Monday, March 27, 2017

 நீதிமன்ற உத்தரவுகள் தெளிவாக இருக்க வேண்டும் : ஐகோர்ட் அதிரடி

சென்னை: 'பரிச்சயம் இல்லாத வார்த்தை சுருக்கங்களை, நீதிமன்ற உத்தரவில் பயன்படுத்த வேண்டாம்; சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், உத்தரவுகள் தெளிவாக இருக்க வேண்டும்' என, கீழமை நீதிமன்றங்களை, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், புதுச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில், 2014ல் ஆஜர்படுத்தப்பட்டனர். அந்த வழக்கில், தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு நீதிமன்றத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட்டும், காவல் நீட்டிப்பு குறித்து முறையான உத்தரவு பிறப்பிக்காததால், சட்டவிரோத காவலில் அவர்கள் இருந்தனர். எனவே, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் நாகமுத்து, சத்தியநாராயணன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பார்த்தோம். அதில், வார்த்தை சுருக்கம் காணப்படுகிறது. அதை புரிந்து கொள்ள, எங்களுக்கு சிரமம் ஏற்பட்டது. மூத்த வழக்கறிஞர் முத்துகுமாரசாமி, வார்த்தை சுருக்கங்களை, எங்களுக்கு விளக்கினார்.இப்படி பரிச்சயமில்லாத வார்த்தைகளை பயன்படுத்துவது, கண்டிக்கத்தக்கது. நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை, சாதாரண மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிய வேண்டும்.

 இனிமேல், இதுபோன்ற வார்த்தை சுருக்கத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்ற நீதிபதிகள் பயன்படுத்த மாட்டார்கள் என, எதிர்பார்க்கிறோம். உத்தரவுகள் தெளிவாக, பரிச்சயமான வார்த்தைகளை கொண்டிருக்க வேண்டும்.இந்த வழக்கைப் பொறுத்தவரை, சிறப்பு நீதிமன்ற நீதிபதி, எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. வாரன்ட் உத்தரவில், குறிப்புகளை எழுதி உள்ளார். இது, சட்டப்படியானது அல்ல. எனவே, காவல் நீட்டிப்பு உத்தரவு, முறையாக இல்லை என்றாலும், அதை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட காவல் நீட்டிப்பு உத்தரவுகள் முறையானது என்பதால், சட்டவிரோத காவல் என, கூற முடியாது.இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency

Nursing, paramedical college affiliation goes online from Sept 1 to ensure transparency TIMES NEWS NETWORK 16.04.2025 Indore : To steer clea...