Tuesday, March 28, 2017

செல்லாத ரூபாய் நோட்டு 'டிபாசிட்':
தமிழகத்தில் 1 லட்சம் பேரிடம் விசாரணை


வங்கிகளில் அதிகளவில், செல்லாத ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்தது பற்றி தகவல் தெரிவிக்காததால், தமிழகத்தைச் சேர்ந்த, ஒரு லட்சம் பேரிடம், வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.



கடந்த, 2016 நவ., ௮ல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இந்த அறிவிப்புக்குப் பின், பதுக்கி வைத்திருந்த பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து, மாற்ற வேண்டிய நிலைக்கு பலர் தள்ளப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர், வருமான வரித்துறைக்கு பயந்து, வேறு நபர்களின் கணக்குகளில் செலுத்தியது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டனர்.

18 லட்சம் வங்கிக் கணக்குகள் ஆய்வு

இதையறிந்த மத்திய அரசு, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித்துறை மூலம் நடவடிக்கை

எடுத்தது. வங்கிகளில் அதிக தொகையை, டிபாசிட் செய்தவர்கள், அதுபற்றி வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்தால், அபராதத்துடன் தப்பிக்கும் சிறப்புதிட்டத்தை அறிவித்தது.

இதற்கிடையில், நாடு முழுவதும், இணையதளம் மூலமாக, வருமான வரி கணக்கு தாக்கல் செய்த, 18 லட்சம் பேரின் வங்கிக் கணக்குகள் ஆராயப்பட்டன. அவற்றில், அபரிமிதமான தொகை டிபாசிட் ஆகியிருந்ததை, மத்திய அரசு கண்டுபிடித்து, 'நோட்டீஸ்' அனுப்பியது. இது தொடர்பாக, தமிழகத்தில், ஒரு லட்சம் பேரிடம் விசாரணை துவங்கியுள்ளது.

'ஆன்லைன்' மூலமாக, நோட்டீஸ்

தமிழக வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பிய, 18 லட்சம் பேரில், ஒரு லட்சத்து, எட்டாயிரம் பேர், தமிழகத்தைச்சேர்ந்தவர்கள். அவர்களுக்கு, 'ஆன்லைன்' மூலமாக, நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பலர், அதை பார்க்கவில்லை.
அதனால், அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு வருகிறோம்.
இதுவரை, 30 ஆயிரம் பேர், மிக அதிகளவில் டிபாசிட் செய்தது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் அபராதம்

வசூலிக்கப்படுகிறது. சிறப்பு திட்டம் நிறைவடைய, இன்னும் நான்கு நாட்கள் இருப்பதால், மொத்த விபரங்கள் பின் வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

நவம்பரில் சிக்கிய ரூ.246 கோடி!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள, ஒரு பொதுத் துறை வங்கியில், ஒருவரின் இரு கணக்குகளில், தலா, 123 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டிருந்தது. இது, 2016 நவம்பரில் தெரிய வந்தது. அவரை, வருமான வரி அதிகாரிகள் அணுகியதும், சிறப்புத் திட்டத்தின் கீழ், 74.9 சதவீத அபராதத்தை, அவர் செலுத்தி விட்டார்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

Two-day bank strike deferred

Two-day bank strike deferred  TIMES NEWS NETWORK 23.03.2025 Ahmedabad : In a significant relief to people, the banking associations have dec...