Saturday, September 30, 2017

திருமண பதிவுக்கு ஆவணமாக ஆதார் ஏற்பு
பதிவு செய்த நாள்29செப்
2017
22:08

சென்னை,திருமண பதிவுக்கு மணமக்கள், பெற்றோர், சாட்சிகளின் ஆதார் அட்டையையும் ஆவணமாக்கி, தமிழக அரசு, அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது.

திருமணத்தை பதிவு செய்ய மணமக்கள், பெற்றோர் மற்றும் சாட்சிகள் அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள், அடையாள சான்றுகளாக ஏற்கப்படுகின்றன. இந்த பட்டியலில், ஆதார் அட்டையும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதற்காக, திருமண பதிவு தொடர்பான, 1967 - இந்து திருமண விதிகளில், சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை, பதிவுத்துறை தலைவர் பிறப்பித்துள்ளார்.

மாற்றம் என்ன

 மணமக்களின் பெற்றோர் பெயர் மற்றும் முகவரிகளை சரி பார்க்கும்போது, அவர்கள் தாக்கல் செய்யும் அடையாள ஆவணங்களில் உள்ள பெயர்,
இனிஷியல் எனப்படும் முதல் எழுத்து, முகவரி ஆகியவை, விண்ணப்பத்தில் உள்ள விபரங்களுடன் ஒத்துப் போகிறதா என, பார்க்க வேண்டும்

 மணமக்களின் பெற்றோர் யாராவது இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தால், அதற்கான அசல் இறப்பு சான்றிதழை சரி பார்த்து, நகலை இணைக்க வேண்டும்.

 மணமக்களில் யாராவது ஒருவர், கணவர் அல்லது மனைவியை இழந்தவர் என குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதற்கான அசல் இறப்பு சான்றிதழை சரி பார்த்து, அதன் நகலை கண்டிப்பாக விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இந்த புதிய உத்தரவை சார் -- பதிவாளர்கள் அமல்படுத்துவதை, மாவட்ட பதிவாளர்களும், டி.ஐ.ஜி.,க்களும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...