Sunday, September 17, 2017

இறந்தவர்களுக்கு டிக்கெட்வாங்கிய ரயில் பயணியர்
பதிவு செய்த நாள்16செப்
2017
20:08

ஜபல்பூர், : மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் இருந்து செல்லும் ரயிலில், இறந்தவர்களுக்கும் டிக்கெட் வாங்கி செல்லும் பயணியரை பார்த்து, டிக்கெட் பரிசோதகர்கள் ஆச்சரியமடைந்தனர்.மத்திய பிரதேசத்தில், முதல்வர், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஜபல்பூரில் இருந்து பீஹார் மாநிலத்தில் உள்ள, இந்து, ஜைனர்கள் மற்றும் புத்த மதத்தினரின் புண்ணிய தலமான, கயாவுக்கு செல்லும் ரயிலில், சோதனையில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்து வருகிறது.

ஜபல்பூரில் இருந்து, கட்னி, சத்னா, ரீவா மற்றும் இடாரசி ரயில் நிலையங்களுக்கு இடையில், எட்டு மணி நேரம் நடந்த சோதனையில், இறந்த மூதாதையரின் பெயரில் டிக்கெட் எடுத்த பயணியரை பார்த்து, டிக்கெட் பரிசோதகர்கள் வியந்தனர். 40க்கும் மேற்பட்ட பயணியர், பொது மற்றும் படுக்கை வசதி டிக்கெட்டுகளை வாங்கியது தெரியவந்தது.இதுகுறித்து பயணியர் கூறியதாவது:தற்போது, பித்ருபட்சம் என்னும், 'மஹாளயபட்சம்' நடக்கிறது. அப்போது, பித்ருலோகத்தில் இருக்கும் நம் மூதாதையர், பூமிக்கு நம்மை பார்க்க வருவதாக ஐதீகம். பீஹாரில் உள்ள கயாவில் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்ய செல்வதால், அவர்களுக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.ஒரு பயணி, 100 ஆண்டுகளுக்கு முன் இறந்த மூதாதையருக்கு டிக்கெட் வாங்கியதாக கூறினார்.
மலேசியாவில் 23 பேர் சாவுக்கு காரணமான சிறுவர்கள் கைது
பதிவு செய்த நாள்16செப்
2017
23:06

கோலாலம்பூர், மலேசியாவில், உறைவிடப் பள்ளியில் தீ வைத்து, 23 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஏழு சிறுவர்களை, அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் உள்ள உறைவிடப் பள்ளி மாணவர்கள் சிலர், சிறுவர்கள் சிலரை கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பழிவாங்கும்நடவடிக்கையாக, அந்த சிறுவர்கள், சமீபத்தில் அந்த பள்ளிக்கு தீ வைத்தனர்.இந்த விபத்தில், பள்ளி மாணவர்கள், 21 பேர் உட்பட, 23 பேர்பலியாயினர். கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில், தீ விபத்துக்கு காரணமான, 11 - 17 வயதுடைய சிறுவர்கள் ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஆறு பேர், போதை மருந்து உட்கொண்டது தெரிய வந்துள்ளது.
கல்லூரி பட்டமளிப்பு விழா
பதிவு செய்த நாள்17செப்
2017
01:41

செங்கல்பட்டு :செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரியில், பி.எஸ்சி., ரேடியோலஜி மாணவர்களுக்கு பட்டம்அளிப்பு விழா நடந்தது.
செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரியில், பி.எஸ்சி.,. ரேடியாலஜி முதலாமாண்டு பட்டம் அளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில், முதல்வர் உஷா சதாசிவன் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது.

துணை முதல்வர், அனிதா, துணை கண்காணிப்பாளர் தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 50 மாணவர்களுக்கு பட்டங்களை,முதல்வர் உஷா சதாசிவன் வழங்கினார். விழாவில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில், 'டியூஷன்' எடுக்க தடை

பதிவு செய்த நாள்16செப்
2017
22:46

அரசு சம்பளம் பெறும் பள்ளி ஆசிரியர்கள், 'டியூஷன்' எடுக்க, தடைவிதிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார்பள்ளிகளில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு சம்பளம் மற்றும் சலுகையை பெற்ற போதிலும், தங்கள் வீடுகளில், 'டியூஷன்' என்ற, தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்துகின்றனர். இதற்காக, மாணவர்களிடம் மாத கட்டணம் வசூலிக்கின்றனர்.

மாத சம்பளம்சி ல ஆசிரியர்கள், தனியார் நடத்தும், 'டியூஷன் சென்டர்'களில், காலை மற்றும் மாலைநேரங்களில், மாதசம்பளம் பெற்று பாடம்நடத்துகின்றனர்.அதனால், பிளஸ் ௧, பிளஸ் ௨ வகுப்பு எடுக்கும் முதுநிலை ஆசிரியர்களும், ௧௦ம் வகுப்பு எடுக்கும்பட்டதாரி ஆசிரியர்களும், தங்கள் வகுப்புகளில்,அரசு நிர்ணயித்தபடி, பாடங்கள் நடத்துவதில்லை என்ற, புகார் எழுந்துள்ளது

.தங்கள் வகுப்பு மாணவர்களை, டியூஷனுக்கு வரவழைத்து, அங்குகற்றுத் தருவதாக கூறப்படுகிறது.எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும்பள்ளிகளில் படிக்கும், பிளஸ் ௧, பிளஸ் ௨ மாணவர்கள், பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற, தங்கள் ஆசிரியர்களின்டியூஷன் வகுப்புக்குசெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

எச்சரிக்கை: இதற்காக, மாதந்தோறும், ௧,௦௦௦ - ௩,௦௦௦ ரூபாய் வரை கட்டணம் தேவைப்படுவதால், பண வசதியின்றி அவதிப்படுகின்றனர்.இது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு, சில பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, 'அரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள்,டியூஷன் எடுக்கக் கூடாது' என, தடை விதிக்கப்பட்டு உள்ளது.'கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, டியூஷன் எடுக்க தடை உள்ளதால், ஆசிரியர்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்' என, மாவட்டக் கல்விஅதிகாரிகள் எச்சரித்துஉள்ளனர். - நமது நிருபர் -
புதர்மண்டி கிடக்கும் காருகுறிச்சி அருணாசலம் சிலை! பிரபல நாதஸ்வர கலைஞருக்கு நினைவிடம் வருமா?

பதிவு செய்த நாள்16செப்
2017
20:16




திருநெல்வேலி, பிரபல நாதஸ்வர கலைஞர், காருகுறிச்சிஅருணாசலத்தின் சொந்த கிராமத்தில், அவரது சிலை யை சுற்றி, புதர் மண்டி கிடக்கிறது. 'அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்' என, கிராமத்தினர்வலியுறுத்தி உள்ளனர்

.திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியை அடுத்துள்ளது காருகுறிச்சி கிராமம். மறைந்த பிரபல நாதஸ்வர கலைஞர் அருணாசலம் பிறந்த ஊர். அவரது தந்தை பலவேசம், கோவிலில் பூ கட்டும் தொழில் செய்து வந்தார்.சினிமா துறைஅங்குள்ள பண்ணையார் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில், நாதஸ்வரம் வாசிக்க, கூறை நாடு நடேச பிள்ளை என்ற நாதஸ்வர வித்வான்வந்திருந்தார்.அவருக்கு தரப்பட்ட மரியாதையை பார்த்த பலவேசம், தாமும் நாதஸ்வரம் கற்றுக் கொள்ள விரும்பினார். அது முடியாமல் போகவே, தன் மகன் அருணாசலத்தை, சிறு வயதில் அதற்காக பழக்கினார்.திருவாவடுதுறை ராஜரத்தினத்திடம், தன் மகனை நாதஸ்வரம் கற்க அனுப்பி வைத்தார். குருகுல வாசம் போல, அவரிடம் இசையை கற்றுத் தேர்ந்த அருணாசலம், பின்னாளில் சினிமா துறையிலும் கோலோச்சினார்.கொஞ்சும் சலங்கை என்ற படத்தில், எஸ். ஜானகி பாட, அருணாசலம் நாதஸ்வரம் வாசித்துள்ள, சிங்காரவேலனே தேவா' என்ற பாடல் மிகவும் பிரபலம்.சென்னை தமிழிசை சங்கத்தின் இசை விழாவில், அருணாசலத்தின் நாதஸ்வர கச்சேரியை, வானொலி நிலையம், வழக்கத்திற்கு மாறாக, நள்ளிரவு வரை ஒலிபரப்பியது.

அருணாசலத்தின் கச்சேரிக்குப் புகழ் பெற்ற தவில் கலைஞர்கள் கும்பகோணம் தங்கவேல், வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி, யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர், தவில் வாசித்துள்ளனர்.அவருக்கு சங்கீத கலாநிதி விருதை, அரசு வழங்கியது. காருகுறிச்சியை விட்டு, கோவில்பட்டிக்கு புலம் பெயர்ந்த அருணாசலத்தின் வீட்டு கிரக பிரவேச நிகழ்ச்சியில், நடிகர் ஜெமினிகணேசனும், சாவித்திரியும், வந்திருந்த விருந்தினர்களுக்கு உணவு பரிமாறிய சம்பவம், இன்றளவும் காருகுறிச்சியில் பெருமையாக பேசப்படுகிறது.

கோரிக்கைகாருகுறிச்சி கிராமத்தின் முகப்பில், நாதஸ்வரத்தை கையில் பிடித்தாற் போல, அருணாசலத்தின் சிமென்ட் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலை பராமரிப்பின்றி, சுற்றிலும் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. அவரது பூர்வீக வீட்டையும் யாரோ வாங்கி விட்டனர்.காருகுறிச்சியில், அனேக மாக எல்லோரது வீடுகளிலும், அருணாசலம் நாதஸ்வரம் வாசிக்கும் படமோ, அவர் நேரு, காமராஜ் போன்றோருடன் இருக்கும் கருப்பு, வெள்ளை படங்களோ சுவற்றில் இடம் பிடித்திருக்கின்றன. 1907ல் பிறந்து, 1964ல் மறைந்த இசை மேதைக்கு, காருகுறிச்சியில் நினைவிடம் அமைக்க வேண்டும்என்பதே, அந்த ஊர் மக்களின் கோரிக்கை.மேலும், 'அங்கு, அவரது இசைத்தட்டுகள், பழைய புகைப்படங்கள் போன்றவற்றை, காட்சிப்படுத்த வேண்டும்; அதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும், காருகுறிச்சி கிராம மக்கள்
வலியுறுத்தியுள்ளனர்.

Saturday, September 16, 2017

ஐந்தாம் ஆண்டில் ‘தி இந்து’: அன்பு வாசக நெஞ்சங்களே...


ங்கள் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இன்று ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நேசம் மிகுந்த வாசகர்களாகிய உங்களது ஊக்கமும் பங்களிப்பும்தான், நம் நாளிதழின் தனித்துவமான வெற்றிப் பயணத்துக்கு முக்கியமான காரணம். தொடங்கிய நாள் முதல் இன்று வரை, எழுத்துரு தொடங்கி எழுதும் உள்ளடக்கம் வரையில் அனைத்திலுமே உங்களின் அக்கறையான கருத்துகள் எதிரொலிக்கின்றன. அதுவே, தேவைக்கேற்ற மாற்றங்களுக்கு வித்திட்டு, கூடிச் செல்லும் பொலிவுக்கும் கிரியா ஊக்கியாக அமைந்துள்ளது.

தமிழால் இணைவோம் எனும் முழக்கத்துடன் தன் பயணத்தைத் தொடங்கிய நம்முடைய நாளிதழ் தமிழ் - தமிழர் முன்னேற்றப் பணியில் வரும் ஆண்டில் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது என்று முடிவெடுத்திருக்கிறது. தலைநகர் சென்னையில் தொடங்கியிருக்கும் ‘யாதும் தமிழே’ நிகழ்ச்சியும் தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றிவரும் பல்துறை வல்லுநர்களைக் கவுரவிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள ‘தமிழ் திரு’ விருதுகளும் அதன் தொடக்கம்தான். ‘தி இந்து’ மொழிசார் பணிகளில் தன்னை மேலும் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற நம்முடைய வாசகர்களின் தொடர் வலியுறுத்தலின் வெளிப்பாடே இதுவும்!

139 வருஷங்களுக்கு முன் ‘தி இந்து’ ஆங்கில பத்திரிகை தொடங்கப்பட்டபோது எடுத்துக்கொண்ட உறுதிமொழியை ஒவ்வொரு பிறந்த நாளிலும் நாங்கள் நினைவுகூர்கிறோம், “பத்திரிகை என்பது மக்களின் கருத்தை வெளிப்படுத்தும் சாதனம் மட்டும் அல்ல; சூழலுக்கு ஏற்ப மக்களின் கருத்துகளை செழுமைப்படுத்தி, உருவாக்குவதும் ஆகும். அந்தத் தேவையை பூர்த்திசெய்யவே நாங்கள் களம் இறங்குகிறோம்”

அதனடிப்படையில்தான், அன்றாடச் செய்திகளை அளிப்பதே நாளிதழ்களின் பணி என்றிருந்த நிலையை இன்று நாம் தமிழிலும் வெற்றிகரமாக மாற்றிக் காட்டியிருக்கிறோம். விறுவிறுப்பு குறையாமல் செய்திகளை அளிக்கும் அதே நேரம், நாட்டின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்கும் மதச் சார்பின்மை, சாதிய எதிர்ப்பு, மாநிலங்கள் உரிமை, பாலின சமத்துவம், சமதர்மம் உள்ளிட்ட உயர் விழுமியங்களைத் தூக்கிப் பிடிப்பதோடு மது ஒழிப்பு, நீர்நிலைகள் மேம்பாடு, உள்ளாட்சிகளுக்கான அதிகாரம், அரசு நிறுவனங்கள் - பள்ளிகள் மேம்பாட்டுக்குத் துணை நிற்பது என்று சமூகத்தின் அடிப்படை வளர்ச்சி தொடர்புடைய ஒவ்வொரு விஷயங்களிலும் ஆழப் பயணிக்கும் கட்டுரைகளை வெளியிட்டு தமிழ்ச் சமூகத்தின் அறிவுக்கும் சிந்தனைக்கும் புதிய வாயில்களைத் திறந்து காட்டி வருகிறோம்.
நியாயமும் நீதியுமே எங்களை வழிநடத்துவதற்காக நாங்கள் நிர்ணயித்துக்கொண்டிருக்கும் எளிய கோட்பாடுகள். அதற்கு உங்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பின் அடையாளம்தான், நான்கு ஆண்டுகளுக்குள் ’தி இந்து’ தமிழ் உங்கள் இதய சிம்மாசனத்தில் எட்டிப் பிடித்திருக்கும் இந்த உயரம்!
பெருமையை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்பெருகிவரும் பொறுப்பை நாங்கள் ஏற்கிறோம். உங்கள் நல்லாதரவோடு என்றும் தொடரும் இந்த அற்புதமான பந்தமும் பயணமும்!
- கே.அசோகன்,ஆசிரியர்

medical council of india public notice


NEWS TODAY 17.07.2026