Monday, September 11, 2017

ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
பதிவு செய்த நாள்11செப்
2017
01:31




புதுடில்லி : 'வரும், 2018, பிப்ரவரிக்குள், 'சிம் கார்டு'டன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், சிம் செயல் இழக்கும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில், 'லோக் நிதி பவுண்டேஷன்' என்ற தொண்டு நிறுவனம், தாக்கல் செய்த, பொது நல மனுவில், 'சிம் கார்டுகளை, பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். இதை தடுக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள், தீவிரவாதிகள், கிரிமினல்கள், போலி பெயர்களில், 'சிம் கார்டு' வாங்கி, தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்க, சிம் கார்டை, ஆதார் எண்ணுடன் இணைக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு, பிப்ரவரிக்குள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத சிம் கார்டுகளை, செயலிழக்கும்படி செய்யவும், அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஏற்ற உச்ச நீதிமன்றம், அடுத்த ஆண்டு, பிப்ரவரிக்குள், சிம் கார்டை, ஆதார்எண்ணுடன் இணைக்க, உத்தரவிட்டது.இது பற்றி, வாடிக்கையாளர்களுக்கு, இ - மெயில், எஸ்.எம்.எஸ்., அனுப்பியும், விளம்பரம் செய்தும் தெரிவிக்கும்படி, தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
போராட்டத்தை கைவிடாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது, 'எஸ்மா'சட்டப்படி, நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.




'வேலை நிறுத்தம் என்பது அடிப்படை உரிமையல்ல; அதை, ஆயுதமாக பயன்படுத்த கூடாது' என்ற, உச்ச நீதிமன்ற உத்தரவை புறக்கணிப்பதால், 14 ஆண்டுகளுக்குப் பின், இந்த சட்டத்தை கையில் எடுக்கும் நிலைக்கு, அரசு தள்ளப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் கைது செய்யப்படுவர் என்றும், போலீசார் எச்சரித்துள்ளனர்.

'பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும்' என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' எழுப்பியுள்ளது. இவற்றை வலியுறுத்தி, செப்., 7முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தையும் துவக்கி உள்ளது.

இந்த போராட்டத்தை தடுக்க, அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார் மற்றும் உதயகுமார் ஆகியோர், போராட்ட

குழுவினருடன் பேச்சு நடத்தியும், அது, தோல்வியில் முடிந்தது.பின், ஈரோடு சென்ற முதல்வர் பழனிசாமியும், ஜாக்டோ - ஜியோ அமைப்பின், உயர்மட்டக்குழு நிர்வாகிகளுடன் பேசினார்; அதிலும், உடன்பாடு எட்டப்படவில்லை.

இதற்கிடையில்,ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு இரண்டாக உடைந்தது. திட்டமிட்டபடி, ஒரு அணியினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்படி, அரசு தலைமை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள், கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கு கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

அதேநேரத்தில், 'தார்மீக அடிப்படையில், வேலை நிறுத்தம் செய்வதை அடிப்படை உரிமையாக கருத முடியாது; அதை, ஒரு ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது. 'வேலை நிறுத்தத்தால், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற பணிகள் பாதிக்கும். எதிர்ப்பை வெளி படுத்த மாற்று வழிகள் உள்ளன. வேலை நிறுத்தம், அரசு விதிகளுக்கு முரணானது' என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது.

'உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையும்உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், போராட்டத்தை கைவிடாமல், 'சட்டப்படி வழக்கை சந்திக்க தயார்' எனக்கூறி, சட்டக்குழுவை அமைத்துள்ளது, ஜாக்டோ - ஜியோ அமைப்பு.இதற்கிடையே, ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக, இன்று துவங்கும் காலாண்டு தேர்வை நடத்துவதில் பெரும்

சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு நிதி நெருக்கடியில் உள்ளதால், பழைய ஓய்வூதிய திட்டத்தை, உடனே செயல்படுத்தமுடியாத நிலை தொடர்கிறது.

அரசியல் ரீதியாக ஆளும் கட்சிக்கு பல்வேறு நெருக்கடிகள் உள்ள நிலையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தால், அரசு நிர்வாகம் ஸ்தம்பிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், போராட்டம் நீடித்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்படும் என, மத்திய, மாநில உளவுத்துறைகள் எச்சரித்துள்ளன.அதனால், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் படி, மத்திய உள்துறையும், முதல்வர் பழனிசாமி அரசை வலியுறுத்தி உள்ளது.

எனவே, நிலைமையை கட்டுப்படுத்தவும், போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவும், 2003ல், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, எடுத்த நடவடிக்கை போல, மீண்டும், 'எஸ்மா, டெஸ்மா' என்ற, அத்தியாவசிய சட்டங்களின் படி, நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு, அரசு தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக அரசின் உயர் அதிகாரிகள், இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, 'நீதிமன்ற உத்தரவை மீறி, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்' என, போலீசாரும் எச்சரித்துள்ளனர்.சென்னையில், 'நீட்' தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட, மாணவர்கள் உட்பட, 26 பேர் நேற்று கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளது போல, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களும் கைது செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -
அமெரிக்காவை தாக்கியது, 'இர்மா'

50 லட்சம் பேர் தவிப்பு; மின்சாரம் துண்டிப்பு


வாஷிங்டன்: அமெரிக்காவை மிரட்டி வந்த, 'இர்மா' புயல், புளோரிடா மாகாண கடலோர பகுதியில், நேற்று கரையை கடந்தது; அப்போது, மணிக்கு, 210 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், பெருத்த சேதம் ஏற்பட்டது; புயல் பாதிப்பால், 50 லட்சம் பேர் தவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை, கடந்த மாத இறுதியில், 'ஹார்வே' புயல் தாக்கியது. இதில், மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான, ஹூஸ்டன், சின்னாபின்னமானது.

கரையை கடந்தது

இந்நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில், கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிக சக்தி வாய்ந்த சூறாவளி உருவானது. இதற்கு, 'இர்மா' என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.'இர்மா' சூறாவளி, அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள, வட கிழக்கு கரீபியன் தீவுகளில், இருநாட்களுக்கு முன் கரையை கடந்தது. இதனால், கரீபியன் தீவு பெரும் நாசமடைந்துள்ளது; 24 பேர் உயிரிழந்தனர்.

கரீபியன் தீவுகளை புரட்டிப் போட்ட இர்மா புயல், மேலும், வலிமை அதிகரித்து, கியூபாவின் வட




கிழக்கு கரையை ஒட்டி யுள்ள, கேமாகுவே தீவுக்கூட்டத்தில், கரையை கடந்தது.அப்போது கடுமையான சூறவாளி காற்றால், ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன; உணவின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், புளோரிடா கீஸ்தீவுக்கூட்டத்தை, இர்மா புயல் நேற்று தாக்கியது.

அப்போது, மணிக்கு, 210 கி.மீ., வேகத்தில், காற்று வீசியது. பின், வட கிழக்கு திசையில், மணிக்கு, 13 கி.மீ., வேகத்தில் புயல் நகர்ந்தது;புளோரிடா
மாகாண கடலோர பகுதிகளை கடந்து சென்றது.

வாழ்க்கை முடங்கியது:

சூறாவளியால், புளோரி டாவில், 50 லட்சம் பேர் தவித்து வருகின்றனர். அவர்கள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் மின்சார வசதி இன்றி தவித்து வருகின்றனர்.இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. புயலில் சிக்கி, மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக, முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிறைவேறாத ஆசைகளை திணிக்க வேண்டாம்



குழந்தை பருவத்துக்கும், இளமை பருவத்துக்கும் இடைப்பட்ட குறுகிய காலகட்டம், ‘டீன் ஏஜ்’ பருவம். இந்த பருவத்தில் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையே ஏற்படும் நெருக்கம்தான் உறவு பந்தத்தை வலுப்படுத்தும்.

செப்டம்பர் 10, 2017, 12:36 PM

குழந்தை பருவத்துக்கும், இளமை பருவத்துக்கும் இடைப்பட்ட குறுகிய காலகட்டம், ‘டீன் ஏஜ்’ பருவம். இந்த பருவத்தில் பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும் இடையே ஏற்படும் நெருக்கம்தான் உறவு பந்தத்தை வலுப்படுத்தும். பிள்ளைகள் வளர்ந்து ஆளான பிறகும் பெற்றோருடன் இடைவெளியின்றி வாழ்க்கை பயணத்தை தொடர இந்த பந்தம் வழிவகுக்கும்.

பெரும்பாலான பெற்றோர் மழலை பருவத்தில் குழந்தைகளிடம் காட்டும் பாசத்தை அவர்கள் வளர்ந்து ஆளாகும் சமயங்களில் காட்டுவதில்லை. அதிலும் டீன் ஏஜ் பருவத்தில் பிள்ளைகளிடம் அதிகம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை அமைத்து கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். பிள்ளைகள் பேசுவதை காதுகொடுத்து கேட்கும் மனநிலையிலும் இல்லாமல் போய்விடுகிறார்கள். அதுவே இருவருக்குமிடையே இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது.

பிள்ளைகள் வீட்டில் இருக்கும் சமயங்களில் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகளை பெற்றோர் உருவாக்க வேண்டும். அவர்களுக்கு பிடித்தமான விளையாட்டுகளை உடன் சேர்ந்து விளையாடுங்கள். அது அவர்களுக்கு நல்ல உடற்பயிற்சியாகவும் அமையும். பெற்றோருடன் சேர்ந்து பொழுதை கழித்த மனநிறைவையும் கொடுக்கும். அதுபோல் விடுமுறை நாட்களில் பிள்ளைகளுடன் சேர்ந்து வெளி இடங்களுக்கு செல்வதற்கான சந்தர்ப்பங்களை பெற்றோர் ஏற் படுத்திக்கொள்ள வேண்டும்.

டீன் ஏஜ் பருவத்தில் பெற்றோரை விட நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பெற்றோர்-பிள்ளைகளுக்கான இடைவெளியே முக்கிய காரணம். அதனை பெற்றோர் புரிந்துகொண்டு பிள்ளைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நல்ல நண்பர்களை தேர்ந் தெடுத்து பழகவும் பிள்ளைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். அதேவேளையில் அவர்களை கண்காணிக் கவும் வேண்டும்.

பிள்ளைகள் கோபத்துடன் நடந்து கொள்ளும் சமயங்களில் பொறுமையை கடைப் பிடிக்க வேண்டும். அவர்களிடத்தில் போதுமான மனப்பக்குவமோ, அனுபவ அறிவோ, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் சுபாவமோ இருக்காது. சில சமயங்களில் காரணமே இல்லாமல் கோபப்படுவார்கள். சம்பந்தமே இல்லாமல் மகிழ்ச்சியில் திளைப்பார்கள். திடீரென்று சோர்வான மனநிலையில் காணப்படுவார்கள். அந்த சமயங்களில் பெற்றோர், நெருங்கிய நண்பர்களை போல் பழகவேண்டும். அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப அவர்களை வழிநடத்தி செல்ல வேண்டும். பெற்றோர் பெருமைப்படும் அளவுக்கு பிள்ளையிடம் நிச்சயமாக சில நல்ல விஷயங்கள் இருக்கும். அவைகளை கண்டறிந்து பாராட்ட வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போதும் பிள்ளைகளிடம் வெளிப்படும் நல்ல விஷயங்களை சுட்டிக்காட்டி பேச வேண்டும். ஒருபோதும் பிள்ளைகளின் சுயமரியாதையைப் பாதிக்கும் வகையில் பேசுவதோ, திட்டுவதோ கூடாது.

டீன் ஏஜ் வயதில் சமூக தொடர்பு சாதனங்களை பயன்படுத்துவதில் ஆர்வமாக இருப்பார்கள். அதனால் சில தவறுகளும் நடக்கலாம். அதுபோன்ற சூழலில் பின்விளைவுகளை எடுத்துக்கூறி அவர்களை வழிநடத்தி செல்ல வேண்டும். அவற்றில் இருந்து அறவே ஒதுங்கி இருக்குமாறு கடுமை காட்டக்கூடாது. அதிலிருக்கும் நல்ல விஷயங்களை பயன்படுத்துவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இந்த பருவத்திற்கே உரித்தான இனக்கவர்ச்சி சார்ந்த பிரச்சினைகளை எப்படி கையாள வேண்டும் என்பதையும் சொல்லி புரிய வைக்க வேண்டும். பாலியல் சார்ந்த தவறான செய்திகளை நண்பர்களிடம் இருந்தோ, சமூக தொடர்பு சாதனங்கள் மூலமோ தெரிந்து கொள்வதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது. அதனால் அவர்கள் கேட்காமலேயே, பாலியல் பற்றிய தெளிவான புரிதலை பெற்றோர் விளக்கி கூற வேண்டும். அதில் ஏற்படும் சந்தேகங்களை தயக்கமின்றி கேட்குமாறு கூறுவதோடு அவர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதில்களை சொல்ல வேண்டும்.

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும். அதற்கான அங்கீகாரம் கிடைக்காத சூழலில் வளருபவர்கள் விரக்தியின் விளிம்பில் இருப்பார்கள். அவர்களை சாதுரியமாக கையாண்டு அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். ஒருபோதும் பெற்றோர் தங்கள் நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது. அவர்களின் விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுத்து தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். அதன்மூலம் அவர்களிடத்தில் தாழ்வு மனப்பான்மை வெளிப்படாமல் பார்த்துக்கொள்ள இயலும்.

Sunday, September 10, 2017

MBBS: HC asks Centre to include student in waiting list as NRI

Press Trust of India | New Delhi Last Updated at September 3, 2017 10:02 IST


The Delhi High Court has asked the Centre to include a student, seeking admission to MBBS course through NEET as an NRI candidate though he appeared for the entrance exam as a resident candidate, in the waiting list for deemed universities.

Justice Vibhu Bakhru said that this would enable the student to approach the deemed universities directly and his counsel said this was acceptable to him.

The high court passed the direction after central government standing counsel Jasmeet Singh informed that all unfilled seats have been released to the deemed universities.

The only assistance that can be granted to the student is that his name can be included in the waiting list as an NRI candidate for onward transmission to deemed universities.

The court was hearing the student's petition, filed through advocate Pradeep Kumar Arya, seeking direction to the Centre to consider and admit him as an NRI candidate for the admission in MBBS in pursuance to National Eligibility cum Entrance Test (NEET) conducted for year 2017-18 in the central list for deemed universities.

The student, who completed his class 12th last year from Saudi Arabia, said his father was a resident of Madhya Pradesh and his mother is a non-resident Indian as she had spent more than 180 days in the last financial year in Saudi Arabia.

He had applied under the NEET as a resident candidate and not as an NRI and could not be considered in the NRI category.

However, the Centre had issued a notification on July 21, informing all NRI candidates who had registered under UR/ Indian category at the time of registration for undergraduate MBBS/BDS seats and were eligible to be considered under NRI quota, to send their relevant documents supporting their status by July 25, for being considered under the NRI category, the plea said.

The student did not send any of the application or documents following the notification but claimed that he had made the request prior to July 21 and even after July 25, which should have been considered.

(This story has not been edited by Business Standard staff and is auto-generated from a syndicated feed.)











Don't overcharge for convocation certs: govt to ask varsities

DH News Service, Bengaluru, Jun 17 2017, 2:04 IST


Higher Education Minister Basavaraj Rayareddi on Friday said the government will ask all universities in the state not to charge exorbitant fee for issuing convocation certificates. 

Replying to B J Puttaswamy (BJP) in the Council, he said Mangalore University has been collecting Rs 5,000 from each student for issuing the convocation certificate within 24 hours. Otherwise, a nominal fee is collected for the purpose. “The university is charging more for providing special service. People have to pay more for any special and speedy service.” 

“Universities are autonomous bodies and it is the syndicate that fixes convocation certificate fees. The Higher Education department cannot interfere in such matters. Still, the government will write to all the universities in the state asking them not to charge exorbitant fees,” he stated.

To a question by Nirani Hemanth Rudrappa (BJP) on the delay in establishing the proposed Lalita Kala university at Badami in Bagalkot district, Rayareddi said the government has not earmarked funds for the proposed university. “It is my view that establishing a separate Lalita Kala university will lead to unnecessary expenditure. We can open a wing under an existing university.” 

He said though the announcement to establish the university was made in 2011-12, the then government did not earmark funds. Instead, a special officer was appointed for establishing the university. The government has so far spent Rs 86 lakh towards salary and other expenditure of the officer.

800 engg colleges with low enrolment face closure


DH News Service, Bengaluru, Sep 3 2017, 2:24 IST

The All India Council for Technical Education (AICTE) may order closure of 800 engineering colleges across the country next year in order to ensure quality of education in engineering colleges. These are colleges with less than 30% enrolment of their capacity for five years.

According to Anil D Sahasrabudhe, chairman, AICTE, less than 30% enrolment reflected badly on the quality of education in these colleges and the closure was inevitable to ensure quality of teaching at engineering colleges.

"The decision to close about 800 colleges was taken after much deliberation based on the analysis of data of these colleges in the last few years. Students studying in these colleges would be shifted to nearby colleges that have sufficient student strength,” he said.

Infrastructure is inadequate, while quality of teaching is not up to the mark in these colleges, affecting the learning process, he said.

Out of 10,363 engineering colleges across the country, a large number of seats fall vacant every year. The number of vacant seats in colleges in Karnataka alone for 2017-18 is over 29,000.

Single entrance unlikely next year

He said that there would not be a single entrance test across the country for admissions to engineering colleges along the lines of NEET for medical course from 2018-19.

"The Class XII curricular of all states need to be realigned so that they are on par with the NCERT syllabus before the introduction of a common examination," he said.

"Students will largely benefit from the single entrance test. Those who have performed better in the test will have the option of applying to all good colleges across the country," he said.

Students in Karnataka should write multiple examinations to vie for a seat in an engineering college at present.

The Common Entrance Test (CET) ranking decides admissions for government and government-quota engineering seats.

Private and deemed universities conduct their own entrance tests.

Students are forced to appear for the Joint Entrance Examination (JEE) for admissions to the Indian Institutes of Technology, National Institutes of Technology and other Centrally funded technical institutions.

Managements of private colleges allocate seats based on the Consortium of Medical, Engineering and Dental Colleges of Karnataka (ComedK) rank.

NEWS TODAY 15.07.2026