Thursday, August 24, 2017

எடைக்கு போகும், 'லேப் - டாப்' : ஒரு கிலோ 3,000 ரூபாய்

பதிவு செய்த நாள்24ஆக
2017
00:15

புதுடில்லி: டில்லியில் உள்ள, கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் மார்க்கெட்டில், 'லேப் - டாப்'களை எடைக்கு விற்கும் அவலம் நிலவுகிறது.

டில்லி புறநகர் பகுதியில், கம்ப்யூட்டர் மற்றும் அதன் உதிரி பாகங்கள் விற்கும், 'நேரு பிளேஸ்' மார்க்கெட் உள்ளது; இங்கு, அனைத்து வகையான கம்ப்யூட்டர், லேப் - டாப் மற்றும் உதிரி பாகங்களையும், மலிவு விலையில் வாங்கலாம். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட லேப் - டாப்கள், கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகின்றன; ஒரு கிலோ, 3,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
நமக்கு தேவையான வசதிகள் உடைய லேப் - டாப்பை, அதற்கான டீலர்களிடம் வாங்க வேண்டுமெனில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும்.

இது குறித்து, நேரு பிளேஸ் மார்க்கெட் சங்க தலைவர், மஹேந்திர அகர்வால் கூறியதாவது:

ஆசியாவின் மிகப்பெரிய மார்க்கெட் இது. நாட்டின் மற்ற பகுதிகளை விட, இங்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு, சரக்கு கட்டணம் குறைவு. இதன் காரணமாக, இங்குள்ள விற்பனையாளர்கள், வெளிநாடுகளில் இருந்து, அதிகளவில் கம்ப்யூட்டர் தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்வதால், இங்கு, எப்போதும் விலை குறைவாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
'ரூ.2,000 நோட்டு திரும்ப பெறப்படாது': அருண் ஜெட்லி

பதிவு செய்த நாள்24ஆக
2017
04:09




புதுடில்லி : ''2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணம், மத்திய அரசுக்கு இல்லை,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.

மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிதாக, 200 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ய, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி மற்றும் அவற்றை எப்போது புழக்கத்தில் விடுவது என்பதை, ரிசர்வ் வங்கி முடிவு செய்யும்.

கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட, 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணம், மத்திய அரசுக்கு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
விளம்பரங்களில் நடிக்க நடிகர், நடிகையர் நடுக்கம்!
பதிவு செய்த நாள்24ஆக
2017
03:15




சென்னை: ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து விளம்பரங்களில் நடிக்க நடிகர்கள், நடிகைகள் நடுக்கம் அடைந்துள்ளனர்.

ஜான்சன் அண்டு ஜான்சன் சோப் மற்றும் பவுடரை பயன்படுத்திய பெண், புற்றுநோய்க்கு ஆளானது தொடர்பாக நடந்த வழக்கில், அந்நிறுவனத்திற்கு, 2,600 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, வணிக ரீதியான விளம்பரங்களில் நடிப்பதற்கு, நடிகர், நடிகையர் மத்தியில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது போன்ற பிரச்னைகளில் சிக்காமல் இருக்கவே, ரஜினி, அஜித், ராஜ்கிரண் உள்ளிட்ட சில நடிகர்கள், எத்தனை கோடி கொடுத்தாலும், வணிக ரீதியான விளம்பரங்களில் நடிப்பதில்லை என்ற முடிவில், இன்னும் உறுதியாக உள்ளனர். இவர்களை தொடர்ந்து, மற்ற நடிகையரும், இனி விளம்பரங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என, முடிவு செய்து உள்ளனர்.
ரயில்வே அமைச்சர் ராஜினாமா?
சுரேஷ் பிரபு முடிவை ஏற்க பிரதமர் தயக்கம்


புதுடில்லி:ஐந்து நாட்களில், உ.பி.,யில், இரண்டு ரயில் விபத்துகள் நடந்து உள்ள நிலையில், அதற்கு தார்மீக பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்வதாக, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். காத்திருக்கும்படி, பிரதமர் மோடி கூறியுள்ளதாக, அவர் தெரிவித்தார்.





உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. முசாபர் நகரில், சமீபத்தில், உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில், 22 பேர் உயிரிழந்தனர்; 156 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், அவ்ரியா மாவட்டத்தில், கைபி யாத் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று தடம் புரண்ட தில், 100 பேர் காயமடைந்தனர்.

உ.பி.,யின் அஜம்கரில் இருந்து, டில்லிக்கு செல்லும் கைபியாத் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று
அதிகாலை, 2:50 மணிக்கு, ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது, ரயில் பாதையில் குறுக்கே வந்த, மணல் ஏற்றி சென்ற டிப்பர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில், ரயிலின் ஒன்பது பெட்டிகள் தடம்புரண்டன; இதில், 74 பேர் காயமடைந்தனர்.

ஐந்து நாட்களில், இரு விபத்துகள் நடந்ததற்கு பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ளதாக, மத்திய ரயில்வே அமைச்ச ரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுரேஷ் பிரபு தெரிவித்தார்.இது தொடர்பாக, 'டுவிட்டர்' சமூகதளத்தில், அவர் வெளியிட்டுள்ள பதிவு:

எதிர்பாராத விபத்துகளால், பலர் உயிரிழக்க நேர்ந்தது, காயமடைந்தது, மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினேன். இந்த விபத்துகளுக்கு, முழு பொறுப்பையும் ஏற்று, ராஜினாமா செய்வதாக கூறினேன். பொறுமை யுடன் காத்திருக்கும்படி, பிரதமர் மோடி கூறினார்.

ரயில்வே அமைச்சராக, 3ஆண்டுகளில், ரயில்வே யின் வளர்ச்சிக்கு,என் ரத்தத்தையும், வியர்வையை யும் சிந்திஉள்ளேன்.இத்தனை ஆண்டுகளாக புறக் கணிக்கப்பட்ட,கவனிப்பாரில்லாமல் இருந்த ரயில்வே நிர்வாகத்தை சீரமைக்கும் பணியில், பிரதமர்மோடியின் தலைமையின் கீழ் ஈடுபட்டிருந் தேன். இதுவரை இல்லாத அளவுக்கு, முதலீடுகள் செய்யப் பட்டன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விபத்துகளுக்கு பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சர் பதவி விலக முன்வந்துள்ளது, அரசியல் வட்டாரத் தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சுரேஷ் பிரபு, அமைச்சராக தொடருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டு முன்னுதாரணம்

சுரேஷ் பிரபுவையும் சேர்த்து, இதுவரை, 43 பேர், ரயில்வே அமைச்சர்களாக இருந்துள்ளனர். விபத்து களுக்கு பொறுப்பேற்று,இதுவரை, இருவர் மட்டுமே, தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தமிழ கத்தின் அரியலுாரில், 956ல் நடந்த ரயில் விபத்தில், 142 பேர் உயிரிழந்தனர். அந்த கோர விபத்துக்கு பொறுப்பேற்று, லால் பகதுார் சாஸ்திரி, ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதையடுத்து, 43 ஆண்டுகளுக்கு பின், விபத்து களுக்கு தார்மீக பொறுப்பேற்று, தற்போது, பீஹார் முதல்வராக உள்ள நிதிஷ் குமார், ரயில்வே அமைச் சர் பதவியில் இருந்து விலகினார். 1999ல், அசாம் மாநிலம், கெய்சாலில் நடந்த விபத்தில், 290 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, நிதிஷ் குமார் பதவி விலகினார்.

கடந்த, 2000ல் நடந்த இருவிபத்துகளுக்கு பொறுப் பேற்று, தற்போது, மேற்கு வங்க முதல்வராக உள்ள, மம்தா பானர்ஜி, ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து விலக முன்வந்தார். ஆனால், அப்போதைய பிரதமர் வாஜ்பாய், அதை ஏற்கவில்லை.

வாரியத்துக்கு புதிய தலைவர்

ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக, 'ஏர் - இந்தியா' தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஸ்வினி லோகானி நியமிக்கப்பட்டு உள்ளார்.

ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று, ரயில்வே வாரிய தலைவராக இருந்த, ஏ.கே.மிட்டல், நேற்று முன்தினம், தன் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் அளித்திருந்தார்; அது, நேற்று ஏற்கப்பட்டது.

அதை தொடர்ந்து, அஸ்வினி லோகானியின் நியமனத்துக்கு, மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு, நேற்று அனுமதி அளித்தது. ரயில்வே பொறியியல் சேவை பிரிவு அதிகாரியான, லோகானி, டில்லி மண்டல மேலாளர் மற்றும் ரயில்வே மியூசியம் இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

விபத்துகளுக்கு காரணம் என்ன?

மத்திய ரயில்வே அமைச்சராக, 2015ல், சுரேஷ் பிரபு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை, 346 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம், ரயில்வேயில், பாதுகாப்பு ஊழியர்கள் பற்றாக்குறை என, கூறப்படுகிறது. ரயில்வே புள்ளி விபரங்களின்படி, 1.42 லட்சம் பாதுகாப்பு பிரிவு பணியிடங்கள் காலியாக உள்ளன.

ரயில்வேயை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய, அனில் கோகட்கர் குழு, 2012ல் அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்துள்ள பல்வேறு பரிந்துரைகளில் முக்கியமானது, பாதுகாப்பு பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது தான். ஆனால், இதுவரை, இந்த குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப் படவில்லை
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்
சொகுசு விடுதியில் குதூகலம்


புதுச்சேரி:புதுச்சேரியில் உள்ள ஆடம்பர சொகுசு விடுதியில் தங்கியுள்ள, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 'வாக்கிங்' மசாஜ், ஸ்விம்மிங், மது விருந்து, அசைவ உணவுகள் என, குதுாகலமாக பொழுதை கழித்து வருகின்றனர்.





பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைப்பை தொடர்ந்து, சசிகலா, தினகரன், அவர்களது உறவினர்கள் தனித்து விடப்பட்டுள் ளனர்.தினகரனுக்கு, ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற தாக, கடிதம் அளித்து உள்ளனர்.அதையடுத்து, இந்த எம்.எல். ஏ.,க்கள் 19 பேரையும், பாதுகாப்பாக ஒரே இடத்தில் தங்க வைக்க தினகரன் முடிவு செய்தார்.

கடல் உணவு

புதுச்சேரியில், சின்ன வீராம்பட்டினம் கிராமத் தில், ஒதுக்குப்புறமாக, கடற்கரையோரம் உள்ள, 'தி வின்ட் ப்ளவர்' ரிசார்ட் என்ற, ஆடம்பர சொகுசு விடுதியில், இவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள் ளனர்.வெற்றிச்செல்வன் தவிர, 18 எம்.எல்.ஏ.,க்கள், நேற்று முன்தினம் இரவு சொகுசு விடுதிக்கு வந்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் தங்கினர். பெண், எம்.எல்.ஏ.,க்கள் இருவர், தனியாக தங்கியுள்ள னர்.

நேற்று முன்தினம் இரவு, சில, எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு பிடித்த மது வகைகளை, வர வழைத்து அருந்தி, மகிழ்ச்சியில் திளைத்துள் ளனர்.பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகள், அவர்களுக்கு பரிமாறப்பட்டது. விடுதி வளாகத் தில் சுற்றி வந்த, சில, எம்.எல்.ஏ.,க்கள்,அரசியல் நிலவரம் குறித்து பேசி, பொழுதைகழித்தனர். நேற்று அதிகாலை, 6:00 மணிக்கு, தங்க தமிழ் செல்வன், முத்தையா உள்ளிட்ட, எம்.எல்.ஏ.,க் கள், விடுதியின் பின்புற வழியாக,
வீராம்பட்டினம் கடற்கரையில், 'வாக்கிங்' சென்ற னர். இதையடுத்து, போலீசார் மற்றும் உதவியாளர் களின், எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப் பாக, விடுதிக்கு அழைத்து வந்தனர். ரிசார்ட்டில், எம்.எம்.எல்.ஏ.,க் கள் ஆயில் மசாஜ் எடுத்தனர். அங்குள்ள, நீச்சல் குளத்தில், நீந்தி மகிழ்ந்தனர். விடுதியில் உள்ள உணவு அரங்கில், வித,விதமான உணவு வகைக கள், காலை டிபனாக பரிமாறப் பட்டது.

மதிய உணவுக்காக, கடல் உணவு நிறுவனம் மூலம், பெரிய அளவிலான வஞ்சிரம், சுறா,உயர்ரக கடல் சிங்கு இறால், ஆட்டுக்கறி, கோழிக்கறி கொண்டு வரப்பட்டன. குளிர்பான வகைகள், வாட்டர் பாட்டில் களும், வாகனங்களில் வந்திறங்கின. மதியம் அசைவ உணவை ருசித்த, எம்.எல்.ஏ.,க்கள், விடுதி வளாகத்தில் உலவியபடி இருந்தனர். சிலர், காரில் விடுதிக்கு வெளியில், சென்று திரும்பினர்.

விடுதியில் கெடுபிடி

விடுதியில், எஸ்.பி., அப்துல் ரஹீம் மேற்பார்வை யில்,பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே, விடுதிக்குள் அனுமதிக்கப் பட்டனர்.விடுதியில் உள்ள அனைத்து அறைகளையும், ஒட்டுமொத்த மாக, தினகரன் அணியினர் வாடகைக்கு எடுத்துள்ள னர். இதனால், தினகரன் ஆதரவாளர்கள் மற்றும் விடுதி பணியாளர்கள் தவிர, வெளியாட்கள் அங்கு இல்லை.சொகுசு விடுதி அமைந்துள்ள சாலையில், தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வெளியாட்கள் செல்ல தடை செய்தனர்.பத்திரிகையாளர்கள், நேரடி ஒளிபரப்பு வாகனங்களுடன் தொலைக்காட்சி நிறுவன செய்தியாளர்கள், விடுதி முன் குவிந்துள்ள னர்.எம்.எல்.ஏ.,க்கள் தங்கி யுள்ள விடுதியின் வசதிகள்:

* வெளிநாட்டு தரத்தில் நீச்சல் குளம்
* தனி வில்லாக்கள் உள்ளிட்ட, 50 அறைகள்
* நேர்த்தியான உணவு அரங்கம்
* மதுபான பார் வசதி
* மசாஜ் வசதி
* படகு சவாரி செய்யும் வசதி
* கைப்பந்து விளையாட்டு திடல்
*பொழுது போக்கு பூங்கா

தினகரன் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்ற கோரி, அவர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதி முன்பு, அ.தி.மு.க.,வினர், தினகரன் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழகதுணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஓம்சக்தி

சேகர், நேற்று காலை தனது ஆதரவாளர்களு டன், தினகரன் ஆதரவாளர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதி முன்பு திரண்டார். தினகரன் ஆதரவாளர்களை, விடுதியில்இருந்து வெளி யேற்றக் கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

போலீசார், அவர்களை உள்ளே விடாமல், தடுத்துநிறுத்தினர். அதையடுத்து, கோஷங்கள் எழுப்பியபடி, தினகரனின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர்.

சிறை செல்ல நேரும்:'மாஜி' எம்.எல்.ஏ., எச்சரிக்கை

''தினகரன், சசிகலா ஆகியோருடன் சென்றால், சிறைக்கு தான் செல்ல நேரிடும்,'' என, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர், ஓம்சக்தி சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரியில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள் தங்க வைக்கப்பட்டுள்ள, சொகுசு விடுதி முன்பு, தினகரன் உருவ பொம்மையை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, முன்னாள், எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் பேசியதாவது:

தினகரன், சசிகலாவுடன் சென்றால், சிறைச்சாலைக்கு தான் செல்ல நேரிடும். ஜெ., வகித்த பொதுச் செயலர்பதவியை அடைய ஆசைப்பட்டால், வெளி மாநிலசிறைக்குச் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்து தான், தற்போது, அ.தி.மு.க., தீர்மானம் போட்டுள்ளது.

ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான பணத்தை கொள்ளை அடித்து, எம்.எல்.ஏ.க்களை, 10 கோடி, 20 கோடி ரூபாய் கொடுத்து, தினகரன் அடைத்து வைத்து உள்ளார். இவர்கள் தவறை உணர்ந்து, கட்சிக்கு மீண்டும் திரும்பி வர வேண்டும். மன்னார்குடி குடும்பம், தமிழக எல்லையை விட்டு, விரட்டி அடிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


ஓ.பி.சி., கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு
புதுடில்லி:ஓ.பி.சி.,எனப்படும் இதர பிற்பட்டோர் பிரிவினரில், 'கிரீமிலேயர்' எனப்படும் வசதி படைத்தவர்கள், சலுகைகளை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பை, 6லட்சம் ரூபாயில் இருந்து, 8 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், எடுக்கப் பட்ட முடிவுகள் குறித்து, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:

கல்வி,வேலைவாய்ப்பு போன்றவற்றில்ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்பட்டோர் பிரிவினருக்கு

இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.இந்தபிரிவை சேர்ந்த உயர் வருமான பிரிவினர், இட ஒதுக்கீட்டு சலுகைகளைப் பெறுவதற்கான, ஆண்டு வருமான வரம்பு, ஆறு லட்சம் ரூபாயாக இருந்தது. இதை, எட்டு லட்சம்ரூபாயாக உயர்த்த மத்திய அமைச்ச ரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஆண்டு வருமானம், எட்டு லட்சம் ரூபாய் வரை உள்ளவர் களுக்கு, ஓ.பி.சி.,க்கான சலுகைகள் கிடைக்கும்.

தனியார் நிறுவனங்களிலும், இந்த இட ஒதுக்கீட்டு சலுகைகளை விரிவுபடுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்.ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப் பட்டோர் பிரிவினருக்கான மத்தியப் பட்டியலில் சேர்க்கப்படாத ஜாதிகளையும் சேர்ப்பது குறித்து ஆராய்வதற்கு, ஒரு கமிஷன் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்கம் உட்பட, 11 மாநிலங்களில், சில ஜாதிகள், ஓ.பி.சி., மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள் ளன. அந்த ஜாதியினருக்கு, அரசு வேலை, கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் மத்திய பட்டியலில்அவை இடம்பெறவில்லை.இது போன்று

மத்தியப்பட்டியலில் சேராத ஜாதிகளையும் சேர்ப்பது குறித்து, கமிஷன் ஆராயும். கமிஷன் தலைவர் நியமனத்தில் இருந்து,12 வாரங் களுக்குள் அறிக்கை கிடைக்கும். அவர் கூறினார்.

பொதுத் துறை வங்கிகள் இணைப்பை கண் காணிக்க, மாற்று வழிமுறைகள் வகுப்பதற் கும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, August 23, 2017

ஏன் பத்து வருடமாக பாடத் திட்டத்தினை மாற்றவில்லை? நீட் விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!



சென்னை: ஏன் பத்து வருடமாக படத் திட்டத்தினை மாற்றவில்லை என்று 'நீட்' விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாமக்கல்லினைச் சேர்ந்த மாணவி கிருத்திகா என்பவர் நீட் தேர்வின் காரணமாக தனக்கு மருத்துவ சேர்க்கையில் பாதிப்பு உண்டானதாக கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கானது இன்று காலை நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இன்று வெளியாகியுள்ள நீட் தரவரிசை பட்டியல் தொடர்பான விபரங்களை நீதிமன்றம் கோரியது. அவற்றை இன்று மதியம் தாக்கல் செய்வதாக தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால் தெரிவித்தார். அப்பொழுது நீட் விவகாரத்தில் தமிழக அரசு மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மதியம் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த பொழுது தமிழக அரசு சார்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

தமிழக அரசினை பொறுத்த வரையில் ஏன் கடந்த பத்து ஆண்டுகளாக பாடாத திட்டத்தில்மாற்றம் செய்யப்படவில்லை? அதே போல கற்ப்பிக்கும் முறைகளிலும் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.

நீட் தேர்வினை பொறுத்த வரையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி கேள்விகள் கேட்கப்பட்டால், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் எவ்வாறு பதிலளிப்பார்கள்?

அதேபோல இரண்டு வகையிலான பாடத் திட்டங்கள் இருக்கும் பொழுது, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி மட்டும் கேள்விகள் கேட்கப்பட்டது ஏன்?

நீட் தெரிவினைப்பொறுத்த வரையில் அதனை நடத்துவதற்கு என்று தனியான நடுநிலையான அமைப்பு வேண்டும்.

மாநில பாடத் திட்டத்தில் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மானவர்கள், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களையே பெறுகின்றனர். இதன் காரணமாக தற்பொழுது பெற்றோர்களும் மாணவர்களும் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.

நீட் விவகாரத்தைல் தமிழக அரசின்முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்

Dailyhunt

NEWS TODAY 10.07.2026