Thursday, September 28, 2017


ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையம் 3 மாதத்தில் அறிக்கை அளிக்க உத்தரவு

By DIN | Published on : 27th September 2017 10:25 PM



ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. விசாரணை ஆணையத்திற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் அமைக்க தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது.

அதன் அடிப்படையில், நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் கமிஷனை நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைக் கமிஷன், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து அவர் மரணம் அடைந்த நாள் வரையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரித்து, தனது விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...