்பை அணைத்துவிட வேண்டும். லட்டுப் பாகுப் பதம் என்பது அதுதான். இந்தப் பதத்தின் சூத்திரதாரிகள் திருப்பதியில் இருக்கிறார்கள் என்பதும் அவர் சொன்னதுதான்.

உண்மையில் லட்டு கண்டுபிடிக்கப் பட்டு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் திருப்பதி லட்டு என்ற இனமே உருவானது. சரியாகச் சொல்லுவதென்றால் 18-ம் நூற்றாண்டு. அதற்கு முன்னால் வண்டிச் சக்கரம் மாதிரி பிரம்மாண்டமான வடைகளும் வெண் மற்றும் சர்க்கரைப் பொங்கலும்தான் திருப்பதி பிரசாதம். இப்போதும் உண்டென்றாலும் லட்டு பிறந்த பிறகு வடை, பொங்கல் வகையறாக்களின் மவுசு அங்கே குறைந்துவிட்டது.
திருப்பதியில் லட்டு பிடிப்பதற்கென தனியாக ஒரு சமையல்கூடம் இருக்கிறது. பொட்டு என்று அதற்குப் பேர். சம்பந்தமில் லாத யாரையும் அங்கே உள்ளே விட மாட்டார்கள். முன்னொரு காலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தான் இந்த லட்டு பிடிக்கும் ஜோலி பார்த்தார்கள். இப்போது அதெல்லாம் கிடையாது. தினசரி 7 ஆயிரம் கிலோ கடலை மாவு, 10 ஆயிரம் கிலோ சர்க்கரை, 700 கிலோ முந்திரி, 400 லிட்டர் நெய் என்று புழங்குகிற பேட்டைக்கு எத்தனை பேர் இருந்தால் கட்டுப்படியாகும் என்று யோசிக்க ஆரம்பித்தால் லட்டை மறந்துவிடுவோம்.

நமக்கு நபர்களா முக்கியம்? அந்த லட்டு எப்படி அத்தனை ருசிக்கிறது என்று தெரிந்துகொள்ள ஒரு காலத்தில் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறேன். பெரும் போராட்டத்துக்குப் பிறகுதான் பதில் கிடைத்தது.

குஜராத்திக்காரர்கள் உட்பட லட்டு செய்வோர் அத்தனை பேரும் பொதுவாக பூந்தியை எண்ணெயில் பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் போடுவார்கள். திருப் பதிக்காரர்கள் கொஞ்சம் வேறு மாதிரி. அவர்கள் பூந்தி பொரிப்பதற்கே நெய்யைத்தான் உபயோகிக்கிறார்கள். தவிர ஒரு ஈடு பூந்தி எடுத்தாகிவிட்டால் மறுகணமே அடுப்பில் காயும் நெய்யை எடுத்துக் கீழே கொட்டிவிடுவார்கள். நெய் யாகப்பட்டது கொஞ்சம் கிறுக்குத்தனம் கொண்ட வஸ்து. கொஞ்சம் காய்ந்த துமே அதன் வாசனை மாறத் தொடங்கி விடும். வாசனை மாறிய நெய் என்பது பொய்யே அன்றி வேறில்லை.
திருப்பதியிலேயே தாயார் சந்நிதி லட்டுக்கும் மலை மீதிருக்கும் பெருமாள் கோயில் லட்டுக்கும் வித்தியாசம் உண்டு. எல்லாம் சேர்மான சதவீத மாறுபாடு களால்தான்.

ஆச்சா? இப்போது விஷயத்துக்கு வருகிறேன். எனக்கு மிகச் சிறு வயது களில் இருந்தே திருப்பதி லட்டென்றால் ரொம்ப இஷ்டம். இதற்குக் காரணம் என் அப்பா.

எனக்கு நினைவு தெரிந்த நாளாக என் அப்பா ஒரு சர்க்கரை நோயாளி. என்னை மாதிரி உத்தம புத்திரர்கள் அவருக்கு மூன்று பேர் உண்டு. மூன்று உத்தமன்களை ஒழுங்காக வளர்க்கத் தான் முதலில் நன்றாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்து, அவர் சர்க்கரை சாப்பிடுவதை விட்டார்.
விட்டார் என்றால், முழுமையாக விட் டார். எப்பேர்ப்பட்ட மேனகை ஊர்வசியும் அவரைச் சலனப்படுத்திவிட முடியாது. காப்பிக்குச் சேர்க்கிற சர்க்கரை முதல் பொங்கல் பண்டிகைக்குச் செய்கிற அக்கார அடிசில் வரை எதையும் தொட்டுக் கூடப் பார்க்க மாட்டார். எனக்குத் தெரிந்து சுமார் 40 வருடங்களாக இனிப்பு என்பதை எண்ணிக்கூடப் பார்க்காத ஒரு ஜென்மம் உண்டென்றால் இந்த உலகில் அது அவர் மட்டுமாகத்தான் இருப்பார்.

அப்பேர்ப்பட்ட பராக்கிரமசாலிக்கு ஒரே ஒரு பலவீனம் உண்டு. யாராவது திருப்பதி லட்டு என்று சொல்லிக் கொடுத்தால் மட்டும் ஒரு சிட்டிகை விண்டு வாயில் போட்டுக்கொள்வார். ஒரு சிட்டிகையில் என்ன கிடைத்துவிடும்? பிரசாதம் என்று புருடா விட முடியாது. ஏனென்றால் மற்ற கோயில் பிரசாதங் களையெல்லாம் அவர் சீந்தக்கூட மாட்டார். திருப்பதி லட்டென்றால் மட்டும் ஒரு சிறு விள்ளல்.

இதற்கு என்ன காரணம் என்று பல முறை யோசித்துப் பார்த்திருக்கிறேன். அதன் ருசியைத் தவிர இன்னொன்று தோன்றியதில்லை. பிரச்சினை என்ன வென்றால் அவரால் அந்த ஒரு சிறு விள் ளலில் அந்த ருசியின் பூரணத்தைப் பெற்று விட முடிந்தது. எனக்கு ஒன்று இரண்டு மூன்று என்று லைன் கட்டி வைத்து முழுக்கத் தின்று தீர்த்தாலும் அரைத் திருப்திதான் வரும். தனிப்பட்ட முறையில் இது எனக்குப் பெரிய தோல்வி என்று தோன்றும். பன்னெடுங்காலம் போராடிப் பார்த்தும் என்னால் அந்த ஒரு துளி உலகை வெல்ல முடியவில்லை.

ஒவ்வொரு முறை திருப்பதி லட்டு உண்ணும்போதும் எனக்கு இந்த ஞாபகம் வந்துவிடும். சட்டென்று சுதாரித்துக் கொண்டு, ‘இன்றைக்கு ஒரு விள்ளலோடு நிறுத்திக்கொள்ளப் போகிறேன்’ என்று எனக்குள் சொல்லிக்கொள்வேன். ஆனால் ஒருநாளும் முடிந்ததில்லை. அது நப்பாசை அல்ல. பகாசுரத்தனமும் அல்ல. உணவின் ருசியை ஒரு வேட்டை நாய்போல் அணுகும் விதத்தின் பிரச்சினை என்று தோன்றியது.

நீங்கள் அணில் சாப்பிடும்போது பார்த் திருக்கிறீர்களா? யாரோ கொள்ளையடித் துப் போய்விடுவார்கள் என்ற அச்சத்துட னேயேதான் அது சாப்பிடும். உண்பதில் அதன் வேகமும் தீவிரமும் வேறு எந்த உயிரினத்துக்கும் கிடையாது. ஆனால் ருசிகரம் என்பது தியானத்தில் கூடுவது. பண்டத்தில் பாதி, மனத்தில் பாதியாக இரு தளங்களில் நிற்பது. இதைப் புரிந்து கொண்டதால்தான் என் அப்பாவால் ஒரு விள்ளல் லட்டில் பரமாத்மாவையே தரிசித்துவிட முடிந்திருக்கிறது.
அது விளங்கியபோதுதான் என்னால் அனைத்தையும் விட்டொழிக்க முடிந்தது.
- ருசிக்கலாம்… | எண்ணங்களைப் பகிர: writerpara@gmail.com
RTI applications increase, but so do rejections without reasons

DNA
While there has been a jump of 22.67 per cent over the previous year in the filing of RTI applications in 2015-16, there has also been a steep increase in the number of applications rejected by various ministries, which have used the mysterious pretext of citing 'others' as the reason.
Under the provisions of the RTI Act, a public authority can reject an application and refuse to provide information citing security and privacy reasons governed by the sections 8, 9, 11 and 24 of the Act. But most of the ministries who rejected the application cited none of these permissible clauses. Against 28,444 applications rejected under the 'others' category the previous year, in 2015-16, the number has increased to 36,913.
A whooping 43 per cent of the rejections were recorded under the 'others' category, while 47 per cent were rejected under the permissible clauses. Out of 11,138 received by the Prime Minister's Office (PMO) in 2015-16, it rejected 2,227 applications citing 'others' as the reason. The CIC has reported that there has been a decrease in the number of first appeals received, but an increase in the number disposed by the first appellate authorities.
Venkatesh Nayak, Programme Coordinator, Access to Information Programme at the Commonwealth Human Rights Initiative (CHRI), described the increase in applications to be a positive trend, but also raised concern at the increasing number of rejections without valid reasons mentioned under the RTI Act being cited. The CIC disposed of 28,188 appeal and complaint cases in 2015-16, while 25,960 cases were registered during the same period.
While the President's Secretariat received only 123 more RTIs in 2015-16 as compared to the previous year, the proportion of rejection plummeted from 9.30 per cent to 1.2 per cent in 2015-16. In 2015-16, the Prime Minister's Office (PMO) reported a rejection rate of 20.1 per cent of the RTIs received. While this a significant drop from 22.10 per cent in 2014-15, only seven RTI applications were rejected by the PMO invoking section 8. A whopping 2,227 RTIs were rejected under the 'others' category.
The proportion of rejection of RTIs by the Supreme Court fell to 21.1 per cent in 2015-16, while it received only six more RTIs as compared to the previous year. The proportion of rejections by the Delhi High Court also registered a fall of more than 1 per cent in 2015-16, even tough the number of RTIs received went up by 127.
While the number of RTIs received by the Comptroller and Auditor General fell to 716 in 2015-16 from 796 the previous year, the proportion of rejections zoomed to 17.2 per cent from 6.3 per cent reported the previous year. This alarming increase requires an in-depth study.
The Cabinet Secretariat also witnessed a jump in the proportion of rejections from 4.3 per cent to 6.65 per cent in 2015-16, although it received only 73 more RTIs. The Ministry of Personnel and Training reported a significant decline in the proportion of rejections at 3.4 per cent in 2015-16 as compared to 9.4 per cent during the previous year, even though it reported receiving 9,000 more RTIs in 2015-16. This appears to be a positive trend.
Among key ministries, the proportion of rejections in the Ministry of Defence fell significantly to 11.5 per cent in 2015-16 as compared to 15.90 per cent the previous year. In the Ministry of Finance, the proportion of rejections fell to 18.3 per cent in 2015-16 as compared to the 20.2-per cent rejection rate the previous year.

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...