Saturday, August 19, 2017

கம்பீரமாக காட்சியளிக்கும் ஆங்கிலேயர் கால 'மைல்' கல்

பதிவு செய்த நாள்19ஆக
2017
00:14




ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி - முதுகுளத்துார் ரோட்டில் பேரையூர் பகுதியில் நிறைகுளத்து அய்யனார் கோயில் அருகே கம்பீரமாக காட்சியளிக்கிறது ஆங்கிலேயர் கால 'மைல்' கல்.

தமிழகத்தில் உள்ள கட்டுமானங்கள், ரயில் வழித்தடங்கள், முக்கிய சாலைகள் ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல சாலைகள், கட்டுமானங்கள் இப்போதும்உறுதியோடும், பழமையை பறைசாற்றும் விதமாகவும் உள்ளது. தற்போது மைல்கற்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் கான்கிரீட்களால் அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இவை குறுகிய காலத்திலேயே சேதமடைந்து விடுகின்றன.கமுதி - முதுகுளத்துார் சாலையில் பேரையூர் பகுதியில் ஆங்கிலேயர்களால் ௧௦௦ ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கருங்கல்லால் ஆன 'மைல்' கல், இப்போதும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. அதில் உள்ள தகவல்களும், மிகத் தெளிவாக தெரிகிறது.

வரவிருக்கும் விசேஷங்கள்


ஆகஸ்ட் 25 (வெ) விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 02 (ச) பக்ரீத்

செப்டம்பர் 04 (தி) ஓணம்

செப்டம்பர் 05 (செ) ஆசிரியர் தினம்

செப்டம்பர் 06 (பு) தினமலர் இதழுக்கு 67 வது பிறந்த தினம்

செப்டம்பர் 06 (பு) மகாளய பட்சம் ஆரம்பம்
படுத்திய மோதிரம்: பதறிய மாப்பிள்ளை
பதிவு செய்த நாள்
ஆக 19,2017 00:32


திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் நெடுமங்காட்டை சேர்ந்த ஜோனி ஜோன்ஸ் என்பவரின் திருமணம் காயங்குளத்தில் நடந்தது. திருமண மண்டபத்தில் மணமக்களுடன் உறவினர்கள் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். நேரம் செல்லசெல்ல மாப்பிள்ளையின் முகம் இறுக்கமாக மாறுவதை கண்ட புகைப்பட கலைஞர், விசாரித்தார். 'நண்பர் ஒருவர் போட்ட மோதிரம் விரலில் இறுகி வீக்கம் ஏற்பட்டு வலி இருக்கிறது' என மாப்பிள்ளை கூறினார். இதையடுத்து விரலில் மோதிரத்தை கழற்றும் முயற்சி நடந்தது; ஆனால் முடியவில்லை. தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அத்துறை வீரர்கள் 'கட்டர்' மூலம் மோதிரத்தை வெட்டி எடுத்தனர். அதன் பிறகே மாப்பிள்ளை முகத்தில் சிரிப்பை பார்க்க முடிந்தது.
இறந்தவருக்கு நிவாரணம் மருத்துவர்கள் 'தர்ணா'
பதிவு செய்த நாள்19ஆக
2017
00:37

செங்கல்பட்டு : செங்கல்பட்டில், மருத்துவர்கள் நேற்று, தர்ணா போராட்டம் நடத்தினர்.செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், துணை பேராசிரியராகவும்,இதய பிரிவு மருத்துவராகவும் இருந்தவர், அருட்செல்வம்.இரண்டு நாட்களுக்கு முன் இவர், கடலுாரில் நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்ற முதல்வர்பழனிசாமியுடன், பயண வழி மருத்துவராக சென்றார். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில், அருட்செல்வம் இறந்தார்.இறந்த மருத்துவர் குடும்பத்திற்கு நிவாரணமும், முதல்வர் பாதுகாப்பிற்கு செல்லும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வாகனமும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், டாக்டர் சுதாகர் தலைமையில், நேற்று தர்ணா போராட்டம்நடந்தது.இந்திய மருத்துவ சங்கத்தின் செங்கல்பட்டு தலைவர் அரசு உட்பட, 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.
இரவு நேரத்தில் வெளி ஆட்கள் நடமாட்டம்; புறநகர் ரயில் நிலையங்களில் போலீஸ் அதிரடி
பதிவு செய்த நாள்19ஆக2017 00:01

சென்னை : புறநகர் ரயில் நிலையங்களில், இரவு நேரத்தில் வெளி ஆட்கள் நடமாட்டத்தை தடுக்க, ரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.சென்னையில், புறநகர் மின்சார ரயில் போக்குவரத்தில், கடற்கரை - தாம்பரம் இடையே, பயணியர் கூட்டம் அதிகஅளவில் உள்ளது.
கண்காணிப்புரயில் மற்றும் நிலையங்களில், பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டாலும், இரவு நேரத்தில், வெளி ஆட்கள் இருக்கைகளில் படுத்துக் கொள்வது, குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடித்து குளிப்பது, உணவுக் கழிவுகளை போடுவது தொடர்ந்து வந்தது. ரயில் நிலைய பிளாட்பாரம் மற்றும் நடை மேம்பாலங்களில், இரவு நேரத்தில் வெளி ஆட்கள் நடமாட்டத்தை தடுக்க, ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் அதிரடி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் நிலையம் இடையே உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், இரவு, 10:00 முதல், 12:00 மணி வரை, ரயில்வே பாதுகாப்பு படையினர், ஒரு நிலையத்திற்கு மூன்று பேர் வீதம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, பயணியர் அல்லாதோர் மற்றும் பிளாட்பார இருக்கைகளில் அமர்ந்திருப்போரை கண்காணித்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு படைசென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்திற்கு, இரவு, 11:05, 11:30 மற்றும் 11:59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களிலும், தாம்பரத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு, இரவு, 11:00, 11:30, 11:55 மணிக்கு இயக்கப்படும் ரயில்களிலும், கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படையினரை பணியில் ஈடுபடுத்த முடிவு ய்யப்பட்டுள்ளது.ரயிலில் செல்லும் இவர்கள், வழியில் உள்ள நிலையங்களில் இறங்கி, நிலையங்களில் வெளி ஆட்கள் நடமாட்டத்தை கண்காணித்து அப்புறப்படுத்திவிட்டு, கடைசி ரயிலில் தாம்பரம் மற்றும் கடற்கரை ரயில் நிலையம் சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு கட்டாயம் : பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., கண்டிப்பு
பதிவு செய்த நாள்18ஆக2017 23:49

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் இணைப்பு பெற்ற பள்ளிகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பை கட்டாயம் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி மற்றும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, ஆண்டு தோறும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், மாறும் தொழில் நுட்பம், பாடத்திட்ட மாற்றம், புதிய பாடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், மாணவர்களுக்கான கற்பித்தலுக்கு, ஆசிரியர்கள் தயார் செய்யப்படுகின்றனர். இதற்காக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சில, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவதில்லை என, புகார்கள் எழுந்தன. இதனால், 'அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், ஆசிரியர்களுக்கு, குறைந்த பட்சம், ஒரு வாரம் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., தலைவர், ஆர்.கே.சதுர்வேதி உத்தரவிட்டுள்ளார். இதற்காக, எந்தெந்த கல்வி நிறுவனங்களில் பயிற்சியாளர்களை வரவழைக்கலாம் என்ற பட்டியலும், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள்் : தமிழக அரசு உத்தரவு
பதிவு செய்த நாள்18ஆக  2017   23:47

சென்னை: பிளஸ் 1 பொதுத் தேர்வில், தேர்ச்சி பெற, ஒவ்வொரு பாடத்திலும், குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

நடப்பாண்டு, பிளஸ் 1 வகுப்பிற்கு, மாநில அளவில், பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று அரசால் வெளியிடப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது:l தேர்ச்சி பெற, மொழிப் பாடங்களில், தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டை, கண்டிப்பாக எழுத வேண்டும். இரு தாள்களிலும் சேர்த்து, எழுத்து தேர்வில், சராசரியாக கணக்கிடப்படும், 100 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் பெற்று
இருக்க வேண்டும். தாள்களும் சேர்த்து, எழுத்து தேர்வின், சராசரி மதிப்பெண்ணான 90 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 25 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

l செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில், எழுத்து தேர்வில், 70 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 15 மதிப்பெண்கள் பெற வேண்டும். செய்முறை வகுப்புகளில் பங்கேற்று, செய்முறை பொதுத் தேர்வு எழுதி இருக்க வேண்டும்.எழுத்து தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக குறைந்தபட்சம், 35 மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும்

l செய்முறைத் தேர்வு இல்லாத பொதுப்பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி எழுத்துத் தேர்வு பாடங்களில், தேர்ச்சி பெற, எழுத்து தேர்வில், 90 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 25 மதிப்பெண்கள் பெற வேண்டும். அக மதிப்பீடு, எழுத்து தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக, குறைந்த
பட்சம், 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

l தொழிற்கல்வி செய்முறை தேர்வில், 75 மதிப்பெண்களுக்கு, குறைந்தபட்சம், 20 மதிப்பெண்கள் பெற வேண்டும். அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகியவற்றில், ஒட்டுமொத்தமாக, குறைந்த  பட்சம், 35 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் எழுத்து தேர்விற்கு, செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களில், 70 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வு இல்லாத பொதுப்பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி பாடங்களின் எழுத்து தேர்விற்கு, 90 மதிப்பெண்களும், ஒதுக்கீடு செய்யப்  பட்டுள்ளன. மொழிப் பாடங்களில், எழுத்து தேர்விற்கான, இரு தாள்களுக்கும், தலா, 90 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

l செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாக்கள், 20; இரு மதிப்பெண் குறு வினாக்கள் ஏழு; மூன்று மதிப்பெண், சிறு வினாக்கள் ஏழு; ஐந்து மதிப்பெண் பெரு வினாக்கள் ஏழு, ஆகியவற்றுக்கு விடை அளிக்க வேண்டும்

l செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கான வினாத்தாளில், ஒரு மதிப்பெண் வினாக்கள்,15; இரு மதிப்பெண் குறு வினாக்கள் ஆறு; மூன்று மதிப்பெண் சிறு வினாக்கள் ஆறு, ஐந்து மதிப்பெண் பெரு வினாக்கள் ஐந்து ஆகியவற்றுக்கு விடை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEWS TODAY 29.01.2026