Monday, September 11, 2017

அமெரிக்காவை தாக்கியது, 'இர்மா'

50 லட்சம் பேர் தவிப்பு; மின்சாரம் துண்டிப்பு


வாஷிங்டன்: அமெரிக்காவை மிரட்டி வந்த, 'இர்மா' புயல், புளோரிடா மாகாண கடலோர பகுதியில், நேற்று கரையை கடந்தது; அப்போது, மணிக்கு, 210 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால், பெருத்த சேதம் ஏற்பட்டது; புயல் பாதிப்பால், 50 லட்சம் பேர் தவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை, கடந்த மாத இறுதியில், 'ஹார்வே' புயல் தாக்கியது. இதில், மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான, ஹூஸ்டன், சின்னாபின்னமானது.

கரையை கடந்தது

இந்நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில், கடந்த, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிக சக்தி வாய்ந்த சூறாவளி உருவானது. இதற்கு, 'இர்மா' என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.'இர்மா' சூறாவளி, அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள, வட கிழக்கு கரீபியன் தீவுகளில், இருநாட்களுக்கு முன் கரையை கடந்தது. இதனால், கரீபியன் தீவு பெரும் நாசமடைந்துள்ளது; 24 பேர் உயிரிழந்தனர்.

கரீபியன் தீவுகளை புரட்டிப் போட்ட இர்மா புயல், மேலும், வலிமை அதிகரித்து, கியூபாவின் வட




கிழக்கு கரையை ஒட்டி யுள்ள, கேமாகுவே தீவுக்கூட்டத்தில், கரையை கடந்தது.அப்போது கடுமையான சூறவாளி காற்றால், ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன; உணவின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், புளோரிடா கீஸ்தீவுக்கூட்டத்தை, இர்மா புயல் நேற்று தாக்கியது.

அப்போது, மணிக்கு, 210 கி.மீ., வேகத்தில், காற்று வீசியது. பின், வட கிழக்கு திசையில், மணிக்கு, 13 கி.மீ., வேகத்தில் புயல் நகர்ந்தது;புளோரிடா
மாகாண கடலோர பகுதிகளை கடந்து சென்றது.

வாழ்க்கை முடங்கியது:

சூறாவளியால், புளோரி டாவில், 50 லட்சம் பேர் தவித்து வருகின்றனர். அவர்கள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் மின்சார வசதி இன்றி தவித்து வருகின்றனர்.இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது. புயலில் சிக்கி, மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக, முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...