Saturday, March 18, 2017


ஜியோ ப்ரைம் - ஏர்டெல் 349 - வோடோஃபோன் 345 - எந்த பிளான் பெஸ்ட்? #4G battle




ஆடிப்போய் இருக்கிறது இந்திய தொலைதொடர்பு துறை. ஜியோவின் கடந்த சில மாதங்களுக்கான இலவச சேவை, டெலிகாம் துறையையே அதிரடித்திருக்கிறது. கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மொபைலில் கிரிக்கெட் மேட்ச்சை லைவாக பார்த்தபடியே ஓட்டுகிறார்கள். பேருந்தில் செல்லும் சீரியல் விரும்பிகள், பயணத்திலே சீரியல் பார்க்கிறார்கள். எல்லோரும் 4ஜி வேகத்தில் இணையத்தை துழாவி எடுக்கும் பழக்கத்துக்கு வந்துவிட்டார்கள். காரணம், ஜியோ.

இந்த மாதத்துடன் ஜியோ சொன்ன கெடு முடிகிறது. முதலில் 2016 திசம்பர் வரை இலவசம் என்றார்கள் அடுத்து, மார்ச் வரை நீடித்திருக்கிறார்கள். இப்போது ஜியோ பிரைம் திட்டம் என்கிறார்கள். அதன்படி மார்ச் 31க்குள் 99ரூபாய் கட்டினால் ஜியோ பிரைம் மெம்பர் ஆகிவிடலாம். அதன்பின் மாதம் 303 ரூபாய் கட்டினால் போதும். அளவற்ற வாய்ஸ் கால், தினம் 1ஜிபி 4ஜி நெட் 28 நாட்களுக்கு நிச்சயம். அதாவது, இப்போது இலவசமாக கிடைக்கும் சேவைகள் ஏப்ரல் 1க்கு பிறகு மாதம் 303 ரூபாய். இதுதான் ஜியோவின் நீண்டகால பிளான் என்பதால், மற்ற நிறுவனங்கள் இதை சமாளித்தாக வேண்டியிருக்கிறது.



முக்கிய எதிர்கட்சிகளான ஏர்டெல்லும், வோடோஃபோனும் ஜியோவின் தாக்குதலால் ஏற்கெனவே நிலைகுலைந்து போயிருக்கின்றன. இனியும் விட்டால் ரெகுலர் கஸ்டமர்களும் மனம் மாறுவர்கள் என புது பிளான்களை அறிவித்திருக்கின்றன. அவை என்ன என்ன?

ஏர்டெல் 349:

ஜியோவின் 303 திட்டத்துக்கு சரியான பதிலடி ஏர்டெல்லின் 349. இந்த பிளானும் 28 நாட்களுக்கானதுதான். தினமும் 1 ஜிபி 4ஜி நெட். ஏர்டெல்லின் இந்த திட்டத்துக்கு வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இதில் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் கிடையாது. ஆனால், ரோமிங்கில் கட்டணம் உண்டு. தினமும் 1ஜிபி லிமிட் என்பது போல வாய்ஸ் கால்களுக்கும் தினமும் 300 நிமிடங்கள், வாரம் 1200 நிமிடங்கள் லிமிட் வைத்திருக்கிறார்கள். அதைத் தாண்டினால் கட்டணம் உண்டு. ஜியோ அளவுக்கு இறங்கி அடிக்கவில்லை என்றாலும், ஏர்டெல்லின் தற்போதைய கட்டணத்துக்கு இந்த ஆஃபர் உண்மையிலே ஜாக்பாட் தான்.

இந்த ஆபரையும் இப்போதுவரை ஏர்டெல் செக்மெண்ட்டெட் ஆபர் என்றுதான் வைத்திருக்கிறார்கள். அதாவது எல்லா வாடிக்கையாளருக்கும் இது கிடைக்காது. குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே இது செல்லும். ஆனால், விரைவில் அனைவருக்கும் இந்த ஆஃபர் கிடைத்துவிடும் என நம்பலாம்.

பிற்சேர்ப்பு: ஏர்டெல் தரும் 1 ஜிபியில் 500 எம்பியை இரவு நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தோம். ஆனால், எப்போது வேண்டும் என்றாலும் பயன்படுத்துக் கொள்ளலாம். தினம் ஒரு ஜிபி என்பதுதான் லிமிட் என ஏர்டெல் சார்பாக நம்மிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

வோடோஃபோன் 346:

கிட்டத்தட்ட ஏர்டெல்லின் அதே கட்டணம் அதே சலுகைகள். ஆனால், வோடோஃபோன் ஏர்டெல்லை சின்ன மார்ஜினில் வெல்கிறது. வாய்ஸ் கால்களில் மாற்றம் இல்லை. தினம் 300 நிமிடங்கள் /வாரம் 1200 நிமிடங்கள் இலவசம் தான். டேட்டாவும் தினம் 1ஜிபி என 28 நாட்களுக்கு 28 ஜிபி தான். ஆனால், அந்த ஒரு ஜிபியை பயன்படுத்துவதில் ஏர்டெல் போல வோடோஃபோன் எந்த செக்கும் வைக்கவில்லை. நாள்முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம். மார்ச் 15க்குள் இந்த பிளானுக்குள் வருபவர்களுக்கு கூடுதலாக 28ஜிபியை தந்தது வோடோஃபோன்.

சேவைகள்ஜியோஎர்டெல்வோடோஃபோன்
  4ஜி டேட்டா1ஜிபி /நாள்1ஜிபி /நாள்1 ஜிபி /நாள்
 வேலிடிட்டி28 நாட்கள்28 நாட்கள்28 நாட்கள்
 வாய்ஸ் கால்/ குறுந்தகவல்இலவசம்300 நிமி/நாள்300 நிமி /நாள்
ரோமிங்இலவசம்இல்லைஇல்லை


- கார்க்கிபவா

No comments:

Post a Comment

Jacto-geo to go on strike from Jan 6

Jacto-geo to go on strike from Jan 6 TIMES NEWS NETWORK 23.12.2025 Chennai : The talks held by the ministerial panel with representatives of...